கடைசியில் பிணம் என்கிற பெயர்தானே எடுக்க முடியும் – திருக்குறள்-தவம்-குறள் எண் 266

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் மற்றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுள்பட்டு
            -திருக்குறள்-தவம்-குறள் எண் 266
இப்ப எல்லாம் செய்வான். உத்தியோகம் போகிறான். அடாது அவன்பாட்டுக்கு விடுவான். லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பணம் கையில் இருக்கும். இருபத்துநான்கு மணி நேரமும் சிந்திப்பான். என்னைய்யா அப்படி சிந்திக்கிறாய் என்பான். என்ன சொத்து இருக்கிறது என்றான். கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என்றான். 400 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறாய். ரொம்ப புண்ணியவான் தான். சரி, மறுபடி ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? என்றால், ‘இல்லை, வியாபாரத்தைப் பெருக்கணும். வெளிநாட்டுக்கு சரக்கு அனுப்பணும். போகணும் வரணும் என்று கதை விட்டுக்கொண்டு இருப்பான். அவன் சிரிப்பான். விசயம் தெரிந்தவன் ஏன் இவ்வளவு பொருள் இருக்கல்லவா? மறுபடி போட்டு ஏண்டா உழட்டிக்கொண்டு இருக்கிறாய்? ஏன் இப்படி கிடந்து முட்டிக்கொண்டு இருக்கிறாய்? ஏதோ அன்னதானம் செய். வந்த பொருள் கடவுள் கொடுத்ததுதானே? புண்ணியத்தை செய்து அருளை பெற்றுக்கொள்ளப்பா! பூஜை செய் என்று சொல்வான். இவன் என்ன செய்வானென்றால், விடாது செல்வம் சேர சேர, செல்வம் பெருகப் பெருக மனதை விரித்துக் கொண்டே போவான். மனதை விரித்து விரித்து ஊர்பட்ட தொழிற்சாலை அது இது என்று கட்டிக் கொண்டு, கோடிக்கணக்கான ரூபாய் சேர்த்துக் கொண்டு, கடைசியில் என்ன பெருமை இருக்கென்றால் அவன் கோடீஸ்வரன். அவ்வளவுதானே? அதில் ஒன்றும் பெரிய லாபம் இல்லையே? புண்ணியவான். அதில் இருக்கு பெருமை. அவன் புண்ணியவான். கோடீஸ்வரன் என்னும் பெயர் எல்லோரும் எடுக்கலாம். சரி, நல்வினை காரணமாக செல்வம் சேர்ந்திருக்கிறது. புண்ணியவான் என்று பெயர் எடுப்பதற்கு, சிறந்த அறிவுள்ள மக்கள்தான் செய்வார்கள். இல்லையென்றால் புண்ணியவான் ஆக்க மாட்டார்கள். செல்வத்தை சேர்த்துக் கொண்டே இருப்பான். சேர்த்து சேர்த்து கடைசியில் சாகும் வரை இதே சிந்தனை. எங்கே பொருள் அனுப்பலாம்? என்ன வியாபாரம் செய்யலாம்? என்ன செய்தால் நன்றாக இருக்கும்? இப்படியே பேசிக்கொண்டு கடைசி வரையிலும் அவன் செயலில் முடிவே இருக்காது. நல்லகாரியம் செய்ய மாட்டான். வியாபாரம் சிறப்பாக செய்வான். அது அவன் முன் செய்த நல்வினையாக இருக்கும். செல்வம் சேர்ந்திருக்கும். ஆனால் வள்ளுவன் சொல்வான். 
        தவம் செய்வார் தம் கருமம் செய்வார் – தினம் பூஜை செய்பவன் தான் கடமையைச் செய்கிறான்.
        மற்றல்லார் அவம் செய்வார் ஆசையுள்பட்டு என்றான். அது வீண் முயற்சி. இவ்வளவு செல்வம் சேர்த்தாயே? இந்த ஜென்மத்திற்கு உன் ஆன்மாவிற்கு தேடிக்கொண்டாயா? என்று கேட்டான். அறிவுள்ளவன் தான் கேட்பான். இவ்வளவு பாடுபட்டாயல்லவா? இவ்வளவு வீடு கட்டியிருக்கிறாய். எவ்வளவு நிலபுலன் வாங்கியிருக்கிறாய். எவ்வளவு பெரிய தொழிற்சாலைகள்? கோடிக்கணக்கானபேர்! உலகமெல்லாம் பெருமையாய் இருக்கல்லவா? இதில் உனக்கென்ன லாபம்? என்று கேட்பான்.
        தவம் செய்வார் தம் கருமம் செய்வார்- கருமம் என்பது அன்னதானம் செய்தல். செல்வம் பெருகப் பெருக அன்னதானம் செய்வான். தினம் பூஜை செய்கிறான். கடமையை செய்து கொண்டே இருக்கிறான். அவன்தான் தன் கடமையை செய்கிறான். இல்லறத்தில்  மற்றவனெல்லாம்
        அவம் செய்வார்- வீண் முயற்சி. பல கோடி உள்ளவனை வீண் முயற்சி  என்று சொல்கிறான். வீண்முயற்சி. அப்ப செல்வம் சேர்க்கக் கூடாதா? செல்வம் சேர்க்கலாம். என்னடா பயன் அடைந்தாய்? இவ்வளவு செல்வம் வந்திருக்கலவா? இந்தியா பூராவும் பெயர் இருக்கல்லவா? இந்தியா பூராவும் பெயர் எடுத்திருக்கிறாய் அல்லவா? இதனால் கடைசியில் பிணம் என்கிற  பெயர்தானே எடுக்க முடியும்? நீ செத்துத் தானே போகப்போகிறாய்? உன் கூட என்னப்பா வரும்? என்ன வரப்போகிறது? ஏன்டா இவ்வளவு அல்லற்பட வேண்டும்? சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லையென்று சொன்னால் அவன் வீண் முயற்சியாகவே எடுத்து, செத்தே போவான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0201525
Visit Today : 489
Total Visit : 201525

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories