வினை நீக்கும் வித்தகன் முருகனே

13.11.2014
ஓம் முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி!

முருகப்பெருமானின் ஏழாம் படை வீடு
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
“ஓங்காரக்குடில்” துறையூர், திருச்சி Dt.
போன் – 04327 – 255184. www.agathiar.org

மகான் அகத்தியர்
நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு, குருநாதர் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்

+++++++++++++++++
வினை நீக்கும் வித்தகன் முருகனே
+++++++++++++++++

கோபத்தால், பொறாமையால், பிறர் பொருளை அபகரித்ததால், உயிர்க்கொலை செய்து புலால் உண்டதால், அறியாமையின் காரணமாகவும் செய்த பல்வேறு வகையான பாவங்களையெல்லாம் முருகன் நம்மீது அன்புமிகக் கொண்டு பாதுகாப்பு தந்து பாவங்களின் பலன்களை அனுபவிக்கச் செய்தும் மீண்டும் இதுபோன்று பாவங்களை செய்யாதிருக்க அறிவையும் ஆற்றலையும் தந்து அதை செயல்படுத்துவதற்கான தக்க சூழ்நிலையையும் அமைத்து தந்து, பாவ புண்ணியங்களை அறியச் செய்து ஜீவகாருண்யத்தினால் நம்மை வழிநடத்தி நாம் முன் செய்த பாவங்களின் சுமைகளை குறைக்கும் #மார்க்கம் உரைத்தும், எந்த உயிர்களுக்கு இடையூறு செய்ததினாலே பாவம் வந்ததோ அந்த உயிர்களுக்கு நல்லது செய்து அன்பு செலுத்தினால் பாவத்தினின்று விடுபடலாம் என்றும் உயிர்பட்ட துன்பமே பாவமானதும், உயிர்படும் மகிழ்ச்சியே புண்ணியமாக மாறுவதையும் உணர்த்தியும் உயிர்களிடத்து அன்பு செய்கின்ற மனப்பக்குவத்தை அளித்து ஆசிபெற அருள் செய்வான் முருகப்பெருமான்.

ஆசி பெற்று பெற்று பாவம் நீங்கி மனிதனின் நிலை உயர்ந்து உயிர்களின் ஆசிபெற்று மேல்நிலை அடைவதற்கு உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, தூய சைவ உணவை மேற்கொண்டு, சிறந்த முயற்சி உடையவராய் இருந்து, செல்வத்தை நெறிக்கு உட்பட்டு ஈட்டியும், தன்னையும் தன்னை சார்ந்தவர்களைக் காப்பாற்றியும், நட்பினை பெருக்கியும், தன்னை நோக்கி வருகின்ற விருந்தை உபசரித்தும், தன்னால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும், தாயினும் மேலான பல்லாயிரம் தாயின் அன்பிற்கும் மிகைப்பட்ட மேலான அன்புடை அருள் அன்பு மிக்கவனும், பாவங்களையெல்லாம் உணரச்செய்து மேலும் பாவியாகாது தடுத்து நாம் முன்செய்த பாவங்களையெல்லாம் பொடிப்பொடியாக்கி நம்மை காப்பவனும், குணக்கேடுகளே வடிவான நம்மையெல்லாம் நம்மிடம் உள்ள குணக்கேடுகளை நீக்கி குணவான்களாக்கி குணமே வடிவான தம்மைப்போலவே ஆக்கிக் கொள்கின்ற அருள் நிறை சோதி வடிவானவனும், நமக்கு தாய்மை
குணத்தையும், அளவிலா #சகிப்பு தன்மையையும் அருளி கனவிலும் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாத அறிவைத் தந்து எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் வாய்ப்பை அளித்து ஜீவகாருண்ய சீலர்களாக நம்மை மாற்றி இறுதியில் நம்மையும் அவனைப் போலவே ஆக்கிக் கொள்வான் அளவிலா ஆற்றலுடை #அருள்நிறை தெய்வம் #சுயஞ்ஜோதி செழுஞ்சுடர் வடிவினனான ஆயிரம் கோடி சூர்ய பிரகாசமுள்ள குளிர்ச்சி பொருந்திய பெரும் ஜோதி பெருமான் முருகப்பெருமான்.

யாருக்கும் எட்டா #பெருங்கருணை தெய்வம் முருகன் திருவடி பற்றி ஆசிபெற விரும்பினால் அவனது ஆற்றல் பொருந்திய மந்திரமாம்

“ஓம் சரவண ஜோதியே நமோ நம”

எனும் ஆதிமூல மந்திரத்தை தினம் தினம் மறவாமல் காலை படுக்கையில் இருந்து எழும்போதே குறைந்தது ஆறு முறையேனும் சொல்வதோடு ஒரு ஜோதிதனை திருவிளக்கேற்றி வைத்து அதன் முன் அமர்ந்து

காலை 10 நிமிடமும் மாலை 10 நிமிடமும் முடிந்தால் #நள்ளிரவு 10 நிமிடமும் மனம் ஒன்றி சொல்லி வரவர நாம் சொல்லும்

“ஓம் சரவண ஜோதியே நமோ நம”

எனும் மந்திர ஜெபத்தின் பயனால் முருகனது அருள்பார்வைக்கு நாமெல்லாம் ஆட்பட்டு பெறுதற்கரிய பெரும் பலன்களை பெற்று உயர் ஞான வாழ்வை வாழலாம்.

“ஒம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ
“ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ
“ஓம் சரவண பவ” என்றோ

முருகனது மந்திரத்தை யாரேனும் ஒருமுறை சொன்னாலே போதும், ஆதி #ஞானத்தலைவன் முருகப்பெருமானும் அவரது வழி வந்தவர்களும் முருகனால் ஞானியாக்கப்பட்ட முதன்மை சீடர் மகான் #அகத்தியர் முதல் வழிவழி வந்த திருக்கூட்ட மரபினர் அனைவருமான நவகோடி சித்தரிஷி கணங்களெல்லாம் மந்திரம் சொல்லியோரை அருட்கண் கொண்டு பார்த்து இரட்சிப்பார்கள் என்பது சத்திய வாக்காகும்.

ஞானமே முருகனாகும், முருகனே ஞானமாகும்.
முருகன் இல்லையேல் ஞானம் இல்லை. அவனின்றி அணுவும் அசையாது. அவனருள் இருந்தால் அனைத்தும் ஜெயமே இதை அறிந்து உணர்வதே உண்மை சிறப்பறிவாகும்.
இதைக் கற்பதே ஞானக்கல்வியாகும், இதுவே சாகாக் கல்வியாகும், கற்று தேர்ச்சி பெற்றால் அடையலாம் பேரின்ப நிலையை.
முருகனைப் போற்றுவோம்! ஞானமுதல்வன் முருகன் அருளைப் பெற்று உயர்வோம்!

+++++++++++++++++
தொடர்புக்கு, ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் – துறையூர், திருச்சி Dt,
போன் – 04327 255184. www.agathiar.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0189365
Visit Today : 49
Total Visit : 189365

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories