சிரிப்புலையே இரண்டு வகை சிரிப்பு ரொம்ப திமிரா சிரிப்பான். அவமானபடுத்துறது, ஏளன சிரிப்பு அது வந்து சிலபேர் பாவிகளுக்குதான் அது மாதிரி சிரிப்பு வரும். சிரித்தே சிலபேர் பாவியாவான். என்ன சிரித்தே பாவியாவானா? அது ஒரு வகையான சிரிப்பு. அது அவர்களுக்கே உரியதாகும். நமக்கு தெரியாது. சிலபேர் ஏளனமா சிரிச்சே பாவியாவன். ஏளனச்சிரிப்பு, அகங்கார சிரிப்பு, வீர கர்ஜனை. ஆக, அடுத்தது சிரித்து பாவியாகுதல், நடந்து உடம்பைகாட்டி பாவியாகுதல். அதே சமயத்தில் எச்சி துப்பி பாவியாவான், காரி துப்புவான். அசிங்கமா நடு ரோட்டில் துப்பிட்டு போவான். பல பேர் அசிங்கப்படுவான். போக்குவரத்து உள்ள இடத்தில் காரி துப்பியிருந்தானா அதை பாக்குறவன் பூரா அறுகருப்பா நினைப்பான். அது எச்சி துப்பியே பாவம், சிரித்து பாவம், நடந்து பாவம். இன்னொரு கொடூரமான பாவம் உருட்டி பார்த்தல். உருட்டி பார்க்கும் போது என்னடா ரொம்ப உருட்டி பார்க்கிறான். அந்த கொடூரமான பார்வை, பார்த்தே பாவியாகுதல். சிலபேர் சில பெண்களை குறும்புதனமா பார்பான். அது பருவ கோளாறு. புருவ கோளாறு ஒன்று, பருவ கோளாறு ஒன்று. குறும்ப தனமா பார்ப்பான். என்ன அந்த பையன் நம்மள உருத்து பார்த்துட்டு போறான் என்று அந்த பெண்கள் நினைப்பாங்க. என்ன இவ்வளவு கீழ்த்தனமா பார்த்துட்டு போறான். அப்போ பார்த்தே பாவியாவான். பேசியே பாவியாவன். கடுமையா பேசுவான், திட்டுவான். திட்டினால் பிறர் மனம் புண்படும்படி பேசினால் பேசுவதால் பாவம், சிரிப்பதால் பாவம், பார்ப்பதால் பாவம், காரி துப்புவதால் பாவம், நடப்பதால் பாவம். இன்னும் பல பேர் போக்குவரத்து உள்ள இடத்தில் சுகாதாரக்கேடு மலஜலம் கழிப்பான். இதுமாதிரி இருக்கு. இன்னும் சில பேர் பீடி, சிகரெட்டை ரோட்டிலே போடுவான். அது அப்படியே புகைஞ்சிகிட்டே இருக்கும். அது ஒரு கலை அது. பீடி உடனே அணைந்து போகும், சிகரெட் அப்படியே எரிஞ்சிகிட்டே இருக்கும். அதன் தன்மையை வெளிப்படுத்திகிட்டு இருக்கும். அதை அப்படியே போட்டுட்டு போவான். அப்போ சிகரெட்டால் பாவியாவன். இப்படி ஒவ்வொரு வகையில பாவியாவான். அப்போ என்ன செய்வான்? இப்படியெல்லாம் பாவி, எந்தெந்த வகையில பாவி. சரி புண்ணியம் எப்படி செய்யிறது? ரோட்ல கண்ணாடி கிடக்கும், ஆணி இருந்தால் அதை அப்புறப்படுத்தலாம். கிராமமா இருந்தால் ரோட்டில நெறிஞ்சி முள் கிடக்கும் அப்புறப்படுத்தலாம். அதுல ஒரு புண்ணியம் கிடைக்கும்.
ஞானத்தை தேட
Benifishers
Visit Today : 639 |
Total Visit : 208547 |