பலகோடி காலங்கள் ஒரு ஊசியை, மூண்டெரியும் அக்கினிக்குள் ஒரு ஊசியை நட்டு அதன் மேல் நின்று தவம் செய்வான் – வீனா போவான்
இந்த ஆன்மா மும்மலம் என்று சொல்லப்பட்ட சிறையில் அகப்பட்டுக் கிடக்கிறது. அந்த ஆன்மாவைத் தட்டி எழுப்ப வேண்டும். அந்த ஆன்மாவை அதிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும். சாக்கடைக்குள் கிடக்கும் அந்த வைரமணியை எடுக்க வேண்டும். உடம்பு என்று சொல்லப்பட்ட சாக்கடை, அதற்குள் ஒரு வைரமணி இருக்கிறது. அந்த வைரமணியை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த உடம்பில் இருக்கும் மாசு தீரும். ஆசான் என்ன சொல்கிறான்,
சிறை உடல் நீ அறக் காட்டி–அந்த ஆன்மா சிறைப்பட்டுக் கிடக்கிறது. ஆன்மா வைரமணி. அது மும்மலம் என்ற சிறையில் அகப்பட்டிருக்கிறது. அதை
நீ அறக் காட்டி- அதிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்று சொன்னார். ஆக அந்த மாதிரி ஒரு வாய்ப்பை அடைவதற்குத்தான் இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம். அவரவர்கள் ஏதோ மனைவி மக்களோடு வாழ்வது, இல்லறத்தை செம்மையாக நடத்துதல், அமைதியாக வாழ்தல் இதற்காக நாம் வாழவில்லை. நோக்கம் முடிவு, என்ன முடிவு? என்றான்.
அந்த வெற்றி! அந்த வெற்றி அடைவதற்கு ஆசானைக் கேட்கிறான். ஆக, திருவருள் துணை இல்லாமல் முடியாது என்று சொல்லிவிடுவான். அதுதான் சொன்னார்,
கற்பங்கள் பல கோடி செல்லத்தீய
கனலினடு ஊசியின் மேல் காலை ஊன்றிப்
பொற்பறமெய் உணவின்றி உறக்கமின்றிப்
புலர்ந்து எலும்பு புலப்பட ஐம்பொறியை ஓம்பி
நிற்பவருக்கொளித்து மறைக்கொளித்து யோக
நீண்முனிவர்க்கொளித்து அமரர்க்கொளித்து மேலாம்
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்
திருவாளர் உட்கலந்த தேவ தேவே
-திருவருட்பா -மகாதேவமாலை-கவி எண் 56
அப்ப கற்பங்கள் பல கோடி செல்லத்தீய
கனலினடு ஊசியின் மேல் காலை ஊன்றி என்று சொன்னார்.
பலகோடி காலங்கள் ஒரு ஊசியை, மூண்டெரியும் அக்கினிக்குள் ஒரு ஊசியை நட்டு அதன் மேல் நின்று தவம் செய்வான் என்றார்.
பொற்பறமெய் உணவின்றி உறக்கமின்றிப்
புலர்ந்து எலும்பு புலப்பட ஐம்பொறியை ஓம்பி
நிற்பவருக்கொளித்து மறைக்கொளித்து யோக
நீண்முனிவர்க்கொளித்து அமரர்க்கொளித்து மேலாம்
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்
திருவாளர் உட்கலந்த தேவ தேவே
அவன் யாரிடம் இருக்கிறான்? என்றார். அது இவ்வளவு பேருக்கு, அரும்பாடு பட்டவருக்கெல்லாம் மறைத்துவிட்டு யாருக்கு ? என்றான். “உன்னைத்தவிர அருள் செய்ய யாருமில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்றான்.
“அப்பா! நான் இத்தனை காலங்கள் பல சாத்திரங்களையும், வேதங்களையும் படித்து என் முயற்சியால் இந்தத் தவத்தை முடிக்க வேண்டுமென்று நினைத்தது என்னுடைய அறியாமை என்று உணர்ந்து கொண்டேன். “ என்றான். யாரையா உணர்ந்தது? என்றால், அறிந்தவன் சொன்னான். “உன்னுடைய முயற்சி பயனற்றது. இத்தனை காலம் பாடுபட்டதும், ஆன்மீகத்திற்காகச் செலவு செய்ததும் பயனற்றதடா!. ஒன்றே ஒன்று தலைவன் திருவருள் இல்லையென்றால் முடியாது என்ற அறிவினை நீ பெறவில்லை.”
“இப்போது என்ன செய்வது?” என்றான். 12, 20 வருடம், 14 வருடம் போய்விட்டது. என்ன செய்வது?
பிடி! ஆசான் அகத்தீசனை!
“ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி”