சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகளின் அருளுரை
அறன் வலியுறுத்தல் – அதிகாரம் 4
“அறம் செய்தால் இருபத்தொரு தலைமுறைக்கு நன்மை உண்டு என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறியுள்ளார். அதுபோலவே மறந்தால் அறக்கடலாக விளங்கும் திருவள்ளுவரும் அறம் செய்வதில் வழுவாது இருக்க வேண்டும் என்பதை இவ்வதிகாரத்தில் தெரிவிக்கின்றார்.
தர்மம் சிறப்பை உண்டாக்கும்; புகழையும் தரும். உயிர்க்கு அறத்தைவிட உயர்ந்த உபாயம் வேறு எதுவும் இல்லை. உடம்பைப்பற்றிக் கூறாமல் இங்கு உயிருக்கு உபாயத்தைக் கூறியதற்குக் காரணம் என்னவென்றால், உடம்புக்கு நரை, திரை, மூப்பு உண்டு. உயிருக்கு அது கிடையாது. உயிர் குறுகாது, விரியாது, நலியாது. எனவே தர்மம் உயிருக்கு ஆக்கம் தர வல்லது. இந்த ஜென்மத்தில் செய்கின்ற புண்ணியம் தொடர்ந்து பல ஜென்மத்தில் உயிரைக் காக்க வல்லதாக இருக்கும். எனவே, அறத்தை விட, அழியாத உயிருக்கு ஆக்கம் தருவது வேறு எதுவும் இல்லை என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது.
அறத்தை விட மேன்மையானது வேறு எதுவும் இல்லை. தர்மம் செய்யச் செய்ய தன்னைப்பற்றி அறியும் சிந்தையும் உலகைப்பற்றி அறியும் சிந்தையும் ஆன்மாவின் இயல்பறியும் தன்மையும் உண்டாகும். அதை மறந்தால் கேடு வந்து மீண்டும் பிறந்து, துயரத்தில் சிக்கிக் கொள்வான். அவ்வாறு அறம் செய்தோரை மறக்காமல் அவர்களைப் போற்றுதலும் சிறப்பானதாகும்.
முடிந்த அளவுக்கு அறப்பணி செய்ய வேண்டும். அதனை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். செய்ய வாய்ப்புக் கிடைத்த இடத்திலெல்லாம் செய்யலாம். குறையில்லாத மனம் எங்கிருக்கிறதோ அங்கு அறம் நிலைத்து நிற்கும். குற்றமில்லாத மனம் இருந்தால் அதுவே அறம். காம தேகம் இருக்கும் வரை அறியாமை இருக்கும்; அழியக்கூடிய பொருள்கள் மீது பற்று இருக்கும். திருவருள் துணை கொண்டு இத்தகைய குணங்களை வென்றவனுக்கு, குற்றமற்ற மனம் இருக்கும். அதுவே அறமாகும். அறத்தை விளம்பரப் படுத்துபவன் தன்னை ஏமாற்றிப் பிறரையும் ஏமாற்றுவான்.
பொறாமை, ஆசை, வெகுளி , கோபம், கடுஞ்சொல் இந்த ஐந்து குணக் கேடுகளும் ஒருவனிடம் இருக்கும்வரை அவனால் அறம் செய்ய முடியாது. செய்தாலும் பயனற்றதாகி விடும். இந்த கேடுகள் மனதில் வண்ணம் பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும். இளமை உள்ள போதே அறப்பணி செய்ய வேண்டும். உடல் நலிந்து முதுமை வரும் நாளில் துணை நிற்பதும் உதவுவதும் முன் அறமே ஆகும்.
பல்லக்கில் வரும் உயர்ந்த அரசன், மற்றும் தாங்கள் மேல் நிலையில் இருப்பதாக கருதிக் கொள்பவர்களை பல்லக்கில் தூக்கி செல்கின்றவனைப் பார்த்து, மேலே அமர்ந்திருப்பவன் புண்ணியவான் என்றோ, கீழே தூக்கிச் செல்பவன் பாவியென்றோ கூறுதல் கூடாது. அறியாமை சூழ்ந்தால் தவறு அந்த பாவபுண்ணியச் செயல்களை செய்வான். நம் மனதில் மட்டுமே அறிதல் வேண்டும்.
வேண்டும். சிறந்த முயற்சியுடன் அறப்பணியைச் செய்து வரவேண்டும். அவ்வாறே பூஜையும், புண்ணியமும் தொடர்ந்து செய்தால், மீண்டும் கருப்பைக்குள் செல்லமாட்டான். தவறினால் மீண்டும் கருப்பைக்குள் செல்லுவான். முயன்று தவம் செய்து, அதனால் பெறுவதே சுகம். வேறு வழியில் இன்பம் பெற முயற்சித்தால் அது இன்பமாகவோ, புகழாகவோ இருக்காது. முயன்று செய்து கொள்ளத்தக்கது அறமே. மரணமற்று வாழவேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள் தடைபடாது தர்மமும் பக்தியும் செலுத்தவேண்டும். அறம் செய்யாவிடில் அறியாமை சூழும். அறியாமை சூழ்ந்தால் செய்வான். அப்போது அவனுக்குப் பழிவரும். பழியில்லாத வாழ்வு வாழ வேண்டுமெனில் அறம் செய்ய வேண்டும். அப்போது சிறப்பறிவு உண்டாகும். பெருந்தன்மை உண்டாகும்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே. திருமந்திரம் – 1823 |
– ஞானத்திருவடி தொடர்…