வீட்டில் பூஜை அறை | தவம் செய்ய முடியவில்லையா? | ஞானிக்கு அல்லது சன்மார்க்க அன்பருக்கு உணவு | திருமந்திரம் கவி எண் 1858

வீட்டில் பூஜை அறை | தவம் செய்ய முடியவில்லையா? | ஞானிக்கு அல்லது சன்மார்க்க அன்பருக்கு உணவு | திருமந்திரம் கவி எண் 1858


துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றையவர்கள் தவம்

அப்போது தவமுயற்சி செய்பவன், முன் செய்த நல்வினை இருக்கும். இல்லையென்றால் வீண் போகும் என்று சொல்லிவிட்டான்.
சரி, உனக்கு

தவம் செய்ய முடியவில்லையா?

அதுபற்றி கவலைப்படாதே! உன்னால் மூச்சுக்காற்றை கட்ட முடியாது. ஒன்றும் முடியவில்லை

ஐயா! நான் என்ன செய்யட்டும்? என்றான். எனக்கு அந்த வாய்ப்பில்லை. பூஜை செய்ய இடமில்லை.

ஒரு வீட்டில் பூஜை செய்ய இடமில்லை என்றால் புண்ணியம் குறை என்று அர்த்தம்.


தனி அறை இருக்க வேண்டும். புண்ணியவான்களுக்குத்தான் இருக்கும். ஒரு வீட்டில் பூஜை அறை என்று தனி ரூம் இருக்கிறதென்றால், புண்ணியம் செய்திருக்கிறான். அப்பா! மிகப்பெரிய புண்ணியவான்! அந்த


பூஜை அறையிலும், கண்ட தெய்வத்தின் படத்தை வைத்துக் கொள்ளாமல், ஞானிகள் படம் அகத்தீசன், இராமலிங்கசுவாமிகள் படத்தை வைத்து பூஜை செய்தால் மிக மிகப் பெரிய புண்ணியவான் ஆகும்.


பூஜை அறை இருக்கிறது. சரி வாய்ப்பில்லைய்யா. பூஜை அறை இல்லை. ஒன்றும் இல்லை. வாய்ப்பில்லை நான் என்ன செய்யட்டும்? என்றான்.

ஒன்றும் கவலைப்படாதே!

இது போன்ற தவசிகள்
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி
– துறவு என்பது உயிரைப்பற்றி,
உடம்பைப் பற்றி
அதிலுள்ள மாசுகள் பற்றி அறிந்து
உடல்மாசு நீங்குவதற்காக , உடம்பிலுள்ள காமதேகம் நீங்குவதற்காக உப்பில்லா உணவு சாப்பிடுவான். அவன் சாப்பிடுவான். எதற்காக உப்பில்லா உணவு சாப்பிடுவானென்றால், தேகக் கசடு நீங்குவதற்காக உப்பில்லா உணவு சாப்பிடுவான். அதுபோன்ற துறவி கிடைத்தால் அவருக்கு உணவு கொடுத்தால் அவனும் தவசியாவான்.

நீயும் தவசியாகிவிடுவாய். அவர் தவம் செய்வாரோ? தவசிகளுக்கு அல்லது பக்தர்களுக்குஅவன் பக்தனாக இருந்தாலும் சரி அல்லது யோகியாக இருந்தாலும் சரி, ஞானியாக இருந்து உணவு கொடுக்க வாய்ப்பு கிடைத்தால், அதற்கு நிகரே இல்லை. அது நிறைய சொல்லலாம். என்று சொல்வார் திருமூலதேவர். அத்தகைய தவசிகள் மனம் மகிழ்ந்து ஒரு நேரம் சாப்பிட்டால் போதும்.
தண்டறு சிந்தைத் தபோதனர் தாமகிழ்ந்து உண்டது மூன்று புவனமும் உண்டது கொண்டது மூன்று புவனமும் கொண்டதென்று எண்டிசை நந்தி எடுத்துரைத்தானே -திருமந்திரம்-கவி எண் 1858

இந்த ஞானிகள் ஒருமுறை வீட்டில் சாப்பிட்டால் போதும்
அந்த குடும்பத்தில் எந்த பிரச்சனை இருந்தாலும் சரி அவன் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் சரி
மூன்று புவனத்தார் சாப்பிட்டதும் ஒன்று ஞானி சாப்பிட்டதும் ஒன்று என்றார் திருமூலர்

தண்டு என்றால் மூணு சுழி போட்டிருப்பான், தேககசடு நீக்கியவன் என்று அர்த்தம், தேக மாய்கை தேகத்தில் இருக்கிற கசடு நீக்கியவர் என்று அர்த்தம். மகிழ்ந்து வீட்டில் சாப்பிட்டால் மூன்று புவனத்தார்கள் கிட்டத்தட்ட 1024 அண்டங்கள் இது போன்ற உலகம் 1024 அண்டத்தில் உள்ள மக்கள் சாப்பிட்டதற்கு ஒப்பாகும்


தண்டறு சிந்தைத் தபோதனர் தாமகிழ்ந்து உண்டது மூன்று புவனமும் உண்டது கொண்டது மூன்று புவனமும் கொண்டதென்று எண்டிசை நந்தி எடுத்துரைத்தானே -திருமந்திரம்-கவி எண் 1858

மூன்று புவனத்தாருக்கு செய்த புண்ணியம் இவன் அடைவான்

இப்படி நந்தீசன் சொன்னார் என்று சொல்வார் திருமூலர்

இது சொல்வது எதற்கு என்றால்

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம்



வள்ளுவன் சொல்வான் அதுபோன்ற ஞானிகளுக்கு (உணவு கொடுப்பதன் பலன்)

வேண்டாம்யா, பக்தி விசுவாசம் உள்ளவன் பக்தர்கள் இந்த சன்மார்க்கவாதிகள் அவனுக்கு சோறுபோட்டாலும் போதும்னார்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0189151
Visit Today : 358
Total Visit : 189151

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories