அகத்தீசன் திருவருளே அன்றாடப் பிரச்சனை தீர்க்கும்

05.03.1996 – என்ற தலைப்பில் மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை
ஓம் அகத்தீசயா நம

அன்புள்ள பெரியோர்களே! தாய்மார்களே! சன்மார்க்க சங்க உறுப்பினார்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
     இப்போது 51 முறை ஆசான் அகத்தீசர் நாமத்தை சொல்லியிருக்கிறோம். ஓங்காரக்குடிலாசன் குணக்கேடுகளை நீக்கியவர் என்று அன்பர்கள் சொன்னார்கள். ஒரு நாளா, இரண்டு நாளா? பத்தொன்பது ஆண்டுகள் தவமும், பூஜையும் செய்திருக்கிறேன்.
     ஆசான் அகத்தீசர் குணக்கேடு அற்றவர், நிர்க்குணமானவர். அவர் ஆசான் ஞானபண்டிதனை பூஜை செய்து, தன்னுடைய எல்லா குணக்கேடுகளையும் நீக்கினார். அதுபோல் ஒவ்வொரு நாளும் ஆசான் அகத்தீசர் வணங்கினோம்.
     அப்படி ஆசான் வணங்கும்போது, “என்னிடம் இருக்கும் குறைகளை உணர்ந்து, அதை நீக்கிக் கொள்ள அருள் செய்ய வேண்டும்” என்று கேட்டோம்.
     எல்லா குணக்கேடுகளும் நீங்குவதற்காக, ஆசான் ஆசியை இன்னும் கேட்டு வருகிறோம். இன்னும் குறைகள் இருக்கலாம், எனக்குத் தெரியாது.
     “இன்னும் நீ மற்றவனை மதிக்கவில்லை. யான் என்ற அகர்வம் இருக்கிறது” என்று ஆசான் சொன்னார்.
     “எப்படியென்று எனக்குத் தெரியவில்லை” என்று ஆசானிடம் கேட்டோம்.
     “பொருளும் புகழும் வந்தவுடன் நீயே செய்வதாக நினைக்கிறாய். நல்லது அல்ல.” என்றார். அப்போதுதான் இப்படி ஒரு குணக்கேடு இருக்கிறது என்பது எனக்கு தெரிந்தது.
     சிலபேர் தொடர்ந்து பொருளதவி கேட்பார்கள், கொடுப்போம். மறுநாள் வந்தால் ஏன் வந்தான்? என்ற எண்ணம் வரும்.
     “நீ ஒன்று கொடுக்கவில்லை, நாங்கள் கொடுக்கிறோம். தகுதி உள்ளவனுக்குக் கொடுப்போம். நாங்கள் எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்துவிட மாட்டோம். அவரவர் பண்பை அறிந்து கொடுப்போம்” என்று ஆசான் சொன்னார். முதல் நாள் கொடுக்கக்கூடிய அந்த மனம், கணித மனமாக இருந்தது. மறுநாள் அது இறுகியது. ஏன் மனம் இறுகியது என்று ஆசானைக் கேட்டோம்.
     “னே கொடுக்கவில்லை. நான் கொடுப்பதை நீ அவனுக்குக் கொடு!” என்றார்.
     ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
      தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு.
                                        -திருக்குறள் – புறங்கூறாமை – குறள் எண் 190
                ஏதிலார் என்றால் பகைவர். அடுத்தவன் குற்றத்தை அணு அணுவாக ஆராய்ந்து அறிகின்ற அறிவு இருக்கிறது.
     ஆனால் தன குற்றத்தை உணர்ந்தால், தீது உண்டோ மன்னும் உயிர்க்கு? அப்போது நிலைபெற்ற உயிர்க்கு தீது இருக்காது. இல்லாவிடில் தீது இருக்கிறது என்பார்.
     தலைவன் ஆசியால்தான் ஒவ்வொரு குணக்கேடும் நீங்கும். புண்ணியவான்களுக்குத்தான் அந்த வாய்ப்பு உண்டு. நாம் வணங்கக்கூடிய ஞானிகளெல்லாம் புண்ணியம் செய்த மக்கள், சாதாரணமாக பொருளாதாரத்தையோ அல்லது தனித்தன்மையை வைத்துக் கொண்டு போக முடியாது, புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
     போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
      போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
      நாதன் நடத்தால் நயனங் களிகூர
      வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.          
                                                                               -திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 142
                     புண்ணியம் செய்யச் செய்ய அறிவு வளரும், அறிவு தெளிவடையும். அப்போதுதான் நம்மிடம் இருக்கும் குணக்கேட்டைப் பற்றி தெரியும். இதுபோன்ற பண்புகளை நாம்தான் போதிக்க வேண்டும். தினம் ஆசான் அகத்தீசரை புகழ்ந்து பேச வேண்டும். ஆசான் அகத்தீசரை நாமஜெபம் செய்து புகழ்ந்துபேசினால், புகழ்ந்து பேசுபவன் பாவத்திலிருந்து விடுபடுகிறான்.
    
     பெண்களோ, ஆண்களோ துன்பப்பட்டு துன்பப்பட்டு வெறுப்பாகவும், விகாரமாகவும் விரக்தி அடைந்திருப்பார்கள். ஏனம்மா கஷ்டப்படுகிறாய்? ஆசன அகத்தீசரை “ஓம் அகத்தீசாய நம” “ஓம் அகத்தீசாய நம” என்று நாமஜெபம் செய்.
     ஓம் அகத்தீசாய நம என்று சொல்ல வரவில்லையென்றால் “ஓம் நந்தீசாய நம” எப்றி சொல்லுங்கள். அதுவும் சொல்ல வரவில்லையா? “ஓம் திருமூலதேவாய நம” என்று சொல்லுங்கள், “ஓம் கருவூர் தேவாய நம” என்று சொல்லுங்கள், “ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி”, ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி”, “ஓம் இராமலிங்கசுவாமிகள் போற்றி” என்று சொல்லுங்கள். இவர்கள் அத்தனை பெரும் ஆசான் ஞானபண்டிதனைச் சேர்ந்தவர்கள்தான்.
    
     இப்படியெல்லாம் சொல்லிகொடுத்து, ஞானிகள் நாமத்தைச் சோழ வைப்போம். ஆனால் “உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கு” என்று சொல்லமாட்டோம்.
          
     பத்து வயதுப் பெண் குழந்தை அம்மை கண்டு இறந்திருக்கும். அதை பதிவு செய்திருப்பான். எங்கள் ஊரில் கூட அப்படித்தான் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். உள்ளே இருப்பது யார் என்று கேட்டோம். அது குலதெய்வம் பத்து வயதில் அம்மை கண்டு இறந்தது. அதை நாங்கள் வணங்குகிறோம் என்றார்கள். இதுவே பத்து வயதானது. எனக்கு அறுபது வயதாகிறது. நான் இதை வணங்கி என்ன ஆகப்போகிறது? என்று சொன்னேன்.
     தலைவனை அறிந்து கொள்ள வேண்டுமல்லவா? ஆசான் அகத்தீசர், மகான் புஜண்டமகரிஷி, மகான் போகமகாரிஷி, மகான் புலிப்பாணிச்சித்தர், மகான் சட்டமுனிவர், மகான் கருவூர்தேவர் , மகான் சிவவாக்கியர், மகான் கொங்கணமகரிஷி, மகான் தேரையர், மகான் சுகப்பிரம்மரிஷி போன்ற ஞானிகளை அறிமுகப்படுத்துகிறோம். தலைவனை யாரென்று அறிமுகப்படுத்துகிறோம். இவர்கள் அனைவரும் பராக்கிரமசாலிகள்.
     இவர்கள் நாமத்தைச் சொல்லும்போதே எமனே நடுங்குவான். நமது சித்தர்கள் போற்றித் தொகுப்பில் உள்ள 131 ஞானிகள் நாமங்களை சொல். “ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி” என்று சொல்.
     மகான் சுகப்பிரம்மரிஷி, மகான் தேரையர், மகான் உரோமரிஷி, மகான் புஜண்டமகரிஷி, மகான் இடைக்காடர், மகான் கோரக்கர் என்று சொன்னாலே, ஞானிகள் எல்லோரும் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். “யாரடா அது? நம் தலைவன் பெயரை சொல்வது?” என்று பார்ப்பார்கள்.
     காலையில் எழும்போதே, பைப்பை திறந்து பார்த்தால் தண்ணீர் வராது. அதன் பக்கத்திலேயே நின்று கொண்டு இருப்பாள், பாவம். வீட்டில் பிள்ளைகளுக்கு தண்ணீர் வேண்டும். குடும்பத் தலைவனுக்கு தண்ணீர் வேண்டும். தனக்குத் தண்ணீர் வேண்டும். குழாயைத் திறந்தால்தண்ணீர் வராது. அப்படியே வெளியே நின்று கொண்டு இருப்பாள், பார்த்தால் பாவமாக இருக்கும். அது ஒரு குறை.
     திரும்ப வீட்டிற்கு வந்தால் பால்காரன் வரவில்லை. அப்படியே வந்தாலும் பாதி தான் பாலாக இருக்கும். அதிலும் பிரச்சனை. அடுத்து சர்க்கரை. நேற்றே வாங்காமல் விட்டு விட்டாள். அவன் வேலைக்குப் போக வேண்டுமே? என்று துடிப்பான். குளிக்கத் தண்ணீர் இல்லையே? என்று துடிப்பான்.
     நான் என்ன செய்யட்டும்? என்பாள். அப்பப்பா! காலையிலிருந்து அவள் படும் பாடு. அந்த காலை உணவு தயாரித்துக் கொடுப்பதற்கு முன் அப்படியே வெதும்பி, வெதும்பி கண்ணீர் விடுவாள். தண்ணீர் இருக்காது, பால் இருக்காது, பால் இருந்தாலும் அதில் பாதிதான் பால், மீதி தண்ணீர். சர்க்கரை இருக்காது, டீத்தூள் இருக்காது.  இப்படியெல்லாம் காலையில் பிரச்சனைகள். பக்கத்து வீட்டுப் பிரச்சனைகள். அப்படியே புழுங்கி சாவார்கள்.
     இப்படித்தான் நானும் இருந்தேன். ஆசானிடம் “என்னப்பா இப்படி ஒரு கொடுமை/ இதிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும்” என்பர் கேட்டேன். அப்புறம் வறுமை இல்லாமல் வாழக்கூடிய வாய்ப்பை தந்தார். தண்ணீர் பிரச்சனை இல்லாத இடத்திற்கு வீடு மாற்றிக் கொடுத்தார் அல்லது சொந்த வீட்டில் போர் போட்டு தண்ணீர் வந்தது.
     ஆக தண்ணீர் பிரச்சனை தீர்ந்தது. அடுத்து, தேவையான சர்க்கரை, பால் போன்றவையெல்லாம் கிடைக்கிறது. இப்படி தடையின்றி கிடைப்பதற்கும் ஆசி வேண்டும்.
     வீட்டில் நாத்தனாரும், மாமியாரும் துன்புறுத்துவார்கள். அவர்கள்தான் உணர மாட்டார்களே? என்ன காரணம்? அந்தப் பெண் புதிதாக வந்திருக்கிறதே? பத்து நாள் பார்ப்பாள், மரியாதை கொடுப்பாள். அப்புறம் கசக்கிப் பிழிந்து விடுவாள். அந்த அளவிற்கு நடக்கும். இதுவெல்லாம் ஒவ்வொரு குடும்பத்திலும் நடப்பதுதான்.
     “இப்படியெல்லாம் இருக்கிறதே, மூன்று மாதத்திற்குள்ளேயே உன்னை இப்படிப் போட்டு வதைக்கிறார்களே?” கணவன் வீட்டை விட்டு வெளியே போனால் போதும். உடனே இத பெண் சரியில்லை, உட்கார்ந்தால் குற்றி, நின்றால் குற்றம்.இப்படியே பேசி பேசி அந்தப் பெண் தற்கொலை செய்யும் அளவிற்குவந்து விடும்.
     ஆசான் ஆசியிருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? நீ எதிர் நீச்சல் அடி! என்பார் ஆசான். ஒன்று எதிர்த்துப் போராடிப் பார். அவர்கள் வல்லமை உள்ளவர்கள். நாத்தனார், மாமியார் எல்லாம் வீட்டில் இருப்பவர்கள், பராக்கிரமசாலிகள். தன கைவரிசையைக் காட்டுவான்.
     நீ வந்தவள், உன்னைப் போட்டு மிரட்டிப் பார்ப்பார்கள். நீ தலைவனைக் கூப்பிட்டு இப்படியெல்லாம் எனக்கு கொடுமை நடக்கிறது என்று சொல்.
     “மகான் புஜண்டமகரிஷி ஐயா, மகான் திருமூலதேவா, மகான் அகத்தீசா” என்று நீ மிகப் பராக்கிரமசாலியான ஞானிகளை வணங்கி பூஜை செய். உன்னை துன்புறுத்துகிறவர்களை, உன் பாதத்தைப் பற்றச் செய்கிறேன் என்றார்.
     “ஆசான் அகத்தீசா! என்னை கொடுமை செய்கிறார்கள். என்னை உணர மாட்டேன் என்கிறார்கள். நான் எதைச் செய்தாலும் சரியில்லை என்கிறார்கள். நான் குழம்பி வைத்து விட்டு சென்றவுடன், உப்பை அள்ளி போட்டுவிட்டு, உப்பு ஜாஸ்தியாக இருக்கிறதென்று குறை சொல்கிறார்கள். இதற்கு நான் என்ன செய்வது?”
     இருப்பினும் இதையும் உடைத்தெரியலாம். வேறு எதுவானாலும் உடைத்து வெற்றி காணலாம். ஆசான் அகத்தீசர் ஆசியிருந்தால் இதையெல்லாம் உடைத்தெரியலாம். ஆக இதெல்லாம் அன்றாட வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள்.
     குடும்பத்தில் பிரச்சனை இருக்கிறது, ஒன்றும் செய்யமுடியாது. வறுமை சூழும், வறுமை இருப்பது இருக்கட்டும், அவன் நூறு இருநூறு சம்பாதிப்பான். வரும்போதே தள்ளாடிக் கொண்டு வருவான். ஒரு மயக்கமாக இருக்கும் என்பர் நினைக்கிறீர்களா? மது குடித்திருப்பான். உள்ளே வந்தால் என்ன நடக்கும் என்றே தெரியாது. அதுவும் குடிப்பழக்கம் உள்ள கணவனாக அமைந்துவிட்டால் என்னும் பிரச்சனைகள்.
    
     வறுமை உள்ளவனாக இருந்தாலும் குற்றமில்லை ஐயா! அதை ஏற்றுக் கொள்ளலாம். அதை உணர்கிறேன். நானும் உணர்கிறேன்.
     பயப்படாதே ஐயா! நீ கொடுக்கும் அளவிற்கு நான் உனக்கு காஞ்சி காய்ச்சி ஊற்றுகிறேன். நீ ஏன் கவலைப்படுகிறாய்? என்று சொல்வாள்.
     நான் என்ன பாவம் செய்தே? இப்படி குடிப்பழக்கம் உள்ளவனை ஏன் எனக்குக் கணவனாக  அமைத்தாய்? என்று ஆசன அகத்தீசாரிடம் கேட்க வேண்டும். நன் பாவம் செய்திருந்தபோதும் சரி, இவன் திருந்த வேண்டும். இவன் திருந்துவதற்கு நீர் அருள் செய்ய வேண்டுமென்று ஆசானை கேட்க வேண்டும். இப்படி கேட்டுக் கொண்டே வந்தால், குடிப்பழக்கம் உள்ளவனாக, வறுமை உள்ளவனாக இருந்தாலும் நிச்சயமாக திருந்துவான்.
     பாவம் அலுவலகத்திற்கு செந்தூர் வருகிறான். அவன் ஒரு பெரிய சமுதாயத்திலிருந்து ரொம்ப அல்லற்பட்டு வீட்டுக்கு வருகிறான். அவன் ஆபீசில் நுழைந்து வெளியே வருவதற்குள் ஒருபக்கம் புலி, சிங்கம், கரடி போன்று அங்கிருப்பவர்கள் பாயத்தயாராக இருப்பார்கள். அப்படியே வைத்து அழுத்தப் பார்ப்பார்கள். அந்த மாதிரி போட்டி, பொறாமையில் அல்லற்பட்டு ஆபிசில் இருந்து வருவான். வரும்போதே குறிப்பறிந்து பார்க்க வேண்டும்.
     ஏதோ மனது அல்லற்பட்டு வருகிறோம். அவனுக்கு ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லி, என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும், நான் பார்த்துக் கொள்கிறேன். ஆசான் அகத்தீசர் ஆசி இருக்கிறதென்று மனைவி சொல்லும்போது அவன் ஆறுதல் அடைவான்.
     என்ன எழுதி வைப்பானோ? எது நடக்கப் போகிறதோ? என்ன ஏற்படுமோ? நம் மேல் பெட்டிஷன் போட்டால் என்ன செய்வது? என்று அவன் தட்டுத்தடுமாறி வரும்போது, எது வந்தாலும் எந்தை அகத்தீசர் இருக்கிறார். அவர் உன்னை காப்பாற்றுவார் என்று சொல்லும்போது, ஆண் ஒரு ஆறுதல் அடைவான் இப்படியெல்லாம் குறிப்பறிந்து நடக்க வேண்டும்.
     பொருள் வேண்டுமா? பொருள்தான் நிறைய இருக்கிறதே. சில பேருக்கு பொருள் நிறைய இருக்கிறது. ஆனால் இதுபோன்ற பிரச்சனைகள் தீர்ப்பதற்கு நாம் ஆசான் அகத்தீசரை வணங்க வேண்டும்.
     குடிப்பழக்கம் உள்ளவன், சூதாடுகின்றவன், வீண் பொழுது போக்குகின்றவன், வீண் ஆரவாரம் செய்கின்றவன், அளவுக்கு மீறி செலவு செய்பவன், வரவுக்கு மீறி செலவு செய்பவன் என இப்படியெல்லாம் உள்ளவன் கணவனாக அகப்பட்டால் அவ்வளவுதான், தொலைந்தே போய்விடுவான். அந்த குடும்பமே வீணாகப்போகும், இதை மகான் ஔவையார் சொல்வார்,
     ஆனா முதலில் அதிகம் செலவானால்
      மானம் அழிந்து மதி கெட்டுப் – போனதிசை
      எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
      நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
                                                                – மகான் ஔவையார் அருளிய நல்வழி – கவி எண் 25
       
                வரவுக்கு மீறி செலவு செய்பவன் எல்லோர்க்கும் கள்ளன் என்றார். அவனைக் கண்டு கடவுள் ஒளிந்து கொள்வான். அவன் பொய் சொல்லுவான், ஏழு பிறப்பும் தீயவனாகப் போய் விடுவான். ஏழு பிறப்பிற்கும் நரகத்திற்குப் போவா என்பது மரபு.
     ஆசான் ஆசியிருந்தால், வரவுக்கு மீறி செலவு செய்கின்ற அறிவு வராது. நமக்கு நிறைய பொருள் இருந்தாலும், சமைக்கும்போது, தேவையான அளவுக்குத்தான் சமைக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சமைத்து மீதப்பட்டு குப்பையில் தூக்கி போடக்கூடாது. அது கடவுள் கொடுத்த பொருள். கடவுள் கொடுத்த பொருளைக் கொண்டுபோய், அளவுக்கு மீறி சமைத்து, மீதப்பட்டு குப்பையில் போடக்கூடாது. உணவு என்று ஏழைகள் வந்தால் கொடுக்க வேண்டும். அதற்கும் ஆசி வேண்டும். ஆசி இல்லையென்றால் அது போன்ற உணர்வு வராது.
     வறுமையில்லாத வாழ்வு வேண்டும். எதையும் அளந்து பார்த்து செலவு செய்ய வேண்டும். சில பேர் அளவுக்கு அதிகமாக செலவு செய்வார்கள்.
     குடிலில் வைக்கும் சாம்பார், ரசம் எல்லாம் சுவையாக இருக்கிறது. சுவையாக அமைய வேண்டுமென ஆசானைக் கேட்கிறோம். நாங்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்கள் சுவையாக அமைய வேண்டுமென்று ஆசானைக் கேட்கிறோம்.
     கணவன் சுவைத்து சாப்பிடும்போது, சமைத்தவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி இருக்கும். நான் சமைக்கக்கூடிய உணவுப்பொருள் சாம்பாரோ, குழம்போ மற்ற பதார்த்தங்கள் சுவையாக அமைய வேண்டுமென்று தலைவனைக் கேட்க வேண்டும். என் வீட்டுக்காரரும், பிள்ளைகளும் சமைத்ததை சுவைத்து சாப்பிட வேண்டுமென்று ஆசானை கேட்க வேண்டும்.
     அவன் மூக்கப் பிடித்துக் கொண்டு சாப்பிட்டானென்றால் இவள் என்ன செய்வாள் பாவம்? அதுபோன்று சுவையில்லாது இருக்கக்கூடாது. நான் தயாரிக்கின்ற உணவு சுவையாக அமைய வேண்டும், அதை எனது கணவர் விரும்பி சாப்பிட வேண்டுமென்று ஆசானை கேட்க வேண்டும்.
     குடிப்பழக்கம் உள்ளவனை திருத்த வேண்டும். வீட்டில் அன்றாட குடும்பப் பிரச்சனைகள் இருக்கலாம். இந்த பிரச்சனை தீராமல், நிச்சயமாக ஒருவன் கடவுளை அடைய முடியாது. கடவுளை அடைவதற்கு இதெல்லாம் அடிப்படை. நூறு பேர் கொண்ட குடும்பம் நம்முடையது. இங்கே ஒங்காரக்குடிலில், குடும்பம் ரொம்ப அமைதியாக இருக்கிறது. எப்படி?
    
     நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், உங்கள் திருவடியை நான் மனதிற்குள்ளே வணங்குவேன். பிறகு தொண்டு செய்பவர்களுடைய பாதத்தை வணங்குவேன். அப்படி வணங்கும்போது, இயல்பாகவே தொண்டர்கள் மீது ஆசானுக்கு கருணை வரும்.
      “யாரப்பா, இவன் தொண்டு செய்கிறார்?” என்றால், “நல்ல பிள்ளை” என்பார். இப்படி ஒவ்வொன்றையும் தனித்தனியாக கேட்டு உத்தரவு பெற்றுக் கொள்வோம். “இவர் கடைசி மட்டும் எப்படி இருப்பார்? இப்போது எப்படி இருப்பார்? பிற்காலத்தில் எப்படி இருப்பார்?” என்று ஆசானை கேட்போம்.
     தகுதி உள்ள தொண்டன் என்பர் ஆசான் பலமுறை சொல்லி விட்டாரென்றால் என் உயிருக்கு உயிராக நேசிப்போம். ஆக அவரவர்கள் தொண்டை மதிப்போம். அவர்கள் நீடிய ஆயுளை பெற வேண்டும். நான் அடைந்த பேரின்பத்தை அடைய வேண்டும். எல்லா நன்மையையும் அடைய வேண்டுமென்று நான் கேட்பதாலும், அவர்களும் நம்மை குடிலாசான் கைவிடமாட்டார் என்பர் நம்புகிறார்கள்.
      
      நம்முடைய சங்கத்திற்கு இங்கே ஒங்காரக்குடிலில் தொண்டு செய்பவரை மட்டும் என் மனதிலேயே வைத்திருப்போம். இந்த இடத்தில் மட்டும் தவறு செய்ய முடியாது. ஏனென்றால் பல ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் காரணமாகத்தான் தொண்டு செய்கிறார்கள்.
     ஆகவே, தொண்டர்களுக்கு வாய்ப்பு இருக்கும். தொண்டு செய்தால் மனதில் வைத்திருப்போம். எந்த காலத்திலும் அவர்கள் என்னை விட்டு நீங்க முடியாது. என் ஆன்மாவை விட்டுப் பிரிய முடியாமல் வைத்திருப்போம். என்னோடு கலந்து விடுவார்கள்.
     மற்ற சங்கத்தில் என்ன நடக்கும், ஒருவன் நன்றாக தொண்டு செய்வான். இரவும் பகலுமாக தொண்டு செய்வான். தன ஆசானே கதியாக, தாய் தந்தையாக நினைத்து தொண்டு செய்வான். இன்னொரு வசதி வாய்ப்புள்ளவன் , ஒரு பராக்கிரமசாலியாக உள்ளவன் வந்தால், இவனை தூக்கி எரிந்து விட்டு அவனை வைத்துக் கொள்வான். அப்படி இங்கே நடக்காது. அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
     உன் தொண்டையும் மதிக்கிறேன். அவன் தொண்டையும் மதிக்கிறேன். நீ தொண்டு செய்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். அவன் தொண்டு செய்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்போம்.
     ஒருவன் வந்தபின் அவனைத் தூக்கி எறிதல், அவன் வந்தபின் இவனைத் தூக்கி எறிதல் என்பது மற்ற சங்கத்தில் நடக்கும். இது கடவுள் வாழுகின்ற இடமல்லவா? கடவுள் வாழுகின்ற இடத்தில் அப்படி நடக்காது.
          ஆசான் சொல்வார் “இது தவறான பாதை!” அவன் வெளியில் வந்து கலங்குவான். ஏனடா, இரவும் பகலும் தர்மத்திற்குத் தொண்டு செய்தவன் இன்று அவன் புறக்கணிக்கப்பட்டு வெளியில் நிற்பது ஏற்றுக்கொள்ள  முடியாது” என்று ஆசான் சொல்வார்.
     நான் அவனுக்கு பயப்படுகிறேன். இவன் வெளியில் வந்து, பாவி, நான் இவ்வளவு நாள் தொண்டு செய்தேன், தூக்கி எரிந்து விட்டானே என்று சொன்னால், நாங்கள் போகின்ற பாதைக்குத் தடை வரும் என்கின்ற காரணத்தாலே அந்த காரியத்தில் ஈடுபட மாட்டோம். நிச்சயமாகச் சொல்கிறேன். சத்தியமாகச் சொல்கிறேன். இங்கு குடிலில் தொண்டு செய்து விட்டால், அவன் எங்கே பிறந்தாலும் சரி, அவன் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் சரி, நாங்கள் துணையாக இருந்து அவனை கை தூக்குவோம் என்பது சத்தியம். ஆக, இதுதான் இங்கே வாய்ப்பு.
     இங்கே ஆண்களும், பெண்களும்வந்து தொண்டு செய்யலாம். எந்த பாதிப்பும் இருக்காது. ஆகவே தொண்டு செய்து, அஆசி பெறுகின்ற ஒரே ஒரு இடம் ஒங்காரக்குடில், ஞான வீடு. ஞானம் என்றால் அறிவு என்று அர்த்தம். ஞானம் என்றால், உயிரைப்பற்றி அறிதல், உடம்பைப்பற்றி அறிதல், இயற்கையைப் பற்றி அறிதல், குணங்களைப் பற்றி அறிதல், பரிணாம வளர்ச்சியைப் பற்றி அறிதல், பூதாதிகளைப் பற்றி அறிதலாகும். ஏன் வீழ வேண்டும்? எல்லாவற்றையும் அறிவது ஞானம். அணு அணுவாக உடம்பினை அறிந்து பார்க்க வேண்டும்.
     உடம்பில் வாத, பித்த, சிலேத்துமத்தை நாங்கள் பார்ப்போம். கலை வாத நாடி 16 கலை, இந்த நேரம் பித்தம் 12 கலை, மாலை சிலேத்துமம் 8 கலை. இவைகளைப் பற்றி எங்களுக்கு தெரியும். இதையெல்லாம் ஆசானே சுட்டிக் காட்ட வேண்டும்.
     உடற்கூற்றைப் பற்றி அறிவதுதான் ஞானம். உடற்கூறைப் பற்றி அறிந்தால் உடம்பைப் பற்றி அறிவான். உடலையும், உயிரையும் பற்றி அறிந்தவன் குணத்தைப் பற்றி அறிவான். குணத்தைப் பற்றி அறிபவன் நிச்சயமாக தன் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். இதையெல்லாம் ஆசான் நமக்கு சொல்லித் தர வேண்டும்.
     எங்கள் கையைத் தொட்டுப் பார்க்கும்போதே தெரிந்து கொள்வோம். நாடியை இப்படி பிடித்துப் பார்த்தால் சரி, இன்றைய சூழ்நிலை இதுதான் என்று அறிந்து கொள்வோம். இன்று பிராணயாமம் செய்யலாமா? வேண்டாமா? என்று தெரியும். அப்படியே எங்களுக்கு கவனக்குறைவு வந்தாலும், பிராணயாமம் செய்ய விரும்புவோம். “ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லிக் கொண்டே இருப்போம், சொலி மூச்சை அப்பிட் ஸ்தம்பிப்போம். “நிறுத்து உடம்பில் அக்கினி அதிகமாக பிடிக்கும்” என்று சொல்வார்.
     எவ்வளவு  பெரிய வாய்ப்பு இது? இதை ஞானம் என்று சொல்வோம். உடம்பைப் பற்றி அறிகின்ற அறிவு, உயிரைப் பற்றி அறிகின்ற அறிவு நமக்கு வேண்டும்.
     உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
      திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
      உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
      உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.  
                                                 – திருமந்திரம் – சரீர சித்தி உபாயம் – கவி எண் 724
                உடம்பைப் பற்றி அறியும் அறிவு நமக்கு இல்லை. என்ன செய்யலாம்?
     என்னதான் இந்த உடம்பை நீங்கள் பட்டினி போட்டுக் கொன்றாலும், உணவு தந்தாலும் காம விகாரம் வரும். பட்டினி போட்டால் செத்துப் பொய் விடுவான். ஆக இரண்டுமே பிரச்சனைக்குரிய ஒன்று.
     பட்டினி போடுவதா? செத்துப் போவதா? உணவு தந்தாள் விகாரம் வந்துவிடும். இதை அறிந்து கொள்ள வேண்டும்.
     யோகி மிகப்பெரிய ரகசியம், உடம்பையும் வளர்க்க வேண்டும், உயிரையும் வளர்க்க வேண்டும்.
     உடம்பை வளர்ப்பதென்றால் உணவு கொடுக்க வேண்டுமே? உணவு தந்தால்தான் விகாரம் வருகிறதே? உனக்கு இந்த அறிவு போதாது. இடை மகான் திருமூலர் சொல்வார்.
      போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
      போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
      நாதன் நடத்தால் நயனங் களிகூர
      வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.          
                                                                               -திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 142
        போதம் என்பது ஞானம் அல்லது அறிவு. உடம்பைப் பற்றிய அறிவு வந்தால்தான் உயிரைப் பற்றி அறிய முடியும்.
       
        போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
      போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
     சிந்திக்க சிந்திக்க புன்னியவானாவான் . என்ன காராணம்? ஞானியை சிந்திக்க சிந்திக்க என்ன புண்ணியம்?
    
      சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்
      சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்
      சிவனரு ளால்வினை சேரகி லாமை
      சிவனருள் கூடின்அச் சிவலோக மாமே
                                -திருமந்திரம் – அருளுடைமையின் ஞானம் வருதல் – கவி எண் – 1649
                சிவனரு ளால்வினை சேரகி லாமை என்று சொல்வார்.
    
     ஆசான் அகத்தீசரை தினம் வாங்குகிறோம். காலையில் எழுந்தவுடன் “ஓம் அகத்தீஸ்வரா! இந்து மேற்கொள்ளும் எல்லா செயல்களும் நல்லபடி அமைய வேண்டும். எண் செயல்பாடுகளில் வஞ்சனை, பாவம் இருக்கும். என்னை யாரும் பாவி என்று சொல்லக்கூடாது. நீர்தான் என்னை காப்பாற்ற வேண்டுமென்று ஆசானிடம் கேட்பான்.
     இன்று இவன் செயல்பாடுகள் என்னென்ன? இவன் எங்கெங்கே செல்வான்? என்று ஆராய்ந்து பார்த்து, செல்கின்ற இடைத்தையெல்லாம் ஆசான் தூய்மையாக்கி விடுவார். இவன் அங்கே போவான். அங்கே பாவச்செயல் நடக்கும். அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு, ஆசான் துணையாக இருப்பார். ஆக அதுதான் புண்ணியம், வினை சேராது.
     இதைதான் சிவனரு ளால்வினை சேரக் லாமை என்றார். ஆக வினை சேராது காப்பாற்றி விடுவார்கள். எந்தெந்த செயலில் வினை வருமோ, அதை தடுத்து விடுவார்கள். வறுமை இருந்தால்தானே? வறுமையை நீக்கு என்பார். பொறாமை இருந்தால்தானே பிறருக்கு இடையூறு செய்வான்? பொறாமையை நீக்குவார்கள்.
     எல்லா வகையான குணக்கேடுகளையும் நீக்கி, அவனை உயர்ந்த மனிதனாக ஆக்குவார்கள். பிரச்சனை இல்லாத வாழ்க்கை, பகை இல்லாத வாழ்க்கை, அமைதியான வாழ்க்கையாக இருக்கும். எந்த இடத்திற்கு சென்றாலும் நல்லதே நடக்கும். இவையெல்லாம் ஆசான் கிருபையால் கிடைத்தது. அதானால்தான் ஒங்காரகுடிலை கடவுள் வாழும் இடம் என்று சொல்கிறோம்.
     ஆகவே, புண்ணியத்தை தேடிக்கொள்ள வேண்டும். இதைத்தான் ஆசான் திருமூலர் சொல்வார்,
      போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
      போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
      நாதன் நடத்தால் நயனங் களிகூர
      வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.          
                                                                               -திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 142
       
        நம் உடம்பில் மூன்று அக்கினிகள் இருக்கும். காமாக்கினி, கோபாக்கினி, பசி அக்கினி.
     பசி மிகுந்தால் உஷ்ணம் ஏறும்.
     கோபம் மிகுந்தால் உஷ்ணம் ஏறும்.
     காமம் மிகுந்தால் உஷ்ணம் ஏறும்.
     இடகலை – சந்திர கலை. இது பெண். இது உடம்பு.
     பிங்கலை – சூரிய கலை. இது ஆண். இது உயிர்.
     யோகிகள் இடகலையும், பின்கலையையும் சேர்த்து, இரண்டையும் புருவமத்தியில் செலுத்தி விடுவார்கள். அப்படி செலுத்தினால் உள்ளே ஒரு இயக்கம் நடக்கும். உடம்பை வளர்க்கக்கூடிய உபாயம் அதுதான். அந்த இயக்கம் என்ன செய்யும், நாதன் நடத்தால்– உள்ளே தச நாதம் கேட்கும்.
     தசநாதத்திற்கு அடிப்படை உள்ளே தங்குகின்ற காற்று. உந்திக்கமலத்திற்கு கீழே உருத்தரித்த நாடியில் தங்குகின்ற காற்று. அது சும்மா இருக்காது, செயல்பட்டுக் கொண்டே இருக்கும். தலைவனும் உள்ளே தங்கி இருப்பான். அது செயல்பட, செயல்பட அணு அணுவாக உஷ்ணம் ஏறும். அந்த உஷ்ணம் ஜோதியாக மாறும்.
     நாதன் நடத்தால் நயனங் களிகூர – நயனம் என்பது கண்கள். அந்த ஜோதி புருவ மத்தியில் தோன்றும். அந்த கண்கொள்ளா காட்சிகளைக் கண்களால் கண்டு கொண்டிருப்பார்கள்.
     இதையே ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள் அற்புதக் காட்சியடி என்பார் மகான் இராமலிங்கசுவாமிகள். அப்படிப்பட்ட காட்சியை காண்பார்கள். அதனுடைய விளைவு, வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே – வேதங்கள் போற்றுகின்ற அளவுக்கு அவன் நிலை உயர்கிறான். எப்படி அமைந்திருக்கிறது பாருங்கள்.
     முதலில் ஆசான் அகத்தீசரை வணங்குகிறான். அப்படி வணங்கி ஆசி பெற்றதனால் புண்ணியம் சேர்கிறது. புண்ணியம் சேர்ந்திருந்ததினால் பாவத்திலிருந்து விடுபடுகிறான்.
     பாவத்திற்கு அடிப்படைக் காரணம் பேராசை. எப்படியாவது நாம் செல்வத்தை பெருக்கிக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டுமென நினைப்பான். ஆசான் அப்படியே பார்ப்பார். எந்த அளவிற்கு பாவம் சேர்கிறதோ அந்த அளவிற்கு நரகம் சேர்கிறது என்பது அவனுக்குத் தெரியாது. இதை ஆசான்தான் சொல்வார்.
     பேராசைதான் இவனைப் பாவியாக்கும். பேராசை, வஞ்சனை, சூது, ஜாதி வெறி,  கர்வம், பழிவாங்குதல் போன்ற குணக்கேடுகளெல்லாம் இவனை பாவியாக்கிவிடும்.
    
     இவன் ஆசானை வணங்குகிறான். போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப் – புண்ணியம் பெருகப் பெருகத்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும். ஆசான் அகத்தீசரை வணங்குகிறான், ஞானம் உண்டாகிறது. ஞானம் என்ற சிறப்பறிவு உண்டாகிறது; சிறப்பறிவு காரணமாக பொருளைப் பற்றி அறிகிறான்.
     இந்த பொருள் அநித்தியமானது. அதை சேர்க்க நினைத்தாலே, இப்படி தேவை இல்லாமல் ஏன் சிந்திக்கிறாய்? இப்படி தேவையில்லாமல் உனக்கு குணக்கேடு ஏன் வந்தது? ஏன் இப்படி காலை முதல் வெறிப்பிடித்து அலைகிறாய்? என்று இவனுடைய மனது சொல்லும்.
     பக்கத்து வீட்டில் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடந்தால் போதும். ஏதோ நிலத்தை வைத்து பிரச்சனை பண்ணியிருப்பான். அப்படியே காலையிலிருந்து அதையே நினைத்துக் கொண்டு பதற்றமாகவே இருப்பன். இதை நினைத்து நினைத்து விரக்தி அடைந்திருப்பான். அப்படியே தடுமாறிக் கொண்டிருப்பான். காலையிலிருந்து அப்படியே உடம்பெல்லாம் நடுங்கும், கண்களெல்லாம் சிவந்திருக்கும்.
     என்ன காரணம்? விரும்பாத ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இந்த விரும்பாத செயலுக்காக தடுமாறுவான். இதையெல்லாம் ஆசான் ஆசியால்தான் உடைத்தெரியலாம்.சோர்வு தேவை இல்லை. இது போன்ற கொடுமைகள் எல்லாம் நீங்கி சாந்தம் உண்டாகும்.
     சாந்தம் உண்டாவதற்குத்தான் “ஓம் அகத்தீசாய நம” என்று சொல்கிறோம் அல்லது “ஓம் நந்தீசாய நம” என்று சொல்கிறோம். ஆசானை வணங்கி நாமஜெபம் செய்கிறோம். சாந்தம் உண்டாகும். அப்போது என்னாகும்? புண்ணியம் பெருகும்.
     புண்ணியம் பெருகும் போது இடகலையும் பின்கலையும் சேரும். ஆனால் நாமாக இதை சேர்க்க முடியாது.
      வாசி நடத்தித் தருவாண்டி – ஒரு
            வாசியில் இங்கே வருவாண்டி
      ஆசி கருணை உருவாண்டி – அவன்
            அற்புத தாள்மலர் ஏத்துங்கடி
                                            -திருஅருட்பா – ஐந்தாம் திருமுறை – சண்முகர் கொம்மி – கவி எண் – 2987
                இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
                துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டா
                உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்
                கிறக்கவும் வேண்டா இருக்கலு மாமே.
                                                  –திருமந்திரம் – கேசரி யோகம் – கவி எண் 801
               
      நாதன் நடத்தால் நயனங் களிகூர
      வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.     
     ஒரு மனிதனுக்கு ஞானம் சித்திப்பது என்பது ரொம்ப லகு. சிலபேர் ஞானம் என்பது மிகவும் கஷ்டம் என்பார்கள். எப்படியப்பா கஷ்டம்? அவன்தான் காட்டில் போய் தவம் செய்ய வேண்டுமென்றானே? தேவையில்லை! இங்கேயே இருந்து சமுதாயத்தைப் புரிந்து கொள். இந்த சமுதாயத்தை நீ பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமுதாயத்தில் ஒருவன் வளர்ச்சியை இன்னொருவன் விரும்பமாட்டான். ஆசான் தயவு இருந்தால்? நிச்சயமாக சமுதாயம் உனக்கு நல்லது செய்யும். ஆசான் அகத்தீசர்.
      கண்டென்ற வல்லபங்க லிருந்தாலப்பா
                      காசினியி லிருந்துதவஞ் செய்துவாவே.
                      அகத்தியபெருமான் அருளிய ஞானசைதண்யம் 51ல் – கவி எண் – 29
                          
     வாவென்றேன் தவத்தைநிறை வேற்றிக்கொள்ளு
            வராவிட்டால் பொதிகைதனிற் சேருசேரு
                                                -அகத்தியபெருமான் அருளிய ஞானசைதண்யம் 51ல் – கவி எண் 29
                உனக்கு ஆற்றலும். பராக்கிரமமும் இருந்து, இந்த சமுதாயத்தைப் புரிந்து கொண்டு இங்கேயே இருந்து தவத்தை முடிக்க முடிந்தால் இங்கேயே செய்.
     பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். இது போன்ற வல்லம் இருந்தால் தவம் செய்யலாம். இல்லையென்றால் ஆசானைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும்.
     ஞானம் என்பது ரொம்ப லகுவாகத்தான் இருக்கும். ஒரே ஒருமுறை அகத்தீசா! அகத்தீசா! சொல்லுங்கள். நாங்கள் அகத்தீஸ்வரா, அகத்தீஸ்வரா என்போம். எப்படி யாருடைய நாமத்தை சொன்னாலும் சரி, அது ஆசான் ஞானபண்டிதனை போய்ச் சேரும்.
     இப்போது, ஞானபண்டிதன் ஆசியினால்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன். பேசுவதெல்லாம் மகான் நந்தீசர், மகான் காலாங்கிநாதர், மகான் திருமூலதேவர், மகான் போகமகாரிஷி ஆசியால்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.
     ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, எல்லோருமே சேர்ந்து, அகத்தீஸ்வரா அல்லது மகான் போகமகாரிஷி அல்லது மகான் திருமூலதேவா என்று சொல்கிறோம். இப்படி சொல்லச் சொல்ல என்ன ஆகும்? இருக்கின்ற பிரச்சனை தீரும். மன அமைதி இல்லாமல் நாம் தவத்தில்  முன்னேற முடியாது. மன அமைதி பெற தேவையான பொருள் நமக்கு கிடைக்க வேண்டும். தேவையான பொருள் கிடைத்தால்தானே மன அமைதி இருக்கும். ஆக நித்தியா பிரச்சனைகள் தீராமல் ஒருவனுக்கு ஞானம் கை கூடாது.
     ஞானம் என்பது அமைதி, சாந்தம், தன்னடக்கம், தெளிந்த அறிவு, மென்மையான அறிவு, எதையும் ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய சிறப்பறிவு, இதுதான் ஞானம்.
     சுற்றுப்புற சூழ்நிலை நல்லபடி அமைய வேண்டும். நல்ல பண்புள்ள நட்பு அமைய வேண்டும். இதைத்தான் ஆசான் திருவள்ளுவர் சொன்னார்.
                      எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
                                உட்பகை உள்ளதாம் கேடு.
                                                                திருக்குறள் – உட்பகை – குறள் எண் 889
               
                சிறிய அளவு, எள்ளத்தனை பகை இருந்தாலும், உட்பகை உள்ளதாம் கேடு என்றார். ஆகவே பகைமை இல்லாத, கேடு இல்லாத வாழ்வை வாழ வேண்டும். பகைமை இருக்கக்கூடாது.
     பகைமை எல்லாம் நாம் செய்த பாவம்தானே? பாவம் நீங்கினால் பகைமை நட்பாகிவிடும். பகைமை இருக்கக்கூடாது.
     வறுமை இருக்கக்கூடாது.
    
     சுற்றுப்புற சூழ்நிலை நல்லபடி இருக்க வேண்டும்.
     நல்ல கணவனாக அமைந்திருக்க வேண்டும்.
     நல்ல திடமான உடம்பு இருக்க வேண்டும்.
     நல்ல பிள்ளைகள் இருக்க வேண்டும்.
     பிள்ளைகள் நல்ல கல்வியை கற்றிருப்பார்கள். ஆனால் தவறு செய்வான், மதுபானம் சாப்பிடுவான். இதை எல்லாவற்றையும்  ஆராய்ந்து பார்த்து, பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும்?
     எந்த சக்தியைக் கொண்டு இதை சரிப்படுத்துவது? பிள்ளைகளை நன்கு படிக்க வைப்போம், ஆனால் பிள்ளைகள் படிக்கமாட்டார்கள். பல பிரச்சனைகளில் அல்லற்படும்போது, ஞானம் கை கூடாது.
     ஒன்று கடவுள் ஆசி பெற்று ஞானத்தை அடைவதா? அல்லது ஞானத்தைக் கொண்டு கடவுள் ஆசி பெறுவதா? கடவுள் ஆசி பெறாமல் ஞானமே இருக்காது. கடவுள் என்றால் ஞானம் என்று அர்த்தம்.
     ஞானபண்டிதனாகிய ஆசான் சுப்பிரமணியரின் ஆசியை பெற வேண்டும். அவர் ஆசியை பெற்றுதான் இந்த வாய்ப்பை பெற வேண்டும். ஒங்காரகுடில் தாய்வீடு போன்றது. நித்தம் நித்தம் நீங்கள் எல்லோரும் வரலாம். எந்தத் தடையும் இருக்காது. இங்கே எந்த பாகுபாடும் இல்லை. இங்கே விகாரமற்று, கொடுமையற்று, வஞ்சனையற்று இருப்பார்கள். எல்லா வகையான குணப்பண்புகளும் உள்ளது ஒங்காரகுடில்.
     இப்போது பேசுவது உள்மனதைத் தொடும்படி பேசுகிறோம். ஓம் அகத்தீசாய நம என்று சொகிறோம். ஓம் நந்தீசாய நம என்று சொல்கிறோம். இப்படி நாமஜெபம் செய்யும்போது எல்லாப் பிரச்சனைகளும் தீரும் என்று சொல்லியிருக்கிறோம்.
     நாங்கள் அறுபது லட்சம் பேருக்கு சாப்பாடு கொடுத்திருக்கிறோம். சின்ன விசயமல்ல. ஒன்பது ஆண்டுகள் அதுவும் இந்த முப்பது மாதத்திற்குள் கிட்டதட்ட ஐம்பது லட்சம் பேருக்கு அன்னதானம் செய்திருக்கிறோம். தினந்தினம் எட்டு மூட்டை சாதம் அன்னதானத்திற்கு சமைக்கிறோம். அன்பர்கள் இரவும் பகலும் கடுமையாக தொண்டு செய்கிறார்கள்.’
     நூறு பேர் உள்ள குடும்பம் ரொம்ப அமைதியாக இருக்கிறது என்றான். இதில் எல்லா இன மக்களும் இருக்கிறார்கள். எல்லா இன மக்களும் ஒரே குணமாக இருக்கிறார்கள். இது ஆசான் ஆசி.
     நாங்கள் என்ன செய்வோம், “இன்ஹ்ட இடத்தில் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்று இருக்கக் கூடாது. எல்லோரும் ஒரு தாய் மக்களாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொள்வோம்.
     ஒரு வேண்டுகோளால் எல்லாம் சரியாகும். ஆக அறுபது லட்சம் பேருக்கு அன்னதானம் செய்திருக்கிறோம். கிட்டத்தட்ட 682 இலவசத் திருமணம் செய்திருக்கிறோம். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் துறையூர் மக்களுக்கு இலவச குடிநீர் தந்திருக்கிறோம்.
     நாங்கள் தண்ணீர் தரவில்லை, ஆசான் தண்ணீர் தந்திருக்கிறார். ஆசான் உணவு தருகிறார். ஆசான் ஏழை எளியவர்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். ஆசான் பிரம்மாண்டமான கட்டிடம் கட்டியிர்க்கிறார்,
 வீட்டைக் கட்டிப்பார்! கல்யாணம் செய்து பார்! என்பார்கள். சென்ற ஆனது மகான் புஜண்டமகரிஷி மண்டபம் பெரியதாக கட்டியிருக்கிறோம். வியக்குமளவிற்கு 125 அடி நீளம் 41 அடி அகலம். ஆக அவ்வளவு பெரிய கட்டிடத்தை சென்ற ஆண்டு கட்டியிருக்கிறோம். இந்த ஆண்டு ஒரு கட்டிடம் கட்டியிருக்கிறோம். அதற்கு மகான் சுகப்பிரம்மரிஷி சமையற்கூடம் என்று பெயர் வைத்திருக்கிறோம்.
     கிட்டத்தட்ட நான்கு லட்சம் ரூபாய் செலவில் செய்திருக்கிறோம். வீட்டை கட்டிப்பார்! கல்யாணம் செய்து பார். சாதாரண வீடல்லப்பா அது. பிரம்மாண்டமான வீடுகள். வீடென்றால் சும்மா சாதாரண கட்டிடம் அல்ல. ஆசான் ஆசி பெற்ற மக்கள்தான் இதை செய்வார்கள் என்பதற்காகத்தான் இதைச் செய்கிறோம். அது தற்பெருமைக்காகவோ அல்லது சங்க அன்பர்கள் பெருமை அடைவதற்காகவோ அல்ல. எங்கள் சங்கத்தார்கள்தான் இதைச் செய்வார்கள். மற்ற சங்கத்தார்கள் செய்ய முடியாத ஒன்றை, நமது சங்கத்தார்கள் செய்வார்கள்.
     நமது சங்கத்தார்கள் செய்வதெல்லாம் உண்மை. ரொம்ப தூய்மை, வாய்மை இருக்கும். 165 திருமணம் செய்யப் போகிறோம். இதே போல் ஒவ்வொரு ஆண்டும் இலவசத் திருமணம் செய்வோம். விளம்பரத்தில் 108 திருமணம் என்றுதான் அறிவித்திருந்தோம். 165 திருமணம் செய்யப் போகிறோம். ஆக வீட்டைக் கட்டுவோம். இலவசத் திருமணம் செய்து வைப்போம்.
     ஆசான் அகத்தீசரை நீங்கள் வணங்கினால், நீங்கள் எதை மேற்கொண்டாலும் அருள் செய்வார் என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டு. நாம்தான் வணங்குகிறோமல்லவா?
      பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
            பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்
      தொழுதுநிற் கின்றனன் செய்பணி யெல்லாம்
            சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே
      முழுதும்ஆ னான்என ஆகம வேத
            முறைகளெ லாம்மொழி கின்றமுன் னவனே
      எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி
            என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
                                      -திருஅருட்பா – ஆறாம் திருமுறை – திருப்பள்ளி எழுச்சி – கவி எண் 920
               
தொழுதுநிற் கின்றனன் செய்பணி யெல்லாம் என்றார் மகான் இராமலிங்கசுவாமிகள். நாங்கள் காரியம் செய்வதற்கு முன்னேற வணங்குவோம். நீங்கள் தோல்வி அடைந்தபின் சிந்திப்பீர்கள்.
     நாம் மேற்கொள்ளும் காரியங்களும், கட்டிடப்பணிகளும், இலவசத் திருமணமும்,  நித்தியா அன்னதானமும், பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகமும் தடையில்லாமல் நடக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு ஆரம்பிப்போம்.
     நீங்கள் ஆட்படை, பணபலம், நம்மிடம் எல்லாம் இருக்கிறது என்று உங்களுடைய கல்வி, அனுபவத்தைக் கொண்டு செய்வீர்கள். தோல்வி அடைந்த பிறகு, கடவுள் கெடுத்து விட்டானென்று சொவீர்கள். கடவுள் ஒன்றும் செய்யமாட்டான்.
     செயல் துவங்கும் முன்னே ஆசானை வணங்க வேண்டும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்போதே, இந்த பிள்ளை நல்லபடி படிக்க வேண்டும், இந்த பிள்ளைக்கு நல்ல கல்வி அமைய வேண்டும், திருமண வயது வந்து விட்டது, பண்புள்ள கணவனாக அமைய வேண்டும், நல்ல வேலை வாய்ப்பு அமைய வேண்டும். இதற்கு நீர்தான் அருள் செய்ய
வேண்டுமென்று கேட்க வேண்டும்.
     நாங்களெல்லாம் முன்னரே கேட்போம். அதுபோல, கணவன் நோயில்லாது இருக்க வேண்டும். நல்ல சுற்றுப்புற சூழ்நிலை அமைய வேண்டுமென்று நீங்கள் கேட்க வேண்டும். நாளைக்கு நடக்கப் போவதை முதல் நாள் இன்றே கேட்பதைதான் ஞானிகள் விரும்புவார்கள்.
     இதைதான் மகான் இராமலிங்க சுவாமிகள் சொல்வார், தொழுதுநிற் கின்றனன் செய்பணி யெல்லாம் – எல்லா செயல்களும் நல்லபடி அமைய வேண்டுமென்று ஆசானை வணங்கி மகான் இராமலிங்க சுவாமிகள் கேட்பார்.
     அதேபோல் நாமும் கேட்போம், நீங்களும் சொந்த வீடு இல்லாதவர்கள், சொந்த வீடு அமைய அருள் செய்ய வேண்டுமென்று ஆசானை கேட்க வேண்டும். தண்ணீர் வசதி இல்லாதவர்கள், எனக்கு தண்ணீர் வசதி எப்படியாவது கிடைக்க வேண்டுமென்றும், இதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்டால், இது நியாம்தான் என்பர் சொல்லி, ஒன்று போர் (ஆழ்குழாய்க்கிணறு) போட ஏற்பாடு செய்வார்கள், இல்லையென்றால், தண்ணீர் உள்ள இடமாக அமைத்துத் தருவார்கள்.
    
     சொந்த வீடு அமைதல், தண்ணீர் பிரச்சனை தீர்த்தல், அடுத்து வறுமை இல்லாத வாழ்வு, சுற்றுப்புறத்தில் பகைமை இல்லாதிருத்தல், திடமான உடம்பு, ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய அறிவு, பிள்ளைகளுக்கு நல்ல கல்வி, பிள்ளைகளுக்கு நல்ல கணவன் அல்லது நல்ல மனைவி, இவை எல்லாவற்றையும் முடித்துத் தருவதற்கும் ஆசானைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
     இந்த இடத்தில் ஓங்காரகுடிலில் ஒரு புனிதமான, அற்புத செயல் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் நடக்கக் காத்துக் கொண்டுள்ளது.
    
     அந்த அற்புதச் செயலை எதிர்பார்க்கின்ற காலமும் வந்திருக்கிறது. நித்த நித்தம் அற்புதச் செயல்தானே? அப்படி என்ன நடக்கிறது? என்ன காரணம்? தினம் நான்காயிரம் பேருக்கு உணவு என்கிறார்கள்?
     ஒன்றுமில்லை. உள்ளே சென்று, ஆசான் அகத்தீசரை வீழ்ந்து வணங்குவோம். பொதுமக்களுக்கு அன்னதானம் நிறைய செய்ய வேண்டுமென்று கேட்போம். ஆக, வியப்புக்குரிய காரியங்கள் நடந்து கொண்டே இருப்பதற்கு என்ன காரணம்? இங்கே இருக்கும் அன்பர்கள் அத்தனைபேரும் கோடீஸ்வரர்களா? அல்ல.
     எல்லோருக்கும் ஒரே நல்ல நோக்கம். அன்னதானம் செய்யும்போது கவனிக்க வேண்டும். அப்படியே பார்ப்போம். தொண்டர்கள் தமது சொந்த நிகழ்ச்சி போன்று தொண்டு செய்வார்கள். அவர்கள் நீடு வாழ வேண்டுமென்றும், நான் அடைந்த பேரின்பத்தை அவர்கள் அடைய வேண்டும் என்று நாங்கள் நினைப்போம்.
     ஆக, இங்கே தொண்டு செய்தவர்கள் பாதங்களை என் சிரம்மீது தாங்குவேன் என்றும், அவர்கள் நான் அடைந்த பேரின்பத்தை அடைய வேண்டுமென்றும், நிச்சயமாக, சத்தியமாக ஆசான் ஞானபண்டிதன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். தொண்டர்கள் அத்தனைபேரும் ஞானியாவார்கள்.
     அதுமட்டுமல்ல, இங்கு வருகின்ற அத்தனை மக்களுக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து, அவர்கள் நீடிய ஆயுளும், தடையில்லா வாழ்க்கை அமைய வேண்டும் என்று ஆசானை வணங்கி கேட்கிறோம்.
     புண்ணியம் நடக்கக்கூடிய இடம், நமது இடம், வஞ்சனை அற்று, கொடுமை இல்லாமல், தன்னை அர்ப்பணிக்கக்கூடிய இந்த இடத்தில் தினம் தினம் அல்லது மாதந்தோறும் வந்து இங்கே பிரசாதத்தைசாப்பிட வேண்டும்.
           ஆசான் ஞானபண்டிதனை வணங்கி, “ இந்த உணவையெல்லாம் ஒரு ஒரு பார்வை பாருங்கள் ஐயா” என்று கேட்போம். ஆசான் பார்க்கிறார். அது பிரசாதமாக மாறும். சாம்பார் குடிலில் இருப்பது போல் வேறு இடத்தில் இல்லை என்பார்கள்.
     காரணம் தலைவனை வணங்கி, “ஒரு பார்வை பாருங்கள் ஐயா” என்று ஆசானை வீழ்ந்து வணங்கி கேட்டு வருவோம். “ஓம் நந்தீசா, ஓம் திருமூலதேவா, ஓம் போகமகாரிஷி, ஓம் அருணகிரிநாதா, ஓம் புஜண்டமகரிஷி, ஓம் உரோமரிஷி” என்று ஆசானின் நாமங்களை சொல்லிக் கொண்டே தான் சாதத்தில் கையை வைப்போம்.
     ஏனென்றால் ஞானிகளைக் கூப்பிட்டு “இந்த உணவை ஒரு பார்வை பாருங்கள்” என்று கேட்போம். மேலும், “இந்த உணவுப் பொருட்கள் எல்லாம் பிரசாதமாக மாறவும், பிணி தீர்க்கும் மருந்தாகவும் மாற வேண்டும். இந்த உணவுப்பொருளை பரிமாறும்போது, நீயே தலைமை தாங்கி நடத்தித் தர வேண்டும்” என்றும் கேட்போம்.
     நாங்கள் நேற்று ஒரு மணி நேரத்திற்குள் 2525 பேருக்கு சாப்பாடு வழங்கியிருக்கிறோம். நானா செகிறேன்? ஆசான் செய்கிறார். அந்த பாத்திரங்கள் எல்லாம் கத்தி மாதிரி இருக்கும். அப்படி நீட்டினால் நகத்தை வெட்டி விடும். “தீமை நடக்கக்கூடாது” என்று ஆசான் கேட்போம்.
     “அன்னதானத்தை நீரே தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்று ஆசானை கேட்போம்.
     “நீ முன்பே ஏன் கேட்கவில்லை?”, “நீ அன்னதானத்திற்கு கேட்டாய். தலைமை தாங்கி நடத்தித் தருவதற்கு கேட்டாயா?” என்றார், ஆக ஒரு மணி நேரத்தில் 2525 பேருக்கு சாப்பாடு வழங்கியிருக்கிறோம் என்று சொன்னால், அது ஆசான் கிருபை.
      வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
      ஈண்டு முயலப் படும்.  
                                                -திருக்குறள் – தவம் – குறள் எண் 265
மேலும்,
      பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
      பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
      பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
      பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.
                            -திருமந்திரம் – அருளுடைமையின் ஞானம் வருதல் – கவி எண் – 1645
                ஆக நர் செல்வம் என்றார். நல்ல செல்வம் எது? தேவையான நேரத்தில் பொருள் கிடைத்தால் அது நல்ல செல்வம். பசி உள்ள நேரத்தில் உணவு கொடுத்தால் அது நல்ல உணுவு என்று சொல்வார்கள்.
     பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம் – ஞானம் நல்ல ஞானம், நல்ல செல்வம்.
     நல்ல செல்வம் என்பது இன்று ரூ. 500/- வேண்டும். இந்த ரூ. 500/-இன்று கிடைத்தால் நல்ல செல்வம். இதே தொகை ரூ. 500/- தேவை இல்லாத சமயத்தில் கிடைத்தால் அது நல்ல செல்வமாக இருக்க முடியாது. காலையில் பால் கிடைத்தால் நல்ல பால். அது 11 மணிக்கு கிடைத்தால்? பாலா அது? வெறும் பால்தான்.
     ஒரு பொருள் ஒரு நேரத்தில் அத்தியாவசியத் தேவையாக இருக்கும். உணவு, உடை, மின்சாரம் எது எது நமக்குத் தேவையோ, அஹ்டு உடனே கிடைத்தால், அது நல்ல செல்வம் என்று பொருள்படும்.  பசித்த நேரத்தில் உணுவ் கொடுத்தால் அது நல்ல உணவு என்று சொல்வான். நல்ல ஊண் என்று சொல்வான்.
     ஆசான் அருளால் எல்லாமே, எங்களுக்குக் கிடைக்கிறது. நீங்களும் பெற்று எல்லா வளமும் நலமும் பெற்று நீடு வாழ வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இந்த காலகட்டத்தில் ஞானியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை அடைய வாய்ப்பு இருக்கிறது. லகுவாக “ஓம் அகத்தீசா” என்று சொல்லலாம். “ஓம் நந்தீசா” என்று சொல்லலாம். இப்படி ஆசான் நாமத்தை சொல்லி “எனக்கு ஞானம் சித்திக்க வேண்டும், வறுமை இல்லாத வாழ்வு அமைய வேண்டும். இதற்கு நீர் அருள் செய்ய வேண்டுமென்று தினம் கேட்டு வந்தால், நிச்சயமாக ஆசான் கைவிட மாட்டார்.
     இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் ஆண்களும் பெண்களுமாக ஞானியாக வாய்ப்பு இருக்கிறது.
     ஒரு பெண் இருபது வயதிலேயே எனக்கு ஞானம் சித்திக்க வேண்டும், நல்ல பண்புள்ள கணவனாக அமைய வேண்டும், பண்புள்ள பிள்ளைகள் அமைய வேண்டும், என வாழ்கை சிறக்க வேண்டும், எனக்கு ஞானம் சித்திக்க வேண்டுமென்று ஆசானிடம் கேட்க வேண்டும். இப்படியே இதையே கேள் என்போம்.
     நாக்கு தழும்பு ஏறும் வரை கேட்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரு கோடி முறை ஆசான் அகத்தீசரையோ அல்லது மகான் நந்தீசரையோ, ஞானமா சித்திக்க வேண்டுமென்று கேட்டால் அதற்கு நிகரே இல்லை. அவர்களால் இந்த உலகத்தை மாற்றி அமைக்க முடியும். அந்த வல்லமை ஆசானுக்கு உண்டு. அந்த நாமஜெபத்திற்கு அவ்வளவு மகிமை இருக்கிறது.
     சுத்த ஆன்மிகம் பரவுவதற்கு நீங்கள் துணை புரிய வேண்டும், நாங்கள் மேற்கொள்ளும் எல்லா செயல்களும் நல்லபடி அமைய வேண்டுமென்று நீங்கள் எங்களை வாழ்த்த வேண்டும். நீங்கள் நல்லபடி வாழ வேண்டும். நீங்கள் எங்களை வாழ்த்த வேண்டும். அப்படி வாழ்த்தினால் அது எங்களுக்குத் துணையாக இருக்கும். இந்த நிகழ்ச்சிகளில் நீங்களும் கலந்து கொண்டு தொண்டு செய்து ஞானிகள் ஆசி பெற வேண்டுமென்று சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0208888
Visit Today : 154
Total Visit : 208888

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories