————————————-=——–
கவலையாகவும் ஆதங்கமாகவும் இருக்கும்
—————–யாரை பார்த்து?————————
சாககல்வி (சித்தர்கள் அடையும் மரணமில்லா வாழ்க்கை) உள்ள தமிழில்
ஞானபூமியாகிய தமிழ்நாட்டில் பக்தியும் பணிவும் இல்லாமல் மனம் போன வாழ்க்கை வாழ்ந்து நோய்வாய்பட்டும் வருமைபட்டும் மன நிம்மதியில்லாமல் வாழும் தமிழனை பார்த்தா
இல்லை இல்லை – அதுதான் பழகிப்போயவிடதே
நாம் சொல்வது அழியாமை என்னும் சிவத்தை அடைய
சிவன் கோயில் வரை வந்து
அப்பேற்பட்ட மகான் சிவவாக்கியர் மற்றும் மகான் மாணிக்கவாசகர் பாடல்களை பாராயணம் செய்வார்கள்
நமசிவாயத்தின் உள்பொருளை அறிய முடியாமலும் அடைய முடியாமலும் தவிப்பவர்களை பார்த்து நாம் ஆதங்கபடுகிறோம்
சிவவாக்கியம் கவி எண்:4
—————-
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
****** (நமசிவாய என்று சொல்லும் பாவிகளே)******
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல்
அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே.
என்ன செய்வது சிறுவயதில் இருந்தே தொலைக்கட்சிகளில் தவம் அல்லது தியானம் என்றால் ஏதோ கண்ணை மூடி ஓம் நமச்சிவாய சொல்வது என்று பழகிவிட்டார்கள்.
யாரையும் குறைகூறி மகிழ்வது நமது நோக்கமல்ல
நெற்றிக்கண் / சொர்கவாசல் கதவின் சாவி உள்ள நாமே (தமிழர்கள்) – திறக்கமுடியாமல் இறக்கக்கூடாது என்று இந்த பதிவை பதிகிறோம்.
குற்றம் குறை இருந்தால் மன்னிக்கவும்.
இந்த காணொளியை “ஓம் அகத்தீசாய நம” என்று 12 முறை ஓதி – இந்த காநோளியின் சூட்சுமங்கள் உணர அருள் செய்யவேண்டும் என்று வேண்டி பலமுறை நுணுக்கமாக கேட்கவும்.
“ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம”