உயிர்கொலை தவிர்த்தல் என்ற தலைப்பில் மகான் அரங்கமகா தேசிக சுவாமிகள் அருளிய அருளுரை

ஓம் அகத்திசாய நம

அன்புள்ள பெரியோர்களே! தாய்மார்களே! வணக்கம்!

     இன்றைய தேதி 21.10.1996, இடம்: ஓங்காரக்குடில். நேற்றைய தினம் விஜயதசமி, சரஸ்வதி பூஜை என்று சொன்னார்கள். சரஸ்வதி பூஜையைப் பற்றி நேற்று விளக்கம் சொன்னோம். அப்போது சில கவிகளுக்கும் விளக்கம் சொன்னோம். நாம் மேற்கொள்கின்ற பூஜா விதிகள், அனுஷ்டானங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி தெரிந்தால்தான் நாம் வழிபாடு செய்வது நியாயமாக இருக்கும்.
     விஜயதசமி அல்லது சரஸ்வதி பூஜை என்று சொல்லும்போது, அவர்கள் அவர்களுக்கு தெரிந்ததை சொல்கிறார்கள், நமக்கு புரியவில்லை. என்ன காரணம்? அதை விட மேம்பட்ட ஒன்று இருக்கிறது. இந்த வழிபாடு செய்வது கொலு வைப்பது போன்ற சடங்குகள் பிறவிப்பிணிக்கு மருந்தாக இருக்க முடியாது. சரி சமுதாயத்தில் இதை செய்கிறார்களே என்றால் இதைப்பற்றி நமக்கு கவலை இல்லை.
     நேற்று விஜயதசமி. தசம் என்றால் பத்து. அகார, உகாரம். “எட்டும் இரண்டும் தெரியாத” என்பார். எட்டிரண்டும் லிங்கமென என்று சொல்வார். ஆக எட்டும் இரண்டும் என்பது அகார உகாரம். அகாரம் என்பதற்கு தமிழில் எட்டு. உகாரம் என்றால் இரண்டு. அகார உகாரம் புருவ மத்தியில் சேர்ந்து விட்டால் தச தீட்சை முடிந்தது என்று அர்த்தம், இதை தசமி என்பார்கள்.
     ஆசான் ஆசியால்தான் வாசி வசப்படும். தச தீட்சை முடிந்ததை விஜய தசமி என்று சொல்வார்கள், சரஸ்வதி பூஜை எண்று சொல்வார்கள். இதை வட நாட்டில் துர்க்கா பூஜை, துக்கைக்கு பூஜை செய்வது என்று சொல்கிறார்கள். பொதுமக்கள் பூஜை வழிபாடு செய்கிறார்கள். பூஜையை ஏனய்யா செய்கிறாய் என்று கேட்டால், யாருக்கும் தெரியாது.
     தசம் – தசம் என்றால் பத்து. அகார உகாரத்தை புருவ மத்தியில் செலுத்திவிட்டால், தச தீட்சை முடிந்தது. அப்ப சரஸ்வதி விஜயம் செய்கிறாள். விஜய தசமி – விஜயம் செய்தாள் என்றால், வந்தாள் என்று அர்த்தம். வாசி வசப்பட்ட மக்களுக்கு துர்க்கை அல்லது காளி என்று சொல்வார்கள். ஆனால் இங்கே ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்று சொன்னால், வாசி வசப்பட்டபின், அதனுடைய இயல்பு நம்மை வஞ்சிக்கக் கூடிய சுக்கிலம் செத்த்ப்போச்சு.
                மாறினால்வாசி இரு சுடரை ஏற்றி
                                வைத்தாக்கால்இந்திரிய பாம்பு சாகும்
                புருவமத்தியில் காற்று ஒடுங்கிவிட்டால் அந்தகாற்று விணாத்தண்டு வழியாக சென்று சுக்கிலம்உற்பத்தியாகும் இடத்தில் உஷ்ணத்தை உண்டு பண்ணி உண்டுபண்ணி எல்லா சுக்கிலமும் வெளியேபோய்விடும். ரிஷிப்பண்டம் உடம்பில் தங்கிவிடும். இதுதான் இதில் இருக்கும் ரகசியம். அப்போது அதுபோன்ற வாய்ப்புகிடைக்கும்போது, கல்வி வரும், ஞானக்கல்விவரும். வாசி மட்டுமல்ல, அதனுள்தலைவனும் ஒடுங்கிவிடுகிறான், ஒடுங்கி நிற்கிறான்.
                கல்விக்கடல் தாயாகிய சரஸ்வதி வந்து இவனுக்கு அருள் செய்கிறாள். இரண்டாவது, வாசி வசப்பட்டபின் மும்மலமும் அற்றுபோகும். உஷ்ணம் ஏற ஏற ஏற சுக்கில்மௌம் வற்றிப்போகும், இரத்தம் அனைத்ஹ்டும் இறுகிடும். அப்படியே அற்றுப்போகும். பசி அற்றுப்போனதினாலே காமம் அற்றது, முதுமை அற்றது, எல்லாம் அற்றுப்போச்சு, விகாரம் அற்றுப்போச்சு. அசுரனாகிய இந்த உடம்பை சக்தி என்ன செய்கிறாள்? கல்விக்கு அரசி சரஸ்வதி, துர்க்கை அல்லது காளி என்பது உடம்பு. இதைத்தான் ஆசான் திருமூலர் சொல்வார்.
                ஓங்காரி என்பாள்அவளொருபெண்பிள்ளை
                நீங்காதபச்சைநிறத்தைஉடையவள்
                ஆங்காரிஆகியேஐவரைப்பெற்றிட்டு
                ரீங்காரத்துள்ளேஇனிதிருந்தாளே.
          திருமந்திரம் – சத்திபேதம் – திரிபுரை சக்கரம் – கவி எண் -1073
இந்த உடம்பு என்றுசொல்லப்பட்ட சக்தி, உடம்புக்குள்ளே இருக்கிறாள். அவள் இப்போது உடலில் காமத்தைஉண்டு பண்ணுகின்றாள். அங்கே தாயாக, தங்கையாக, மனைவியாக இருப்பாள், நாமாகவும் இருக்கிறாள். உடம்பாகிய அவள்தான் உடல் இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறாள். வாசி தோன்றியபின் ஆங்காரியாகியேஎன்றார். இப்போது அதே சக்திஉலகத்தை படைத்திருக்கிறாள், பஞ்சபூதத்தையும் படைத்திருக்கிறாள்.
வாசி வசப்பட்ட மக்களுக்கு, புதிய பிறப்பிற்கு ஐவரை பெற்றிட்டாள். பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்ட ஒரு சக்தியை உருவாக்குகின்றாள். மறு பிறப்பிற்கு காரணமாக இருக்கிறாள். இங்கே அவள் காளியாக இருக்கிறாள் என்று சொல்லி வெளியில் பூஜை செய்கிறார்கள், சரஸ்வதி பூஜையும் செய்கிறார்கள். சரஸ்வதி பூஜை என்பது கல்விக்கு அரசி. இந்த சுழிமுனைக்கு பெயர் கல்வி சுழிமுனை. அதுமட்டுமல்ல, சிறந்த கல்வி மட்டுமல்ல எல்லா கவித்துவமும் அவர்களுக்கு வரும். பேச்சாற்றல்,கவிதை எல்லாம் வரும்.
                ஆக இது கல்வி சுழிமுனை என்றும், மேலும் கல்வியும் வரும். உடம்புக்குள்ளே அக்கினியும் ஏற்படும் என்பார்.
                ஒளிக்கும் பராசத்திஉள்ளேஅமரில்
களிக்கும்இச்சிந்தையில்காரணம்காட்டித்
தெளிக்கும்மழையுடன்செல்வம்உண்டாக்கும்
அளிக்கும்இவளைஅறிந்துகொள்வார்க்கே.      
§  திருமந்திரம் – நவாக்கரி சக்கரம் – கவி எண் 1345
அங்கே காளியாக இருக்கிறாள். அதை ஆங்காரியாகி எண்று சொல்கிறார் முன்னேசாந்தமாக இருந்தாள். உடம்பில் அதிகமாக உஷ்ணம் ஏறும்போதுஆங்காரியாகி புதிய பிறவி எடுப்பாள். புதிய ஒரு தத்துவத்தை உருவாக்குவாள்.
ஐவரைப் பெற்றிட்டுரீங்காரத்துள்ளேஇனிதிருந்தாளே – உள்ளே தசநாதம் ஓங்காரமாகவும், ரீங்காரமாகவும் இருக்கிறாள். இப்படி ஒரு தத்துவம் இருக்கிறது. இங்கே என்ன சொல்கிறார். ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்
களிக்கும் இச்சிந்தையில்காரணம்காட்டித் – அமர் என்றால் போர்க்களம் என்று அர்த்தம்.
     ஆக இப்படி ஒரு தத்துவத்தை அந்த காலத்தில் வைத்திருக்கிறார்கள், வெளியே தெரியாது உடம்புக்குள்ளே இருக்கும். ஆக வாசி வசப்பட்ட  மக்களுக்கு பசி இருக்காது, தாகம் இருக்காது, உடம்பே உருகி ஒளிமயமாகும். இதற்குத்தான் இந்த மாதிரி பூஜை எல்லாம் வைத்திருக்கின்றார்கள். அதைத்தான் மையமாக வைத்திருக்கின்றார்கள். இதுதான் இதில் இருக்கின்ற ரகசியம்.
     கடவுளால் படைக்கப்பட்ட ஒர் உயிரை ஒருவன் கொல்கிறான் என்றால், அங்கே தர்மதேவதையே நிற்கமாட்டாள். அடப்பாவிகளா! எண்று கிட்டவே நிற்கமாட்டாள். இதற்கு என்னையா காரணம்? இப்பைட் ஒரு மூர்க்கத்தனமான செயலை அந்தன் காலத்தில் செய்திருக்கிறான்.
    
     ஆக மகான் வள்ளுவர் போன்ற ஞானிகளுக்கு இது பிடிக்காது. அவர் கடவுளாக ஆனவர், கடவுளாக சித்தி பெற்றவர், மரணமில்லாப் பெருவாழ்வை பெற்றவர், அதே சமயத்தில் நோயில்லாமல் வாழ்ந்தவர். ஆசான் திருவள்ளுவரால் இந்த கொடுமையை சகிக்க முடியாது.
     அப்போது ஆசான் வள்ளுவர் என்ன செய்தார்,
    
     தன்உயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
      மன்னுயிர்க்கு இன்னா செயல்?
o   திருக்குறள்- இன்னா செய்யாமை-குறள் எண் 318
உனக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் தாங்கமுடியவில்லிய. ஊசியால் குத்தும்போது எப்படி இருக்கும்? ஊசியால் உன்னை குத்தினால் கூட தாங்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது ஒரு உயிரைக் கொல்வது என்ன நியாயம்?
தன்உயிர்க்கு இன்னாமை தானறிவான் – தனக்கு துன்பம் வரும்போது புரிந்து கொள்கின்றவன், எப்படி
மன்னுயிர்க்கு இன்னா செயல்? – பிற உயிர்க்கு துன்பம் செய்வது என்ன நியாயம்? என்று ஆசான் திருவள்ளுவர் கேட்பார். என்ன காரணத்தால், நீ மற்ற உயிர்களுக்கு இடையூறு செய்கிறாய் என்று கேட்பார். இதெல்லாம் ஆசான் வள்ளுவருடைய, ஞானிகளுடைய சிந்தை, மனிதன் நோய்வாய்படாமல், மரணமிலாப் பெருவாழ்வு பெற வேண்டும். இப்படிப்பட்ட பெரிய வல்லமையை பெற வேண்டுமென்றால், இது போன்ற காட்சிகளை நாம் காணக்கூடாது.
அதே சமயத்தில் இதை இங்கேதான் சொல்லலாம், வெளியில் போய் சொல்லக் கூடாது. ஏனென்றால், அது அவன் வினைப்பயன். அவன் ஏதோ செய்கிறான். நம்மைக் கூப்பிட்டால் நாம் போகக் கூடாது. அந்த திசைக்கே திரும்பக் கூடாது. அப்படி திரும்பினால் பிரச்சனை வந்துவிடும். அது பாவச்செயல்!
ஆக உயிர்வதை செய்வதை மகான் இராமலிங்கசுவாமிகள் போன்ற ஞானிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதைத்தான் தனது குறளில் ஆசான் வள்ளுவர் சொல்வார்,
    
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப, செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
          திருக்குறள் – கொல்லாமை – குறள் எண் 330
மகோதரம் – வயிறு மட்டும் வீங்கியிருக்கும். கால் எல்லாம் சூம்பிக்கொண்டே வரும். கட்டிலிலேயே கிடப்பான். கிட்ட நெருங்கமுடியாத நாற்றம். பலநாள் கிடப்பான். என்னய்யா செய்தான்? இவன் பாவம், பல உயிர்களை கொன்று இவன் சாப்பிட்டவன். அநியாயமாக உயிரைக் கொன்று சாப்பிட்டவன்.
உயிருடம்பின் நீக்கியார் என்ப – பல உயிர்களைக் கொன்று அதை சுவைத்து உண்டவன். ஆகவே மகோதரம் வந்து கட்டிலில் கைகால் வீங்கி கிடக்கிறான். அப்படியே கிடக்கிறான். கிட்டவே நெருங்கமுடியாத அளவிற்கு நாற்றம். இதை ஆசான் வள்ளுவப்பெருமான் தனது குறளில் சொல்வார்.
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப – பல உயிர்களை உட்மபிலிருந்து நீக்கியவன் என்ப, சாப்பிட்டான் என்று சொல்லவில்லை. பல உயிர்களை உட்மபிலிருந்து நீக்கினான். பல உயிர்களை கொன்றவன் என்ப.
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோபோல் போறாக் கடை?
          திருக்குறள் – இன்னா செய்யாமை – குறள்  எண் 315
உனகென்னடா சிறப்பறிவு இருக்கிறது? மற்ற உயிர்கள் படும் துன்பத்தை நீ படுவதாக நினைக்காவிட்டால் என்னடா உனக்கு ஆறறிவு? என்று கேட்டான். இங்கே நமக்கு அந்த அறிவு வேண்டுமே? என்று கேட்டான்
     இது போன்ற காட்சிகளை காணும்போது, உடலில் இயல்பாகவே ஒரு நடுக்கம் இருக்கும். இதை ரசிக்கிற அறிவு இருக்காது.
அதுபோன்ற கொடுமையை கண்டு ரசிப்பான். அதுபோல் சூல் ஆட்டின் வயிற்றைக் கிழித்து அதன் குட்டியை துடிக்கத் துடிக்க வயிற்றில் கத்தியை வைத்து பூஜை செய்வதை கண்டு ரசிப்பான்.
நிச்சயம் அவனுக்கு ஆறறிவு இருக்கிறது என்பதற்கு என்ன நியாயம்? சரிய்யா என்ன செய்வது முன்னோர்கள் செய்திருக்கிறார்களே என்பான்.
முன்னோர்கள் செய்திருக்கலாம், நீ செய்யாமல் தப்பித்துக்கொள் என்று சொல்வோம். இதை ஆசான் இராமலிங்கசுவாமிகள் சொல்வார்,
நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
இதையெல்லாம் கடவுள்தன்மை அடைந்தவர் பேசுகிறார். ஆசான் திருவள்ளுவர் கடவுள்தன்மை அடைந்தவர்தான், மரணமிலாபெருவாழ்வு பெற்றவர்கள். அப்பேர்ப்பட்ட முதுபெரும் தலைவன் ஆசான் திருவள்ளுவப்பெருமான்.
ஆசான் திருவள்ளுவரை அழைத்து அருள்செய்ய வேண்டுமென்று வேண்டினால் அக்கணமே வந்து அருள் செய்வார். அப்பேர்ப்பட்ட ஆசான் வள்ளுவப்பெருமானும் அதைச் சொல்லுகிறார். மகான் இராமலிங்க சுவாமிகள், அருட்பிரகாச வள்ளலார் என்ற பெருமைக்குரிய பட்டம் பெற்றவர். அருட்பிரகாச வள்ளலார் – அருள் பிரகாச ஒளி பொருந்திய அருள் பெற்ற வள்ளலார் எண்று சொல்வார்கள். அப்பேர்ப்பட்ட ஆசான் சொல்கிறார்.
துண்ணெனக் கொடியோர் பிறவுயிர்
கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர்
பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும்
கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்
எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய
நடுக்கம் எந்தைனின் திருவுளம் அறியும்.
          திருஅருட்பா ஆறாம்திருமுறை – பிள்ளைப் பெரு விண்ணப்பம் – கவி எண் 276
துண்ணெனக்கொடியோர் எடுத்தவுடனெயே அந்த வார்த்தையைச் சொல்கிறார். இப்படி சூல் ஆட்டை வயிற்றைக் கிழித்து குட்டி எடுக்கும் போது அவர் பார்த்து விட்டால் அப்படியே தொலைந்தே போச்சு! ஓர் ஆட்டை வெட்டுகின்ற காட்சியை பார்த்தால், மூன்று நாளைக்கு சாப்பிடமாட்டார்.
     துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன் – அவன் என்ன செய்தான், நாலைந்து ஆட்டை விலை பேசினான். அப்படி விலை பேசி அந்த ஆட்டை வெட்ட கழுத்தில் வைக்கும்போது லேசாக அப்படி ஒரு தட்டு தட்டினான். அது அப்படியே தலை விழுந்த்து. அதை அவன் ரசித்தான்.
என்னுடைய சிந்தனையை நீர்தான் அறிவாய் என்றார். ஏனய்யா அப்படி சொன்னீர் என்றால், நான் உங்களுக்காகத்தான் சொன்னேன் என்பார். எத்தனையோ சான்றோர் வரப்போகிறார்கள் பிற்காலத்தில், அவர்களுக்காக சொல்லியிருக்கிறேன். நீ என்னை கேள்வி கேட்டால் அதற்கு நான் பதில் சொல்ல மாட்டேன். இப்படியெல்லாம் சொல்லலாமா என்றால், நான் உனக்காகவா சொல்லியிருக்கிறேன். என்னுடைய பிள்ளைகள் இருக்கிறார்கள். எனக்கு தொண்டு செய்பவனெல்லாம் வரப்போகிறான் பிற்காலத்தில், அவன் வந்துகொண்டே இருப்பான்.
அவரவர்கள் ஜென்மத்தைக் கடைதேற்ற வருவார்கள். இதை அவர்களுக்காகத்தான் எழுதி வைத்திருக்கிறேன். அவன் வந்து பார்த்து ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புவான். அதற்காகத்தான் எழுதி வைத்திருக்கிறேன். திருக்குறளை எழுதியது, பல நூல்களை எழுதியதன் நோக்கம் பிற்காலத்தில் சான்றோர்கள் படித்து அறிந்து கொள்வார்கள். அகிம்சா வாதிகள், சாதுக்கள் ஞானிகள் வருவார்கள். அவர்களுக்காகத்தான் எழுதி வைத்திருக்கிறார்கள். மேலும் உங்களுக்காகவும் எழுதி வைத்திருக்கிறேன் என்று சொல்வார்கள்.
     நலிதரு சிறிய தெய்வம் – என்னய்யா ஆடு வெட்டுகிறாயே பாவம் என்று சொன்னால், முன்னோர்கள் செய்தார்களே என்று சொல்வான். முன்னோர்கள் அப்படி செய்திருக்கிறார்கள். நாங்கள் அதை செய்தோம் என்று சொல்வான். அதைச் சொல்வார்.
    
நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
இந்த ஆண்டு கிடா வெட்டு நடக்காவிட்டால் எங்கள் குடும்பத்திற்கு இடையூறு வரும். அதனால் அதை நான் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டிருக்கிறேன் என்பான்.
நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள்
நான் என்ன செய்வேன். என் முன்னோர்கள் என் குலதெய்வதிற்கு வேண்டுதல் செய்திருக்கிறார்கள். அவர்கள் ஆண்டு தோறும் ஆடு, பன்றி, கோழி மூன்றையும் வெட்டி பூஜை செய்திருக்கிறார்கள். இதை நான் செய்யாவிட்டால் எனக்கு இடையூறு வரும். ஆகவே செய்கிறேன் என்று சொல்வான்.
     அவர்களுக்கு கல்வி அறிவு இல்லாததனாலும், சாது சங்கத் தொடர்பு இல்லாததனாலும் அவன் இவற்றை ஏற்றுக் கொள்வான். சாது சங்கத் தொடர்பு இருந்தால் நிச்சயம் இதை ஏற்றுக் கொள்ளமாட்டான். ஆக சமுதாயத்தில் ஞானிகள் இப்படியெல்லாம் சொல்லிவைத்த நோக்கம், சாது சங்கத்தை விரும்பினால், ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்பினால், தொண்ணூறு நூறு வயதுவரை நோய் நொடியில்லாமல், திட சிந்தையோடும், ஞாபக சக்தியோடும், கட்டிலில் கிடந்து தடுமாறாமலும் நல்லபடியாக வாழலாம். இப்படி வாழ வேண்டுமென்றால் என் நாமத்தை சொல். இல்லையென்றால் உன் இஷ்டம் என்று சொல்வார்கள்.
     ஆக இப்படியெல்லாம் ஞானிகள் சொல்கின்ற நோக்கம், ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும் என்பதற்காக. இந்த அறிவு வேண்டுமே. எப்பொழுது இந்த அறிவு வருமென்றால், ஞானிகளை வணங்க வணங்கத்தான் வரும். நமக்கு நல்லது கெட்டது தெரியாது. நன்மை தீமை தெரியாததனால் நாம் இதை செய்து கொண்டே இருக்கிறோம். அவர்களெல்லாம் நன்மை தீமை தெரிந்தவர்கள். இருவினை வென்றவர்கள் ஞானிகள்.
     ஞானிகள் அத்தனை பேரும், ஆசான் வள்ளுவப்பெருமான், மகான் இராமலிங்க சுவாமிகள், மகான் மாணிக்க வாசகர், மகான் அருணகிரிநாதர், மகான் பட்டினத்தார் இவர்களெல்லாம் பெரிய பெரிய ஞானிகள். ஞானிகளெல்லாம் சுத்த சைவர்கள். சுத்த சைவம் என்றால், புலால் உண்ணாமல் இருப்பது மட்டுமல்ல. புலால் மறுப்பது மட்டும் ஒரு பெருமைக்குரியதல்ல. அதுவும் நியாயம்தான். ஓர் அளவிற்கு நல்லதுதான்.
     புலால் உண்ணுகின்ற பழக்கத்தை நிறுத்த வேண்டுமா?
     ஆசானை நினைத்துக் கொள்ளைய்யா. இந்த பாவத்திலிருந்து விடுபட அருள் செய்யப்பா என்று கேட்டுக்கொள்ளய்யா! காலப்போக்கில் அதை மாற்றிக் கொள்ளலாம்.
     அந்த ஆசை மனதில் இருக்கும்போது நீ அதை நிறுத்த முடியாது. ஆசான் அகத்தீசரை  மனதில் நினைத்துக் கொண்டு, சாப்பிடும் போதெல்லாம் ஆசானை மனதில் நினைத்துக் கொள். காலப்போக்கில் சரியாகிவிடும் என்று சொல்வார்கள்.
     எடுத்தவுடனேயே புலால் சாப்பிடக்கூடாது, மாமிசம் சாப்பிடக்கூடாது என்றால் அவனால் செயல்பட முடியாது. அதே சமயத்தில் நோய்வாய்ப்பட்டவன் சாப்பிடுகின்றானே, அதெல்லாம் பார்த்து அப்படி ஒரு முடிவு எடுக்கக் கூடாது.
     நீ பூஜை செய்யச் செய்ய பழக்கங்கள் தானே விடுபடும். இதை இடையில் நீ நிறுத்தினால் மனம் சோர்வடையும். மருத்துவர் உஷ்ணமான சில ஊசி போடுவார்கள். அதற்கு முட்டை சேர்க்க வேண்டுமென்பான், நோய் நிவர்த்திக்காக என்பான்.
     ஆக கடைசி முடிவு ஆசான் திருவடியைப் பற்ற வேண்டும். ஆசான் திருவடியைப் பற்றினால் எல்லா வகையான தீய குணப்பழக்கமும், குடிப்பழக்கம், சூதாடுதல் எந்தப் பழக்கமாக இருந்தாலும், புலால் உண்ணுதல் அது போன்றதெல்லாம் நீங்கிப் போகும். அதை ஆசானே பார்த்து சொல்லணும். இயல்பாகவே கசந்து போகவேண்டும். நாம் அதை நீக்க முடியாது.
    
     சிலர் வெளிநாடுகளிலிருந்து வருவார்கள். எந்த நாட்டில் இருந்து வந்தாலும் இதை சொல்லணும். ஆக எந்த நாட்டில் இருந்தாலும் இதை வலியுறுத்த வேண்டும்.
     மதுவுக்கு அடிமைப்பட்டு விட்டேனய்யா, நான் என்ன செய்வது என்பார்கள். ஒன்றும் சொல்ல வேண்டாம். மதுவை பக்கத்தில் வைத்துக்கொள், ஆசானைக் கூப்பிடு! இந்த பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென்று கேட்டுக்கொள். ஆசானாக பார்த்து அதை கசக்கச் செய்ய வேண்டும். இல்லையென்றால் நீ தடுமாறிப்போய் விடுவாய்.
     ஆகவே புலால் உண்ணுகின்ற மக்களும் இப்படித்தான் என்னிடம் வருவார்கள். “என்னால் முடியவில்லை ஐயா! சரி, பழக்க்ம்தான்! சாப்பிட்டாய் அல்லவா, இனி ஆசானைக் கேட்டு நிறுத்திக்கொள் என்போம். நாங்கள் மூர்க்கத்தன்மாக பேச மாட்டோம்.
     அவரவர்கள் போக்கிலேயே சென்றுதான் சரி செய்ய முடியுமே தவர, வேறு ஒன்றும் செய்ய முடியாது. ஆக ஒரு தத்துவத்தை நாம் சொல்லும் போது அவர்கள் விரும்புகின்ற அளவிற்கு சொல்ல வேண்டுமே தவிர, வேறு ஒன்றும் கருத்துக்களை திணிக்கக் கூடாது.
     சிலபேர் புலால் சாப்பிடுகிறார்கள். அவர்கள் எந்த மதத்தவர்களாகவும் இருக்கலாம். ஆனால் தயை சிந்தை இருக்க வேண்டும். ஆக நல்ல பண்புகள் வரும்வரையில் இந்த பழக்கங்கள் நம்மை விட்டுப் போகாது. சரிய்யா, ஆசானின் அருள் இருந்தது என்றால் எல்லாவற்றையும் தூள் தூள்படுத்திவிட்டுப் போகலாம். அப்போதுதான் சுத்த சைவன் ஆகலாம். சுத்த சைவன் ஆவது என்பது சின்ன விசயம் அல்ல.
     சுத்த சைவன் என்றால் அது சுத்தமாக உப்பில்லா உணவுதான். வெறும் பால் பழங்கள், காய்கறிகள் சாப்பிடலாம். இதற்கு ஆசான் வாய்ப்பு தர வேண்டும். அதுவரையிலும் ஏதேதோ உணவு சாப்பிட்டு இருக்கலாம். பிறகு எல்லாம் சரியாகும்.
     ஆக இறைவழிபாடு என்ற பெயரில், புலால் உண்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். புலால் உணவு சாப்பிடுகிறார்கள். என்னய்யா செய்வது என்று என்னிடம் கேட்கும்போது, ஒன்றும் செய்ய முடியாது. ஆசான் மனம் இரங்கி, அருள் செய்யும் வரை பொறுத்திரு. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்வேன்.
     எந்த பழக்கமானாலும், தலைவன் ஆசியில்லாமல் விட முடியாது. தலைவன் ஆசி பெற்றால் தானே அந்த பழக்கம் கசந்து போகும். இதுதான் அமைப்பு. ஆக இதுதான் நடைமுறை கருத்து. விஜயதசமி என்பதற்கு அர்த்தம், விஜயம் செய்தாள், வந்தாள் என்று அர்த்தம்.
     தசமி என்பது இடகலையையும் பிங்கலையையும் சேர்ப்பது. அது அகார உகாரத்தை பொருந்தச் செய்வது. அப்ப என்ன ஆகும்? உடம்பினுள் ஒரு அக்கினி ஏற்படும். இந்த உடம்பு அக்கினிமயமானால், அதற்கு காளி என்று பெயர். இந்த உடம்பே காளி. அதைதான், ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில் என்றார். அமர் என்றால் போர். அங்கே ஒரு போர்க்களம். உடம்புள்ளே ஏற்படும். உடம்பு என்ற அசுரனை அக்கினி கொன்று விடும், தளர்த்திவிடும்.
    
     கண்ணபிரான் என்பது விஷ்ணு. அவர் ஞானி. தீபாவளிப்பண்டிகை போதுதான் அவர் வாசி வசப்பட்டு அமிழ்தபானம் உண்டார்.
     அமிழ்தபானம் சாப்பிட சாப்பிட சாப்பிட பசி அற்றுப்போகும். பசி அற்றுப்போனால் காமம் அற்றுப்போகும், மும்மலம் அற்றுப்போகும்.
     மும்மலம் என்று சொல்லப்பட்ட விஷ்ணுபகவான் அசுரனை வதைத்த நாள். விஷ்ணுபகவான் ஆசான் ஞானபண்டிதனுடைய ஆசி பெற்றவர். அவருக்குத்தான் அங்கங்கே கோவில் கட்டியிருப்பார்கள்.
     அவருக்கு வாசி வசப்பட்டு, அமிழ்தபானம் சாப்பிட்டு மலம் அற்ற நாளைத்தான் நாம் தீபாவளியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். விஷ்ணுபகவான் அசுரனை வதைத்தார். உடம்பு என்று சொல்லப்பட்ட அசுரனை கொன்ற நாள்.
     அசுரன் என்னை எல்லோரும் நினைக்க வேண்டும் என்று விஷ்ணுபகவானிடம் கேட்டான். அதனால் அசுரனை வணங்குவதுபோன்று அமைப்பு செய்திருக்கிறார்கள்.
     விஷ்ணுபகவான் எல்லாம் பெரியவர்கள். திருமால் பெருமைக்குரிய ஆசான். பெருமைக்குரிய ஆசான் விஷ்ணு, கிருஷ்ணன் என்று அழைக்கப்படுகின்ற திருமாலுடைய ஆசியை பெற்றுக்கொள்ளவேண்டும். அவரும் ஞானிதான். பிரம்மாவும் ஞானிதான்.
     குருவே சிவமென்று கூறினன் நந்தி, சிவனே சிவஞானி ஆதலால் என்றும் மகான் திருமூலர் சொல்லியிருக்கிறார். ஆக மனித வர்க்கம் முன்னேற வேண்டுமென்று சொன்னால், இது போன்ற கருத்துக்களை வெளியே சொல்ல வேண்டும். இப்போது நாம் வெளியே சொல்கிறோம். என்னய்யா, சரஸ்வதி பூஜை பற்றி உங்கள் கருத்து என்ன என்றால், எனக்கென்னய்யா தெரியும், நீங்கள் சொல்வதை நாங்கள் செய்வோம் என்று சொல்லிவிடுவோம்.
     அதே சமயத்தில் சரஸ்வதி பூஜை செய்தால், அங்கே போய் வணங்கிக் கொள்வோம். எதையும் கேட்டால்தான் சொல்லணும். இல்லையென்றால் சொல்லக் கூடாது. எந்த கருத்துகளையும் சமுதாயத்தில் திணிக்க கூடாது. அவரவர் கருத்துப்படி போக்கொண்டிருக்க வேண்டுமே தவிர நாம் குறுக்கே புகுந்து ஒரு கருத்தை சொல்லக் கூடாது.
     ஆடு கோழி வெட்டக் கூடாது என்று சொன்னால் பிரச்சனை வரும் அவன் செய்கிறான். நமக்கு நட்டமா? எனக்கு தெரியாது சாமி, ஆளை விடு என்று சொல்லணும். அவரவர் கொள்கைப்படி போக வேண்டும். ஒருவன் முன்பு புண்ணியம் செய்து ஏதோ கொஞ்சம் புண்ணியபலம் இருந்தால் வருவான். என்னய்யா நான் செய்வது என்று கேட்டால், ஆசான் அகத்தீசரை வணங்கு. ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள் என்று சொல்லலாம். அவர்களிடம் போய் நாமே ஒரு கருத்தை திணிக்க வாய்ப்பில்லை. இது போன்ற கருத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும். இதை இங்கேதான் பேசுகிறோமே தவிர வெளியில் போய் பேசமாட்டோம்.
    
                விஜயதசமி. தசமி என்பது அகாரஉகாரம் பொருந்தச் செய்தல். அதனால் கல்வி வரும், சரஸ்வதி பூஜை. பிறகு துர்க்காஎன்ற உடம்பாக மாறுவாள். உடம்புஎன்று சொல்லப்பட்ட சக்தி காளியாக மாறுவாள். பிறகு அசுரனாகிய உடம்பை, அசுரனாகிய மும்மலத்தைவதம் செய்வாள். இதுதான் அதில் இருக்கும்அர்த்தம்.
ஓம் அகத்திசாய நம

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0181552
Visit Today : 72
Total Visit : 181552

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories