மாயமில்லே மந்திரம் இல்லே –
உங்க உடம்பே கெட்டதை வெளியில் தள்ளும் அதிசயம்
நீங்களும் try பண்ணலாம்
கடவுளை அறிந்து அறிந்து வணங்குங்கள் பக்தி செலுத்துங்கள்
யார் கடவுள் – மகான்கள் தான் – எப்படி?
இயற்கையின் இயக்கத்தை அறிந்து
தன்னை வாழவைப்பதாக ஏமாற்றும் உடம்பை வென்று தன்னுள்ளே இருக்கும் தலைவனை அறிந்து தானும் தலைவனும் (தலைவன் = கடவுள்) ஒன்றாகிய ஞானிகளை நாம ஜெபம் செய்வதால்
இந்த அதிசயம் நடக்குது.
அகதியரையோ, காலங்கி நாதர், போகர், கருவூர் முனிவர், பட்டினத்தார், அருணகிரிநாதர் அல்லது இராமலிங்க சுவாமி போன்ற முற்று பெற்ற ஏதேனும் மகான் பேரை மனதிற்குள் சொல்ல சொல்ல
அந்த அற்புத சக்தி நம்முள்ளே இறங்குது. மனமும் அறிவும் மென்மையாகுது. ஆற்றல் பெருகுது
அதனால் முட்டை கவுச்சி, மீன் கூடை (மார்க்கெட்) துர்நாற்றம், துடிதுடிக்கும் ஆடு கோழியின் வலி, துன்பபடும் உயிரினங்கள் கஷ்டம் அனைத்தயும் உணர முடிகிறது.
துர்நாற்றம் வீசும் உணவுகள் மசாலாவில் மறைந்திருந்தாலும் நம்முள்ளே இருக்கும் தூய்மையான அறிவு அதை கண்டுபிடித்து வாந்தி உணர்வு கொடுத்து நம்மை காப்பாற்றுவார் கடவுள்.
சரி எதுக்கு இதை செய்யணும்.
திடீர் என்று ரோட்டில் அடிபட்டு சாககூடாது இல்லையா, தீர்க்க முடியாத நோய் வரக்கூடாது, ஏலத்தில் நம் பொருள்கள் போக கூடாது இல்லையா. வெடுகுண்டு வெடிச்சி, விமானம் காணமல் போய் நாமமும் காணமல் போககூடாது.
சாந்தமான மனம், இல்லறம், ஆரோக்கியமான உடல், கடவுள் பாதுகாப்போடு உயிர்.
இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்களோ கொள்கைகளோ பற்றி நாம் பேச வில்லை.
நம் பூமி (தமிழ் நாடு) ஞானிகள் வாழும் ஆற்றல் மிக்க பூமி அவர்கள் காட்டும் கருத்துகளை பதிகிறோம்.
அசைவ பிரியர்களும், அசைவம் சரி என்ற கொள்கை கொண்டவர்களும் எங்களை மன்னித்து பொருத்து அருள வேண்டுகிறோம்.
https://www.youtube.com/watch?v=7kmXq8JAPmI