சிவனும் சிவஞானி இருவரும் ஒன்றுதான்
……………………………………………………………
இறைவன் என்று சொல்லப்பட்ட அத்தனை பேரும், மனமாயை அற்றவன். பந்த பாசம் அற்றவன். உண்மை தெரிந்தவன். அத்தனைபேரும் இறைவன்தான். அதில் என்ன சொல்கிறார்,
சிவனே சிவஞானி ஆதலால் சுத்த
சிவனேயென அடி சேர வல்லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமானதின்றிப் பரலோகம் ஆமே.
-திருமந்திரம்-கவி எண் 1580
அப்ப சிவனும் சிவஞானி இருவரும் ஒன்றுதான். இறைவன் என்று சொன்னாலே மனமாசு அற்றவன். மரணமில்லாப்பெருவாழ்வு பெற்றவன். உள்ளுடம்பு ஆக்கம் பெற்றவன். இனி பிறவாதவன். உள் ஜோதியைக் கண்டவன். அப்படியென்றால் இறைவன். இது யாரென்றால், இன்னொரு தலைவனுடைய ஆசியைப் பெற்றதனால் இந்த வாய்ப்பு கிடைத்தது. அவன் ஆசி பெற்றதனால் இந்த வாய்ப்பு கிடைத்தது. நாம் அவனுடைய ஆசியைப் பெற்றுக் கொள்வதற்குத் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். ஆகவே, எல்லாம் இறைவன்
(ஓங்காரகுடில் ஆசான் உரை 25.1.1997)