மகான் மஸ்தான் சாகிப் அகத்தியர் சதகம் – கவி எண் 13. Mahan Mastan Saqib Agathiyar sadhagam poem number 13
தேவரீர் திருவடிக்கு ஆளாகவும் அட்டமா சித்தி தந்து அருள்புரியவும் சித்தர்கணம் எல்லாம் எனக்கு அருள் இரங்கவும் சித்தம் வைத்து அருள் புரியவும் பாவி அடியேன் செய்த பாவங்களெல்லாம் பறந்தோட அருள் புரியவும்
பக்குவம் அறிந்து எனைப் பக்குவ விசேடனாய்ப் பண்ணி வைத்து அருள் புரியவும் நாவிட்டு உரைக்க ஒணாச் சோதி நயனத்தூடு நடனமிட அருள்புரியவும்
நம்பினேன் ஐயனே நட்டாற்றில் என் கைகள் நழுவிடாது அருள்புரியவும் மாவேகமாக மெய்த் தவராஜ சிங்கமே வரவேண்டும் என்றன் அருகே மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே மவுன தேசிக நாதனே .