யோகாப்பியாசம் முறையோடு செய்ய வேண்டும். அதுபோல் சாயங்காலம் செய்ய வேண்டும். அப்ப இது முறையோடு செய்து வந்தால், அது நல்லதுதான் ஆனால் முறை தவறி ஆர்வத்தின்  காரணமாக சிலபேர் அதிகமாக மூச்சு கட்டுவார்கள். கட்டினால் என்ன ஆகும்? நோய்வாய்ப்பட்டு இறந்து போவார்கள்.
           காணும் மூச்சடக்கி விழியதும் உருட்டிக்
              கபாலமும் திறந்தனர் கோடி
என்றார். மூச்சு கட்டி கட்டி வெகுபேர் செத்துப்போய்விடுவார்கள். மூச்சு கட்டினால் என்னாகும்? வயிற்றுவலி வரும். அது அநேகமாக அவர்கள் சாகப்போகிறார்கள் என்று அர்த்தம். பிராணாயாமம் செய்த மக்கள் ஆசி இல்லாத மக்கள் அல்லது பயிற்சி இல்லாத மக்கள் யாரேனும் சுட்டிக் காட்டாத மக்கள்; யாரேனும் சுட்டிக் காட்ட வேண்டும். யோகத்தைப் பற்றி சுட்டிக் காட்ட வேண்டும். இப்படி இப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி செய்தால் யோகம் நல்லபடி இருக்கும். இல்லையென்றால் என்ன ஆகும் என்றால், அவர்கள் வெகுவிரைவில் செத்துப்போய் விடுவார்கள். அவர்களுக்கு ஒரே ஆர்வம். எப்படியாவது ஞானியாகலாம் என்று நினைப்பார்கள். ஞானியாவது இப்படியெல்லாம் முடியாது. சிலர் என்ன செய்வார்கள், தவம் செய்கிறேன் என்று சொல்லி, மனைவி மக்களை விட்டுவிடுவான். யாரோ ஒருத்தன் சொல்லிருப்பான். யாரோ ஒரு காட்டான் மோட்டான் சொல்லியிருப்பான்.உடனே மனைவி மக்களை விட்டு விட்டு, காடு மேடாக சுற்றிக்கொண்டிருப்பான். பட்டினி கிடந்து சாவான். நல்ல சோறு கிடைக்காது. உடலைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0344008
Visit Today : 111
Total Visit : 344008

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories