இவ்வுலகை காத்து இரட்சிக்கவே அளவிலாத தருமங்களை செய்து செய்து, அளவிலா தரும சக்தியை பெருக்கி அறவேலிதனை அமைத்து உலகை காக்கின்ற ஆறுமுக அரங்கமகாதேசிகனே! இவ்வுலகை காக்கவே முருகப்பெருமானின் அவதாரமாக வந்துதித்திட்ட அரங்கமகாதேசிகனே! அகத்திய பெருமானே! ஆறுமுகனே! அரங்கமகாதேசிகனே உம்மை ஆறுமுகனே! அரங்கமகாதேசிகனே! என்றே வணங்கி உலக மக்களெல்லாம் ஏழாம் படை வீடாம் துறையூர் ஓங்காரக்குடிலிற்கு வந்து தரிசித்திட, வந்து தரிசித்தவரெல்லாம் வாழ்வினிலே உயர்நிலையை அடைவார்களப்பா. உமது பெருமைகளை உலக மக்கள் அறிந்து அவரவரும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவே உலகநலம் கருதி மன்மத வருடம் கார்த்திகை மாதம் 12ம் நாள் 28.11.2015, சனிக்கிழமையான இன்றைய தினமதனிலே தவ சூட்சும நூல்தனையே சுந்தரமூர்த்தி நாயனார் யானும் உலக நலம் கருதி உரைக்கின்றேன் என்கிறார் மகான் சுந்தரமூர்த்தி நாயனார்.
எல்லா நன்மைகளையும் அருளிக் காக்கின்ற ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக
அரங்கமகாதேசிகரை முழுமனதாய் நம்பி சந்தேகமின்றி ஏற்றுக் கொண்டு அரங்கன்
திருவடிகளிலே சரணடைந்து ஆறுமுக அரங்கமகாதேசிகரிடத்து தீட்சை உபதேசமடைந்து அரங்கனின் தூய நெறிமுறையாம் சுத்த சன்மார்க்க நெறியினை எல்லா மக்களும் பின்பற்றி தொடர்ந்திட அற்புதமான உலக மாற்றமும் உயராசான் ஆறுமுக அரங்கமகாதேசிகரால் நடந்தேறுமப்பா.
நடக்கின்ற உலக மாற்றமதனிலே ஞானவழி செல்கின்ற எல்லா மக்களும் தடையேதுமின்றி ஏழாம் படை வீடாம் துறையூர் ஓங்காரக்குடிலிற்கு வருகையுற்று ஓங்காரக்குடிலின் தர்ம சக்தியை பெற்று ஜீவதயவெனும் குறையற்ற நெறிமுறையை தொண்டாய் செய்ய செய்ய ஞான சித்தியோடு உலகமாற்றம் இனிதே நடந்தேறுமப்பா.
இவ்வுலகினிலே ஆறுமுக அரங்கமகாதேசிகரின் தலைமையிலே அற்புதங்களை ஞானிகள் ஒன்றுகூடி நிகழ்த்த இருக்கின்றபடியினாலே உண்மையான சன்மார்க்கத்தை ஏற்று அறங்கள் செய்து அறவழியிலே செல்பவர்களுக்கு ஞானிகளே குழந்தையாக தோன்றி வளர்ந்து மரணமில்லா பெருவாழ்வை பெற்று கடைத்தேறும் சக்தி வடிவாக விளங்கி நிற்பாரப்பா.
ஆதலின் மக்களே, ஞானிகள் வருகை மாற்றங்கள் சிறப்புடனும், அற்புதமும் நிகழ
இருப்பதினாலே புத்திரபாக்கியம் வேண்டி வருவோர் மண்டியிட்டு அரங்கன் தலைமையை ஏற்று அரங்கனின் தானதருமப் பணிகளுக்கு அவரவரால் இயன்ற அளவு தருமம் செய்ய, தயவுடன் கூடிய சேவைகளை செய்ய செய்ய தலைவனாம் அரங்கமகாதேசிகரின் அருளால் வரங்கள் கிட்டுமப்பா. இவ்வுலகமே பெரும் மாற்றங்களை காணுமப்பா.
அகத்தீசனை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால்….
உணவு, உடை, வீட்டு வசதி, வாகனம், மருத்துவம் ஆகியவை மிக மிக அத்தியாவசிய
தேவையாகும். இந்த அடிப்படை அத்தியாவசியமானவற்றை பெறக்கூட மக்கள் மிகுந்த போராட்டத்தின் ஊடேதான் இந்தவிதமான அடிப்படை வசதிகளை பெறுகிறார்கள் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
மக்கள் துன்பங்கள் தீரவே ஞானிகள் தலைமையிலே ஞானிகள் ஆட்சி அமைகிறது என்பதை அறியலாம்.