மதிப்பது வேறு வணங்குவது வேறு
—————————————–
எதுக்கு ஆன்மீகம் என்று தெரியாமல் ஆத்துல அடிச்சிக்கிட்டு போற சருகு மாதிரி
நாம பாக்கிறவங்க என்னென்ன செய்கிறார்களோ அந்த சடங்கெல்லாம் செய்து
அவங்க கும்மிடுவதை பார்த்து கல்லை, மரத்தை, மாட்டை நெருப்பு கோலை என்று கண்மூடித்தனமாக இருந்தோம்
எப்படி ஆங்கில படம் பாக்கும் பொது புரியாத காமெடிக்கு மத்தவங்க சிரிக்கும் போது நாம சிரிக்கிறா மாதிரி
அலங்காரங்களை பார்த்து கடவுளை பார்த்தா மாதிரி ஆஹா ஓஹோ என்று சொல்லிட்டு மருத்துவமனைக்கு போய் மாத்திரை போடுற வாழ்க்கையல்ல உண்மை ஆன்மீகம்
நம் முன்னோர்கள், சமூக ஆர்வலர்ள், தவத்திற்கு முயற்சி செய்து மக்களுக்கு ஒழுக்க நெறி போதித்தவர்கள் (ரமணர், ஏசுநாதர், சாய் பாபா, ராகவேந்திரர், விவேகானந்தர் மற்றும் பல), நாட்டு விடுதலைக்கு பாடுபட்டவர்கள்,
போன்றவர்களுக்கு நாம் நிச்சயம் மதிப்பும் மரியாதையும் கொடுக்கவேண்டும் என்றும்
ஆனால் இறைவனை அடைய (முக்தி, மோட்சம், வீடுபேறு, ஜெமத்தை கடைதேற்றுதல்)
மரணமில்லா பெருவாழ்வு அடைய
மீண்டும் மீண்டும் செத்து பாவத்திற்கு ஏற்ப கிடக்கும் உடம்பை சார்ந்து பிறக்கும் சுழற்சியில் இருந்து விடுபட
தலைவன் முருகபெருமான், அகத்தியர், போகர், மஸ்தான் சாஹிப், பீர் முகமது, யாகோப்பு, பட்டினத்தார், அருணகிரிநாதர் வள்ளலார், போன்று எமனை வென்று இறைவனானவர்களின் திருவடியை குருவடியாக பூஜிக்க அதாவது பக்தி செலுத்தவேண்டும் என்றும்
தானமும் ஞானிகள் திருவடி பூஜையாகிய தவமும் தான் ஆதி தமிழ் தலைவன் முருகபெருமான் படைத்த உண்மை ஆன்மீகம் என்று எனக்கும் உலகிற்கும் வழிகாட்டிய – திருமுருக ஆறுமுக அரங்கமகா தேசிகர் திருவடியை வணங்கி நன்றி சொல்லி பதிகிறோம்