ஆக வருங்காலத்தில், இப்போது சொல்கிறோம். என்ன செய்வான்? என்ன செய்ய முடியும் நம்மை? இது குடியரசு நாடு. முடியாட்சி இல்லை. குடியாட்சி உள்ள நாட்டில் ஒரு கடைசி குடிமகன் ஒருவன் பதவிக்கு வர வாய்ப்பிருக்கிறது. அதை யாரும் தடுக்க முடியாது. ஆக குடியாட்சி இது! முடியாட்சி அல்ல! ஆக குடியாட்சியில் யாரும் எந்த பதவிக்கு வேண்டுமானாலும் வரலாம். யாரும் தடுக்க முடியாது அதை. என்ன ஆச்சரியம்? சங்கத்தில் உள்ளவர்களுக்கு அந்த ஆற்றலா? அந்த ஆற்றல் உண்டு. இந்த சங்கம் ஆற்றல் பொருந்திய சங்கம். ஞானிகள் ஆசி பெற்ற சங்கம். ஆகவே இந்த சங்கத்தார்கள்தான் செய்யப் போகிறார்கள். எனக்குத் தெரியும் அது.

இப்போது சொல்கிறோம். சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஏனையா, சும்மா சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால் , சொல்லிக் கொண்டே இருப்போம். “அப்பவே சொன்னாரையா!”

அகத்தியர் சன்மார்க்க சங்கத்தொண்டர்கள் , அகத்தியர் சன்மார்க்க சங்கம் தான் உலகத்தை வழி நடத்தப் போகிறது. ஆட்சி செய்யப் போகிறது. வழி நடத்தப் போகிறது. ஆட்சி செய்யப் போகிறதையா! வைத்துக் கொள்ளய்யா! எழுதிக்கொள்ளய்யா! குறிப்பு எழுதுவதானால் எழுதிக்கொள்ளட்டும்! இந்த அகத்தியர் சன்மார்க்க சங்கம்தான் உலகத்தை வழி நடத்தும்!

உலகத்தையேவா? என்னையா அவ்வளவு ஆற்றல்?

ஆற்றல் பொருந்திய ஆறுமுகப்பெருமான் இருக்கிறார். ஆற்றல் பொருந்திய அகத்தீசர் இருக்கிறார். ஆற்றல் பொருந்திய புஜண்டமகரிஷி இருக்கிறார். ஆற்றல் பொருந்திய திருமூலதேவர் இருக்கிறார். அவர்கள் ஆசி பெற்று செய்கிறோம். நம்மாலா செய்ய முடியும்? சாதாரண விஷயமல்ல இது! அவ்வளவு சூழ்ச்சி, வஞ்சகம் எல்லாம் இருக்கும். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. கிளம்பும் போதே, காலை எழுந்திரிக்கும்போதே “அகத்தீசா! “ என் சிந்தையும் செயலுமாக இருந்து வழி நடத்தப்பா! என்று கேட்க வேண்டும். அவர் வழி நடத்துகிறார். நீ என்ன செய்வது? அவரே நடத்தட்டும். எல்லாம் அவரே செய்கிறார். உலகமாற்றத்தை உலகமக்களுக்கு அவர் செய்ய வேண்டிய கடமை வந்து விட்டது! சொல்கிறார் ஆசான்

“கல்கியுகம் ஆவதென்ன அதர்மத்தாலே! “

நடக்கின்ற கொடுமையெல்லாம் பார்த்தால் சகிக்க முடியவில்லை. டி.வியா இது? டி.வியைப் பார்த்தால் அவ்வளவு செய்தி வந்து கொண்டிருக்கு. நான் பார்க்கிறேன். டி.வியையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இப்ப. எங்கே பார்த்தாலும் கொள்ளை கொலைதான். ஏனையா, கட்டுப்படுத்த முடியாதா? முடியாது! அது ஞானிகள் ஆசி இருக்க வேண்டும். முருகப்பெருமான் இறங்குகிறான். ஆற்றல் பொருந்திய முருகப்பெருமான் இறங்குகிறான். அண்டமெல்லாம் கிடு கிடு என நடுங்கும்! முருகா! எப்போது வேண்டுமானாலும், எத்தனை வேண்டுமானாலும் செய்யலாம். அத்தனை ஆற்றல் இருக்கிறது முருகப்பெருமானிடம்! ஞானிகள் இறங்குகின்றார்கள்! பதினெட்டு சித்தர்களும், நவகோடி சித்தர்களும் இறங்கி, காப்பாற்றுகிறார்கள். எங்கிருந்து வருகிறார்கள்?

ஓங்காரக்குடில் சார்பாக, அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாகத்தான் நடத்துவார்கள். துறையூர் ஓங்காரக்குடில்தான் நடத்தப்போகிறது இதை! குறிப்பு எழுதிக்கொள்ளையா!

என்னையா ஆற்றல்? ஆமாம், ஆற்றல் இல்லாவிட்டால் சொல்வோமா இதை? இது என்ன சின்ன விசயமா? அதுவும் இந்த காலத்து அரசியலில்? இந்த கால கட்டத்து நெருக்கடியான அரசாங்கத்திடம் சொல்கிறோம் இதை! சின்ன விசயமில்லையே? சொல்கிறோம்! செய்வோம்! வரும் காலத்தில் செய்யத்தான் போகிறோம். நாங்கள்தான் நடத்தப் போகிறோம். நாங்கள்தான் உலகத்தில் ஆட்சி நடத்தப் போகிறோம். எங்கள் சங்கம்தான் நடத்தப் போகிறது! நம் அன்பர்கள்தான் இதை உலகத்தில் நடத்துவார்கள்.

ஆகவே நல்ல வாய்ப்பு இருக்கிறது! எந்த நேரம் சொல்ல முடியாது! மூன்று வருடம் சொல்லியிருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் வரலாம். வந்தால் நமது சங்க அன்பர்கள் தயாராக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0209551
Visit Today : 68
Total Visit : 209551

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories