7.12.2015 குடில் ஓலை சுவடி விளக்கம்

கலியுகம் மாற்றி ஞானலோகம் தனை படைக்க வந்துதித்த மகா ஞானியே ஆறுமுக அரங்கமகாதேசிக ஞானியே மகா தவசியே ஞானத்தலைவன் முருகப்பெருமானின் ஆற்றலாக வந்துதித்திட்ட மகா ஞானியே அரங்கமகாதேசிகனே ஞான பூமியாம் துறையூரிலே திருவருளாம் தெய்வீக சக்தி மிகக் கொண்டே வாழ்கின்ற வாழும் சித்தனே! அற்புதமான உமது பெருமைகளை உலகறியக் கூறியே உலகோர் உமது வழி வருகையுற்று அவரவரும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவே மன்மத வருடம் கார்த்திகை மாதம் 21ம் நாள் 07.12.2015, திங்கட்கிழமையான இன்றைய தினமதனிலே தவ சூட்சும நூல்தனையே புகழ்ச்சோழ நாயனார் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் புகழ்ச்சோழ நாயனார்.

நன்மைகளையே தந்து நலமருளுகின்ற அற்புதமான வாழ்க்கை நெறிமுறைகளை ஞானதேசிகனார் ஆறுமுக அரங்கமகாதேசிகன் பலவாறாய் உபதேசமாக அருளி நிற்கின்றார்.மக்களே அவர்தம் ஜென்மத்தைக் கடைத்தேற்றவல்ல உபதேசங்களை சந்தேகமின்றி ஏற்று அரங்கன் திருவடிகளிலே சரணடைந்து அரங்கன் வாழும் ஏழாம் படை வீடான துறையூர் ஓங்காரக்குடிலிற்கு வந்திட, குடில் வரவர வருவோர் உயர்வதோடு வருவோர் குடியும் உயர்ந்து விளங்கும். குடில் வரவர அரங்கன் அருளாசியினால் அவரவர் வினைகள் விலகுமப்பா. குடில்நாடி வரவர குமரப்பெருமானாம் முருகனின் அருள் தம்மை பெற்று உயர்வடைவார்கள்.

குடிலுக்கு வரவர அவரவர் பிறந்த பிறவிப்பயனை அடைந்து சிறப்பார்கள். இணையில்லாத சூட்சுமமெல்லாம் அறிவிற்கு எட்டுமப்பா. எல்லாவிதமான வல்லமைகளும் பெருகி கேட்டவர் கேட்ட வண்ணம் வரங்களாய் குமரனருளால் கிட்டுமப்பா. அரங்கனை வழிபடவே அனைத்தும் வந்தடையும். அறம் வழி நோக்க வரமெல்லாம் வந்தடையும். இவ்வுலகமே மாபெரும் சக்தியாக தருமத்தின் பலம் மிகக் கொண்டே மாறிட இருக்க இந்த நன்னூலை உலக மக்களே அழைப்பாக ஏற்று, கருத்தாக தயவு வழி ஞானவழி காட்டும் ஏழாம் படை வீடாகிய துறையூர் ஓங்காரக்குடிலிற்கு வாரீர்.

குடிலுக்கு வாரீர்! வாரீர்! வாரீர்! உலகமாற்றம் விரைந்து நடந்து இவ்வுலகமே வளமுற மாறி பெரும் பேறை அடைந்திட அழைக்கின்றேன். எனது அழைப்பை ஏற்று நடந்திட இவ்வுலகம் நல்லுலகமாகும். இவ்வுலகமே ஞானஉலகமாக மாறிடுமப்பா. மக்கள் மனவலிமை பெற்று மரணபயம் வென்று தேறிட அவர்தமக்கு குரு அரங்கன் அருள் துணையாய் வந்திடுமப்பா. இவ்வுலகை மாற்றிட அரங்கமகா தேசிகனார் மூலமாக உலக மாற்றம் நடந்திடவே கலியுக மாமாயைகள் விலகிடும். நம்பகமான வழியில் ஞானவழி நடந்து வரும் ஞானவழி மக்களுக்கு ஞானலோக வாழ்வு உறுதிபட கிடைக்குமென்பேன் என்கிறார் மகான் புகழ்ச்சோழ நாயனார்.

அகத்தீசனை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால்….
இயற்கை சீற்றங்களாலும், நோய்நொடிகளாலும், விஷ ஜந்துக்களாலும், விபத்தாலும், தீடீர் மரணமாகிய இடைபட்ட மரணங்கள் அவரவர் வினைக்கேற்ப வரத்தான் செய்யும். மகான் அகத்தீசனை பூஜித்து ஆசி பெற்றிட்டால் இப்படிப்பட்ட இடைப்பட்ட மரணங்கள் வராது என்பதை அறியலாம்.

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
மனிதர்கள் ஆட்சியில் மிகுதி மழை, மிகுதி வளர்ச்சி, நிலநடுக்கம் போன்றவைகள் வரத்தான் செய்யும். ஞானிகள் ஆட்சியிலே மிகுதி மழை இருக்காது, இயற்கை சீற்றங்களும் இருக்காது, தேவைக்குட்பட்ட மழை பெய்து நாடெங்கும் நல்ல சூழ்நிலையில் ஞானவாழ்வை வாழ்வார்கள்.கொள்ளை, கொலை, கற்பழிப்புகள் போன்றவை இருக்காது. எங்கும் எதிலும் அமைதியான வாழ்வு உண்டாகும் என்பதை அறியலாம்.

கடந்தான் கந்தனின் கழலிணை போற்றிட
கடக்க துணை வரும் கந்தன் கழலே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 648
Total Visit : 208556

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version