about partnership firm
அகதீசனையோ இராமலிங்கசுவாமி யையோ பூஜை செய்து வந்தால், வியாபாரம் செய்வதற்கு முன்னே இதனால் நஷ்டம் வரும், நீ தகுதி இல்லாதவனோடு கூடி இருக்கிறாய், கூட்டு வியாபாரத்தில் தகுதி இல்லாதவனோடு கூடுகிறாய், இது ஆகாது என்று உணர்த்தப்படும், பூஜை செய்து வந்தால், அதே சமையத்தில் மாதம் இருவருக்கு, அன்னதானம், செய்து வந்தால், பாதுகாப்பு இருக்கும், தகுதி இல்லாதவனும், தகுதியாக மாறிவிடுவான், கூட்டு வியாபாரத்தில் தகுதி உள்ள மக்கள் சேருவது என்பது சாதாரண விஷயமல்ல, நான்கு பேர், ஆறு பேர் இரண்டு அல்லது மூன்று பேர் கொண்ட கூட்டு வியாபாரத்தில், புண்ணியவான்கள் மட்டும் தான், வெற்றி பெறமுடியும், புண்ணியம் இல்லை என்றால், கூட்டாளியே நம்மை ஏமாற்றிவிடுவான், கூட்டாளியே நம்மை அஞ்சும்படி செய்துவிடுவான், அவன் நமக்கு துரோகம் செய்யாமலிருக்க வேண்டும் என்றால், ஆசான் ஞானிகள் ஆசி இருக்க வேண்டும், தினம் பூஜை செய்துவந்தால், தகுதியுள்ள நண்பர்கள் தான் அமைவார்கள், தினம் ஞானிகள் நாமத்தை சொல்லிவந்தால், தகுதியுள்ள நண்பர்கள் தான், சேர்வார்கள் தவிர, கயவர்கள் நமக்கு சேரமாட்டார்கள், உணர்த்துவார்கள் நீ போகின்ற பாதை சரியில்லை என்று சொல்லிவிடுவார்கள், என்ன காரணம், காலையில் கேட்கிறான் இவன் அகதீசனை, நான் இவரோடு கூட்டு வியாபாரம் செய்ய விரும்புகிறேன் அவர் குணப்பண்பு எனக்கு தெரியவில்லை, எனக்கு நீ உணர்த்தவேண்டும் என்று சொன்னால், இவரே முயன்றாலும், தகுதி இல்லாத மக்களோடு உறவு, கொள்ளாது செய்துவிடுவார்கள், இவன் முயற்சித்தாலும் ஒட்ட விடமாட்டார்கள், தகுதியுள்ள நண்பர்களை சேர்த்து வைப்பார்கள், பூஜை செய்தால் தகுதியுள்ள நண்பரை சேர்த்து வைப்பார்கள், தகுதி இல்லாதவரை நீக்கிவிடுவார்கள், பூஜை செய்யாவிட்டால் நம்புவான் ஓர் இருவரை நம்புவான், பல இலட்சங்கள், மூலதனம், போடுவான், கடைசியில் தொகைக்கு தொகையும் போய், பகையும் வந்துவிடும், அப்ப பூஜையும் புண்ணியமும் செய்கின்ற மக்களுக்கு இப்படி ஒரு அபத்து நடக்காது, உணர்த்தப்படும் அவர்களுக்கு, அவன் அஞ்சும்படி எந்த செய்தியும் வராது, வெருவந்த செய்யாமை, வெருவுதல் – பயப்படுதல், பயப்படும்படியாக இது நடக்காது.