இந்த சங்கம் ஒருத்தனை மடையன் ஆக்காது. இந்த யோகம் இப்படி செய், அந்த யோகம் அப்படி செய்னு நாங்க அதெல்லாம் சொல்லமாட்டோம்ஓம் அகத்தீசயா நம…….

இந்த சங்கம் காட்டுகின்ற பாதை தெளிவான பாதை. சிக்கலே இருக்காது. எந்த பிரச்சனையும், ஒரு மனுஷனை மடையன் ஆக்காது. இந்த சங்கம் ஒருத்தனை மடையன் ஆக்காது. இந்த யோகம் இப்படி செய், அந்த யோகம் அப்படி செய்னு நாங்க அதெல்லாம் சொல்லமாட்டோம். ஏய் யோகம் என்பது கடைசியா. சரிகை, கிரிகை, யோகம் மூன்றாவது படி. குடும்பஸ்தன் ஏன் யோகா செய்யுறனு கேப்போம்? சரி வெகுபேர் சொல்லி தரானே, இராஜயோகம்னு சொல்லி தரானே. இராஜயோகம்! எதுக்குயா சொல்லி தர? ஜனத்தொகை அதிகம் இருக்குடா. அவனலாம் ஊருக்கு அனுப்ப. உடனே சாகமாட்டானே! அதான் எங்களுக்கு தெரியுமே! ஒருவன் பிராணயாமம், ஆயிரத்து ஐநூறு ரூபாய் வாங்கிட்டான். மூச்சை இப்படி கட்டுன்னு சொல்றான். கட்டுறான். கட்டுன உடனே மலச்சிக்கல் வந்துடுச்சி. ஒரு வருஷம் ஆகும் சாகுறதுக்கு அவன். இந்த யோகா, தேகபயிற்சி இல்லை. அது யார் வேண்டுமானாலும் செயாலாம். தேகபயிர்ச்சி என்பது உடலை காப்பாற்றி கொள்ள. யோகம் என்று ஒன்று இருக்கு. இந்த மூச்சிகாற்றை கட்டுவது. மூச்சி காற்றை கட்டினால், முதலில் மலச்சிக்கல் வரும். அவன் சொல்லுவான் என்னையா வயிறு ஒரு மாதிரி இருக்கு. துன்பம் வரதான் செய்யும் விடாதே பிடி என்பான். வரதான் செய்யும், சோதனை வரதான் செய்யும். ஏன்டா யோகிகளுக்குடா வருவது. ஏன்டா இல்லறத்தானை போய் யோகா செய்ய சொல்றியே? காமக்கனல், யோகக்கனல் சேர்ந்தா என்ன ஆகும்? மக்கள் தொகை பெருகிபோச்சி போடான்னு சொல்லுவான். ஆயிரம் ரரூபாய் வாங்கிட்டேன் ஏதோ போறான். ஆக, யோகா சொல்லி தரான்னு சொன்னா மக்கள் தொகையை குறைக்க போறான்னு அர்த்தம். நாங்க சொல்லிதரமட்டோம். ஏய், மாசம் ஒருத்தருக்கு அன்னதானம் செய்யப்பா, காலை மாலை அகத்தீசனை வணங்கு. இதுதான் உன்னை காப்பாத்தும். அதை விட்டுட்டு யோகா செஞ்சனா செத்து தொலஞ்சிடுவடா. அப்போ அவர் சொல்லி தராரே? அப்படியா? இன்னும் ஒரு மூணு மாசம் கழிச்சி வானு சொன்னேன். வந்தாரு. வயிறெல்லாம் உப்பி இருக்குனு சொன்னாரு என்ன காரணம்? மலச்சிக்கல், ஜீரணம் ஆகல. ஜீரணம் ஆகாது அது. இந்த யோகா செய்யுறவன், மூச்சை கட்டுரவனுக்கு ஜீரணம் ஆகாது; குடல் புண் வரும். ஆக, ஆறு மாசம் அல்லது ஒரு வருஷம்தான் இருப்பான். அவன்  ஊருக்கு போய்டுவான். அப்புறம் இன்னொருத்தன் வருவான். ஒவ்வொருத்தனா ஊருக்கு அனுப்பிகிட்டே இருப்பான். மக்கள் தொகை நூற்றுபத்து கோடி ஆய்டுச்சி போகட்டும் ஐயா. எனக்கு பணம் கொடுக்குறான் அவன் போறான். ஆக, யோகம் என்று ஒன்று இருக்கு. ஆனால், யோகிகளுக்கு மட்டும்தான் அது. நாங்க பிராணயாமம் செஞ்சோம். ஆனால், நாங்க செய்யுற பிராணயாமத்துக்கு ஒரு முறை இருந்துச்சி. பச்சரிசி, பாசிபயிறு, பழங்கள், சக்கரை, பசு நெய் சேத்தோம். இவன் வெறும் உடம்பை வச்சிக்கிட்டு யோகம் செஞ்சா செத்துடுவான். யோகம் என்பது உண்டு. யாரும் மறுக்க முடியாது. ஆனால், எல்லோரும் செய்யகூடாது. அது இல்லறத்தான் செய்யவே கூடாது. காமக்கனல், யோகக்கனல், பசிக்கனல் இந்த மூன்றும் ஒன்றாகிடும். ஆக, இல்லறத்தான் யோகம் செய்யக்கூடாது. யோகிகள் மட்டும்தான் செய்யணும். ஆக, எல்லாரும் செய்யுரானா அது அவனவன் வினை பயன். ஆக, மனுஷன் முன்னேறனும்னு நினைக்கிறான். அடேய் இது கடினமான ஒன்று. அதற்கு இளம் வயசு இருக்கணும். இளம் வயசுலேயே யோகம் செய்யணும். இப்போ நான் கூட காலம் தாழ்த்திதான் செஞ்சேன்.
“காலம் கழிந்து காயம் நெகிழ்ந்து
தோளும்துருத்தியும் நாடிநரம்பு துவண்ட பின்பு
சாலவும் கற்பம்சாராது சார்ந்தும் சத்திலைகாண்
வாலிப பருவம்எய்திடும் காலத்தில் கற்பம்வசப்படுமே”  
ஆக, எனக்கும் இவ்வளவு தாமதம். ஏன்யா எனக்கு வாசி நடத்தி கொடுக்கலனு சொன்னா, டேய் நீ உடனே முன்னேறிட்டா, உடனே முன்னேறினால் மக்களுக்கு சொல்ல ஆளில்லை. அதற்காக உன்னை நிருத்தி வச்சிருக்கோம். இப்போ நான் பேசக்கூடாது. இப்போ நான் இருக்க வேண்டிய இடம் வேறு. தனியா இருக்கணும். ஆக, உலக மக்களுக்காகதான் என்னை அனுப்பியிருக்கிறார் முருகப்பெருமான். எனக்கு வாசி நடத்தி கொடுத்தது உண்மைதான். இப்போ பேசிக்கிட்டுதான் இருக்கிறார். ஆனால், விரைவா என்னை முன்வராம தடுத்தது ஆசான்தான். ஆக, உலகமக்கள் நன்மைக்காக என்னை அனுப்பியிருக்காங்க. எனக்கு கோடி கணக்கா கொடுத்தாலும் சரி தொடமாட்டேன் அதை. எனக்கு ஜாதி துவேசம் இல்லை. தொண்டனை மதிக்க கூடியவன் நான். யார் பொருளுதவி செய்தாலும் சரி, அவன் திருவடியை வணங்குகின்றவன். இந்த சங்கத்திற்கு உள்நாட்டு அன்பர்கள், வெளிநாட்டு அன்பர்கள் தொண்டு செய்கிறார்கள், பொருள் உதவி செய்கிறார்கள், அவர்கள் திருவடியை வணங்குகிறேன். இந்த பணிவு எங்கு இருக்கும்? இந்த துறைக்கே உரியது அது. தொண்டனை வணங்குகின்றேன் என்று சொல்லுவது ஓங்காரகுடில்தான். அவன் சாகப்பிரந்தவன். நாங்க அப்படி சொல்லமாட்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0174014
Visit Today : 257
Total Visit : 174014

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories