பக்தியும் பயனும் ஆகம, புராண, வேத, சாஸ்திரங்களின் சாரம் இதுவே

முருகப்பெருமான் துணை

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்
ஓங்காரக்குடில், துறையூர், திருச்சி Dt. போன் : 04327-255184.
www.agathiar.org

மகான் அகத்தியர்

நிறுவனர் – சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு, ட குருநாதா தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக

சுவாமிகள்

பக்தியும் பயனும் ஆகம, புராண, வேத, சாஸ்திரங்களின் சாரம் இதுவே அகத்தீசா என்று பூஜித்திட
சைவ உணவில் நம்பிக்கையும் அதைக் கடைப்பிடிக்கக்கூடிய அறிவும், கடவுள் நம்பிக்கையும், பாவ

புண்ணியத்தில் நம்பிக்கையும் கொண்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றக் கூடிய அறிவும் உண்டாகும். முருகா என்று

பூஜித்திட #உயிர்க்கொலை செய்து #புலால் உண்பது பாவம் என்று உணரவும், சைவ உணவை மேற்கொண்டும்
முருகப்பெருமான் திருவடியை

“ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ
“ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ

காலை 10 நிமிடங்களும்
மாலை 10 நிமிடங்களும்

முடிந்தால் இரவு 12 மணிக்கு 10 நிமிடமும்
மகாமந்திரத்தை ஜெபித்து வரவர, உணவினால் வரும் கேடுகளைப் பற்றி அறியலாம். அதாவது உயிர்க்கொலை

செய்து அதன் மாமிசத்தை உண்பதால் உயிர்கள்பால் இரக்க சிந்தனை வராது என்பதை அறியலாம். தாவர

உணவாகிய சைவ உணவு உண்ணும் போது மனம் மென்மையாக இருப்பதை அறியலாம். ஆயினும் சைவ

உணவை உண்ட போதும், உடல் உரமேறும்படி பால், நெய், தயிர், பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு ஆகிய

கொழுப்புள்ள சத்து உணவுகளை உண்டால் #மனம் செம்மைப்படாது. ஒரு சிறிதளவு சேர்க்கலாம், அது உடம்பிற்கு

நலமே. மிகுதியான கொழுப்புச்சத்து உடம்பினில் சாராமல் உடம்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எந்த

உணவும் பசித்தப்பின்தான் சாப்பிட வேண்டும்.

முடிந்த அளவு இருவேளை உணவு சாப்பிடுவதே நலமாகும். மூன்று வேளை சாப்பிட்டால் உடல் சத்து அதிகமாகி

காமம் மிகுதியாகி மனப்போராட்டம் ஏற்படும். எனவே உணவின் அடிப்படையே உயிரின் வாழ்க்கை. உணவை

அளந்து உண்ணுகின்றவன் உணர்வைக் கட்டுப்படுத்தி வாழ்கின்ற வாய்ப்பை பெறுவான். எனவே ஆன்மீக

வாழ்வை செம்மையாக நடத்த வேண்டும் என்றால் உணவின் தன்மையை ஆராய்ந்து அறிந்து அளவோடு உண்ண

வேண்டும். அதுவே ஆன்மீக வாழ்விற்கு வழித்துணையாகும். உணவினில் பசியை தூண்டி அளவிலாது சாப்பிட

தூண்டும்படியான மசாலா பொருள்களை விலக்கி வைப்பது நலம். தேவைப்படின் ஓரளவு சேர்க்கலாம்.
வல்லவன் முருகனடி வாழ்த்துவோம் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்வோம்! சைவத்தலைவன்

முருகனைப் போற்றுவோம் வையகம் போற்ற வாழ்வோம் நலமே!

இங்ஙனம்,
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
ஓங்காரக்குடில், துறையூர், திருச்சி Dt.
போன் – 04327 255184,
Www.agathiar.org

13.01.2015,
அவதார தின விழா வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0209239
Visit Today : 505
Total Visit : 209239

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories