ஏழாம் படை வீடாம் துறையூர் ஓங்காரக்குடிலினை கல்வியறிவு இல்லாத அறியாமையில் வாடுகின்ற பாமர மக்களும் பணிவு கொண்டு பயபக்தி விசுவாசத்துடன் அணுகி வரவர,தடைகளற்ற வாழ்வை பெறலாம். தடையேதுமின்றி வளர்ச்சி அடைவதோடு, தன்னை அறியும் தகைமையான ஞான சூட்சுமங்களையும் வல்லமைகளும் கூடி உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டு தூய நெறியினை பின்பற்றி நடக்க நடக்க பெருமைமிக்க நிலையும் கீர்த்தியும் பெற்று உயர்நிலை அடைவார்கள்.
அடயோகி ஆறுமுக அரங்கமகாதேசிகனை உளமார நம்பிக்கையோடு வணங்கி தடையேதுமின்றி ஏழாம் படை வீடாம் துறையூர் ஓங்காரக்குடிலிற்கு வருகை தரதர அரங்கனின் சூட்சும சக்திகளை பெற்று பிரச்சனைகள் இல்லாத பெருவாழ்வை வாழ்வதோடு சகல வளத்தையும் பெற்று ஆற்றல் கூடி அரங்கன் தயவினால் பெற்று மேல்நிலையை அடையலாம்.
அரங்கன் தயவினில் இருப்பவர்களுக்கு சிறப்பறிவு கூடி என்றும் மரணபயமிலாத விருப்பு வெறுப்பற்ற நிலையைக் கடந்து வலுவான பொருள்வளமுடன் தாழ்விலாத உயர்வைத் தரும்.குருவருள் பெற்ற அவர்கள் அரங்கமகாதேசிகனாரின் சேவைகளை இவ்வுலகெங்கும் பரப்பிட மக்களுக்கு ஞானியாகும் வாய்ப்பு அரங்கனால் சடுதி கிட்டுமப்பா. ஆக்கமும் ஊக்கமும் அளித்து சர்வ வல்லமைகளையும் அளித்து காக்கின்ற அரங்கனருளால் ஞானி ஆகும் வாய்ப்பு விரைந்து கிட்டும். அரங்கமகாதேசிகனாரால் ஆக்கமும், ஊக்கமும் வல்லமையையும் அருளிக் காக்கின்ற ஆறுமுக அரங்கமகாதேசிகனாரின் தலைமையை உலகம் ஏற்க உலக மாற்றம் விரைந்து நடந்திடுமப்பா என தமது தவ சூட்சும நூல் மூலம் கூறுகிறார் மகான் நேச நாயனார்.
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
வரும் காலங்களில்துன்பத்தைஉணரக்கூடியஅரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அமைவார்கள் என்று அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
மக்களின் துன்பங்களை உணர முடியாத அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளும் அவரவர்க்கு உண்டான வாய்ப்பை இழப்பார்கள் என்பதை அறியலாம்.
கொற்றவன் முருகனை கூவி அழைத்திட
நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவனே!