ஈசன் (சிவன்),
கண + ஈசன் = கணேசன் (பிள்ளையார்),
வேங்கட + ஈசன் (வெங்கடேச பெருமாள்)
எனும் சிவம் அல்லது ஈசனின் தத்துவம் உலகெங்கும் விளங்கவும்
சிவ சிவ, நமசிவாய, சிவாய நம என்று முக்காலம் ஓதும் நம் பாவி மக்கள் திருந்தவும் எல்லாம் வல்ல சிவஞானிகள் மகான் சிவவாக்கியர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் போன்ற மகான்களை வேண்டிக்கொள்வோம்
“ஓம் மகான் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி “
சிவவாக்கியம் பாடல்
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல்
அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே
நமசிவாய என்றால் என்ன? அதற்கும் உயிரினகளுக்கும் இறைவனுக்கும் உள்ள சம்மந்தங்கள் என்ன?
எப்படி சித்தன் போக்கே சிவன் போக்கு என்று சித்தர்கள் சிவனை அடைந்தார்கள்
நாம் மட்டும் ஏன் சுடுகாட்டுக்கு போகிறோம் – நாம் எப்படி திருந்தவேண்டும் என்று அற்புதமான ஆன்மீக யோகா ரகசியங்களை விளக்கியுள்ள
துறையூர் துறவி – மகான் ஆறுமுக அரங்கர் திருவடிகளுக்கு வணங்கி – நன்றி சொல்லி பதிகிறேன்.
http://youtu.be/W_t_eVto20o