உலகிற்கு நற்செய்தி

03.05.2015 அன்று அருளிய அருளுரை

அன்புள்ள பெரியோர்களே, தாய்மார்களே, அன்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
     மன்மத ஆண்டில் முருகப்பெருமான் வருகிறார். முருகா, முருகா, முருகா என்று சொல்லுங்க. முருகா, சற்குருநாதா, சாந்தசொரூபா, என் தந்தையே எனது தாயே, தயவுடைய தெய்வமே, தயாபரனே, தேவாதிதேவா எங்களையும் ஒரு பார்வை பார்க்க வேண்டும் தாயே என்று சொல்லி முருகனை வணங்க வேண்டும். இந்த சங்கத்தில் உள்ள தொண்டர்களின் திருவடியை முதலில் வணங்குகிறேன். அடுத்தபடியாக யார், யார் பொருளதவி செய்கின்றார்களோ அவர்கள் திருவடியை வணங்குகின்றேன். அடுத்ததாக உலக மக்கள் அனைவரது திருவடியையும் வணங்குகின்றேன். என்ன ஐயா, உலக மக்கள் திருவடியை நான் வணங்குகின்றேனா, ஆமாம் உலக மக்கள் திருவடியை நான் வணங்குகின்றேன். அவர்கள் நீடுவாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
     வருகிறார் முருகப்பெருமான். உலக மக்களுக்காக வருகிறார். அவர் ஆட்சி நடக்கப் போகின்றது.இந்த ஆண்டே அவர் ஆட்சி நடக்கலாம் என்று சுவடியில் சொல்லியிருக்கிறார்கள். ஆக மன்மத ஆண்டில் முருகப்பெருமான் வருகிறார். அவர் என்ன செய்வார்? பண்புள்ள மக்களை காப்பாற்றுவார். அனைவருக்கும் பாதுகாப்பு உண்டு. யாருக்கும் தடையுமில்லை. முருகப்பெருமானிடம், முருகா இதுநாள் வரை அறிந்தோ, அறியாமலோ நான் தவறு செய்திருப்பேன். மன்னிக்க வேண்டும் என்று சொன்னால், நம்மை மன்னித்து அருள் செய்வார்.
     ஆக முருகப்பெருமான் ஆட்சி வர வேண்டும். முருகப்பெருமான் ஆட்சிக்கு வந்தால் பண்புள்ள மக்களுக்கு இடையூறு இருக்காது. அவர்கள் நிம்மதியாக தூங்கலாம். நாட்டில் பருவமழை பெய்யும், உலகில் நிலநடுக்கம் இருக்காது, இயற்கை சீற்றம் இருக்காது, எல்லா மக்களும் இன்புற்று வாழலாம். சாந்தமே வடிவான மக்கள் எல்லோரும் எந்த குறையும் இல்லாமல் வாழலாம். ஆக இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு மக்களுக்கு இருக்கிறது. அந்த காலமும் வந்துவிட்டது. நமது ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், அப்படிப்பட்ட வாய்ப்பை மக்களுக்கு தருவதற்குத்தான் வந்திருக்கிறது.
     இங்கு ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான சங்கங்கள் இருக்கலாம். ஆனால் நமது ஒரு சங்கம் மட்டும்தான் உலக நன்மைக்காக இருக்கிறது. என்ன ஐயா, இந்த ஒரு சங்கம் மட்டும்தானா இருக்கிறது என்றால் முருகப்பெருமான் தலைமை தாங்குகின்ற ஒரே சங்கம் நமது சங்கம் மட்டும்தான். எம்பெருமான் முருகப்பெருமான் தலைமை தாங்குகின்ற சங்கம் இந்த ஓங்காரக்குடில். ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் முருகப்பெருமான் தலைமை தாங்குகின்ற இடம். ஆகவே இங்குள்ள தொண்டர்களும், நமது சங்கத்திற்கு பொருளுதவி செய்பவர்களும் முருகப்பெருமானின் ஆசியை பெறலாம்.
     நான் தவம் செய்திருக்கிறேன். நாற்பது ஆண்டு காலம் தவம் செய்திருக்கிறேன். அன்பர் சொன்னது போல உப்பில்லாமல் சாப்பிட்டிருக்கிறேன். உப்பில்லாத கஞ்சியை சாப்பிட்டிருக்கிறேன். ஆக நாற்பது ஆண்டு காலம் இப்படி உப்பில்லாமல் சாப்பிடுவது சாதாரண விஷயமல்ல. ஆக நாங்கள் இதுவரைக்கும் பத்து அல்லது இருபது கோடி மக்களுக்கு அன்னதானம் செய்திருக்கிறோம். இது எங்களுக்கு ஒரு கடுகு. எங்களுக்கு அல்ல முருகப்பெருமானுக்கு ஒரு கடுகு.
     நினைத்தால், நினைத்தால் ஒரு நாளைக்கு ஒரு கோடி பேருக்கு அன்னதானம் செய்யலாம். ஆக அதுவும் கடுகுதான்.
     என்ன ஐயா, இதுவரை இருபத்தைந்து அல்லது ஐம்பது கோடி மக்களுக்கு அன்னதானம் செய்ததையும் கடுகு என்று சொல்லுகிறீர்கள், ஒரு நாளைக்கு ஒரு கோடி பேருக்கு அன்னதானம் செய்தாலும் அதையும் கடுகுதான் என்கிறீர்கள்.
     அற்புதம், அற்புதம், அற்புதம் முருகப்பெருமானின் ஆட்சி. அற்புதம், அற்புதம், அற்புதம் முருகப்பெருமானின் கருணை. அற்புதம், அற்புதம் முருகப்பெருமானின் ஆற்றல். ஆகவே வருங்காலத்தில் அற்புதம் நடக்க இருக்கின்றது. இந்த அற்புதம் இந்த ஆண்டில் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஞானிகள் இதை செய்தியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
     ஆகவே முதலில் தொண்டர்களின் திருவடியை வணங்குகிறேன். அடுத்ததாக பொருளதவி செய்கின்ற மக்களை வணங்குகிறேன். நமது சங்கத்தில் தொண்டு செய்யும் உள்நாட்டு அன்பர்க்க, வெளிநாட்டு அன்பர்கள் திருவடியை வணங்குகின்றேன். அவர்களின் திருவடியை சிரம் மேல் தாங்குகின்றேன். அதுமட்டுமல்ல, உலக மக்களின் திருவடியையும் சிரம் மேல் தாங்குகின்றேன். அவர்களை வணங்குகின்றேன். எந்த தலைவனும் இப்படி சொல்லமாட்டான். இந்த சங்கம் உலக மக்களுக்கு நன்மை செய்ய வந்த சங்கமாகும். பசி என்று சொல்வதற்கு முன்னே அறிவார்கள் நமது தொண்டர்கள்.
     நான் இப்போது பசியோடு இருக்கின்றேன். கடந்த பதினைந்து நாளாக எதுவும் சாப்பிடவில்லை. சிறிதளவு கஞ்சிதான் சாப்பிடலாம். அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும் வயதும் என்பது ஆகின்றது. நீங்கள் என்னை கிழவன் என்று நினைத்து விடாதீர்கள். ஏதோ இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள், இவர்தான் உலகத்தை காப்பாற்ற போகின்றார் என்று சொல்லிக் கொண்டிருப்பதை, ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து ஏமாந்து விடாதீர்கள். ஒரு ஆறுதலுக்காக நாங்கள் இப்படி பேசவில்லை. நான் உலக மக்களுக்கு நன்மை செய்ய வந்திருக்கிறேன். இப்பொழுது நான் கிழவன்தான்.
     இன்று இப்பொழுது கிழவன். ஆனால் வருங்காலத்தில் நாங்கள் இளமையாக மாறுவோம். நாங்கள் என்றும் இளமையோடு இருப்போம். நாங்கள் என்று தாய்மை குணத்தோடு இருப்போம். நாங்கள் எல்லாம் தாய்மை குணம் உள்ளவர்கள். ஆஹா, இந்த சங்கம் ஆட்சிக்கு வந்தால், இந்த சங்கம் ஆட்சிக்கு வந்தால், இந்த சங்கம் ஆட்சிக்கு வந்தால், பண்புள்ள மக்களும், பஞ்சபராரிகளும், ஏழைகளும் வாழலாம். அப்பேர்ப்பட்ட வாய்ப்ப்பு மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாங்கள் மூன்று மாதமாக சரியாக சாப்பிடாமல் இருக்கிறோம். அது ஒன்று பெரிய குற்றமில்லை.
     இப்பொழுது வருகிறேன், வெளியே வருகிறேன். நடந்தே வருவேன். மீண்டும் இளமையாக வருவேன், உலக மக்களுக்காக வந்திருகிறேன், நானாக வரவில்லை. முருகன் என்னை அனுப்பி வைத்திருக்கிறார். முருகன் என்னை பேச வைக்கிறார். என் சிந்தையிலும், என் செயலிலும், நான் சொல்லும் சொல்லிலும் சார்ந்திருந்து நீயே பேச வேண்டும் என்று முருகப்பெருமானிடம் கேட்டேன். விஷ ஜந்துக்களாலும், துஷ்ட ஜந்துக்களாலும், பேய், பூத கணங்களாலும், கயவர்களாலும், பகைவர்களாலும், வஞ்சகர்களாலும், அரசாங்கத்தாலும் வேறு எந்த வகையிலும் எனக்கு இடையூறு வரக்கூடாது என்று முருகனை கேட்டேன்.
     நான் கனவிலும் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யக்கூடாது. எல்லா உயிரையும் என் உயிர் போல் என்ன வேண்டும் என்றும் முருகனிடம் கேட்டேன். ஆக கனவிலும் பிற உயிருக்கு தீங்கு செய்யக் கூடாது என்று சொன்னால், அவருடைய சிந்தை எந்த அளவு உயர்ந்து இருக்கும். அதுதான் முருகப்பெருமான் எனக்கு கொடுத்த அறிவு. ஆகவே நாங்கள் வெளியே வந்தால் தாய்மை குணத்தோடு வருவோம். எங்களை கல்லால் அடித்தாலும் சரி, சொல்லால் அடித்தாலும் சரி, வில்லால் அடித்தாலும் சரி, தாங்கிக் கொள்வோம். அந்த பக்குவம் வரும் வரை முருகப்பெருமான் என்னை வெளியே விடமாட்டார்.
     முருகப்பெருமானிடம் என்னை ஏன், ஒரு மென்மையான குடும்பத்தில் பிறக்க வைக்கவில்லை என்றேன். அதற்கு முருகப்பெருமான் சில பேர் வட்ன்ஹு மீசை முருக்குவான். அதைக் கண்டு உனக்கு அஞ்சா நெஞ்சம் வர வேண்டும் என்பதற்காக, உன்னை வீர மிக்க குடும்பத்தில் பிறக்க வைத்தேன். ஆக அதை மூர்க்கத்தனம் என்று எண்ணாதே என்றார் முருகப்பெருமான். ஒரூவன் வருவான் மீசையை முருக்குவான், முறைத்து பார்ப்பான். அவனை நாங்கள் விளையாட்டு பிள்ளை என்போம். அவன் கிடக்கிறான் சின்ன பிள்ளை, கைப்பிள்ளை என்போம். ஆனால் அப்படிப்பட்டவனை மூர்க்கத்தனமானவன், எதையும் செய்வான், கொலைகாரப்பாவி என்று என்னிடம் சொன்னார்கள். அப்படிப்பட்டவன்தான் எங்களுக்கு விளையாட்டுப்பிள்ளை என்றோம். கொலைகாரனாக இருந்தாலும் சரி, தீவிரவாதியாக இருந்தாலும் சரி அவர்கள் எல்லாம் எங்களுக்கு விளையாட்டுப்பிள்ளை.
     நாங்கள் இப்பொழுது சொல்வதை கேட்டுக் கொள்ளுங்கள். இந்த உலகத்தில் தீவிரவாதம் அழிக்கப்படும். இல்லை, இல்லை, இல்லை அடக்கப்படும். இது எங்களுடைய பண்பு. ஆக அடக்கப்படும். அடங்காவிட்டால் அழிக்கப்படும். தீவிரவாதிகளை கண்டு வல்லரசே நடுங்கிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா போன்ற வல்லரசு நாடுகளே நடுங்கிறார்கள். ஆனால் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் தீவிரவாதிகளை அடக்குவோம். மிஞ்சினால் அழிப்போம் என்று ஒரு மூலையிலிருந்து சொல்கிறோம். இவ்வளாவு பெரிய கட்டிடத்திலிருந்து சொல்கிறோம். எங்களை எதிர்த்தால் குண்டு வைப்போம் என்கிறார்கள் தீவிரவாதிகள். ஏ, உலக தீவிரவாதிகளே உங்களை நாங்கள் சந்திக்கிறோம். உங்களுக்கு ஆற்றல் இருந்தால் இந்த மண்ணை மிதித்து பாருங்கள். வல்லரசுகள் உங்களை கண்டு பயப்படுகிறார்கள். ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம். நீ எந்த இடத்தில் இருந்து புறப்படுகின்றாயோ அந்த இடத்திலேயே உன்னை கொன்றுவிடுவோம். எங்களிடம் இங்கு வது மோதிப்பார். உன்னை ஒரு நொடியில் அழித்தே விடுவேன்.
     இப்படி தீவிரவாதிகளுக்கு சவால் விடுவது யார்? ஓங்காரகுடிலில் இருக்கின்ற கிழவனா என்றான். அவன் ஏதோ நாங்கள் சாகப் போகின்றவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். நாங்கள் வாழப் பிறந்தவன். இந்த சங்கமே வாழப் பிறந்த சங்கம்.
     ஆக தீவிரவாதிகளை ஒடுக்க முடியும், அடக்க முடியும். அழிக்க முடியும். என்ன ஐயா, உலகத்தில் இருக்கின்ற தீவிரவாதிகளை இந்த கிழவன் அடக்குகிறேன், அழிப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மேலும் அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் எல்லாம், அவர்தான் உலகத்தை தாங்கிக் கொள்வார் என்று சொல்லுகிறார்கள். இப்படி கிழவனை வைத்துக் கொண்டு சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு என்ன ஆயிற்று?
     ஆக தீவிரவாதிகளை அடக்கும் ஆற்றல் எங்களுக்கு உண்டு. அவர்கள் பணிந்தால் ஆதரிக்கப்படுவார்கள். அவர்கள் துணிந்தால் நசுக்கப்படுவார்கள். பணிந்தால் ஆதரிப்போம். துணிந்தால் நசுக்குவோம். ஆக இப்படி நசுக்குவோம், நசுக்குவோம் என்று வயதான காலத்தில் பட்டினி கிடந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். நாங்கள் பட்டினி கிடப்பது உலக நன்மைக்காக. நாங்கள் அரசாங்கத்திற்கு விரோதமாக போக மாட்டோம். நாகல் இந்த ஆட்சிக்கு விரோதமாக போக மாட்டோம். ஆனால் இந்த ஆட்சிக்கு பிறகு எங்கள் ஆட்சிதான். நமது ஆட்சிதான்.
     மனிதர்கள் ஆட்சி செய்தது போதும். மனிதர்கள் ஆண்டது போதும். மக்கள் மாண்டது போதும். முருகப்பெருமான வருகிறார், முருகப்பெருமான் வருகிறார் உலக மக்களை காப்பாற்ற. இன்று தீவிரவாதிகளை அழிப்போம் என்று நான் பேசவில்லை, முருகப்பெருமான் பேசுகிறார். தீவிரவாதிகளே உங்களை அடக்குவோம். பணிந்தால் காப்போம். துணிந்தால் நாங்கள் அடக்குவோம் என்று முருகப்பெருமான்தான் பேசுகிறார். இப்படி நாம் பேசுவதை மக்கள் பார்த்துக் கொண்டிருகிறார்கள். நமக்கு பாதுகாப்பு இருக்குமோ என்றால் பாதுகாப்பு உங்களுக்கு உண்டு என்போம்.
     நாங்கள் எதையும் செய்வோம். ஆணை பெண்ணாக்குவோம். பெண்ணை ஆணாக்குவோம். தூணை துரும்பாக்குவோம். துரும்பை தூணாக்குவோம். ஒருவன் அதிகமாக மீசையை முறுக்கினால் அவனை அலி ஆக்குவோம். ஆறடி உள்ளவன் மீசையை முறுக்கி கொண்டு அப்படியே நம்மை பார்ப்பான். அவனை எல்லாம் சிறு பையனாகவும், கைப்பிள்ளையாகவும் நினைத்து அவனிடம் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.
     உலக போக்கிரிகளை கண்டு பயப்பட மாட்டோம். தீவிரவாதிகளை கண்டு பயப்பட மாட்டோம். எதையும் கண்டு பயப்பட மாட்டோம். இந்த சங்கம் அப்படிப்பட்ட சங்கம். இந்த சங்கத்தை முருகன் தலைமை தாங்குகிறார். முருகன் எதையும் செய்வார்.
     உலக மகளே எதிர்பாருங்கள். உங்களை காப்பாற்ற வீற்றிருக்கிறார் முருகப்பெருமான். ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் உங்களை காப்பாற்றும், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் உங்களை காப்பாற்றும், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் உங்களை காப்பாற்றும். அஞ்சேல்.
     நான் ஐந்து நாளாக சாப்பிடாமல் விரதம் இருக்கிறேன். இப்பொழுது அம்பிகா யோகம் செய்து கொண்டிருக்கிறேன். அம்பிகா யோகம் என்ற ஒன்று இருக்கிறது. அது உடம்பை இறுகச் செய்யும். உடம்பை தளர்ச்சியில்லாமல் இறுகச் செய்யக்கூடிய யோகம் அது. யோகம் என்பது மூன்றாம் படி, சரியை, கிரியை, யோகம் என்பார்கள். ஆனால் யார், யாரோ என்னென்னவோ யோகத்தை சொல்லித் தருகிறார்கள். இராஜயோகம் என்று சொல்லித் தருவான். அதற்கு ஆயிரம் ரூபாய் பணமும் வாங்கிக் கொள்வான். இராஜயோகம் என்பது முருகப்பெருமானுக்கே உரியது. சிவராஜயோகம் என்பது முருகப்பெருமானுக்கே உரியது.
     ஆனால் யோகம் சொல்லிக் கொடுப்பவன் ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு அதை எப்படி இராஜயோகம் என்று சொல்லுகிறான்? ஏதோ பிழைத்துக் கொண்டிருக்கிறான் பாவம். ஆனால் தண்டிக்கப்படுவான். ஆனால் முருகப்பெருமான் யோகம் சொல்லித் தருபவனை பார்த்து ஏய், என்னடா கதை விடுகிறாய். சிவராஜயோகம் என்று சொல்லி ஆயிரம் ரூபாய் வாங்குகிறாய். அது ,மிகப் பெரிய இயல்புகளை கொண்டது என்பது உனக்கு தெரியுமா. நீ சொல்வதை கற்று வெகு பேர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்கள் என்றார்.
     ஆக ஒருவன் யோகம் கற்றுக் கொள்வதற்கு முன்னே முதலில் அவனை சைவத்தை கண்டுப்பிடிக்க சொல்ல வேண்டும். அடுத்தபடியாக முருகப்பெருமான் திருவடியை பூஜை செய்ய சொல்ல வேண்டும். இதை விட்டுவிட்டு யோகம் என்ற பெயரில் ஏதேதோ செய்ய சொல்லுவான். ஆக அவனும் கட்டுப்படுவான் அல்லது அவனது செயல்கள் கட்டுப்படுத்தப்படும்.
     ஆக போலி ஆன்மீகவாதிகள் அடக்கப்படுவார்கள். போலி அரசியவாதிகளும் அடக்கப்படுவார்கள், போலி மதவாதிகளும் கட்டுப்படுவார்கள். அரசியல் அராஜகம், ஆன்மீக அராஜகம் இன்னும் அநேக அராஜகங்கள் இருக்கலாம். எல்லா அராஜகமும் அடக்கப்பட்டு மக்கள் காப்பாற்றப்படுவார்கள். எல்லா அராஜகமும் அடக்கப்படும். மக்கள் காக்கப்படுவார்கள். இப்பொழுது உங்கள் முன்பு பேசியதை, நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
     ஆகவே நமது சங்கம் உலகத்தை வழி நடத்தும். இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள்தான் தொண்டு செய்வார்கள், செயல்படுவார்கள். ஆகவே உலக மக்களே, உங்கள் திருவடியை வணங்குகிறோம். நாங்கள் உங்களுக்கு தொண்டு செய்ய காத்திருக்கிறோம். நீங்கள் எல்லாம் நீடு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம். ஓம் சரவண ஜோதியே நமோ நம என்ற இந்த ஓசை, அகிலமெல்லாம் கேட்கப் போகின்றது. இப்பொழுது கேட்டுக் கொண்டும் இருக்கிறது. நாங்கள் இப்பொழுத் இங்கே இருந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதே சமயத்தில் இலண்டனில் இருப்போம், மலேசியாவிலும் இருப்போம். இது அங்குள்ள அன்பர்களுக்கு தெரியும்.
     உலகமெல்லாம் இருப்போம். இருந்து கொண்டிருப்போம். இப்படி இருப்பது ஒன்றும் ஆச்சரியம் அல்ல. முருகன்தான் எல்லா இடங்களிலும் இருக்கிறார். முருகப்பெருமான் என்னை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார். நான் அங்கு போகவில்லை. ஆனால் உலகம் முழுவதும் என் உருவம் தெரியும். முருகப்பெருமான் என்னிடம், உன்னுடைய ரூபத்தில் எல்லா இடத்திலும் நான்தான் இருந்து கொண்டிருக்கிறேன் என்றார்.
     ஆகவே இந்த சங்கம் உலகத்தை காப்பாற்றும் என்று நம்பி இருங்கள். நிச்சயம் காப்பாற்றும். இன்று தீவிரவாதிகளை பற்றியெல்லாம் பேசியிருக்கிறாரே, எதுவும் பிரச்சனை வந்துவிடுமோ என்று நீங்கள் நினைக்காதீர்கள். அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படாதீர்கள். அவன் அமெரிக்காவில் இருந்து கிளம்பினால் அங்கேயே அவனை கொன்றுவிடுவோம். இங்கே இருந்து தீவிரவாதிகள், இந்த சங்கத்திற்கு இடையூறு செய்ய முடியாது. ஆகவே பயப்பட வேண்டாம். நாங்கள் உங்களை காப்பாற்றுவோம். முருகப்பெருமான் இருக்கிறார். அஞ்சாதீர் என்று சொல்லி முடிக்கிறேன். வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0171991
Visit Today : 233
Total Visit : 171991

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories