மக்களே உங்களால் இவ்வளவு பெரிய நூல்களை படிக்க முடியாது. அறிய பெரிய நூல்களைபடிப்பதற்கு நேரம் இல்லை. அப்படியே படிச்சாலும் உங்களுக்கு புரியாது. கற்றுனந்தர்வர்சொல்லுவதை கேட்டு தெரிந்துகொள்

எதற்குயா செவி இருக்கு?
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
திருக்குறள் – 411
ஐம்புலன் இருக்கு. உடம்புல எல்லா கருவிகளும் இருக்கு. இந்த கருவிகளுக்கு சொல்லவே இல்லை. கண்கள் மிக முக்கியம். ஆனால், காதுகள் மட்டும் இந்த வார்த்தை சொல்லுவாங்க. மூக்கு நல்ல வாசனை அறியும். வாயிலே சிறந்த வாய் என்று சொல்லமாட்டான். பெரியோர்கள் அவர் திருவாய் மலர்ந்தருளினார். அந்த வாய் வேற இந்த வாய் வேற. ஆக, செவிக்கு மட்டும் தனி தன்மை கொடுக்க தனி காரணம் என்ன என்றால் கற்கவில்லை என்றாலும் பரவாயில்லை.
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை
                                         திருக்குறள் – 414
கல்வியே அவசியமில்லை என்றான். இங்கே
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
                    திருக்குறள் – 411
தலைச்சிறந்த செல்வம். உடம்பிலே ஐம்புலன்கள், ஐம்புலன்களிலே சிறந்த செல்வமாய் இருப்பது செவிச்செல்வம் காது. அந்த காதால் எதையும் கேட்கலாம். சில காது நன்மையே கேட்கும், நற்செய்தியே கேட்கும். சில காது தீய செய்தியே கேட்கும். சில காது எதையும் கேட்காது. அது என்ன காதுனா செவுட்டு காது. அடுத்து என்ன சொல்றான் இப்போ?
“செல்வத்துள் செல்வம் அச்செல்வம்” அந்த செல்வத்தை எப்படி பயன்படுத்துவது? ஏன்யா, செவி செல்வத்தை இவ்வளவு புகந்து பேசுற? இது மூலமாக பிறவி பிணிக்கு மருந்தாகும். செவியால் கேட்டே ஒருவன் பிறவி பிணிக்கு மருந்து சம்பாரிச்சிக்கலாம். செவியால் கேட்டே பிறவி பிணியை நீக்கி கொள்ளலாம் என்பது வள்ளுவன் கருத்து. இதுக்கு முன்னாடி அப்படிதான் இருந்துச்சி. அந்த காலத்து கொங்கன மகரிஷி, திருமூலர் காலத்துலலாம் கல்வி அதிகம் இருக்காது. திருமூலருக்கு மட்டும், திருமூலருக்கு கிட்டத்தட்ட ஏழு நூறு, எண்ணூறு சீடர்கள். சட்டமுனிக்கும் அப்படிதான். கொங்கனமகரிஷிக்கு கிட்டதட்ட 517 பேர். பெண்கள் அதுல ஒரு 1520 பேர். பெண்கள் உள்பட 1017 பேர். ஆக, இவ்வளவு கல்வி இருக்காது. ஒரு சிலர் படிச்சிருப்பார், சிலர் படித்திருக்க மாட்டார். அவ்வளவு பேரையும் ஞானியாக்கும் தன்மை கொங்கனமகரிஷிக்கு, திருமூலர்க்கு உண்டு. கொங்கனமகரிஷி அதிகமாக தொண்டர்களை உருவாக்கினார். என்னையா ஏன் படிக்கலையா, ஒன்னும் கவலை படாதம்மா. நிறைய பெண்கள் இருப்பாங்க. எல்லாம் அவங்களுக்கு பிள்ளைகள்தானே. வாமா என்ன? ஐயா, நான் படிக்கல ஐயா. அது வெட்டிவேலை. வாமா இங்க, ஓம் அகத்தீசானு சொல்லு, ஓம் நந்தீசானு சொல்லு, திருமூலதேவானு சொல்லு, காலாங்கினாதானு சொல்லு. எனது ஆசான் போகமகரிஷி என்று சொல். எது வாய்க்கு வருதோ அதை சொல் என்பார். அவன் முன்னேரறான். படிச்சவன் எந்த நூல்ல என்ன இருக்குனு படிச்சிட்டு இருப்பான். கைநாட்டு கேட்டு, கேள்விச்செல்வம் வள்ளுவன் ஏன் சொன்னானா? இந்த செல்வம் தலைச்சிறந்த செல்வம் என்று சொன்னதன் நோக்கம், கைநாட்டும் கல்வியே இல்லாதவர்களும் கடவுள் தன்மை அடையலாம் என்பதற்காகதான் வள்ளுவன்
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
                 திருக்குறள் – 411

அப்போ வள்ளுவப்பெருமான் இந்த அதிகாரத்தை ஏன் வைத்தார்? மக்களே உங்களால் இவ்வளவு பெரிய நூல்களை படிக்க முடியாது. அறிய பெரிய நூல்களை படிப்பதற்கு நேரம் இல்லை. அப்படியே படிச்சாலும் உங்களுக்கு புரியாது. கற்றுனந்தர்வர் சொல்லுவதை கேட்டு தெரிந்துகொள். கற்றுனன்தவர் சொன்னால் அதை கேட்டு ஜென்மத்தை கடைத்தேரிகொள்ள வேண்டும் என்பதுதான் அந்த அதிகாரத்தின் சாரம். அப்போ அந்த செல்வத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0208099
Visit Today : 191
Total Visit : 208099

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories