ஞானம்பெற பல ஆண்டுகள் புத்தகம் படித்தாலும் பைசாவுக்கு பயன்படாது
நாம் உண்மையான சன்மார்க்கம். அப்பழுக்கில்லாமல் பொருளை அறிந்தவர்கள். நான் சிறையுடல் நீக்கப் பட்டவன். ஆன்மா, சிறைப்பட்ட ஆன்மாவை உடைத்தெறிந்தவன். உடைத்தெறிவதற்கு ஆசான் அருள் செய்ததால்; அதனால்தான் இவ்வளவு பேச முடிந்தது. இல்லையென்றால்,
மட்டகன்ற நெடுங்கால மனத்தால் வாக்கால்
மதித்திடினும் புலம்பிடினும் வாராதென்றே
கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கி
கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை
விட்டகன்று கருமமல போதம் யாவும் விடுத்தொழித்து
கருமமல போதம் யாவும் விடுத்து ஒழித்து விட்டான். ஆக, பசுஞானம். பாசஞானம் என்று சொல்லப்பட்ட உடம்பு, காம தேகத்தால் பெற்ற அனுபவத்தையெல்லாம் உடைத்தெறிவது என்றான். சின்ன விசயமல்ல. இப்போது பேசுவது, பெரிய அர்த்தம்.
ஆக கருமமல போதம் யாவும் என்பது, தொடர்ந்து வருகின்ற பாசஞானம். உடம்பு காமதேகம். காமதேகத்தில் எழுகின்ற உணர்வையெல்லாம் உடைத்தெறிந்து என்றார்.
கருமமல போதம் யாவும்
விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கி என்பார். இப்ப சகசமலம் என்பது, நாம் சாப்பிடுகிறோம். உடம்பில் மும்மலம் சேர்கிறது. சகசமல வீக்கம் நீக்கி என்றார். பெரிய அர்த்தம் அது. என்னையா, இதெல்லாம் எப்போதையா கற்றுக் கொள்வது? என்றால், சின்ன விசயமல்ல. நீங்களெல்லாம் அவ்வளவு லகு என்று நினைத்து விடாதீர்கள்! அவன்தான் சொன்னான். நிலமிசை நீடு வாழ்தல் என்று சொன்னால், மலர் மிசையாக இருக்க வேண்டும் என்றான். இந்த உலகத்தில், நிலமிசை நீடு வாழ்வார் என்றான். அப்ப மலமாகிய கருமமல போதம் என்றார். சகசமல வீக்கம் என்றார். நாம் தினம் சாப்பிடுவதால் உடம்பு உப்பிக்கொண்டே வருகிறது. வளர்ந்து கொண்டே வருகிறது. சகசமல வீக்கம் நீக்கி என்றார். அப்ப பாச ஞானம் அற்று பசு ஞானம் வந்தது. பசு ஞானம் வந்த பின் பதி ஞானம் வந்தது. பாச ஞானம், பசு ஞானம், பதி ஞானம் என்றான்.
இதையெல்லாம் எப்போதையா கற்றுக் கொள்வது? என்றான். இதெல்லாம் சும்மா எளிது அல்ல. நீ பாட்டுக்குச் செய்து கொண்டு வா. இதையெல்லாம் யாரும் கற்றுக் கொண்டு இருக்க முடியாது. இங்கே என்ன செய்து விட்டாரென்றால், கற்றுக் கொள்வது என்ற பேச்சே இல்லை. திருவடியைப் பற்றிக் கொள்வதைத்தவிரக் கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை. கற்றுக் கொண்டவர்களெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. நூலைப் படித்துக் கொண்டிருக்கலாம். பல ஆண்டுகள் நூலைப் படிப்பான். பைசாவிற்குப் பிரயோசனப்படாது. ஏன்? என்றான்.
கற்றுக் கொள்வதை விட பற்றுக் கொள்வது மேலானது.ஆக பதிஞானம். பதிஞானத்தை அறிந்து கொள்வதற்கு என்ன சொன்னான். தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.