மாமிசம் சாப்பிட்டால் அது நச்சி உணவு. நச்சி உணவு சாப்பிட்டால் நிச்சயம் உனக்கு குணக்கேடு வரும். உன் பாவம் உன்னை விடாது.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
திருக்குறள் – 255
சாப்பிடாமல் இருந்தால் உயிர் நல்ல நிலையில் இருக்கும். இல்லையென்றால் நரகம் உன்னை பற்றிவிடும்
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
திருக்குறள் – 255
நரகம் உன்னை பற்றிவிடும் என்றார். ஆக, புலால் உணவு அவசியம் இல்லை. நானே சாப்பிட்டவன்தான். நேத்து வரைக்கும் சாப்பிட்டேன். சாப்பிட்டுதான்யா திருத்திக்கிட்டேன். நானே திருத்திக்கிட்டேனு சொல்றேன். நேத்து வரையிலும் சாப்பிட்டோம். பல ஆண்டுகளுக்கு சாப்பிட்டேன். நிறுத்திக்கிட்டோம். கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். ஆக, புலால் உண்ணுவதால் குணக்கேடு வரும். பாவத்தை செய்து சாப்பிட்ட வேண்டாம்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள்.
-திருக்குறள் – 221
தன் உடம்பை பெருக்குவதற்காக இன்னொரு உடம்பை உண்டால் எப்படி உனக்கு அருள் உண்டாகும், அருளாட்சி செய்ய முடியும் என்று கேட்பான் வள்ளுவன். ஆக, நேற்று வரையில் தவறு செய்திருக்கலாம். முட்டை சாப்பிட்டிருக்கலாம், எல்லாம் சாப்பிட்டிருக்கலாம். எல்லாம் சாப்பிட்டேன்யா. திருந்திக்கோனு சொல்லுவான். புலால் உணவு உண்ணக் கூடாது. உயிர் கொலை செய்யக்கூடாது. ஆக, இப்படியெல்லாம் ஒவ்வொரு நாளும் ஆசானை கேட்க வேண்டும். ஞானியாவதற்கு என்னையா வேண்டும்? புலால் உணவு உண்ணாமல் இருக்கணும், உயிர்கொலை செய்யாமல் இருக்கணும் தீர்ந்து போச்சி. எந்த காரணத்தை காட்டிலும் ஆடு கோழி வெட்டுற கோவிலுக்கு போகவே கூடாது. இதான் எங்க குலதெய்வம்னு சொன்னா போய்கிட்டே இருக்கணும். அவனை திருத்த நீ ஆள் இல்லை. போய்கிட்டே இருக்கணும். எங்க முன்னோர்கள் செஞ்சிருக்கான்னு சொன்னா நீயும் செஞ்சிக்கிட்டே இரு. நான் வேண்டிகிட்டனே எனக்கு ஏதாவது கேடு வரும்னா செஞ்சிகிட்டே இரு. ஏன்யா கடவுளுக்கு இதான் வேலையா, அவனுக்கு என்ன? நீ கேக்குறதுதான அவன் கொடுக்க இருக்கான். அவனுக்காக ஏன் நீ வேண்டிக்கிற? கடவுளுக்கு ஆடு கோழி அவன் கேக்குறானா உன்னை? சான்றோன் கேட்பானோ? சான்றோர்கள் கேட்கமாட்டார்கள். குடில் அன்பர்கள் கேட்ப்பார்களோ? உனக்கு இந்த துன்பம் தீர்ந்தால் உனக்கு கோழி வெட்டுரனு கேட்பானோ? கேட்கமாட்டான். அவர்கள் ஏதோ சொல்கிறார்கள். நம் முன்னோர்கள் அப்படி செய்யாவிட்டால் கேடு வரும்னா? ஏதோ செஞ்சிட்டு போ. உனக்கு என்ன நட்டமா? தடுக்காதே அவனை. அதுக்கென்று வந்தவன். உயிர்கொலை செய்யுற கோவிலுக்கு நீ போகாதே. உனக்குதான் சொன்னோமே தவிர அந்த கோவில்ல போய் செய்யாதேனு நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த அருவாளை திருப்பிடுவான். பிரச்சனை வந்துவிடும். மற்றவர்களை திருத்த நாம் வரவில்லை. நாம் திருந்ததான் வந்திருக்கிறோம். அவன் வினைப்படி ஏதோ செஞ்சிட்டு இருக்கிறான். அது நமக்கு தேவையில்லை. உலகத்தை திருத்த வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. முதல்ல நம்மை திருத்திப்போம். ஆக, உயிர்கொலை செய்யாமலும், புலால் உண்ணாது இருக்க வேண்டும். திருவருள் துணை இல்லாமல் ஒருவனுக்கு சிறப்பறிவு வராது. திருவருள் எப்படி பெறுவது என்று கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். தலைவன் யார் என்று அறிந்து கொள்ள வேண்டும். தன்னை அறிந்துகொள்வதற்கு கேட்டு தெரிந்துகொள் என்றான் வள்ளுவன். ஆக, எப்படி பார்த்தாலும் கேள்விச்செல்வம், செவிச்செல்வம் கடவுள் செவி, காது என்னும் கேட்கும் திறன் வைத்ததன் நோக்கமே படிக்காவிட்டாலும், கேட்டு தெரிந்துகொள்ளதான்.