பசித்தபின் சாப்பிட வேண்டும். பழைய உணவு வயிற்றில் இருக்கும்போது சாப்பிட்டால் அது நோய் தரும்

பசித்தபின் சாப்பிட வேண்டும். பழைய உணவு வயிற்றில் இருக்கும்போது சாப்பிட்டால் அது நோய் தரும்.
அதுவும் கொடிய பழக்கம் புலால் உண்பார்கள். அது வயிற்றில் பழைய உணவு இருக்கும். மறுபடியும் உணவு சாப்பிடுவான். அதைப்போல் நோய் தரும் கொடுமை இருக்காது. அவ்வளவு நச்சுக் கிருமி உருவாகிவிடும். ஆகவே புலால் உண்ணும் மக்களுக்குச் சொல்கிறோம். புலால் உணவு சாப்பிட்டால் நன்றாக பசித்தபின் அடுத்த வேளை சாப்பிட வேண்டும். பழைய உணவு வயிற்றில் இருக்கும்போது சாப்பிடுகின்ற மக்கள் நிச்சயம் நோய்வாய்ப்படுவார்கள். அவர்களுடைய வாழ்க்கை அப்படித்தான் அமையும். ஆக அளந்து சாப்பிட வேண்டும். முறையோடு சாப்பிட வேண்டும்.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

      -திருக்குறள்-மருந்து-குறள் எண் 945
என்று வள்ளுவன் சொல்வான்.  மாறுபாடு என்றால் தவத்திற்கு எந்த உணவு, இப்ப எங்களுக்கெல்லாம் உப்பில்லா உணவுதான். நாங்கள் அதைத்தான் சாப்பிடணும். மாறுபாடு இல்லா உண்டி மறுத்துண்ணின் என்று சொன்னான். உண்ணின் என்று சொல்லாமல் மறுத்துண்ணின் என்று சொன்னான். பசித்தபின் சாப்பிட வேண்டும். யாராக இருந்தாலும் சரி, இல்லறத்தானாக இருந்தாலும் சரி எந்த உணவாக இருந்தாலும் சரி, சைவமாக இருந்தாலும் சரி அசைவமாக இருந்தாலும் சரி, எந்த உணவாக இருந்தாலும் சரி, பசித்த பின் சாப்பிடுகின்ற மக்களுக்கு நீடிய ஆயுள் கிடைக்கும். இல்லையென்றால் நோய்வாய்ப்படுவார்கள். ஆக எந்த உணவு நமக்கு சாதகமாக இருக்கிறதோ, எது நமக்கு நித்தம் நித்தம் சாப்பிட்டால் பசிக்கிறதோ, அதைத்தான் சாப்பிடணும். அப்படி செய்யவில்லையென்றால் வாழ்க்கை வீணாகப்போகும். அப்ப ஏன் இப்படி? முதலில் உணவில் கட்டுப்பாடு வேண்டும். உணவில் கட்டுப்பாடு இல்லாமல் கண்டபடி சாப்பிட்டால், உடம்பு வீணாகப்போகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0201641
Visit Today : 605
Total Visit : 201641

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories