பிரபஞ்சம் பிரபஞ்ச இயக்கம் பிரம்மநிலை பரமாத்மா ஜீவாத்மா ஒளிதேகம் பிரபஞ்ச இரகசியம்

இந்த பிரபஞ்சம் ஆரம்பத்தில் எந்த அசைவும் இன்றி அமைதியாக எந்தவித இயக்கமும் இன்றி மிகமிக அமைதியாகத்தான் இருந்தது. இப்படி எந்தவொரு அசைவுமின்றி நிசப்தமாகவும், இயக்கமின்றியும் இருந்த அந்த பிரபஞ்ச நிலையை  “பிரம்மம்” என்பர் ஞானிகள். அப்படி கோள்களும் பிரம்மநிலையிலிருந்த பிரபஞ்சத்தில் ஏற்கனவே பலகோடி பிரம்மாண்டங்களும், அண்டங்களும், இருந்தபோதும், அவையாவும் அசைவற்றே இருந்தன. இப்படி அசைவற்றிருந்த பிரபஞ்சத்தில் சொல்லொண்ணா பேராற்றலும் மிக மிக மிக பிரம்மாண்டமானதும் எண்ணிலடங்கா கோடி சூரிய பிரகாசமுள்ளதுமானதுமான, ஒரு ஒளி பிழம்பு தோன்றி, அது வெடித்து சிதறியது. அப்படி சிதறியபோது அதன் பகுதிகள் பலவாறாக தெறித்து வீழ்ந்து, அவையவை தம்மை சுற்றியுள்ள கோள்களையும், விண்மீன்களையும் தமது ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கவே இந்த பிரபஞ்சத்தில் அதுவரை அசையாமலிருந்த பொருட்கள் அனைத்தும் அசைந்து ஒன்றையொன்று சார்ந்தும், வெடித்த ஒளிப்பிழம்பை மையமாகவும் வைத்து சுழலத் தொடங்கின. அப்போதுதான் பிரபஞ்ச இயக்கம் தொடங்கியது. அப்படி சிதறிய ஒரு பகுதிதான் சூரியன். சூரியனின் ஆகர்சண சக்தியினால் நவகிரகங்களும் ஈர்க்கப்பட்டு அவையனைத்தும் சூரியனை மையமாக வைத்து இயங்கின, இயக்கம் துவங்கி சுழன்றதால் படிப்படியாக அந்தந்த கிரகங்களின் சூழ்நிலைகளுக்கேற்ப உயிரினங்கள் தோன்றி பல்கி பெருக ஆரம்பித்தன. அப்படி பெருகிய உயிர்கள் தொடர்ந்து இயக்கத்திற்கு உட்பட்டு அதனால் பரிணாம வளர்ச்சிக்கு அவைகள் உட்பட்டு இயற்கையின் நியதிகளுக்கு ஆட்பட்டு, தோன்றி இயங்கி, மறைந்து மீண்டும் தோன்றி, இயங்கி மறைந்தும் வருகின்றன. அசைவற்ற பிரம்மத்திலிருந்து தோன்றி பல்வேறு வகையான இயக்கங்களுக்கு உட்பட்டு பரிணாம வளர்ச்சியடைந்து அவ்வுயிர் மீண்டும் எங்கிருந்து தோன்றியதோ, அந்த இடத்திலேயே மீண்டும் ஒடுங்கும் வல்லமை பெறுமாயின் அது பிரம்ம நிலையாகும். இது மற்ற உயிர்களால் இயலாது. மனித வர்க்கத்தினால் மட்டுமே முடியும். அதற்குரிய சாதனம் மனித தேகத்தில்தான் உள்ளது என்பதை முதன்முதலில் அறிந்து அந்த சாதனத்தை பயன்படுத்தி எங்கிருந்து தோன்றினோமோ அங்கேயே ஒடுங்கி இயற்கையை வென்று மரணமில்லா பெருவாழ்வை பெற்ற முதல் ஞானி ஆசான் ஞானபண்டிதராகிய முருகப்பெருமானாகும்.

இப்படி அசைவற்ற பிரம்மத்தில் தோன்றி இயங்கி மீண்டும் அசைவற்ற பிரம்மத்தில் ஒடுங்குவதை, பிரம்மநிலை என கூறுவர். அத்தகு ஆற்றலை பெற்றவர்கள்தான் பிரம்மஞானியாகும். அத்தகு நிலையை அடைந்தவர்கள்தான் எல்லா ஞானிகளும். அத்தகு பிரம்ம நிலையை அடைந்தவரில் ஒருவர்தான்  ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர். இதன் சாரம் என்னவெனில்  பரமாத்மாவாகிய அசைவற்ற பிரம்மநிலையிலிருந்து தோன்றிய (உயிரானது) ஜீவாத்மா இயக்கத்திற்கும், பரிணாம வளர்ச்சிக்கும் உட்பட்டு அது பிறிதொரு சமயம் மீண்டும் ஒடுக்கம் பெற்று அசையாநிலையான பிரம்மநிலையான பரமாத்மாவோடு சேர்ந்துவிடுகிறது. இதுவே பிரபஞ்ச இரகசியமாகும்

எந்த பேரொளியில் இந்த உயிர் தோன்றியதோ, எந்த அருட்பெருஞ்ஜோதியிலிருந்து உயிர் தோன்றியதோ அதே அருட்பெருஞ்ஜோதி வடிவமாக சதகோடி சூரியபிரகாசமுள்ளதாக மாறினால்தான் பரமாத்மாவோடு சேரமுடியும். அப்படிப்பட்ட ஒளிதேகம் பெற்றவர்கள் ஞானிகள். சதகோடி சூரியபிரகாசமுள்ள ஒளிதேகத்தைப் பெற்றவர்தான் ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர். அவரே உண்மையறிந்த சற்குருவானவர். உலகில் பல்வேறு வகையில் ஜென்மத்தைக் கடைத்தேற்றும் பொருட்டு முயற்சி செய்து இதுவரை எந்தவகையிலும் சித்தி பெறமுடியாமல் உள்ள ஆன்மீகவாதிகளும், இடையில் தடைபட்ட ஆன்மீகவாதிகளும், தக்க ஆசான் இல்லாததால் இத்துறையில் முன்னேற முடியாமல் தவிப்பவர்களும், ஓங்காரக்குடிலிற்கு வந்து குடிலாசான் அரங்கமகாதேசிகரை தரிசித்து அவர் மனம் மகிழ நடந்து கொண்டால் அரங்கமகாதேசிகர் ஆசியாலும், ஞானிகள் ஆசியாலும் தடைபட்ட சித்திகள் யாவும் ஜெயமாகும். ஜெயமாவதோடு உண்மைப்பொருளின் தன்மை அறியவும், அறிந்து மேன்மேலும் முன்னேறி நிலையான பிறவாநிலையாகிய வீடுபேறாகிய மரணமில்லா பெருவாழ்வையும் அடையவும் கூடும் என்பதை குருமுகாந்திரத்தால் காலப்போக்கில் உணரலாம். இவ்வற்புத வாய்ப்பை பெற வேண்டுமானால் குடிலாசான் அரங்கமகாதேசிகரின் திருக்கரங்களினால் அவரது திருக்கரம் சிரம்மீது படும்படியான ஸ்பரிச தீட்சையைப் பெற்று அவரது உபதேச மொழிகளை பின்பற்றி நடந்தால் அனைத்தையும் பெறலாம்.

தீட்சைபெற்ற அன்பர்கள் ஞானிகள் நாமத்தை நாமஜெபமாக ஒருநாள் முழுதும் சொல்லியும், குடிலில் நடக்கின்ற ஒருநாள் அன்னதானத்திற்கு உண்டான செலவினை தானமாக அளித்தும், தொடர்ந்து பூஜித்து வந்தால் அவர்கள் மேற்கொண்ட உத்தியோகம், தொழில், விவசாயம் சிறந்தும், இல்லறமும் சிறந்து, இல்லறத் துறவை விரும்புவோர்க்கு இல்லறத்துறவும் கைவரப்பெற்று துறவு பூர்த்தியடைந்து, ஞானத்தில் தெளிவடைந்து அரவு என்று சொல்லப்படுகின்ற காற்றை வசப்படுத்தும் தன்மையும் பெறுவார்கள். அரவு என்றால் பாம்பு எனப் பொருள்பட கூறுவர். இங்கு பாம்பு என்பது பரிபாஷையாகும். கருஞ்சாரை எனப்படும் இடதுபுற நாசியில் வருகின்ற காற்றான சந்திரகலையாகும். வெஞ்சாரை எனப்படும் வலதுபுறநாசியில் வருகின்ற காற்றான சூரியகலையாகும். இந்த இரண்டு கலைகளையும் அக்கினி கலையாகிய, சுழிமுனை என்று சொல்லப்படுகின்ற புருவமத்தியில் ஒன்று சேர்த்தால் இத்தேகத்தில் அமிழ்தம் சிந்தி அவ்வமிழ்தத்தை உண்டு, ஒளிதேகம் பெற்று வீடுபேறடையும் வாய்ப்பை பெறலாம்.

            இப்படிப்பட்ட பல அற்புத வாய்ப்புகளை தரவல்ல ஓங்காரக்குடிலிற்கு வந்து அங்கு ஒளிவடிவமாய் வீற்றிருக்கும் அரங்கமகாதேசிகரை தரிசித்து ஆசி பெற்று பெறுதற்கரிய பெரும் பேற்றினை அனைவரையும் பெற, உலக ஆன்மீகவாதிகளை அழைக்கிறார் மகான் விறன்மிண்ட நாயனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0171783
Visit Today : 25
Total Visit : 171783

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories