முருகப்பெருமான் வருகிறான்! உலக மக்களுக்காக வருகிறான். அவன் ஆட்சி நடக்கப் போகிறது!!!!

                             ஓம் அகத்தியர் துணை.
சத்தியமே அகத்தியம்                                                                       அகத்தியமே ஜெயம்.
03.5.2015 அன்று சித்ராபௌர்ணமி விழாவில் தவத்திரு குருநாதர் அவர்கள் அருளிய அருளுரை:                                                          
முருகா! சற்குருநாதா! சாந்த சொரூபா!  என் தந்தையே! எனது தாயே! தயவுடை தெய்வமே! தயாபரனே! தேவாதி தேவா! ! எங்களையும் ஒரு பார்வை பார் தாயே!
இந்த சங்கத்தில் முதலில் தொண்டர்கள் திருவடியை வணங்குகிறேன்.  என்னது?
அடுத்து, யார் யார் பொருளுதவி செய்கிறார்களோ, அவர்களையும் வணங்குகிறேன். அடுத்து, உலக மக்கள் அனைவருடைய திருவடியையும் வணங்குகிறேன். என்னையா, உலக மக்கள் அனைவரது திருவடியையும் வணங்குகிறேன்? உலகமக்கள் திருவடியை நான் வணங்குகிறேன். அவர்கள் நீடு வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.
          வருகிறான்! முருகப்பெருமான் வருகிறான்! உலக மக்களுக்காக வருகிறான். அவன் ஆட்சி நடக்கப் போகிறது.     இந்த ஆண்டு நடக்கலாம். நினைக்கிறேன். சொல்கிறார்கள். சுவடியில் இருக்கிறது.
          மன்மத ஆண்டில் முருகன் வருகிறான். என்ன செய்வான்? பண்புள்ள மக்களைக் காப்பாற்றுவான். அப்போது பண்பில்லாத மக்கள்? அனைவருக்கும் பாதுகாப்பு உண்டு. யாருக்கும் தடை இல்லை. ‘முருகா! நான் இதுநாள் வரை அறிந்தோ, அறியாமலோ தவறு செய்திருக்கிறேன். மன்னிக்கவும்.’ என்று சொன்னால் அருள் செய்வான். ஆக, அவன் ஆசி பெறணும். அவன் ஆட்சி வந்தால், முருகப்பெருமான் ஆட்சி வந்தால், முருகப்பெருமான் ஆட்சி வந்தால், பண்புள்ள மக்களுக்கு இடையூறு இருக்காது. நிம்மதியாக தூங்கலாம். பருவ மழை பெய்யும். நிலநடுக்கம் இருக்காது. இயற்கைச்  சீற்றம் இருக்காது. எல்லா மக்களும் இன்புற்று வாழலாம். சாந்தமே வடிவான மக்கள். எந்த குறையும் இல்லாமல் வாழலாம். இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது. வந்திருக்கிறது காலம்! இந்த சங்கம் அதற்காகத்தான் வந்திருக்கிறது. எவ்வளவோ சங்கம் இருக்கலாம். ஆயிரக்கணக்கான சங்கங்கள், லட்சக்கணக்கான சங்கங்கள் இருக்கலாம். ஆனால் இந்த ஒரு சங்கம் மட்டும் , இந்த ஒரு சங்கம் மட்டும் , இந்த ஒரு சங்கம் மட்டும் ,  உலக நலனுக்காக!  என்னையா, ஒரு சங்கம் மட்டும்தான்? அவன் தான்முருகப்பெருமான் தலைமை தாங்குகின்ற இடம் இது. எம்பெருமான் முருகப்பெருமான் தலைமை தாங்குகின்ற இடம் ஓங்காரக்குடில்! அகத்தியர் சன்மார்க்க சங்கம்.
          ஆகவே , தொண்டர்களும், பொருளுதவி செய்பவர்களும், முருகப்பெருமான் ஆசி பெறலாம்.
          நான் தவம் செய்திருக்கிறேன். நான் தவம் செய்தேன். நாற்பது ஆண்டு தவம் செய்திருக்கிறேன். மாதவன் சொன்னதுபோல், உப்பில்லாமல் சாப்பிட்டிருக்கிறேன். உப்பில்லா கஞ்சி.  உப்பில்லாமல் சாப்பிட்டிருக்கிறேன். சின்ன விசயமல்ல! நாற்பது ஆண்டு. அவர் சொன்னார், 2184 ஏழைதம்பதிகளுக்கு இலவச திருமணம்!  இது என்னையா! பத்து இருபது கோடி பேருக்கு அன்னதானம் செய்திருக்கிறோம். இது ஒரு கடுகு எங்களுக்கு. எனக்கல்ல! முருகப்பெருமானுக்கு ஒரு கடுகு! நினைத்தால், நினைத்தால் ஒரு நாளைக்கு ஒரு கோடி பேருக்கு அன்னதானம் செய்யலாம். அதுவும் கடுகுதான். என்னது? கோடிக்கணக்கான பேருக்கு அன்னதானம் செய்திருக்கிறோம் என்றால், ஒரு நாளைக்கு ஒரு கோடி பேருக்கு அன்னதானம் செய்தால் அது ஒரு கடுகு என்றான்.
          அற்புதம்! அற்புதம்! அற்புதம்!  முருகப்பெருமான் ஆசி! அற்புதம்! அற்புதம்! அற்புதம்! முருகப்பெருமான் கருணை! அற்புதம்! அற்புதம்! அற்புதம்!அவருடையஆசி!
அருள்!
          ஆகவே வருங்காலம் அற்புதம் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு நடக்கலாம். நடக்க வாய்ப்பு இருக்கிறது. செய்தி வந்துகொண்டிருக்கிறது. இப்போது சொன்னேன் அல்லவா? முதலில் தொண்டர்கள் திருவடியை வணங்குகிறேன். அடுத்து பொருளுதவி செய்த மக்களை வணங்குகிறேன். இந்த சங்கத்திற்கு வெளிநாட்டு அன்பர்கள் தொண்டு செய்கிறார்கள். உள்நாட்டு அன்பர்களும் தொண்டு செய்கிறார்கள். அவர்கள் அனைவருடைய திருவடியையும் வணங்குகிறேன். அவர்கள் திருவடியை சிரம் மீது தாங்குகிறேன். சரிய்யா, உலக மக்கள் திருவடியை சிரம் மீது தாங்குகிறேன். உலக மக்கள் திருவடியை வணங்குகிறேன். உலக மக்கள் திருவடியை நான் தாங்குகிறேன். அவர்களை வணங்குகிறேன்.
          எந்த தலைவனும் இப்படி சொல்லமாட்டான். நான், இந்த சங்கம் உலக மக்களுக்கு நன்மை செய்யவே வந்த சங்கமாகும். பசி என்று சொல்வதற்கு முன்னே அறிவார்கள். இப்போது நான் பசியோடு இருக்கிறேன். ஒரு வாரம், பதினைந்து நாட்களாக சரியாக சாப்பிடவில்லை. கஞ்சிதான். அதுவும் சிறிதுதான் சாப்பிடலாம். ரொம்ப சாப்பிடக்கூடாது. ‘மேலும் வயது 80 ஆயிற்று இல்லையா? எண்பது வயது கிழவன்’. அப்படியென்று நினைக்காதீர்கள்! எண்பது வயது கிழவன் ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறான். ஏதோ இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் சேர்ந்து வைத்துக்கொண்டு கதை விட்டிருக்கிறான். ‘உலகத்தைக் காப்பாற்றப் போகிறாராம். உலகத்தைக் காப்பாற்றப்போகிறாராம்’ என்று கதை விட்டுக்கொண்டிருக்கிறான். என்னையா, கதை விட்டுக்கொண்டிருக்கிறான், எண்பது வயது கிழவனை வைத்துக் கொண்டு? என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான்? ஏதோ சரி! ஆறுதலுக்காக பேசியிருக்கிறார்கள்.
          இல்லை! இல்லை! உலக மக்களுக்கு  நன்மை செய்ய வந்திருக்கிறேன். கிழவன்தான் நான்! இன்று, இப்போது கிழவன். ஆனால் வருங்காலத்தில் இளமையாக மாறுவேன். என்றும் இளமையோடு இருப்போம் நாங்கள்! என்றும் இளமையோடு இருப்போம் நாங்கள்! என்றும் தாய்மை குணத்தோடு இருப்போம் நாங்கள்!தாய்மை குணம் உள்ளவர்கள் நாங்கள் எல்லாம்.
          ஆகா! இந்த சங்கம் ஆட்சிக்கு வந்தால்?
                   இந்த சங்கம் ஆட்சிக்கு வந்தால்?
                   இந்த சங்கம் ஆட்சிக்கு வந்தால்?
          பண்புள்ள மக்களும், பஞ்சபராரிகளும், ஏழைகளும் வாழலாம். அப்பேர்ப்பட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்போதைக்கு ஒரு மூன்று மாதமாக சரியாக சப்பிடாமல் இருக்கிறோம். அது ஒன்றும் குற்றமில்லை. சாப்பிட்டு வருகிறேன். இப்போது வருகிறேன். வெளியே வருகிறேன். ‘என்னடா எண்பது வயது கிழவன் இவ்வளவு துணிச்சலாக?’ என்கிறான்.
          வருவேன்! வருவேன்! வருவேன்! வருவேன்! வெளியே வருகிறேன். எப்போது வருகிறீர் என்றால், வருவேன்! நடந்தே வருவேன். மீண்டும் இளமையாக வருவேன். உலக மக்களுக்காக வந்திருக்கிறேன். நான் வரவில்லை. அனுப்பியிருக்கிறான் முருகன்! முருகன் என்னைப் பேச வைக்கிறான்.  என் சிந்தை, செயல், சொலில் நீயே சார்ந்திருந்து பேச வேண்டும். நான் கேட்பேன், “விஷ ஜந்துக்களாலும், துஷ்ட ஜந்துக்களாலும், பேய் பூத கணங்களாலும், கயவர்களாலும், பகைவர்களாலும், வஞ்சகர்களாலும், அரசாங்கத்தாலும், வேறு எந்த வகையிலும் இடையூறு வரக்கூடாது எனக்கு” அப்படி என்று கேட்பேன் முருகனை. பிறகு, “கனவிலும் பிற உயிர்களுக்கு நான் தீங்கு செய்யக்கூடாது.” “கனவிலும் பிற உயிர்களுக்கு நான் தீங்கு செய்யக்கூடாது.”  இப்ப எப்படி இந்த வேண்டுகோள்? கனவிலும் பிற உயிர்களுக்கு நான் தீங்கு செய்யக்கூடாது. எல்ல உயிரும் என்னுயிர் போல் நினைக்க வேண்டும். இப்படி ஒரு வேண்டுகோள்.என்னடா, எல்லா உயிரும் என்னுயிர் போல் எண்ண வேண்டும் என்று நினைக்கிறேன். என்னது? அப்ப கனவிலும் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யக்கூடாது என்று சொன்னால் அவர்களது சிந்தை எப்படி இருக்கும்? அதுதான் முருகன் எனக்கு கொடுத்த அறிவு. எனக்கு கொடுத்த அறிவு அதுதான். நான் வெளியே வந்தால், தாய்மை குணத்தோடு வருவேன். என்னை கல்லால் அடித்தாலும் சரி, சொல்லால் அடித்தாலும் சரி, வில்லால் அடித்தாலும் சரி, தாங்கிக் கொள்வேன். அந்த பக்குவம் வரும் வரையில் என்னை விட மாட்டான். முன்னெல்லாம் நான் கோபக்காரனாக இருந்தேன். ஆனால் எங்கள் குடும்பம் ரொம்ப பண்புள்ள குடும்பம்! கொஞ்சம் சிந்தித்தால் தெரியும் உங்களுக்கு! எங்கள் அப்பா அடியாள். நான் அடியார்! அவர் அடியாளாக இருந்தார். இப்போது நான் அடியாராக இருக்கிறேன். ஆனால் எங்கள் அப்பா அடியாளாக இருந்தார். முருகா! அந்த குடும்பத்தில் ஏனையா, பிறக்க வைத்தாய்? என்னையா, இப்படி ஓர் மூர்க்கத்தனமான குடும்பத்தில் பிறக்க வைத்தாய் என்னை?
          “அடேய்! சிலபேர் மீசையை முறுக்குவானடா. அந்த பயம் உனக்கு வரக்கூடாது அல்லவா? ஒரு மென்மையான குடும்பத்தில் பிறந்திருந்தால் ‘ஹும்’  என்றால் நீ பயப்படுவாய்.” ஏனையா, அந்த குடும்பத்தில் பிறக்க வைத்தீர் என்றால், “மூர்க்கத்தனமான குடும்பத்தில் பிறந்த நோக்கம், யாராவது மீசையை முறுக்கினால், சும்மா விளையாட்டுக்கு பிள்ளை ஏதோ பேசுகிறது என்பதற்காக.  என்னடா, மீசையை முறுக்குகிறான். ‘விளையாட்டுப் பிள்ளை பேசுகிறது’ என்று சொன்னால், அவனைக்கண்டு அஞ்சா நெஞ்சம் எங்களுக்கு உண்டு. அதற்காகத்தான் ஒரு மூர்க்கத்தனமான குடும்பத்தில் பிறந்த நோக்கமே, ஒரு அச்சம் வரக்கூடாது. எதையும் கண்டு அஞ்சா நெஞ்சம் வேண்டும். அது மூர்க்கத்தனமல்ல. அஞ்சா நெஞ்சம். அந்த வாய்ப்பு எனக்கு கொடுத்தான். எங்களிடம் யாராவது முறைத்து மீசை முறுக்கினால் சரி, ஏதோ விளையாட்டுப் பிள்ளை ஏதோ பேசுகிரது என்று நினைப்பேன். என்னடா இது விளையாட்டுப்பிள்ளை? மீசை முறுக்குகிறான். முறைத்துப் பார்க்கிறான்.”அவன் கிடக்கிறான் விளையாட்டுப்பிள்ளை. சின்னப் பிள்ளை அவன். கைப்பிள்ளை!” என்று சொல்வோம். ‘மூர்க்கத்தனமானவன் எதையும் செய்வான். கொலைகாரப்பாவி நான்’ என்றால், அவன் தான்டா! எங்களுக்கு விளையாட்டுப்பிள்ளை அவன். என்னடா கொலைகாரன் அவன். இவன் தீவிரவாதி என்றால், இந்த உலகத்தில் இப்போது சொல்கிறேன் கேட்டுக் கொளுங்கள். தீவிரவாதம் அழிக்கப்படும். இல்லை, இல்லை, இல்லை! அடக்கப்படும்! பண்பு. அடக்கப்படும்! அடங்காவிட்டால் அழிக்கப்படும்!
          தீவிரவாதிகளைக் கண்டு வல்லரசே நடுங்குகிறான். அமெரிக்கா, பிட்டன், பிரெஞ்சு, ரஷியா, சீனா வல்லரசே நடுங்குகிறான். தீவிரவாதத்தைக் கண்டு. ஆனால் அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஒரு மூலையில் இருந்து சொல்கிறான் தீவிரவாததை அடக்குவோம்! மிஞ்சினால் அழிப்போம்! இப்போது சொல்கிறோம். இவ்வளவு பெரிய கட்ட்டம் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறோம் நாங்கள். என்னடா இது? இவ்வளவு பெரிய கட்டடம் கட்டியிருக்கிறார்கள். எதிர்த்தால் குண்டுவைப்பானடா. வரட்டும் இங்கே பார்க்கிறேன்! சவால் விடுகிறேன் அவனுக்கு! ஏ! உலக தீவிரவாதிகளே! சந்திக்கிறோம் உங்களை. வந்து கை வைத்துப்பார் இங்கே!ஓங்காரக்குடில் மண்ணை மிதித்துப்பாரடா! ஆற்றல் இருந்தால். இப்போது இங்கே சொல்கிறோம்.
          வல்லரசுகள் உன்னைக் கண்டு பயப்படுகிறான். நாங்கள் பயப்படமாட்டோம். எங்கே நீ கிளம்புகின்றாயோ, அங்கே உன்னை கொன்றுவிடுவோம்! என்னடா இது?
          தீவிரவாதிகளே! உலகத்தீவிரவாதிகளே! உங்களை நாங்கள் சந்திக்கின்றோம். பார்! வந்து இங்கே எங்களிடம்மோதிப்பார்! உன்னை நொடியில் ஒழித்தே விடுவோம் ! தீவிரவாதிகளுக்கு இப்படி ஓர் சவால் விடுபவன் யாரடா அவன்? ஓங்காரக்குடில் கிழவனா? ஏதோ சாகப்போகிறேன் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறான். வாழப் பிறந்தவன் நான். நான் இல்லை. இந்த சங்கமே வாழப்பிறந்த சங்கம்! தீவிரவாதிகளை இப்போது நேருக்கு நேர் சொல்கிறேன். தீவிரவாதிகளே! உங்களை ஒடுக்க முடியும். உங்களை அடக்க முடியும். அழிக்க முடியுமடா!.
          ஏன்டா, உலகத்தில் உள்ள தீவிரவாதிகளை அடக்குவேன், ஒழிப்பேன் என்று சொன்னால் என்னையா? கிழவன் ஏதோ சொல்லிக்கொண்டு இருக்கிறான். மேலும் இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம், ‘யோவ், அவர்தான் உலகத்தைத் தாங்கப்போகிறேன்’ என்று சொல்கிறார்கள். இந்த கிழவனை வைத்துக்கொண்டு;  சொல்கிறான் அவன் “தீவிரவாதிகளே அடக்குவோம்! அழிப்போம்! என்று சொல்கிறானே? என்னடா ஆச்சு? என்றான்.
          அந்த ஆற்றல் உண்டு எங்களுக்கு! ஆனால் அவன் பணிந்தால்? ஆதரிக்கப்படும். அவன் துணிந்தால் நசுக்கப்படும்.
          பணிந்தால் ஆதரிப்போம். துணிந்தால் நசுக்குவோம். நசுக்குவோம்! நசுக்குவோம்! அழிப்போம் என்றான்.  என்னடா, இந்த தேதியில் (03.5.2015)  வந்து என்ன ஆச்சு? அவர்பாட்டுக்கு பேசியிருக்கிறார் வயதான காலத்தில்;  ஏதோ பட்டினி கிடந்திருக்கிறார் போல் இருக்கிறது.
          இல்லை!    நான் பட்டினி கிடப்பது உலக நன்மைக்காக! ஆனால் அரசாங்கத்திற்கு விரோதமாக நாங்கள் போகமாட்டோம். இந்த ஆட்சிக்கு விரோதமாக நாங்கள் போக மாட்டோம்.
          ஆனால் இந்த ஆட்சிக்குப் பிறகு எங்கள் ஆட்சிதான்! நமது ஆட்சிதான்! மனிதர்கள் ஆட்சி செய்தது போதும்.
        மனிதர்கள் ஆண்டது போதும்! மக்கள் மாண்டது போதும்!
          முருகன் வருகிறான்! ஆனால் அரசாங்கத்திற்கு விரோதமாக நாங்கள் செல்ல மாட்டோம். இந்த ஆட்சிக்கு விரோதமாக நாங்கள் போக மாட்டோம். ஆனால் இந்த ஆட்சிக்குப் பிறகு எங்கள் ஆட்சிதான்! நமது ஆட்சிதான்! மனிதர்கள் ஆட்சி செய்த்து போதும். மனிதர்கள் ஆண்டது போதும்! மக்கள் மாண்டது போதும்!முருகன் வருகிறான்! முருகன் வருகிறான்! உலக மக்களை காப்பாற்ற. அவன் பேசுகிறான் இதை. “ ஏ தீவிரவாதிகளே! அழிப்போம். “       நான் பேசவில்லை. முருகப்பெருமான் பேசுகிறான்.
          ஏ தீவிரவாதிகளே! உங்களை அடக்குவோம். பணிந்தால் காப்போம். துணிந்தால் அடக்குவோம். பணிந்தால் காப்போம். துணிந்தால் அடக்குவோம்! அழிப்போம்! பேசுகிறேன். எல்லாம் பதிவாகிக் கொண்டுள்ளது. பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். என்னடா இது? பேசிக்கொண்டு இருக்கிறார். பாதுகாப்பு இருக்கிறதா? என்றால் பாதுகாப்பு உண்டு உங்களுக்கு! எதையும் செய்வோம்! ஆணைப் பெண்ணாக்குவோம்.பெண்ணை ஆணாக்குவோம். தூணை துரும்பாக்குவோம். துரும்பை தூணாக்குவோம். ரொம்ப மீசை முறுக்கினால் அலியாக்கிவிட்டுப் போய்விடுவோம்! என்னடா மீசை முறுக்கி வைத்திருக்கிறான். ஆறடி இருப்பான். மீசை முறுக்குகிறான். அவன் சிறுபயல்! கைப்பிள்ளையாக விளையாண்டு கொண்டிருக்கிறான்.
          அப்ப உலகப்போக்கிரிகளைக் கண்டு பயப்பட மாட்டோம். தீவிரவாதிகளாய்க்கண்டு பயப்பட மாட்டோம். எதையும் கண்டு பயப்பட மாட்டோம்.
இந்த சங்கம் அப்பேர்ப்பட்ட சங்கம். முருகன் தலைமை தாங்குகிறான். எதையும் செய்வான் முருகன்.
        ஆகவே, அன்பர்களே! எதிர்பாருங்கள். உலக மக்களே கேட்டுக்கொள்ளுங்கள். இப்பொது கேட்டுக்கொள்கிறோம். உலக மக்களே எதிர்பாருங்கள். காப்பாற்ற வந்துவிட்டான் முருகன்.
அகத்தியர் சன்மார்க்க சங்கம் உங்களைக் காப்பாற்றும்.
அகத்தியர் சன்மார்க்க சங்கம் உங்களைக் காப்பாற்றும்.
அகத்தியர் சன்மார்க்க சங்கம் உங்களைக் காப்பாற்றும்.
          நான்கூட நினைத்தேன். ஐந்தாறு நாட்களாக சரியாக சாப்பிடவில்லை. விரதம் இருக்கிறேன். இப்போது அம்பிகா யோகம் செய்கிறேன் இப்போது. அம்பிகா யோகம் என்று ஒன்று இருக்கிறது. அது என்ன செய்யும்? உடம்பை இறுகச் செய்யும். தளர்ச்சி இல்லாமல் இறுகச் செய்வதற்காக  உள்ளது அது.
          யார் யாரோ யோகா சொல்லித்தருகிறேன் என்று கற்றுத்தருகிறான். யோகம் என்பது மூன்றாம் படி. சரியை, கிரியை, யோகம். இந்த ராஜயோகம் என்று சொல்லித்தருவான். அதற்கு ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொள்வான். அது முருகனுக்கு உரியதடா ராஜயோகம்!  சிவராஜ யோகம் முருகனுக்கே உரியது. இப்ப எப்படி? ஏதோ பிழைக்கிறான். தண்டிக்கப் படுவான் அவன். 1500 வாங்கிக்கொண்டு ராஜயோம்? என்றான். ஏதோ பிழைக்கிறான். ஆனால் தண்டிக்கப் படுவான் அவன்!      அவர் சொல்கிறார் முருகன். “ஏய், என்னடா கதை விடுகிறீர்கள்?  சிவராஜயோகம் என்று சொல்லிவிட்டு ஆயிரம் ரூபாய் வாங்குகிறாயே? அதனுடைய இயல்பு தெரியுமா? ஐயோ! வெகுபேர் செத்தே போகிறானடா! நோய்வாய்ப்பட்டு. என்ன செய்யணும்?  முதலில் சைவத்தைக் கடைப்பிடி. முருகப்பேருமான் திருவடியை பூஜை செய்யச்சொல். அதை விட்டு விட்டு, யோகம் என்று சொல்லிவிட்டு செய்கிறாயே? அவன் மேல் குற்றமில்லை.  அவனும் கட்டுப்படுவான். கட்டுப்படுத்தப்படும். அப்போது போலி ஆன்மீகவாதிகள் அடக்கப்படுவார்கள். போலி அரசியல்வாதிகளும் அடக்கப்படுவார்கள். போலி மதவாதிகளும் கட்டுப்படுவார்கள்.
          ஆக அரசியல் அராஜகம், ஆன்மீக அராஜகம், இன்னும் அநேகம் இருக்கலாம். எல்லா அராஜகமும் அடக்கப்பட்டு, மக்கள் காப்பாற்றப்படுவார்கள். எல்லா அராஜகமும் அடக்கப்படும். மக்கள் காக்கப்படும்.
        ஆகவே, இப்போது பேசுகிறோம். நன்றாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் எல்லோரும். ஆகவே இந்த சங்கம் உலகத்தை வழி நடத்தும். இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் தொண்டு செய்வார்கள். செயல்படுவார்கள்.
          ஆகவே, அன்பர்களே! உலகமக்களே! இப்போது உங்களைக்கேட்டுக் கொள்கிறேன். உங்கள் திருவடியை வணங்குகிறேன். உங்களுக்குத் தொண்டு செய்ய நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம் என்று சொல்லி, ஏதோ ஒரு ஐந்து நிமிடம் பேசலாம் என்று நினைத்தேன். பேசியிருக்கிறேன். ஆகவே நீங்களேல்லாம் நீடு வாழ வேண்டுமென்று  சொல்லி முடிக்கிறேன் வணக்கம்!
                   ஓம் சரவண ஜோதியே நமோ நம.
                ஓம் சரவண ஜோதியே நமோ நம.
                ஓம் சரவண ஜோதியே நமோ நம.
                ஓம் சரவண ஜோதியே நமோ நம
                ஓம் சரவண ஜோதியே நமோ நம.
                ஓம் சரவண ஜோதியே நமோ நம.
                ஓம் சரவண ஜோதியே நமோ நம.
                ஓம் சரவண ஜோதியே நமோ நம.
                ஓம் சரவண ஜோதியே நமோ நம.
                ஓம் சரவண ஜோதியே நமோ நம
                ஓம் சரவண ஜோதியே நமோ நம.
                ஓம் சரவண ஜோதியே நமோ நம
        இந்த ஓசை அகிலமெல்லாம் கேட்கப்போகிறது. கேட்டுக் கொண்டு இருக்கிறது இப்போது.  இப்போது சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்.  இபோது இங்கே இருந்து கொண்டிருக்கிறேன். லண்டனில் இருப்போம். வீராவுக்குத் தெரியும். இங்கே இருப்போம். லண்டனில் இருப்போம். மலேசியாவில் இருப்போம். உலகமேங்கும்இருப்போம்.இருந்து கொண்டு இருக்கிறோம். இப்போது.
         என்னடா இது ஆச்சரியம் இது? அதல்ல, முருகன் தான் அங்கே போய் இருக்கிறான். என்னைக் கருவியாக பயன்படுத்துகிறான். நான் போகவில்லை. அங்கே இருந்து கொண்டு செய்து கொண்டு இருக்கிறான். உலகம் பூராவும் என் உருவம் தெரியும். சொன்னார்,” நான் இருக்கிறேன் இங்கே. உன் தேகத்தில் உன் ரூபத்தில் இருக்கிறேன்.” ஆகவே இந்த சங்கம் உலகத்தைக் காப்பாற்றும் என்று நம்பி இருங்கள். நிச்சயம் காப்பாற்றுவோம் என்று சொல்லி
ஓம் அகத்தீசாய நம.
ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம.
ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம.
ஓம் அகத்தீசாய நம
          ‘என்னடா இது?  பெரிய பிரச்சனை இருக்குமே? இவர்பாட்டுக்கு தீவிர வாதிகளை சந்திப்பேன்’ என்று சொல்கிறாரே? நாளைக்கு ஏதேனும் ஆகிவிட்டால்?
          ஒன்றும் ஆகாது! ஒன்றும் கவலைப்படாதீர்கள். இல்லையென்றால் நான் சொல்வேனா? தீவிரவாதிகளை இவர்பாட்டுக்குப் பேசி விட்டுப் போய்விட்டாரே? சங்கம் இருக்கிறதே? ஏதும் ஆகிவிடுமோ? என்றால்,

ஒன்றும் செய்யமுடியாது. எங்கே கிளம்புகின்றானோ அங்கேயே அழித்து விடுவோம். அமெரிக்காவில் கிளம்பினால் அங்கேயே கொல்வோம். தீவிரவாதிகள் இந்த சங்கத்திற்கு இடையூறு செய்ய முடியாது. ஆகவே பயப்பட வேண்டாம். நாங்கள் இருக்கிறோம். காப்பாற்றுவோம் உங்களை. முருகப்பெருமான் இருக்கிறான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0208686
Visit Today : 778
Total Visit : 208686

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories