மகான் மஸ்தான் சாகிப் அகத்தியர் சதகம் – கவி எண் 13 | Mahan Mastan Saqib Agathiyar sadhagam poem number 13

முருகப்பெருமான் துணை 

மகான் மஸ்தான் சாகிப் அகத்தியர் சதகம் – கவி எண் 13. Mahan Mastan Saqib Agathiyar sadhagam poem number 13

தேவரீர் திருவடிக்கு ஆளாகவும் 
    அட்டமா சித்தி தந்து அருள்புரியவும் 
சித்தர்கணம் எல்லாம் எனக்கு அருள் இரங்கவும் 
    சித்தம் வைத்து அருள் புரியவும் 
பாவி அடியேன் செய்த பாவங்களெல்லாம் 
    பறந்தோட அருள் புரியவும் 


பக்குவம் அறிந்து எனைப் பக்குவ விசேடனாய்ப் 
    பண்ணி வைத்து அருள் புரியவும் 
நாவிட்டு உரைக்க ஒணாச் சோதி நயனத்தூடு 
    நடனமிட அருள்புரியவும் 

நம்பினேன் ஐயனே நட்டாற்றில் 
    என் கைகள் நழுவிடாது அருள்புரியவும் 
மாவேகமாக மெய்த் தவராஜ சிங்கமே 
    வரவேண்டும் என்றன் அருகே 
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே 
மவுன தேசிக நாதனே . 


– மகான் மஸ்தான் சாகிப் அகத்தியர் சதகம் – கவி எண் 13 .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 313
Total Visit : 200895

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version