ஓம் அகத்தீசாய நம
அன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே வணக்கம். அன்பர் மாதவன் சொன்னார், இயற்கை சீற்றங்கள் இல்லாது இருக்க வேண்டுமென்றால் அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று கேட்டார்.
இயற்கையால் படைக்கப்பட்ட மனிதன் எல்லா ஜீவராசிகளும் இயற்கையால்தான் படைக்கப்பட்டது. இதில் ஆறறிவு, ஆழ்ந்து சிந்திக்க கூடிய அறிவு மனிதனுக்குதான் உண்டு. மற்ற ஜீவராசிகள் ஒவ்வொன்றுக்கும் பல வகையான குணக்கேடுகள் இருக்கலாம். பல குணம் இருக்கும். அதற்கு குணக்கேடும் கிடையாது, குணப்பண்பும் கிடையாது. மனிதன் ஒருவனுக்குதான் குணப்பண்பும், குணக்கேடும் சேர்ந்தே இருக்கும்.
இப்ப ஞானிகள் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் ரொம்ப உயர்ந்த குணப்பண்பு உள்ளவர்கள். இப்போ மாணிக்கவாசகராக இருந்தாலும் சரி, இராமலிங்கசுவாமிகளாக இருந்தாலும் சரி, திருஞானசம்மந்தராக இருந்தாலும் சரி குணப்பண்பு உள்ளவர்கள்.
குணப்பன்பை அவர்கள் எப்படி பெற்றார்கள்? ஆதி தலைவன் சுப்ரமணியரை எல்லோரும் பூஜை செய்தார்கள். அவர் ரொம்ப உயர்ந்த குணப்பண்பு உள்ளவர். பெரியோர்களை பூஜை செய்தால்தான் குணப்பண்பு வரும். இப்போ மாணிக்கவாசகரையோ, இராமலிங்கசுவாமிகளையோ பூஜை செய்தால் குணப்பண்பு வரும்.
அவர் ஆசி இல்லையென்றால் இப்போ என்ன ஏற்படும்? மூர்கதனம் இருக்கும். பொருள் வெறி இருக்கும். பேராசை இருக்கும். பொறாமை இருக்கும், வஞ்சனை இருக்கும். பெரியோர்கள் ஆசி இருந்தால் அந்த குணக்கேடுகலெல்லாம் மாறும்.