ஓம் சரவண ஜோதியே நமோ நாம
ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி
ஆக இந்த சங்கம் வருங்காலத்தில் அற்புதம் நடத்தவுள்ளது. அது என்னையா அற்புதம்? அத்தனை தொண்டர்களும் முக்கியமான அன்பர்கள் ஆட்சிப்பொறுப்பில் இருப்பார்கள். அவர்களிடம் பொருள்பற்று இருக்காது. பொருள்பற்று இருக்குமேயானால் அரசியல்வாதிகளிடம் நிச்சயம் அவன் நீதியுடன் ஆட்சி செய்ய முடியாது. அவனே லஞ்சம் வாங்குனா? இப்போ அமைச்சர் இருக்கிறான், ஒவ்வொரு அமைச்சர்களிடம் கேட்டால் எவ்வளவுடா பணம் வச்சிருக்கனு கேட்டால், சும்மா ஆயிரம் அது ஒன்னும் குற்றமில்லை. ஒரு லட்சம் அது கூட ஞாயம்தான். என்னடா ஒரு லட்சமா போடா போடா அனுசரிச்சினு சொல்லலாம். எவ்வளவு சொத்து இருக்கு? 5 ஆயிரம் கோடி. 5 ஆயிரம் கோடியா!!!! பைத்தியகாரங்களே. 50,000 கோடி போய்டான். அடேயப்பா அரசியல்வாதியா அவன்? 50,000 கோடி ரூபாய் கொல்லையடிக்கிறனா அரசியல்வாதியா அவன். ஏற்றுகொள்வானா? கடவுள் ஏற்றுகொள்வானா? கிட்டயே போகமாட்டான். என்ன காரணம்? பொருள்பற்று உள்ளவன். நிச்சயம் நல்லது செய்யமாட்டான். ஆனால் அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஆட்சிக்கு வரபோகுது. ஆட்சிக்கு வரும். ஆனால், அன்பர்கள் பொய் சொல்லமாட்டார்கள், பொருள் வாங்கமாட்டார்கள். லட்சியம், மக்கள் பிரச்சனை தீர்பதே எங்கள் லட்சியம். ஆக, இப்போ இருக்கிறது அரசியலா ஏதோ சொல்றான். இந்த அரசியல்வாதியே இன்னும் ஒரு வருஷம் ஆட்சி செய்தால் போதும் வெகுபேர் சுடுகாட்டுக்கு போய்டுவான். அந்த அளவுக்கு பலகீனம் இருக்கும். ஐயோ பாவம். எங்க பார்த்தாலும் லஞ்சம், மக்கள் தவிக்கிறான். எங்க போனாலும் நீதி இல்லை.