அவரு அந்த ஊர் மக்களுக்கு கடவுள பத்தி நல்ல விஷயங்கள் சொல்லிவந்தாராம்
அது பிடிக்காத அந்த ஊரு நாட்டாமை அவரை கூப்பிட்டு வந்து அவரை கொன்னுட்டாராம்
இருந்தாலும் அது கலியுகமா இருந்ததால விஷயம் தெரியாத அந்த மக்கள் அவரை கடவுளின் அவதாரம் என்று எண்ணி ஊர் முழுவதும் வணங்க ஆரமிசிடாங்கலாம்
இந்த கதை எதற்கு என்றால் –
கடவுள பத்தி பேசறது என்பது வேறு – எமன் என்னும் இயற்கையின் இயக்கத்தை வென்று கடவுளான ஞானிகள் என்பது வேறு.
உண்மையான ஞானிகள் யாருக்கும் அஞ்சவும் மாட்டார்கள் அவர்களையும் யாராலும் எவனாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது.
அவர்கள் தான் மன்னர்களுக்கும் மனிதர்களுக்கும் வழிகாட்டுவார்கள் (அரசாங்கம் விரும்பினால்)
இந்த பதிவின் நோக்கம்
ஞானத்தலைவன் சுப்பிரமணியர் அவர் முதல் சீடன் அகத்தியர் முதல் வள்ளல்ளார் வரை இந்த நூற்றாண்டின் ஞானி மகான் ஆறுமுக அரங்கர் வரை அனைவரும் எமனை வென்றவர்கள். அவர்களை நாமத்தை சொல்லி பூசிப்பது நமக்கு அறிவு தெளிவையும் மரணமில்லா பெருவாழ்வை பற்றிய உணர்வையும் தரும்.
ஞானிகள் யாருக்கும் அஞ்ச மாற்றார்கள் என்ற கந்தரலங்காரம் பாடல்:-
சலங்காணும் வேந்தர் தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
அலங்கார நூற்று ளொருகவி தான் கற்றறிந்தவரே. 101
https://www.youtube.com/watch?v=5VL-KT55L9I&list=PLcGK0So1TkocalEEbN-9RU1xPerwMBsh9&index=2