முருகப்பெருமான் துணை
மகான் வியாசர் அருளிய கார்த்திகை மாத ஞானத்திருவடி நூலிற்கான ஆசி நூலின் சாரம் :
ஆதிபகவானின் மூலக்கனலாகவும் தோன்றி ஆதிசக்தியின் ஜோதி சொரூபமாகவும் அருட்பெருஞ்ஜோதி சூட்சுமமாக பலகோடி சூரிய பிரகாசமுள்ள பேராற்றல் பெருஞ்சுடராக விளங்கி நிற்கின்ற முருகப்பெருமானை போற்றி முருகப்பெருமானின் அவதாரமாக வந்துதித்திட்ட இப்பூமியின் மகா சூட்சுமமாக விளங்கி உலகினிற்கு உயர்வை தரும் மகா ஞானியாக விளங்கி நின்று அருள்பாலித்து காத்து அருள்புரிகின்ற ஆறுமுக அரங்கமகா தேசிகனாரின் ஏழாம்படை வீடு துறையூர் ஓங்காரக்குடிலின் சக்தியாக வெளிவருகின்ற ஞானத்திருவடி நூலிற்கு ஹேவிளம்பி வருடம் புரட்டாசி மாதம்தனிலே ஆறுமுக அரங்கமகா தேசிகனாரின் புகழ் உலகெலாம் பரவிடவே ஆசி நூல்தனை வியாசரும் கூறுகிறேன் என்கிறார் மகான் வியாசமுனிவர்.
இந்த கலியுகம் மாறி தவமும் தருமமும்மிக்க, தான நல்யுகமாக ஆக வேண்டியே ஞானயுகமாக ஆக வேண்டியே அற்புதமாய் வழிநடத்தி உலகோர்க்கு வழிகாட்டி வருகின்ற ஞானதேசிகன் ஆறுமுக அரங்கமகா தேசிகனாரின் புகழை உலகறியக் கூறியே உரைக்கின்றேனப்பா ஆசி நூல்தன்னையே.
பல்லாயிரக்கணக்கான வருடங்கள் கடுமையான தவத்தினை செய்த பலனையும் பல்லாயிரம் பிறவி செய்திட்ட புண்ணியத்தையும் சேர்த்துமே, வேதங்கள் எல்லாம் போற்றும்படியாகவே இப்புவியில் முருகப்பெருமானும் ஆறுமுக அரங்கனை முருகப்பெருமானின் அவதாரமாக ஆக்கி உலகோர்க்கு அற்புதமாய் சேவைகள் செய்திடவும், உலகினில் அநேகம் அநேகம் அற்புதங்களை நிகழ்த்தி இந்த யுகத்தை காத்திடவும் பேராற்றல் கொண்ட ஓங்காரக்குடிலை முருகப்பெருமானின் சக்தி வடிவமாக அமைத்து அறம் எனும் அற்புத சக்திமிக்க சூட்சும வேலியிட்டு தன்னலமற்ற தொண்டர்களும் அன்பர்களின் பலமும் சேர்த்து உலகினில் எண்ணிலா சேவைகளை செய்து வருவதோடு ஜென்மத்தைக் கடைத்தேற்றவல்ல ஞான பூஜைகளாம் சித்தர் பூஜைகளை நேர்த்தியாக செய்து இவ்வுலக மக்களைக் காத்திடவும் நிலைப்படுத்திடவும் இவ்வுலகை காத்திடவும் வலுப்படுத்திடவும் பௌர்ணமிதோறும் சிறப்பு சித்தர் வழிபாடுகளைச் செய்தும், முருகப்பெருமான் நேரில் தோன்றி அருள் செய்ய, வல்லமைமிக்க பூஜையாம் திருவிளக்கு பூஜைகளையும் உலகமெலாம் முழுமை ஞானம் பரவிடும்படி உலகமெலாம் எல்லா திசைகளிலும் நடத்தி முருகப்பெருமானே அரங்கனை சார்ந்து பெரும் சேவைகளை செய்து வருகின்றார்.
ஆதலினால் ஆறுமுக அரங்கமகா தேசிக ஞானியர் தம்மின் அற்புதமான சூட்சுமம்மிக்க செயல்முறைகளை மக்கள் அறிந்து தெளிந்து அரங்கனின் செயல்பாடுகளை விரும்பி ஏற்று பயபக்தியுடன் பணிந்து அரங்கனின் திருவடி நிழலிற்கு வந்திட வேண்டுமப்பா.
அரங்கனை நெருங்கிட நெருங்கிட இந்த கலியுகமே உறுதியாக அற்புதமான மாற்றங்களை பலவிதமாய் காணுமப்பா. உலகினில் உண்மை ஞானம் பெருகி மக்களுக்கு ஞானம் உருவாகி அவர் தம்முள்ளே நல்ல சிந்தனைகள் பெருகி சிந்தை தெளிவும் மனோதிடமும் பெருகிடும்.
தென்னகமாம், ஞான பூமியாம் தமிழகத்திலிருந்து துவங்கி உலகப்பெருமாற்றம் உலகமெங்கும் முருகப்பெருமானால் நடத்தப்படும்.
முருகப்பெருமானின் அருளைப் பெற்றிட அவரவரும் முழுச் சரணாகதிதனை அடைந்து எங்கும் எதிலும் முருகப்பெருமான் தலைமையை ஏற்கும்படியாக உலகமெங்கும் தொண்டுகள் மிகுந்திட வேண்டும், அதிகாரிகள் தூய வாழ்வை வாழ வேண்டும், நேர்மையுடன் நடந்திட வேண்டும்.
மக்களெல்லாம் தானதரும நெறிமுறைகளை விடாது தொடர்ந்து கடைப்பிடித்து தானதருமங்களை தவறாது செய்திட வேண்டும். அவர்களெல்லாம் ஆறுமுக அரங்கனுக்கு தொண்டர்களாக ஆகியே தானதருமங்களை செய்து வர, இந்த தேசமே தொண்டும் சேவையும்மிக்க நல்லுலகமாக மாறிடும்.
வாழ்வினிலே துன்பங்கள் நீங்கி அல்லல் அற்ற அமைதியும் வளமும் முன்னேற்றமும் உள்ள வாழ்வை வாழ்ந்திட மக்களெல்லாம் ஞானபண்டிதனின் அவதாரம் ஆறுமுக அரங்கமகா தேசிகர் வாழும் துறையூர் ஓங்காரக்குடிலினை நோக்கி வாருங்கள், குடிலிற்கு வருகை தந்துமே ஆங்கே மனம் உருகி “அரங்கா முருகா” என நாமஜெபங்களை செய்து வர, ஊக்கமான நிலையும் திடமான வாழ்வும் உயர் வாழ்வும் மக்கள் அடைந்து சிறப்படைவார்கள்.
நாட்டினில் பொருளாதார வளர்ச்சி காணும், வெற்றிகளை தந்தருளும், குருவருள் பலமும் கூடி நிற்க மக்கள் சேவையும் மாண்புள்ள ஒழுக்க நெறிமுறைகளும் வளர்ச்சியடைந்து தொடர தொடர இந்த உலகமே ஞானஉலகமாக மாறிடுமப்பா, நிம்மதியும் நிறைவும் மிக்கதாய் சர்வபலத்துடன் இவ்வுலகம் மாறும்.
முருகப்பெருமானின் சக்தி வடிவமாக இந்த கலியுகத்தினில் ஆறுமுக அரங்கமகா தேசிகனும் செயல்பட்டு வருகின்ற இக்காலத்தினில் அரங்கனது ஞானத் தகவல்களை ஞானத்திருவடி மூலமாக உலகினோர்க்கு தந்து வர, ஞானத்திருவடி நூலை வாங்கி படித்தும் பிறர் படிக்க வாங்கிக் கொடுத்தும் பூஜைகளிலே வைத்து பூஜித்தும் வருகின்றவர்க்கெல்லாம் முருகப்பெருமானின் அருளைப் பெற்று சிறப்பான வாழ்வை வாழ்ந்து முழுமை ஞானத்தையும் பெற்று சிறப்படைவார்கள்.
ஞானம் தரும் ஆறுமுக அரங்கனே வாழ்க வாழ்க. இவ்வுலகினில் நல்வாழ்வு தரும் தேசிகனே வாழ்க வாழ்க. வானவர்களாம் ஞானிகள் மெச்சும்படியாக தொண்டுகளை செய்து வரும் வள்ளல் ஞானியே வாழும் கலியுக ஞானியே வாழ்க வாழ்க என தமது ஞானத்திருவடி ஆசி நூல் மூலம் உலகறிய உரைக்கின்றார் மகான் வியாசமுனிவர்.
-சுபம்-