Siddha Prarthana | Siddha Purushar Karuvoorar | Karuvoorar Siddhar Karuvurar | Mahan Karuvoorar garland of praise (Garland of Sacred Songs and Prayers)

சித்த புருஷர் கரூவூரார் மகான் கருவூரார் புகழ்மாலை 

ஓம் கருவூர் முனிவர் திருவடிகள் போற்றி

மகான் கருவூரார் புகழ் மாலை

தவத்திரு குருநாதர் ஆறுமுக அரங்கமகா தேசிகசாமிகள் அருளியது 

நாள் 24/4/1986

“ஓம் கருவூரார் தேவாய நம”

 

Siddha Prarthana | Siddha Purushar Karuvoorar | Karuvoorar Siddhar Karuvurar | Mahan Karuvoorar garland of praise
 
கற்றவர்கள் போற்றுகின்ற கருவூரான்(ர்) நின்னடியை
பற்றுடனே பூசித்து பாவமெல்லாம் போக்கிடுவோம்
உற்றுனர்ந்த ஞானியறை உன்பெருமை உனர்ந்திடுவர்
பற்றில்லா மாந்தர் தம் பற்றுவறோ உன்பாதம்
மகான் கருவூரார் புகழ் மாலை Mahan Karuvoorar Pugal Maalai Arangar Padalgal மகான் அரங்கர் பாடல்கள் இசை வடிவில் மகான் கருவூரார் புகழ் மாலை
கற்றுனர்ந்து சொன்னாலும் காண்பரோ கசடற்தம்
நற்றவர்த்தம் உள்ளிருந்து நலம் பலவும் செய்திடுவர்
உற்றமொழி உகந்திடுவீர் இதனை நீ உய்தவர்க்கு
சற்றுமிதை தல்லாதீர் சார்ந்திடுவீர் சன்மார்கம்
பற்றுடனே யாம் சொன்ன பாடலிதை கேட்டிடுவீர்
குற்றம் என்ற பவம்தீர கூடினால் ஓதிடலாம்
மற்றவர்கள் யாரும்யிதை மாசுபன்னமுடியாது
வற்றுகின்ற ஆன்மீகம் வளர்வதற்கே பாடிவிட்டோம்
பாடிவிட்ட பொருள்தன்னை  பகுத்துனர்ந்து ஆய்ந்திடுவீர்
வாடிவிட்ட பயிறுக்கு  வழங்கிநின்ற மழைப்போல
நாடியிதை சொல்லுகின்ற  நலமான சன்மார்கம்
தேடிவந்து சேர்ந்திடுவீர் தெளிவான சித்திபெற 
சித்திபெரும் தத்துவத்தை தினம் தினமும் சொல்லுகிறோம்
சக்தியென்ற இடைகலையும் சார்புடைய பின்கலையும்
முக்தியென்ற சுழிமுனையை முனைப்புடனே உனர்தவர்கள் 
பக்தியென்ற பொருளரிந்து பரம்பொருளை கண்டிடுவர்
கண்டிட்ட பொருள்தானும் கருத்துடனே சொல்லுதர்க்கே
உண்டுண்டு இங்கு அகத்தீசன் சன்மார்கம் தானுமுண்டு
பண்டுடைய பொருள் எல்லாம் பார்அறிய வேண்டுமென்றே
தொண்டுள்ளம் கொண்றன்றோ துவக்கினோம் சன்மார்கம்
சன்மார்கம் காட்டுகின்ற சார்புடைய நூல்லுனர்ந்து
சொன்மார்கமான சும்மாயிருயெனும் சொல்லறிந்து
உன்மார்கம்யெல்லாம் புதையுண்டுபோவதற்கே
நன்மார்கம்மானதோரு நடுவரிந்து கொண்டேனே
கொண்டேனே யானும் குருபாதம் தாணரிந்து
விண்டேனே நூலில் வெட்டவெளியாகவுமே
கண்டேன உலகோர் காணத உன்மைதனை
உண்டேனே அமிழ்தம் ஊழல்லாம் தூள்படவே
ஊழல்லாம் தூள்படவே உரைத்திடவேன் உன்மைதனை
பாழ்ப்பட்டுபோகாமல் பரிந்து வந்தே கேட்டிடுவேன்
தாள்பற்றும் மார்கமெல்லாம் தப்பாது இங்கு அறிவதற்கே 
கேள்போல் என்னியன்றோ  கெடியாக பாடிவிட்டேன்
பாடிவிட்டயீறைந்து பாடல்தனை ஆய்ந்திடுவீர்
நாடியென்ற இடைப்பின்னாம் நடுவான சுழிமுனையில்
கூடிஒன்றாய் சேர்த்திடுவே குணம் பலவும் கண்டிடலாம்
நாடி நாடி இதனை நீ நன்கரிந்து கொள்வீரே.

“ஓம் கருவூர்தேவர் திருவடிகள் சரணம் சரணம் சரணம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0204447
Visit Today : 76
Total Visit : 204447

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories