கடைப்பிடியுங்கள் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க கொள்கைகளை


போற்றுவோம் #முருகப்பெருமான் திருவடியை! பெறுவோம் பேரின்ப வாழ்வை!
#அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி க. அருட்பெருஞ்சோதி
நிறுவனர்- சிவராஜயோகி, பரமானந்த #சதாசிவ சற்குரு, தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்
ஸ்ரீ #அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரக்குடில், துறையூர், திருச்சி Dt. www.agathiar.org,
#துறையூர் நகரம் – தொடர்புக்கு : 04327 255184
முருகப்பெருமான் துணை மனிதன் கடவுள் தன்மையை அடைவதற்காக தோற்றுவிக்கப்பட்டதே துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கமாகும்.
பசித்த ஏழைகளுக்கு பசியாற்றிவிப்பதே இதன் முக்கிய செயல்பாடாகும்.
எல்லா உயிரையும் தம்முயிர்போல் எண்ணி செயல்படுவதே இதன் முக்கிய கொள்கையாகும். சத்தியத்தை நிலைநிறுத்த அரிச்சந்திரனாகவும், அரச நீதியை நிலைநிறுத்த இராசஇராச சோழனாகவும், ஜீவகாருண்யத்தை நிலைநிறுத்த இராமலிங்க சுவாமியாகவும்
அவதரித்த ஆறுமுகப்பெருமான் கலியுகத்தை மாற்றி ஞானயுகமாக ஆக்கியே சமதர்மத்தையும் சம நீதியையும் நிலை நாட்டிடவே இக்காலத்தில் துறையூரில் ஆறுமுக அரங்கமகா தேசிகராக அவதரித்துள்ளார்.
துன்பமில்லாத வாழ்வு வாழ வேண்டுமா? கடைப்பிடியுங்கள் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க | கொள்கைகளை.
ஆடு, கோழி பலியிடும் கோவில்களுக்கு போக வேண்டாம்.
உயிர்க்கொலை செய்து புலால் உண்ண வேண்டாம். பசித்த ஏழைகளுக்கு முடிந்த அளவிற்கு பசியாற்றுங்கள்.
காலை மாலை ஒரு ஐந்து நிமிடமேனும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்ற மகாமந்திரத்தை ஜெபியுங்கள்.
கற்றாலே சாகாக்கல்வியை கற்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0208799
Visit Today : 65
Total Visit : 208799

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories