புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம், என்றாலும் சாகாத கல்வியே கல்வி, சொன்னது யார் தெரியுமா ஔவையார், முதுபெரும் ஞானி, அரும் தவம் செய்தவர், ஔவையார் ஏன் இதெல்லாம் சொல்ல வேண்டும் என்றால், பிற்கால சந்ததிகளுக்கு சாகாத வாய்ப்பு இருக்குதையா, மரணமில்லா பெருவாழ்வு இருந்தாலும், உங்க புத்தி என்னதோ காரணம் தெரியல, ஒரு பத்து நிமிஷம் தியானம் செய்வீங்க, உடனே பெரும் வல்லமை வேண்டும், அது வேண்டும் இது வேண்டும், நினைப்போம், அவன் (அகதீசன்) பார்ப்பான், கிட்டத்தட்ட பல ஆண்டுகள் பாடுபட வேண்டும், பல ஆண்டுகள் பாடுபட்டு பெற வேண்டியதை ரெண்டு வருஷம் மூணு வருஷம் நாலு வருஷம், ஐந்து வருஷம் பூஜை செய்து உடனே பெற நினைக்கின்றான், அவசர படுகின்றான், ஆக இந்த அவசர படாமல் இருக்க வேண்டும், அதற்க்கு கேட்க வேண்டும், நான் விரைவாக கடவுளை அடைய நினைக்கின்றேன், அது போன்ற பலஹீனங்கள் எனக்கு இருக்க கூடாது, அப்படி ஆசானை (அகதீசனை) கேட்க வேண்டும், ஆக தொடர்ந்து பூஜை செய்து வந்ததால் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும், வாசி வசப்படும், மூச்சுக்காற்று லயப்படாமல் மரணத்தை வெல்ல முடியாது
ஓங்கார குடில் ஆசான், பரமானந்த, சதாசிவ, சற்குரு, தவத்திரு அரங்கமஹா தேசிகர் அருளுரைகள்