தை (ஜனவரி – 2012) #ஞானத்திருவடி நூல் January 2012 gnanathiruvadi text

1 அகத்தியர் துணை ஞானத்திருவடி
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை
கர 􀁄􀀂தை (ஜனவரி – 2012) விலை: ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு ………………………………….. 3
2. மகான் அகத்தீசர் ஆசி நூல் ………………………………………. 8
3. உண்மை ஆன்மீகம் என்றால் என்ன
– குருநாதர் அருளுரை ………………………………….. 12
4. ஆத்திச்சூடி – குருநாதர் அருளுரை தொடர் ……………………. 40
5. ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள் ………………….. 55
ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளிடம்
ஆசிபெறும் நேரம்
தினசரி காலை 9.30 முதல் 11 மணி வரை மட்டுமே
2 ஞானத்திருவடி
போதும்போதும் என்று மானிடன் சொல்லுகின்ற
புண்ணியமான அன்னதானம் கடைப்பிடித்தால்
சத்தியமாய் மானிடனும் மகானாவான்
சிறப்புடனே தானம்பல செய்தவர்க்கு
செய்பவர்க்கு நிம்மதியும் நிலைக்க செய்வோம்
சர்வபாவ சங்கடங்கள் அகன்று ஓடும்
தெய்வமெல்லாம் துணைபுரியும் விலகா நின்று
தயவுண்டாகும் உயிர்களிடத்தில் சிவத்தை உணர்வான்
உணர்ந்ததொரு அரங்கராசா உற்றுகேட்பாய்
உனதுதவத்தால் உலகெல்லாம் மானுடம் செழிக்கும்
உயிர்பலிகள் தவிர்த்துவரும் கருணைபிறக்கும்
உயர்கதியும் சிவசிந்தை பேரானந்தமடைவர்
– மகான் அகத்தியர் ஆசிநூல்.
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி
பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக்
கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே
இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம்
தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது
வீட்டில் இருந்து அருள்செய்வதாக எண்ணவேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 35 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில்
கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக
பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து
ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில்
நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த
சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின்
பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு
எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாய்
அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் – இரா.மாதவன்.
திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செய்ய தொடர்புக்கு
சு.சுரேஷ் – 94434 21935
3 ஞானத்திருவடி
துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598
ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று
உலகறியச் செய்யும் வள்ளல்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய
சித்தர்கள் போற்றித் தொகுப்பு
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்திசிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்கசுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20
4 ஞானத்திருவடி
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகைநமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணே°வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
5 ஞானத்திருவடி
ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்பு மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70
ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திரிகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைத் தேவர் திருவடிகள் போற்றி 80
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீ°வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90
6 ஞானத்திருவடி
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிழ்ாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகாரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ம°தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி 121
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
7 ஞானத்திருவடி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131
ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி.
நிறைவுப்பாடல்
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047
மேற்கண்ட 131 சித்தர்கள், மகான்களின் திருவடிகளை தினசரி காலையும்
மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும். சிறப்பறிவு பெற்றவர்களுக்கு
குடும்ப ஒற்றுமை, புத்திர பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள்
பெருகி, மது அருந்துதல், புலால் உண்ணுதல், சூதாடுதல் போன்ற தீவினைகள்
நீங்கிவிடும். மேலும், மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த
ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால், பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து
புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.
ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும்
அறப்பணிகளுக்காக, தமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள்
கே.எ°.கைலாசம், பத்மநாபன், சுபா°, ராமமூர்த்தி,
ரெங்கநாதன், திருமுகம் மற்றும் திருவண்ணாமலை,
பாண்டிச்சேரி, கோவை, பொள்ளாச்சி, செங்கல்பட்டு,
வேதாரண்யம், விருதுநகர், மண்ணச்சநல்லூர், திருச்சி அன்பர்கள் நமது
ஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்
செய்கிறார்கள்.
ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும்
அன்பர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள்
கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமும், நீடிய
ஆயுளும், எல்லா நலமும் வளமும் பெறுவார்கள். மேலும் ஞானமும் சித்திக்கும்
என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.
8 ஞானத்திருவடி
ஞானத்திருவடி நூலிற்கு
மகான் அகத்தியர் அருளிய ஆசிநூல்
சுவடி வாசித்தளித்தவர் ஹ.ளு.துரைகணேசன், செல் : 94439 58639
மகான் அகத்தியர் நாடிஜோதிட நிலையம், தட்டாஞ்சாவடி, புதுச்சேரி.
13.12.2011
1. சதுர்த்தியிலே நாதவிட வாமபூசை
சிவனடியான் தயவேணும் அடியேன் செய்து
மதித்தபடி வரம்தருவாய் வாலையம்மா
மலையரசன் மகளே நீ ஆதி சக்தி
2. சக்தியே உனது திருவடிகள் போற்றி
சாற்றுகிறேன் அகிலம்காக்கும் அரங்கனுக்கு
யுகயுகமாய் பூலோகத்தில் அவதரித்து
உலகோர் வாழ நல்வழிகள் வகுத்தளித்த
3. அளித்திட்ட அரங்கராசா உன்வழியே
அகத்தியன் யான் உலகோரிடம் நூல்வழி பேசி
அளிக்கின்றேன் உபதேசம் நல்கருத்து
அரங்காவுன் வடிவிலே சித்தர்கள் எல்லாம்
4. எல்லோரும் மாந்தர்கட்கு பணிகள் செய்து
எண்ணற்ற குறைகளை தீர்த்துவாரோம்
நல்லதுவாய் நீ பிறந்து தவத்தை நோக்கி
நவகோடி சித்தர்களின் அருளை பெற்றாய்
5. அருள்பெற்று ஆதவனாய் ஒளிரும் உன்னுள்
அற்புத சக்திகளும் நிறைந்திருக்கு
திருமந்திரம் எனதுநாமம் என்றுணர்ந்து
தீவிரமாய் அகத்தீசா அகத்தீசாயென்று
6. என்றுமே உறவறுத்து ஊணுறக்கமற்று
ஏற்றியதவம் இன்றுஉலகை காத்ததப்பா
இனியெவர் இந்தநிலையை அடைவார் உலகில்
ஈசனாய் இருக்கின்றாய் அரங்கராசா
7. அரங்கராசர் தவநிலை மகிமை சொல்வேன்
அறிந்து கொள்வீர் மானிடமே ஞானியின் தவத்தை
இறவாநிலை கண்டஒருவன் அரங்கனாகும்
இருகலையும் வழிநடத்த அறிந்தவன் ரங்கன்
9 ஞானத்திருவடி
8. அறிந்துமே ஆதாரங்கள் இயக்கிபார்த்தான்
ஏற்றிவந்து சுழுமுனையில் இருத்திவைத்து
குற்றமில்லா புலன்கதவை மூடிவைத்து
களங்கமிலா நல்மனதை இதயத்திலும்
9. இதயத்தில் பொறிபுலன்கள் புத்தியைகட்டி
உயிரதுவை உச்சியில் நிறுத்திவைத்து
சதாசிவ நிலையதுவை பலமுறையும்
சிவஞானி அனுபவித்தார் பேரின்பத்தை
10. பேரின்ப நிலையதுவில் உடல் மறந்து
பரமானந்த நிலைகண்ட தருணம் தன்னில்
அரங்கனே வந்துவிடு என்றழைத்தேன்
அகத்தியன்எனை கடுந்தவத்தால் வெற்றிக்கொண்டு
11. கொண்டு மீண்டும் உடலுக்கு சக்தியளித்து
கூடான சரீரத்தில் இயக்கலானார்
வேண்டினாலும் கிட்டாத நிலையை அரங்கா
விட்டுவிட்டாய் என்று நாங்கள் சித்தர்கள் கேட்டோம்
12. கேட்டதற்கு அரங்கமுனி அகத்தீசாஎன்று
கலியுகத்தில் மாந்தர்கட்கு வழிகாட்ட வேண்டும்
தொடருகின்றேன் மானிடஉருவில் எனது பணியை
தவரிசியே துணைபுரிய வேண்டும் வேண்டும்
13. வேண்டிவந்தான் அரங்கராசன் மானிடம் காக்க
வணங்கியே வாழவேண்டும் மாந்தரெல்லாம்
அண்டிவந்து அரங்கனின் அடிபணிந்தால்
அரங்கனின் திருவரமே புண்ணியமாகும்
14. புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை
பார்த்தவர் படித்தவர்கள் பல்லோர் அறிய
எண்ணியவார் செய்திடவே வேண்டும் வேண்டும்
எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள்
15. உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும்
உத்தமன்அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள்
எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார்
ஏற்றமுடன் நற்பண்பு குணம்அறிவும்
10 ஞானத்திருவடி
16. அறிவுபெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால்
அண்டிடா பலதுயரம் விலகிவோடும்
குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு
காலனும் அஞ்சியே விலகி போவான்
17. விலகியபின் அமைதி சிந்தை அருள் நிறைந்து
விரும்பியவார் சித்தர்களும் துணைபுரிவார்
உலகில்இனி அகத்தியன்என் அருளாட்சி நடக்கும்
உணர்த்திடுவாய் அரங்கராசா உன்வழி மாந்தர்
18. மாந்தர்களும் சத்தியத்தை உணர்ந்து வாழ்வார்
மக்கள்எல்லாம் சாதிமத பேதமின்றி
இந்தஉலகில் அரங்கன்காட்டும் நல்வழிபற்றி
இறவாநிலை பிறவாயினி நிலையடைவார்
19. நிலையடைய எனது நாமம் மகாமந்திரம்
நிலைபெருகி தேகசக்தி சித்திகள் காண
கலையாத எனது நாமம் மகா மருந்து
கண்டுகொண்டால் கலிவென்று வாழ்வுஓங்கும்
20. ஓங்கிவர உயர்வாழ்வு தானம் செய்வீர்
உலகிலே மானுடம் செழிப்பதற்கு
பாங்குடைய தானதவம் சிறந்த மார்க்கம்
பண்புடன் ஆலயம்பல தொழுதிட்டாலும்
21. தொழுதிட்டாலும் புண்ணியமும் அடைவதேது
தானதவம் செய்தால்தான் புண்ணியம் சேரும்
அழகான வாழ்வமையும் அருள்பெருகும்
அருந்தவமும் செய்வோரை காத்தருள்வேன்
22. அருள்வேண்டி அகத்தியன்எனை வணங்கிய குடிக்கு(குடும்பம்)
அருள்தந்து இருளகற்றி காத்தருள்வேன்
திருமந்திரம் எனதுநாமம் செபித்தஇடத்தில்
தவரிசியான் சித்தர்களும் தேவர்களும் இருப்போம்
23. இருந்துகாப்போம் அரங்கனை வணங்கிநின்றால்
உலகம்காக்க யுகங்கள் முன்பு சித்தரிசிகள்
அருள்வேண்டி யாகயெக்கியங்கள் செய்துவிட்டார்
அறியும்கால் தானதவம் மானிடனுக்கு போதும்
24. போதும்போதும் என்று மானிடன் சொல்லுகின்ற
புண்ணியமான அன்னதானம் கடைப்பிடித்தால்
சத்தியமாய் மானிடனும் மகானாவான்
சிறப்புடனே தானம்பல செய்தவர்க்கு
11 ஞானத்திருவடி
25. செய்பவர்க்கு நிம்மதியும் நிலைக்க செய்வோம்
சர்வபாவ சங்கடங்கள் அகன்று ஓடும்
தெய்வமெல்லாம் துணைபுரியும் விலகா நின்று
தயவுண்டாகும் உயிர்களிடத்தில் சிவத்தை உணர்வான்
26. உணர்ந்ததொரு அரங்கராசா உற்றுகேட்பாய்
உனதுதவத்தால் உலகெல்லாம் மானுடம் செழிக்கும்
உயிர்பலிகள் தவிர்த்துவரும் கருணைபிறக்கும்
உயர்கதியும் சிவசிந்தை பேரானந்தமடைவர்
27. பேரானந்தம் நீ அடைந்த காரணத்தால்
போகர் புலிப்பாணி பதஞ்சலியும்
இராமதேவர் இடைகாடர் வியாசமுனிவர்
இருநவத்தோர்(18 சித்தர்களும்) உன்னோடு சப்தரிசிகளும்
28. இரிசிகள் எல்லாம் அரங்காஉன் தவத்தை காத்து
இடைவிடா நற்பணிகள் செய்துவாரார்
தட்டிவிடா ஓங்காரகுடில் அன்னதானம்
தவமுனிவா அருள்மருந்து புசிப்பவர்க்கு ஞானம்
29. ஞானமுடன் பக்திதோன்றும் சிந்தைதெளியும்
ஞானியின் வழிநின்று பக்தர்களும்
தினம் தினம் செய்கின்ற அன்னதானத்திற்கு
தவரிசிகள் பூரண அருளைதாரோம்
30. அருளோடு செய்கின்ற அன்னதானத்தை
அமைதியுடன் புசிப்பவர்கள் புண்ணியம் பெறுவார்
விரும்பியே பக்தியோடு அன்னமளித்தால்
வளநலமும் பெற்றிடுவார் பூலோகத்தில்
31. பூலோகத்தில் ஓங்காரகுடில் கைலாயமாகும்
பரமானந்த அரங்கனே ஈசனாவான்
ஆலசுகம் அனுபவிக்க ஓங்காரகுடில் வந்து
அரங்கனாசி பெற்றிடும் மக்கள் பெருவாழ்வு காண்பார்
32. வாழ்வதனில் அகத்தியன் யான் காப்பேன் திண்ணம்
வாழ்த்துகிறேன் அகத்தியன் யான் அரங்கமுனியை
தாழ்வில்லா தவத்தினால் உலகை காத்த
தெய்வசித்த ஞானியே வாழ்க முற்றே.
-சுபம்-
12 ஞானத்திருவடி
திருச்சி மாவட்டம்,
துறையூர் ஓங்காரக்குடிலாசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
21.03.1998 அன்று ஆன்மீக அன்பர்கள் முன்னிலையில்
வழங்கிய அருளுரை
உண்மை ஆன்மீகம் என்றால் என்ன?
அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே வணக்கம்,
ஏதாவது கேளுங்கள்.
அன்பர்: ஐயா, உண்மை ஆன்மீகம் பற்றி எங்களுக்கு தெரிவிக்கவும்.
குருநாதர்: அன்பர்களே, உண்மை ஆன்மீகம் என்றால், பொய் என்ற
ஒன்றும் இருக்கிறது என்று அர்த்தம். அரிசி என்றால் மேலே உமியும் இருக்கிறது
என்று அர்த்தம். சரி, உண்மை ஆன்மீகம் என்றால் எது? அது பொய்யில் மெய்
இருக்கிறது என்று அர்த்தம். எது பொய்யோ அதிலேதான் மெய்யும் இருக்கிறது.
அதை எப்படி அறிவது? இந்த உடம்பு பொய்தான்.
காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா, மாயனார்
குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா
வெளுத்த நரம்பும் உளுத்த சதையும் பூட்டி வைத்த கூடடா.
காயமே இது பொய்யடா – என்னடா! இப்படி ஒரு வார்த்தை. அப்ப காயம்
பொய். காயம் என்றால் உடம்பு. மாயனார் குயவன் – மாயன் என்றால் திருமால்
என்று அர்த்தம். இருவரும் சேர்ந்துதான் செய்யனும்.
மாயனார் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா – மண்ணு, பாண்டம்,
ஓடு என்று சொல்லிவிட்டார். பானை என்று சொல்லவில்லை.
வெளுத்த நரம்பும் உளுத்த சதையும் பூட்டி வைத்த கூடடா – ஆக நம்முடைய
உடம்பு இப்படித்தான் இருக்குதென்று அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆக இந்த
காயம் பொய். சரி இந்த காயம் பொய் என்றால் எங்கோ ஒரு உண்மை இருக்க
வேண்டும் அல்லவா? எங்கே இருக்கிறது உண்மை?
அப்போ உடம்பு பொய்தான், யாருக்கு? ஆசான் அகத்தீசனையோ, ஆசான்
திருமூலதேவனையோ, ஆசான் போகமகாரிஷியையோ பூஜை செய்யாத
மக்களுக்கு இந்த உடம்பு பொய். அவர்களெல்லாம் (ஞானிகள்) பொய்யில்
உண்மை கண்டவர்கள். இருளில் ஒளியைக் கண்டவர்கள்.
அப்ப இருளில் ஒளியைக் கண்டது, பொய்யில் மெய்யைக் கண்டது என்பது,
பொய்யாகிய இந்த உடம்புக்குள் மெய்யைக் காண்பது என்று அர்த்தம். அந்த
13 ஞானத்திருவடி
மெய்யைக் காண்பதற்கு என்ன செய்யலாம்? யாரொருவன் இதைப் பற்றி
அறிந்தானோ, அவனுக்குத்தான் என்ன செய்ய வேண்டுமென்று புரியும். ஆக
அதுபோன்ற ஒரு அறிவு, எப்ப வரும்? தலைவன் ஆசி இருந்தால் வருமென்றார்.
இப்படி சொன்ன அவர் என்ன செய்தார்? பொய்யை மெய்யாக்கிக் கொண்டார்.
பொய் எது? புறவுடம்பு பொய், உள்ளுடம்பு மெய். புறவுடம்பை பொய்யென்று
அறியாமல் உள்ளுடம்பை மெய்யென்று எவ்வாறு அறிய முடியும்? புறவுடம்பு –
தூலதேகம், காணக்கூடிய தேகத்தை தூலதேகமென்று சொல்வார்கள்.
அதற்குள்ளேதான் சூட்சுமதேகம் இருக்கிறது. தூலதேகத்தின் துணையில்லாமல்
சூட்சுமதேகத்தை அறியமுடியாது. தூலம் என்றால் உடம்பு என்று அர்த்தம்.
இந்த உடம்பு தோன்றுவதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அந்த
இரகசியத்தை இந்த மனித தேகத்தில்தான் இயற்கை அன்னை
அமைத்திருக்கிறாள். அப்ப தூலதேகத்தில் சூட்சுமதேகம் இருக்கிறது. சூட்சும
தேகத்தை அறியும் வரையில், காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா.
தூலதேகத்திலிருந்து சூட்சுமதேகம் எப்படி வெளிப்படும்? சும்மா பட்டினி
கிடந்தால் முடியுமா? பட்டினி கிடந்தால் சாகவேண்டியதுதான்!
யோகிகள் தூலதேகத்தை உடைத்தெறிகிறார்கள். தூலதேகத்தை
பொடியாக்க வேண்டும். அதை புகையச்செய்ய வேண்டும். ஆகவே தூல தேகமாகிய
புறவுடம்பை உடைத்தெறிய வேண்டும்.
தூலதேகத்தை சாகடிப்பதா?
இல்லை. ஞானிகள், அதை சாகாமல் சாகடிக்க வேண்டும் என்பார்கள்.
ஆகவே இந்த உடம்பின் இயல்பு எப்படி இருக்கும்? சூட்சுமதேகம்
வெளியாவதென்றால் என்ன? நெல்முளைத்து முளைவிட்டவுடன் அந்த நிலையை
விண்டு போச்சு என்று சொல்வார்கள். நெல் முளைத்த உடன், நெல்லானது
நாற்றாகிவிடுவதால் அங்கே விண்டாகிவிடும். நெல் இருக்காது. அதாவது, நெல்
என்ற தானியம் அங்கே இருக்காது. நெல் நாற்றாக இருக்கும்.
நெல்லின் மேலுறையாகிய உமி கீழே கழன்று விழுந்துவிடும். அதுபோல
இந்த சூட்சும தேகம் ஆக்கம் பெற்றவுடன், தூலதேகம் வழுவில்லாமல் வீழ்ச்சி
அடைகிறது. நெல்லினுடைய உமி பதராகி மீண்டும் முளைக்காத நிலை
அடைவதுபோல, சூட்சும தேகம் ஆக்கம் பெற்றவுடன், தூலதேகம் வீழ்ச்சி அடைந்து
ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது.
முளைக்கக்கூடிய ஒன்று சூட்சுமதேகம். இப்படி முளைக்கக்கூடிய
ஒன்றைப் பற்றி சொல்வதுதான் உண்மையான ஆன்மீகம். ஒவ்வொருவரும்
சூட்சுமதேகத்தைப் பற்றியே தெரியாமல் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு
தேகம் நம்மிடம் இருக்கிறதென்றும், அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும்?
என்பதிலும் யாருக்கும் ஆர்வமில்லை.
14 ஞானத்திருவடி
இப்படிப்பட்ட ஒன்று இருக்கிறது, அதைப் பிடித்து கரையேறிக் கொள்ள
வேண்டுமென்ற ஆர்வம், பெரும்பாலானோருக்கு இருக்காது. ஒரு
சிலருக்குத்தான் இருக்கும்.
ஏனய்யா ஒருசிலருக்கு மட்டும்தான் ஆர்வம்?
யாரொருவன் ஞானிகளை தினமும் வணங்கி பூஜை செய்கிறானோ
அவர்களுக்கு மட்டும்தான் கைகூடுகிறது. வீண்பொழுது கழிக்கின்ற மக்கள்
அந்த வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு தூலமும் தெரியாது,
சூட்சுமமும் தெரியாது.
மேலும் காரண தேகம் என்ற ஒன்றை சொல்வார்கள். காரணதேகம்
என்பது சூட்சும தேகமாகும். இந்த காரணதேகம் என்கின்ற சூட்சும தேகம்,
எல்லையில்லா பேராற்றல் உடையது. உயிரினங்கள் தோன்றுவதற்கு காரணமான
ஒன்றுக்கு, காரணதேகம் என்று பொருள். இவன் காரணதேகத்தை
அடைகிறான். அந்த தேகத்திற்கு எது துணை என்றால், எந்த தேகத்தை
காமத்துக்கு பயன்படுத்துகிறாயோ, மேலும் எந்த தேகம் நீடித்து இருக்கும் என்று
மயங்குகிறாயோ, அந்த தேகம் அழியணும். காமத்திற்கு பயன்படுத்தக்கூடிய
தேகத்திற்குள்தான் இப்படி ஒரு அற்புதம் இருக்கிறது. சூட்சுமதேகமும் காரண
தேகமும் இருக்கிறது.
இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு சாது சங்கத்துடன் தொடர்பு
இருக்க வேண்டும். எந்த சாதுசங்க தொடர்பு இருக்கவேண்டும்? தூலத்தையும்,
சூட்சுமத்தையும், காரணதேகத்தையும் அறிந்தவர்களுடைய நட்பு கிடைக்க
வேண்டும். அப்ப அவர்கள்தான் இதை சொல்லிக் கொடுப்பார்கள். அவர்களும்
எதை சொல்லிக் கொடுப்பார்கள்? பிராணாயாமம் இப்படிசெய், அப்படி செய்
என்றா சொல்வார்கள்? பிராணாயாமம் செய்தால் செத்துப்போவான்.
நாங்கள் பிராணாயாமம் செய்து இந்த வாய்ப்பை பெறவில்லை. யாரை
தியானம் செய்திருக்கிறோம்? காரண தேகத்தை பெற்றவர்களை தியானம்
செய்திருக்கிறோம்.
தூலம் என்று சொல்லப்பட்ட புறவுடம்பின் துணைக்கொண்டு
அகவுடம்பாகிய சூட்சுமதேகத்தை ஆக்கம் பெறச் செய்து, அந்த ஆக்கம் பெற்ற
உடம்பும் நிர்மலமாகி, ஜோதி உடம்பாகிறது. அந்த ஜோதி உடம்பானவர்களை
நாங்கள் தியானம் செய்திருக்கிறோம்.
நான் ஏதோ பிராணாயாமம் செய்கிறேன் என்று, அநேகம்பேர்
நினைக்கிறார்கள். அதை ஏன் நமக்கு சொல்லிக்கொடுக்கக் கூடாதென்றும்
கேட்கிறார்கள். அப்படி சொல்லிக்கொடுப்பதால் எதுவும் நடக்காது, எந்த
புத்தகத்தை படித்தாலும் வராது. இதை உணர்ந்து கொள்வதற்காகத்தான் நான்
15 ஞானத்திருவடி
பேசுகிறேன். யார் எந்த அளவுக்கு உருகி தியானம் செய்கிறானோ, அந்த
அளவுக்கு அவனுக்கு உணர்த்தப்படும்.
தூலமென்று சொல்லப்பட்ட புறஉடம்பு நம்மை நரகத்திற்கு தள்ளக்கூடிய
உணர்வுகளை நம்முள் உண்டுபண்ணும். இதுதான் அதனுடைய இயல்பு. நம்மை
நரகத்திற்கு எதெல்லாம் இட்டுச்செல்லுமோ அதையெல்லாம் புறவுடம்பு
செய்யத்தூண்டும். அப்ப என்னய்யா செய்வது? புறஉடம்பை கொன்று விடுவதா?
கொல்லக்கூடாது.
தூலதேகத்தைக் கொன்றால் செத்துப்போவான். ஆக புறஉடம்பின்
(தூலதேகம்) பெருமையை நினைக்க வேண்டும். இது சாதாரண விசயமல்ல. இது
அற்புத தேகமென்று சொல்லுவார். பெறுதற்கரிய மானுடப் பிறவியை பெற்றேன்
என்பார். இந்த தேகத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
சரிய்யா அப்ப பெண்ணுறவு கொள்ளக் கூடாதா? அப்படி யாரும்
சொல்லமாட்டார்கள். இந்த உடம்பின் போக்கிலே செல்லவேண்டும். இதன்
போக்கிலேயே சென்றுதான் அதை கொல்லமுடியும். அப்ப தேகத்தையும்
காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
இது அவ்வளவு சுலபமா புரியாது. பூஜை செய்தால்தான் புரியும். இந்த
தேகத்தை காப்பாற்ற வேண்டும். பெண்ணுறவு இருந்தாலும் குற்றமில்லை. அப்படி
இல்லையென்றால் உடம்பு வீணாக போய்விடும்.·உடம்பில் கொழுப்பு மண்டி
செத்துப்போவான். இதைத்தான் மகான் சிவவாக்கியர் சொல்வார்.
மாதர்தோள்சே ராதவர் மாநிலத்தி லில்லையே
மாதர்தோள்பு ணர்ந்தபோது மனிதர்வாழ் சிறக்குமே
மாதராகுஞ் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்துகொண்டான் ஈசனே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 529.
இந்த உடம்பைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஞானிகளை பூஜை
செய்துதான் ஆசிபெற வேண்டும். அவர்கள் ஆசிபெறும்போது தூலதேகத்தைப்
பற்றியும், சூட்சும தேகத்தைப் பற்றியும் அறியலாம். இந்த தூலதேகம் இருக்கும்
போதே ஞானிகளின் ஆசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதைத்தவிர வேறு
வழியே இல்லை.
காலையிலும் மாலையிலும் தியானம் செய்ய வேண்டும். யாரைக் குறித்து
தியானம் செய்ய வேண்டும்? காரண தேகம் பெற்றவர்களை குறித்து தியானம்
செய்ய வேண்டும்.
காரணதேகம் பெற்றவர்கள், எல்லாம்வல்ல இயற்கையை அறிந்து
இயற்கையோடு ஒன்றியவர்கள். இயற்கையை ஒரு தோற்றமாக காட்ட முடியாது.
16 ஞானத்திருவடி
இயற்கை தன்னை ஆணாகவும் பெண்ணாகவும் காட்டும். ஆணாகவும்
பெண்ணாகவும் காட்டுமே தவிர சுடராக காட்டாது.
இவனுக்குள்ளே இருக்கும் அற்புதம், அந்த உடம்பு ஒளிமயமான
உடம்பாகிவிடுகிறது. ஜோதி உடம்பாக இருக்கிறது. அந்த ஜோதி உடம்பிற்கு
காரணம், ஆசான் சுப்ரமணியர்தான். அவர்தான் இந்த இரகசியத்தை முதலில்
அறிந்தார். அந்த உடம்பை அறிவதுதான் உண்மை ஆன்மீகம். அவர்கள்
பொய்யுள் மெய்யை கண்டவர்கள், இருளில் ஒளியை கண்டவர்கள். இவர்களை
பூஜைசெய்து ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும்.
பூஜைதான் முக்கியம் என்பதை முதலில் அறியவேண்டும். யோகநெறி
என்பதெல்லாம் பிறகுதான். யோகநெறி என்பது ஞானிகளின் ஆசியில்லாமல்
கைகூடாது. இதுதான் அடிப்படை இரகசியம். இந்த துறை இப்படித்தான்
இருக்கிறது.
ஆனால், ஒன்றும் தெரியாமல் சிலபேர் ஒன்றுகிடக்க ஒன்று பேசி
பிராணாயாமம் செய்து செத்துப்போவார்கள். அதனால் ஞானிகளுக்கு
நட்டமில்லை.
பிராணாயாமம் செய்யாதே, பிராணாயாமம் செய்தால் செத்துப்
போவாயென்று சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இவர் மட்டும் செய்தாரே,
நாம் செய்தால் என்ன? என்று கேட்பார்கள். நாம் அதிலெல்லாம் தலையிடக்
கூடாது. அன்னவன் விதிப்பயன் அவ்வாறு இருந்தால் அதற்கு நாம் என்
செய்வோம் என்று நாம் ஒதுங்கி இருக்க வேண்டும்.
பிராணாயாமம் செய்யாதே, செய்தால் செத்துப் போவாயென்று நாம்
சொல்லுவோம். புலால் உணவு(மாமிசம்) சாப்பிடாதே, உயிர்வதை செய்து
உண்ணாதே. முறையோடு இரு. தினம் தினம் தியானம் செய்யவேண்டும்.
அளவறிந்து இல்லறம் நடத்த வேண்டும். உடலை ரொம்ப செலவு செய்யக்
கூடாது. உடலை ரொம்ப செலவு செய்தால் வீணாகப்போகும். ஆகவே நீடிய
ஆயுளைப் பெற முயற்சிக்க வேண்டும். அப்ப மனதை சாந்தப்படுத்திக் கொள்ள
வேண்டும்.
மனதை சாந்தப்படுத்திக் கொள்வதென்பது தியானத்தால்தான் முடியும்.
வேறு எந்த வகையிலும் மனதை சாந்தப்படுத்த முடியாது. இப்படியெல்லாம்
சொல்வதற்கு, ஒரு சாது சங்கம் இருக்க வேண்டும்.
ஒரு பத்து பேர் ஒன்று கூடி, திருஅருட்பா, திருமந்திரம், திருக்குறள் போன்ற
ஞானநூல்களை படிக்க வேண்டும். அப்பொழுது, இதைப்பற்றியே பேச வேண்டும்.
டி.வி பார்ப்பது, கிரிக்கெட் பார்ப்பது, குதிரைப் பந்தயம் இதெல்லாம் இந்த
துறையில் வருகிறவர்களுக்கு ஆகாது. அப்படியிருந்தாலும் அரை மணி நேரம்,
17 ஞானத்திருவடி
முக்கால்மணி நேரம்தான் இருக்க வேண்டும். உலகநடையில்
பொழுதுபோக்கினால், அதிலேயே கவனம் வைத்திருந்தால், அவர்கள் இந்த
துறைக்கு தகுதியில்லாதவர்கள்.
உணவு பழக்கவழக்கங்கள் செய்முறை பயிற்சிகளில் கவனமாக இருக்க
வேண்டும். அடுத்து பொருள் சேர்க்கும் போது பாவி என்று பேர் எடுக்காமல்
தன்னை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பாவிபாவி என்று பலபேர்
சொன்னால் என்னதான் பூஜை செய்தாலும் எடுபடாது.
ஆசான் தயவு இருந்தால்தான், பொருள் சேர்க்கும்பொழுது நெறிக்கு
உட்பட்டு பொருள் சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தயவு இல்லாவிட்டால்,
பொருள்மீது வெறிவந்து நம்மை தொலைத்துவிடும். பொருள்வெறி வந்ததென்றால்
எப்படியும் பொருள் சேர்க்கவேண்டும் என்ற நினைவு வந்துவிடும்.
இப்படி ஒரு நினைவு வந்தாலே வினை சூழ்கிறது என்று அறிவு சொல்ல
வேண்டும். வேண்டாமப்பா, ஜென்மத்தை கடைத்தேற்ற விரும்புகிறவர்களுக்கு
இது ஆகாது என்று அவர்களுக்கு அவனது மனசு சொல்லவேண்டும்.
இல்லையென்றால் கடைசிவரை பொருள்வெறி வந்து எப்படியாவது பொருள்
சேர்க்க வேண்டும், பொருள் சேர்க்க வேண்டும் என்று செயல்படும்போது வினை
தானாக வந்து சூழ்ந்து விடும். அப்படி வினை சூழ்ந்தது என்றால், அறிவு வேலை
செய்யாது. இந்த துறைக்கு அறிவு வேண்டும்.
பொருளை சேர்ப்பதற்கும், உடலை காமத்துக்கு பயன்படுத்துவதற்கும்
சிறப்பறிவு வேண்டும். அதே சமயத்தில் டி.வி பார்க்கக் கூடாது, சினிமா பார்க்க
கூடாது என்று நான் சொல்லவில்லை. 24 மணிநேரமும் யாரும் பூஜை செய்ய
முடியாது. அப்ப சிறிது நேரம் டி.வி பார்க்கலாம், பாடல் கேட்கலாம், அப்படியே
கடற்கரை பக்கம் போகலாம். வெளியே சென்று ஒரு ஆறுதல் அடையலாம்.
ஆனால் மனதில் மட்டும் இப்படி ஒரு எண்ணம் இருக்க வேண்டும்.
நாம் ஜென்மத்தை கடைத்தேற்ற வந்திருக்கிறோம். கிடைத்தற்கரிய பிறவி
கிடைத்திருக்கிறது. இதைவிட்டால் வேறு எந்தப்பிறவி கிடைக்கும் என்று
தெரியாது. கிடைத்தற்கரிய மானுடப்பிறவி கிடைத்திருக்கிறது. இதை நாம்
பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு உள்ளுக்குள் இருந்து
கொண்டே இருக்க வேண்டும்.
ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளவேண்டும் என்ற உணர்வு இருந்து
கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் மனது கண்டபடி சுற்ற
ஆரம்பித்துவிடும். இன்னும் ரொம்ப பிரச்சினை இருந்தால், வாரத்திற்கு ஒருமுறை
சுடுகாட்டிற்கு போய், அங்கே கிடக்கும் மண்டை ஓடு, கை எலும்பு, கால் எலும்பு
அந்த கோலங்களை பார்க்க வேண்டும். ஐயோ இப்படி ஒரு நிலைமை நமக்கு
வரக்கூடாது என்று சொல்லி அடிக்கடி சுடுகாட்டிற்கு சென்று வரவேண்டும்.
18 ஞானத்திருவடி
நான் சிறுவயதில், இளமையில் காலை 6 மணி அல்லது 7.30 மணிக்கு
சுடுகாட்டிற்கு போயிருக்கிறேன். அங்கே விகாரமாக கிடக்கக்கூடிய
எலும்புக்கூடுகள், மண்டை ஓடு தனித்தனியாக கிடக்கக்கூடிய இருதய
எலும்புகள் இவற்றையெல்லாம் பார்த்து நான் மனதை °திரப்படுத்தி
கொண்டிருக்கிறேன். இது அவசியம்.
எங்கெல்லாம் நாம் “பெரிய காரியத்திற்கு” போகிறோமோ அங்க எல்லாம்
நமக்கு ஒரு பயம் இருக்க வேண்டும். நமக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது,
நமக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாதென்று நினைக்க வேண்டும். இந்த
நினைப்பு வருவதற்கு சாதுசங்க தொடர்பு இருக்க வேண்டும்.
சிலபேருக்கு நோய் வந்த பின்தான் அந்த அச்சம் வரும். நோய் வருவதற்கு
முன்னே அந்த அச்சம் வராது. அதுவும் நோய் வந்தால் தப்பித்துக் கொள்ளலாம்
என்ற எண்ணம் இருக்கும் வரை அந்த அச்சம் வராது. “ஐயா, உனக்கு புற்றுநோய்
வந்துவிட்டது நீ செத்துப்போவாய்” என்று சொல்லியபிறகுதான் பயம் வரும்.
அதற்கு பிறகு பயம் வந்து எதற்காவது? இப்படி ஒரு வகையான அச்சத்தை நாம்
நமக்குள்ளேயே உருவாக்கிக் கொள்ளவேண்டும். எப்பய்யா வரும்? புண்ணியமும்
பூஜையும் செய்தால்தான் இப்படிப்பட்ட பயம் நமக்கு வரும்.
புண்ணியவான்களுக்கும், ஞானிகளை பூஜை செய்கிற மக்களுக்கும்தான்
சாவைப் பற்றி ஒரு பயம் இருக்கும். அந்த சாவைப் பற்றிய பயம் வருவதற்கும்,
மனதை °திரப்படுத்தி கொள்வதற்கும் நாம் சுடுகாட்டிற்கு செல்ல வேண்டும்,
பெரிய காரியங்களுக்கு போகவேண்டும். இறந்து போனவர்களை பார்க்க
செல்லவேண்டும். ஆகவே இவையெல்லாம் ஒரு வழிமுறைதான்.
மேலும் திருஅருட்பா, திருமந்திரம் போன்ற பெரிய நூல்களை தொட்டு
படிக்கும்போதே ஞானிகள் நம்மை பார்ப்பார்கள். அவர்களுடைய ஆசி
கிடைக்கும். பயபக்தியாக தொட வேண்டும். இடது கையால் தொட்டால் கோபம்
வந்துவிடும். ஆகவே திருமந்திரத்தையோ, திருக்குறளையோ, மகான் தாயுமான
சுவாமிகள், மகான் மாணிக்கவாசகர் இவர்கள் எழுதிய நூலை தொட்டு வணங்கி
படித்தால் அவர்களுக்கு நிச்சயம் ஆசி கிடைக்கும். ஆக இப்படி ஒரு முறையை
கையாள வேண்டும்.
தினமும் காலையில் 10 முறை ஞானிகள் நாமத்தை சொல்ல வேண்டும்.
மாலையில் 10 முறை ஞானிகள் நாமத்தை சொல்ல வேண்டும். இதற்கிடையில்
உலகநடையில் இருந்து கொண்டே, வியாபாரம் செய்ய வேண்டும், உத்தியோகம்
பார்க்க வேண்டும், தனக்கு வருவாயை தேடிக்கொள்ள வேண்டும். ஆக எதை
செய்தாலும் சிந்தனை மட்டும் மேலான நிலையில் இருக்க வேண்டும். மேலான
நிலையில் அறிவை செலுத்தாமல் ஒருவருக்கு இப்படிப்பட்ட சிந்தனை வராது.
19 ஞானத்திருவடி
ஆக இந்த உலகம் நிலையில்லாதது. நிலையில்லாத உலகத்தில் இருந்து
கொண்டே நிலையான ஒன்றை அடைய வேண்டும் என்ற நினைப்பு இருந்து
கொண்டு இருக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை பீச்சிற்கு (கடற்கரை)
போவதைபோல சுடுகாட்டிற்கு போக வேண்டும். அங்கே உள்ள கோலங்களை
பார்க்க வேண்டும். மன ஆறுதல் அடைவதற்கு பூங்காவிற்கு போக வேண்டும்.
அழகிய மலர்களை பார்க்க வேண்டும். சிறுகுழந்தைகளை பார்க்க வேண்டும்.
இப்படி பல்வேறு காட்சிகளை கண்டு நம்மை °திரப்படுத்தி கொள்ள வேண்டும்.
ஆக நாம் காணுகின்ற காட்சிகள், குழந்தைகள், அழகு அல்லது
வேறுவகையான காட்சிகள் எல்லாம் நிலையில்லாதது, ஆனால் இந்த காட்சிகள்
என்றும் இருக்கும். இவற்றை காணுகின்ற நாம் மட்டும் இறந்து போவோம் என்ற
உணர்வுகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இதுபோன்ற உணர்வுதான்
உண்மை ஆன்மீகத்துக்கு துணையாக இருக்கும். இந்த உணர்வு பூஜை
செய்யாமல் வரவே வராது.
ஆக காட்சிகள் இருக்கும். நாம்தான் அழிந்து போவோம். அழகிய
மலர்க்கூட்டங்கள், அழகிய காட்சிகள், அழகிய குழந்தைகள் இப்படி
பல்வகையான காட்சிகளை பார்க்கும்போது மனம் அதிலேயே இலயித்து போகும்.
இவையெல்லாம் நிலையில்லாதது என்று மனதில் சொல்லிக்கொண்டே
வரவேண்டும். ஞானிகளை பூஜை செய்யாவிட்டால், நிலையில்லாதது என்ற
எண்ணம் வராது.
எந்தக் காட்சி அழியாதது? உணர்ச்சியற்ற ஒன்றுதான் அழியாது.
ஓவியம், கற்சிலைகள் அழியாது. கல், மண் போன்ற ஜடப்பொருளால் செய்தவை
தவிர, மற்ற எல்லா காட்சிகளும் அழிந்தே போகும். நாமும் அழிந்து போவோம்,
காணுகின்ற கண்களும் திரையுண்டு போகும். காட்சிகளும் அழிந்து போகும்.
உலகத்தில் எல்லா காட்சிகளும் இருந்துகொண்டுதான் இருக்கும். காணுகிற
கண்கள் என்னாச்சு? கண்டு ரசித்த மனம் என்னாச்சு? ஆக இதையெல்லாம்
மனதில் வைத்துக்கொண்டு, நம்மை சிலையாக்கி கொள்ள வேண்டும்.
உணர்ச்சியற்றவர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டும். இதை ஆசான்
அருணகிரிநாதர் சொல்வார்.
முருகன் தனிவேல் முநிநம் குருவென்று
அருள் கொண்டறியார் அறியுந் தரமோ
உருவன்று அருவன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே.
-கந்தரநுபூதி – கவி எண்-13.
இங்கு ஆசான் அருணகிரிநாதர், “அதுவே” என்ற வார்த்தையை
பயன்படுத்துவார். இந்த பாடலில் ஒரு முக்கியமான இரகசியம் இருக்கிறது.
20 ஞானத்திருவடி
இதை அருள் கொண்டு அறிய வேண்டும் என்பார். அதுவே தான் என்பதையும்
தாமே அது என்பதை அறிதல் என்பார்கள். அப்ப உணர்ச்சியற்ற ஒன்றாக
தலைவன் இருக்கிறான். முன்பு அவனுக்கு உணர்ச்சி இருந்தது.
தவமுயற்சியாலும், விடாமுயற்சியாலும் உண்மை ஆன்மீகத்தை அறிந்து அந்த
வாய்ப்பை தலைவன் பெற்றிருக்கிறான்.
உணர்ச்சியுள்ள ஒரு மனிதனாக பிறந்து, தவமுயற்சியால் உணர்ச்சியற்று,
அது இது என்று சொல்லப்பட்ட ஜடப்பொருளாக மாறிவிட்டார்கள். அப்ப
ஜடப்பொருளாக மாறப்பட்ட ஒன்றுதான் அழியாதது. இதைத்தான் “அது, இது”
என்று சொல்லுவார்கள். இப்படியெல்லாம் தலைவன் இருக்கிறார். ஆசான்
சுப்ரமணியரை துணையாக கொண்டுதான் எல்லோரும் இந்த வாய்ப்பை
பெற்றிருக்கிறார்கள். அப்ப ஆசான் சுப்ரமணியர்தான் உண்மை. உண்மைதான்
ஆசான் சுப்ரமணியர். வேறுவழியே இல்லை. அவர்தான் இந்த உலக மக்களுக்கு
ஒரு நல்ல வழியை காட்டியிருக்கிறார். அவர் சோம்பேறித்தனப்பட்டிருந்தால் நாம்
இதை எல்லாம் பேசக்கூட முடியாது.
உலகத்தில் இருக்கும் அறிவு எல்லாம் ஆசான் கொடுத்ததுதான். முன்
ஜென்மங்களில் ஆசான் சுப்ரமணியரை வணங்கியவர்கள்தான் வெளிநாட்டில்
விஞ்ஞானியாகவும், மருத்துவ மேதையாகவும், பெரிய பெரிய அறிவாளியாகவும்
இப்போது உள்ளார்கள். இவர்களெல்லாம் ஆசான் ஆசி பெற்றவர்கள். ஆக
பூஜை செய்தால் வெளிநாட்டில் பிறப்பான் விஞ்ஞானியாகி விடுவான். அப்ப
எல்லா துறைக்கும் அறிவை தந்தது ஆசான் சுப்ரமணியர்தான். அவரை
வணங்கவில்லையானால் நிச்சயமாக ஒருவனுக்கு உண்மை ஆன்மீகம் தெரியவே
தெரியாது. இதைத்தான் ஆசான் சட்டமுனிநாதர் சொல்வார்.
பாலனெனும் குமரனையே வணங்குவாயே
வணங்கினால் சகலசித்தும் கைக்குள்ளாச்சு
எப்போது பாலனாவான். இதை யாராலும் அறிய முடியாது. ஒரு பழம்
இருந்தால் அது மீண்டும் காயாகாது. அது காய் ஆகவே ஆகாது. அதுதான்
இயற்கை. எதுவாக இருந்தாலும் சரி, அது பழமானால் காயாகாது. ஆனால்
ஆசான் சுப்ரமணியர் மட்டும் பழத்திலிருந்து காய் ஆனார். முதுமையிலிருந்து
பாலன் ஆனார். பாலப்பருவம் (குழந்தைப் பருவம்) ஆனார்.
பாலனெனும் குமரனையே வணங்குவாயே. வணங்கினால் என்ன ஆகும்?
ஆசான் சுப்ரமணியரை பூஜை செய்கிறான். ஆசான் சுப்ரமணியரை பூஜை
செய்தாலும் சரி, மகான் அருணகிரிநாதரை பூஜை செய்தாலும் சரி எல்லாம் ஒரே
இடத்துக்குத்தான் போகிறது. அத்தனை பேரும் “அது-இது” ஆனவர்கள். அது
இது என்பது ஜடப்பொருள் உணர்ச்சியற்ற ஒன்று என்று அர்த்தம். எனவேதான்
ஆசான் சுப்ரமணியரை வணங்கு என்று ஆசான் சட்டமுனிநாதர் சொன்னார்.
21 ஞானத்திருவடி
“பாலனெனும் குமரனையே வணங்குவாயே, வணங்கினால் சகல சித்தும்
கைக்குள்ளாச்சு” ஒன்றிரண்டு அல்ல. ஓம் சரவணபவ என்றாலோ அல்லது முருகா
என்று சொன்னாலோ இந்த உலகத்தில் எதையும் சாதிக்கலாம். அதேமாதிரி ஓம்
அகத்தீசாய நம என்று சொன்னாலும் சரி, எல்லாமே சாதிக்கலாம். அப்ப சாதனை
என்பது ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளவேண்டும் என்ற ஒரே சிந்தனையை
கொண்டிருக்க வேண்டும். இந்த ஒரு சிந்தனையை தவிர மற்ற எல்லா சித்திகளும்
உலக நலனை மையமாக கொண்டதுதான்.
ஒரு மனிதனுக்கு தவத்திற்குரிய அறிவு வேண்டும். அதற்கு தேவையான
பொருள் வேண்டும். நல்லபடி பொழுது போகவேண்டும். நல்ல நட்பு வேண்டும்.
நல்ல தொண்டர் பலம் வேண்டும். காரியத்தை செயல்படுத்தக் கூடிய எல்லா
அமைப்பும் இருக்க வேண்டும். எதை நினைத்தாலும் கைகூடும். இதைத்தான் சகல
சித்தும் கைக்குள்ளாச்சு என்றார். எல்லா சித்துக்கள் என்பதின் அர்த்தம் எல்லா
காரியங்களும் சித்தியாகும் என்று அர்த்தம்.
காரிய சித்திகள் யாருக்கு நடக்கும்? ஞானிகளை வணங்குகிற
மக்களுக்குத்தான் நடக்குமே தவிர எவ்வளவுதான் அறிவு உள்ளவனாக
இருந்தாலும் சரி ஒன்றும் அசைக்க முடியாது. இப்ப நாமே எடுத்துக்காட்டு, இப்ப
ஓங்காரக்குடிலில் எல்லா காரியமும் நடந்துகொண்டு இருக்கிறது. என்னய்யா
நம்மிடம் மந்திரம் இருக்கா என்றால் ஒன்றும் இல்லை. முதுபெரும் தலைவன்
ஆசான் சுப்ரமணியரை பூஜை செய்தோம். முதுபெரும் தலைவன் ஆசான்
அகத்தீசரை பூஜை செய்தோம், ஆசான் திருமூலதேவரை பூஜை செய்தோம்,
ஆசான் நந்தீசனை பூஜை செய்தோம், ஆசான் அருணகிரிநாதரை பூஜை
செய்தோம், பெரியவர்களை பூஜை செய்கிறோம். சகல சித்தும் கைக்குள்ளாச்சு.
முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லிணைதா னருள்வோனே
முனிவோ ரமரோர் முறையோ வெனவே
முதுசூ ருரமேல் விடும்வேலா.
– திருப்புகழ் – திருவீழிமிழலை – கவி எண் 857.
என்றார் ஆசான் அருணகிரிநாதர்.
ஓம் சரவணபவ அல்லது முருகா என்ற ஒரு வார்த்தையை சொல்லி வாய்
மூடுவதற்கு முன்னே ஈரேழு பதினான்கு லோகமும் அந்த ஒலி படருமாம்.
“முருகா என ஓர்தரம் ஓதடியார்”
முருகா என்று ஓதி முடிப்பதற்கு முன்னே “முடிமேல் இணைத்தாள்
அருள்வோனே” என்றார். அவனுடைய திருவடியை கொண்டுபோய் சிரசில்
வைக்கிறான். சிரசு என்பதற்கு இடகலை – பிங்கலை என்று அர்த்தம். இதற்கு
இன்னும் மேலே போக வேண்டும்.
22 ஞானத்திருவடி
ஆசான் சுப்ரமணியரை வணங்கினால் சகலசித்தும் கைக்குள்ளாச்சு
என்பார். சகலசித்துக்கள் – எவ்வளவுதான் அறிவாற்றல் இருந்தாலும் சரி,
என்னதான் செல்வம் இருந்தாலும் சரி, தொண்டர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.
தலைவன் யாரென்று அறியவேண்டும். அப்படி உள்ள இடத்தில்தான்
தொண்டர்கள் எல்லாம் உயிருக்கு உயிராய் இருந்து தொண்டு செய்வார்கள்.
இங்கே தொண்டர்கள் இருக்கிறார்கள் வந்தவர்கள் போக மாட்டார்கள்.
என்ன காரணம் என்றால் இப்பேர்ப்பட்ட ஓர் உயர்ந்த இடம் கிடைத்திருக்கிறது.
பிடித்து கரையேறிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்களே தவிர, நமக்கு
என்ன ஆதாயம் என்று நினைக்க மாட்டார்கள். அப்ப நமக்கு கிடைத்தற்கரிய
ஆதாயம் என்னவென்றால் இதுபோல் ஒரு அருள் °தாபனத்திற்கு வந்து, நாம்
தொண்டு செய்ய வேண்டும், ஆசிபெற வேண்டும் என்பதே ஆகும். இங்கே
இழப்பதற்கு ஒன்றும் இல்லை. பெறுவதற்கு வாய்ப்பு இருக்கு.
மேலும் ஒத்த கருத்துள்ள தொண்டர்கள் குவிந்துவிடுவார்கள். அன்பர்கள்
கூட்டமிருக்கும், தேவையான பொருள் இருக்கிறது. எது நினைத்தாலும் சரி,
அந்த செயல்பாடுகள் எல்லாம் உலகத்து ரட்சையாக இருக்கும். உலக நலனை
குறித்துதான் இவர்கள் நினைப்பார்கள். இவர்களுடைய சுயநலத்துக்கு இவர்கள்
ஒருபோதும் செயல்பட மாட்டார்கள். இவர்களுடைய செயல்பாடு,
வேலைகளெல்லாம் உலகரட்சை, மக்களின் சுபிட்சம், மக்கள்
மகிழ்ச்சியடையக்கூடிய செயல்களை செய்தல், மக்களின் பிரச்சனைகளை
தீர்த்தல், மக்களின் பசியாற்றுதல் போன்றவைகளே ஆகும்.
உலகரட்சை என்பது, மக்களுக்கு விருப்பமானதை செய்து கொடுப்பது,
அவரவர்களுக்கு விருப்பமானவற்றை முடித்துக் கொடுக்கும் இடம் இதுதான் (ஸ்ரீ
அகத்தியர் சன்மார்க்க சங்கம்). அப்ப தொண்டர் கூட்டம் எப்போதும் இங்கே
இருக்கும். பொருள் வசதி இருக்கும். மன அமைதி இருக்கும். பொழுது நல்லபடி
போகும். கோடீ°வரனாக இருந்தால் கூட பொழுது போகாது. பல கோடிக்கு
அதிபதியா இருப்பான் ஆனால் தூக்கம் வராது. ஏனென்றால் அங்கே எல்லாம்
வஞ்சனை சூழ்ந்திருக்கும். ஒருவரை ஒருவர் ஏமாற்ற பார்ப்பார்கள். பலகோடி
வசதியுள்ள அவனைக்கண்டு யாரும் மகிழ்ச்சி அடையமாட்டார்கள்,
பொறாமைப்படுவார்கள்.
ஆனால் இங்கு ஞானிகள் ஆசி இருப்பதால் தொண்டர்கள் எல்லாம்
மிகுந்த ஒரு அன்பு நெறியோடு இருப்பார்கள். ஆசான் வாழவேண்டும் அவர்
நல்லபடி வாழ வேண்டும். நாம் தொண்டு செய்ய வேண்டும், ஆசிபெற வேண்டும்
என்ற உணர்வுதான் மேலோங்கி இருக்குமே தவிர ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல்
அல்லது பலஹீனப்படுத்துதல் என்ற பேச்சே இருக்காது.
இங்கே உள்ள தொண்டர்களிடம் ஒற்றுமை மிகுதியாக இருக்கும், என்ன
23 ஞானத்திருவடி
காரணம்? எல்லாவற்றையும் தலைவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான்,
அதுதான் காரணம். தலைவனுடைய ஆசி இல்லாமல் யாரும் இங்கே
வரமுடியாது. பல்வேறு ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால்தான்
ஓங்காரக்குடிலை சார்ந்திருந்து தொண்டு செய்ய முடியுமே தவிர, ஏதோ
புண்ணியம் செய்யாத மக்கள், ஏனோதானோ என்று யாரும் இங்கே வரமுடியாது.
அப்படி அவர்கள் வரும்போதே ஆழ்ந்து சிந்தித்து இவனை உள்ளே அனுப்பினால்
ஜாதிவெறி உண்டாகுமா, இல்லை வேறு பிரச்சனையை உண்டாக்குவானா,
இல்லை இவனால் பிரச்சினை வருமா என்று ஆராய்ந்து பார்க்காமல் ஞானிகள்
அவனை உள்ளேயே விடமாட்டார்கள். ஆகவே தொண்டன் ஒருவனை உள்ளே
விட்டிருக்கிறார்கள் என்றால் பல்வேறு ஜென்மங்களில் அவன் செய்த
புண்ணியத்தால்தான் அவன் இங்கே (ஓங்காரக் குடிலிற்கு) வந்திருப்பான்.
ஆகவே இங்கே தகுதியுள்ள தொண்டர்கள் கூடுவார்கள். ஒருதாய் மக்கள்
போல் பழகுவார்கள். அவரவர் முடிந்த அளவு தொண்டு செய்வார்கள். ஆசான்
ஞானபண்டிதன் ஆசியையும், ஒன்பது கோடி ஞானிகளின் ஆசியையும்
பெறுவார்கள். அப்ப ஒன்பது கோடி ஞானிகளும் ஒருங்கே அமர்ந்த இடம்
ஓங்காரக்குடில். இதுபோல் வேறு எங்கேயும் இருக்க முடியாது. ஆக அன்பர்
கூட்டம் இருக்கு, பொருள் வசதி இருக்கு, மக்கள் பிரச்சனைகளை தீர்க்கிறோம்.
எப்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
இங்கே நிறையபேர் இருக்கிறோம். அவர்கள் அத்தனை பேரும் ஜாதி
மதங்களை பார்க்காமல் ஒன்றாக இருக்கும் சங்கம் இது. அவரவர்கள் தன்
கடமையை செய்வார்கள். இதைத் தவிர, அவன் ஏன் இங்கே இருக்கிறான், இவன்
ஏன் இங்கே இருக்கிறான், அவனுக்கு ஏன் இந்த வாய்ப்பு இருக்க வேண்டும்,
இவனுக்கு ஏன் இப்படி ஒரு வாய்ப்பு, அவன் முன்னுக்கு போகிறான், இது போன்ற
பேச்சே இங்கு இருக்காது, யாரோ வருகிறார்கள், செய்கிறார்கள், போகிறார்கள்
நமக்கென்ன, அவரவர்கள் புண்ணியம் செய்திருப்பார்கள், தொண்டு
செய்கிறார்கள், ஆசி பெறுகிறார்கள். நாம் ஏன் இதில்போய் தலையிட வேண்டும்
என்ற உணர்வுதான் எல்லோரிடமும் இருக்கும். இதுவும் கடவுள் கொடுத்த உணர்வு.
ஆக இங்கே உள்ள தொண்டர்கள் தூய மனத்தவர்கள், தன்னை
அர்ப்பணிக்க கூடியவர்கள். எல்லா வகையான குணப்பண்பும் உள்ளவர்கள்.
குணக்கேட்டிற்கு இடம் இருக்காது. அதனால்தான் சகல சித்தும்
கைக்குள்ளாச்சு என்றார். சகலசித்தும் என்பது என்ன? தொண்டர்படை
இல்லாமல் எந்த காரியத்தையும் செய்ய முடியுமா? முடியவே முடியாது. ஏன்
என்றால் அது யாராக இருந்தாலும் சரி, என்னிடம் இருப்பது இரு கரங்கள்.
ஓராயிரம் கரங்கள் இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். இங்கே நல்ல
அன்பர்கள் வருகிறார்கள், மக்கள் கூட்டம் வருகிறது. ஆக இந்த சங்கம்
24 ஞானத்திருவடி
சகலசித்தையும், அற்புத செயலையும் செய்கிறது. தனிநபர் கொண்டா? இல்லை
தொண்டர்கள் கூட்டம்தான். இந்த தொண்டர் கூட்டமும் ஞானிகள்
ஆசியால்தான் வந்திருக்கிறார்கள், எல்லா புண்ணியவான்களும்
வந்திருக்கிறார்கள். இது சின்ன விசயம் அல்ல.
ஒவ்வொருவரும் புண்ணியம் செய்ததால் சகல சித்தும் கைக்குள்ளாச்சு.
மேலும் இங்கே வந்தால் உடம்பைப்பற்றி அறியக்கூடிய ரகசியமும் கிடைக்கும்.
அப்ப உடம்பைப் பற்றி அறியக்கூடிய ரகசியத்தை அறிவது மட்டும் அல்ல,
வணங்கினால் சகல சித்தும் கைக்குள்ளாச்சு என்பதையும் அறியலாம். ஆசான்
சுப்ரமணியரை வணங்கினால் கைகூடும். மேலும் “மைந்தனே அமுதமதும் சிந்தும்
சிந்தும்” என்றார். இது சின்ன விசயம் அல்ல. இது மிகப்பெரிய வார்த்தை.
சகல சித்துக்களும் ஞானிகளுக்கு கைகூடும். உலகத்தில் உள்ள
மக்களால் செய்ய முடியாத வியப்புக்குரிய காரியத்தை இவர்கள் செய்வார்கள்.
ஏனய்யா செய்கிறார்கள்? எதுவாக இருந்தாலும் நாட்டு மக்களுக்குத்தானே
செய்கிறார்கள்.
இன்று 10 மூட்டை 30 கிலோ (1030 கிலோ) அரிசி சமைத்து
அன்னதானம் செய்து இருக்கிறோம். 35 கிலோ கம்மஞ்சோறு, நீர்மோர்,
தண்ணீர் கொடுத்துள்ளோம். கிட்டத்தட்ட 6000 பேர் பசியாறி
இருக்கிறார்கள். இந்த வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு இலவசமாக குழ்ீர்
விநியோகம் செய்திருக்கிறோம்.
ஆக இதுதான் அற்புதம். இவ்வளவு பெரிய அற்புதத்தை
செய்திருக்கிறோம். இவ்வளவு காரியத்தையும் இந்த சங்கம் (ஸ்ரீ அகத்தியர்
சன்மார்க்க சங்கம்) நாட்டு மக்கள் நலனை கருதிதான் செய்துவருகிறது.
அதற்குதான் அவர்களும் (ஞானிகள் தொண்டர்கள் மூலமாக) பொருளுதவி
செய்கிறார்கள். இப்ப நான் பொய் சொன்னா போதும், இங்கே ஒன்றுமே
இருக்காது. ஞானிகள், “முந்தி முந்தி பொய்யை நீக்கு” என்பார்கள். பொய்
சொல்வது இந்த துறைக்கு ஆகவே ஆகாது.
ஆசான் ஆசியால் நாட்டு நலனுக்காகவே இந்த சங்கம் இருக்கிறது.
நாங்கள் பொய் சொல்ல மாட்டோம். பொய் சொல்லாதவர்களுக்குத்தான்
ஞானிகள் ஆசி தருவார்களே தவிர, பொய் சொல்பவர்களுக்கு நிச்சயம் ஆசி
தரமாட்டார்கள். ஞானிகள் ஒருவனை தேர்ந்தெடுக்கும் போதே இவன் பொய்
சொல்லுவானா அல்லது பொருளை பதுக்குவானா என்றெல்லாம் ஆராய்ந்து
பார்த்துதான் தேர்ந்தெடுப்பார்கள். உனக்கு தருகின்ற பொருள் நாட்டு
நலனுக்காகத்தான் தருகிறோம் என்று சொல்லித்தான் பொருளை
கொடுப்பார்கள். நாங்கள் பொருள் சேர்க்க வரவில்லை. அறப்பணிகளுக்காக
கொடுக்கிற பொருளை நாட்டு மக்களுக்கு அள்ளித் தருகிறோம்.
25 ஞானத்திருவடி
ஆக இந்த துறையில், தலைவன் ஆசி இல்லாவிட்டால் ஒருவனுக்கு
பலவீனம் வந்துவிடும். ஆசான் அகத்தீசரை தினம் தினம் பூஜை செய்ய வேண்டும்.
“அடியேன் பொய் சொல்லாதிருக்க வேண்டும், அடியேன் பேராசைக்காரனாக
இருக்கக்கூடாது, அடியேனுக்கு இந்த பொருளாதாரத்தை சேகரிக்கக்கூடிய
பலஹீனம் இருக்கக்கூடாது. அடியேன் பந்தபாசம் அற்று இருக்க வேண்டும்.
இதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும் என்றும்” கேட்பான்.
ஆக “பொய் சொல்லக்கூடாது, நாம் உண்மையே பேசவேண்டும் அதற்கு
நீர்தான் அருள் செய்யவேண்டும்” என்ற வார்த்தையை வேண்டுகோளை இந்த
துறையில் உள்ள மக்கள் ஆசானிடம் கேட்டுத்தான் ஆகவேண்டும். கேட்டுகேட்டு
வரமாய் பெறுவார்கள்.
ஆக இந்த பொருள் அற்பத்தனமானது. பொருள் நிலையில்லாதது.
நிலையில்லாத பொருளை சேகரிக்க ஏனய்யா பொய் சொல்ல வேண்டும்.
தலைவன் ஆசி இல்லாமல் ஒருவனுக்கு இந்த பொருளின் மேல் உள்ள வெறி
தீரவே தீராது.
தலைவன் ஆசி இருந்தால் பொய் சொல்லமாட்டான். தலைவன் ஆசி
இருந்தால் அவனிடம் வறுமை இருக்காது, தலைவன் ஆசி இருந்தால் அவனுக்கு
தூய உண்மையான தொண்டர்படை இருக்கும், தலைவன் ஆசி இருந்தால்
விகாரம் அற்றுப்போகும், தலைவன் ஆசி இருந்தால் நல்ல நட்பு பெருகும்,
தலைவன் ஆசி இருந்தால் உடல் ஆரோக்கியம் இருக்கும், தலைவன் ஆசி
இருந்தால் அவன் மேல்நிலை அடையலாம்.
“சகல சித்தும் கைக்குள்ளாச்சு” என்று சொல்லும்போது எல்லா
நன்மையும் உண்டாகும். அதுமட்டுமல்ல “மைந்தனே அமுதமதும் சிந்தும்சிந்தும்”
என்பார். அமுதபானம் என்று ஒன்று இருக்கிறது. அது காரண தேகத்தை
வெளிப்படுத்தக்கூடியது.
காரணதேகம் காரியதேகம். அதாவது தூலதேகம் சூட்சுமதேகம். அந்த
உடம்பு ஆக்கம் பெறுவதற்கு அமுதபானம் நம்முள் சிந்தவேண்டும். எந்த உடம்பு?
காரணதேகம் அது ஒளிவுடம்பு. அந்த உடம்பு கண்ணிற்கு காட்சியாக நிற்கும்.
ஆனால் கையில் பிடிபடாது. அந்த தேகம் வருவதற்கு அமிழ்த பானம் நம்முள்
சிந்தும். அதுவும் குறிப்பிட்ட ஆண்டுவரை தூலதேகத்திலிருந்து சிந்தும். பிறகு
தூலதேகம் நிழல் சாய்கை அற்றுப்போய் கரைந்து அந்த உடம்பும் ஒளிமயமாய்
ஆகிவிடும்.
இப்ப எங்கள் உடம்பு இருக்கிறது, தூலதேகம் நீங்கிய உடம்பு இது. அப்ப
விகாரமான தேகத்தை நீக்கி இருக்கிறது. இன்னும் கொஞ்சம் இருக்கிறது. அதை
என்ன செய்வார்கள்? அதை பட்டினி போடுவார்கள். பட்டினி போட்டால் இந்த
அனல் என்ன செய்யும்? உடம்பைப் பற்றும். உடம்பைப்பற்றி உள்ளதையும்
26 ஞானத்திருவடி
கெடுத்துவிடும். இந்த புற உடம்பாகிய கருவி கரணங்களை எல்லாம் சுட்டு
பொசுக்கியேவிடும். அப்ப ஏனய்யா கருவி கரணங்களை சுட்டு பொசுக்க
வேண்டும்? அமிழ்தபானம் உண்ணுவதற்காக இந்த உடம்பை (தூல தேகம்) சுட
வேண்டும்.
ஆக பட்டினி போடாமல் எதுவும் முடியவே முடியாது. யாராக இருந்தாலும்
சரி கடும் பட்டினி போட்டாக வேண்டும். ஆக அந்த பட்டினி இந்த உடம்பை
என்ன செய்யும்? அனல் ஏறிக்கொண்டு இருக்கும். அனல் ஏற ஏற என்ன
ஆகும்? புற உடம்பாகிய தூலதேகம் பொடிபட்டு போகும். அந்த அனல் என்ன
செய்யும் அது அமிழ்தபானத்தை உண்டுபண்ணும். அமிழ்தபானம் சாப்பிட
சாப்பிட அதுவும் அற்றுப்போய் ஜோதியாகிவிடும். அதுதான் காரண தேகம்.
ஆக இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது. இதை அடைய எவ்வளவு நாள்
ஆகும் என்றான். மனித இயல்பு எப்படி இருக்கிறது என்றால், அந்த புத்தகத்தை
படிக்க வேண்டும். இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று உள்ளது. உன்னால்
ஒன்றும் அசைக்க முடியாதய்யா. நீ எந்த புத்தகத்தை படித்து எதற்கு ஆகும்? நீ
அப்படி நினைத்துவிடாதே. நீ எந்த புத்தகத்தையுமே படிக்க முடியாது. இப்ப
பெரியவங்க நூலை தொடுகிறோம், பெரியவர்களை வணங்குகிறோம். இது
பக்தி, அப்ப வணங்குவதால் நூலோட ஆசி கிடைக்கும். நூல் எழுதியவர்கள்
காரணதேகம் உடையவர்கள். ஒளி உடம்பை பெற்றவர்கள் நூலை எழுதி
உள்ளார்கள்.
திருமந்திரம் எடுக்கும்போது ஓம் திருமூலதேவா, மாணிக்கவாசகா,
அல்லது அருணகிரிநாதா என்று சொல்லி தொடுகிறோம். தொடும்போது
பெரியவங்க பார்வை கிடைக்கிறது. அப்படியே நாமத்தை சொல்கிறோம்,
வணங்குகிறோம். அதன் மூலமாக ஆசி கிடைக்கும். ஆனால் அதில் இருக்கும்
நுட்பங்களை அறியவே முடியாது. நூல் அறிவு எதற்கும் ஆகாது. ஆனால் நல்ல
நூல்களை படிக்கணும். அது ஒரு துணையாக இருக்குமே தவிர
அதைக்கொண்டு எதையும் செய்ய முடியாது.
தேகத்தின் இயல்பை அறிந்துகொள்ள இவற்றையெல்லாம் நாங்கள்
சொல்கிறோம். அப்ப அமிழ்தம் சிந்தும் என்றால் எவ்வளவு நாளைக்கு சிந்தும்.
இந்த உடம்பு அழியும்வரை சூட்சுமதேகம் இருக்கும். சூட்சுமதேகம் அழிந்தால்
காரண தேகமாக ஆகிவிடும். நமது மானுட தேகமானது மூன்று தேகங்களால்
ஆக்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக கண்ணுக்கு புலப்படாமல்
அடுக்கப்பட்டுள்ளது.
முதலாவது தூலதேகம் அதாவது புறஉடம்பு. இரண்டாவதாக சூட்சும
தேகம் அதாவது அக உடம்பு. மூன்றாவதாக காரணதேகம் அதாவது அக
உடம்பிற்குள் உள்ள அக உடம்பு. இதையே தூய்மையான ஒளி உடம்பாக
27 ஞானத்திருவடி
கூறுவார் ஞானிகள். இதைத்தான் “அமுதமும் சிந்துந்சிந்தும்” என்பார். அப்ப
பெரியவர்கள் ஞானிகள் அத்தனைபேரும் தூலதேகத்தையும்,
சூட்சுமதேகத்தையும் காரண தேகத்தையும் அறிந்தவர்கள். இதை நாங்களும்
அறிந்திருக்கிறோம்.
நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளனும். நான் தத்துவம் பேசிக்கொண்டு
இருக்கிறேன். இந்த சங்கம் தத்துவசங்கம். எனவே இதுதான் சத்சங்கம் என்று
சொல்லுவார்கள். நான் பசியைக் கொன்றவன். இந்த பசிதான் உங்களுக்கு
அமிழ்தபானத்தை உண்டுபண்ணும் என்று தெளிவு இருக்கணும். உடம்பு
இளைக்கட்டும், உடம்பில் அனல் ஏறட்டும் என்றுதான் பசியாய் கிடப்பார்கள். பசி
ஏற ஏறத்தான் அமிழ்தபானம் சிந்தும். ஞானிகள் இந்த உடம்பைப் பற்றியே
சிந்திக்க மாட்டார்கள். அவர்களுக்கு எல்லாம் தெரியும். ஆனால் சராசரி
மனிதனுக்கு உடல் இளைத்தால் அய்யோ என்னாகுமோ என்று பதறுவான்.
ஞானிகள், யோகிகள் இதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். இந்த உடம்பை
கொல்ல வேண்டும். இந்த உடம்பை சுட்டு பொசுக்க வேண்டும். சுடாமல்
சுடவேண்டும். ஆனால் உடம்பை சுட்டுத்தான் ஆகவேண்டும் என்பது
அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உலக மக்கள் “பசியாக கிடக்கிறார்”
என்பார்கள். ஆனால் ஞானிகள் அளவிலா மகிழ்ச்சியில் இருப்பார்கள்.
பல ஜென்மங்களாக நமக்கு கூடவே இருந்து குழிபறித்த எதிரி (உடம்பு)
இந்த ஜென்மத்தோடு சாகப்போகிறான். எதிரி ஒழியப்போகிறான் என்ற
மகிழ்ச்சியில் இருப்பார்கள். பசி என்று சொல்லப்பட்ட அக்னிதான் இவனை
சுடனும். அந்த பசி என்று சொல்லப்பட்ட அக்னியால் சுட்டால்தான் இவனை
ஒழிக்க முடியும். அப்போ சுட்டே பொசுக்கிவிடுவான்.
அனல் ஏறும், பட்டினி போடுவான். பட்டினி போடப்போட அனல் ஏறும்
உடம்பெல்லாம் பொங்கும். உடம்பெல்லாம் பொங்கி கீழ்நோக்கி செல்லக்கூடிய
திரவப்பொருள் அல்லது அமிழ்தம் மேல்நோக்கும். அமிழ்தம் சிந்தியது என்றால்
பிரச்சினை இல்லை. பின்பு அந்த உடம்பும் அழிந்துபோய் கடைசியில் சோதி
உடம்பாகும். இதை மகான் சட்டை முனிவர்,
கண்டுபார் பூரணத்திற் கருவுதன்னைக்
கலந்துமனம் நெகிழாம லிருத்திப்பாரு
உண்டுபா ரமுதத்தை யிரக்கியுண்டால்
உத்தமனே தேகமது கற்றூணாகும்
விண்டுபார் நாசிநுனி மையமீதில்
வீற்றிருப்பாள் வாலையடா புரியஷ்டத்துள்
பண்டுபா ராதியந்தம் நிறைந்தசோதி
பாலனென்னுங் குமரனைநீ வணங்குவாயே
28 ஞானத்திருவடி
வணங்கினாற் சகலசித்துங் கைக்குள்ளாச்சு
மைந்தனே அமுதமது சிந்துஞ்சிந்தும்
இணங்கினால் நீயவனு மொன்றேயாகும்
யென்மகனே நினைத்ததெல்லாங் கூடும்பாரு
புணங்கினால் மனம்நினைக்கக் கூடாதப்பா
புத்தியது அறிவுக்குட் புகுந்துதானால்
அணங்கினா லாத்மாவும் ஒன்றாய்ப்போகும்
அப்பனே அதிசயத்தை யரைகிறேனே.
-மகான் சட்டமுனி சூத்திரம் 4,5.
இணங்குதல் – சேர்தல், பொருந்துதல், கடத்தல், ஒன்றுபடுதல் என்று
அர்த்தம். இணங்குதல் என்பதற்கு வணங்கி போதல் என்றும்
வைத்துக்கொள்ளலாம். அவர்களிடம்போய் ஒன்றுபடமுடியாது. அப்ப
“இணங்கினால் நீயவனு மொன்றேயாகும் யென்மகனே நினைத்ததெல்லாம்
கூடும் பாரு” என்றார்.
இதை ஏன் மகான் சட்டமுனி சொல்கிறார் என்றால், மகான்கள்
அத்தனைபேரும் ஞானத்துறைக்கு மூலகாரணமாய் இருக்கக்கூடிய
சுப்ரமணியரை பூஜைசெய்துதான் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
ஆக ஞானிகள் தூலதேகத்தின் பலஹீனங்களை அறிகிறார்கள்.
தூலமாகிய புறவுடம்பின் பலஹீனங்களையும், அதிலுள்ள கேடுகளையும்
அறிந்து திருவருள் துணைக்கொண்டு சூட்சுமத்தை அறிகிறார்கள். சூட்சும
தேகத்தைப் பெற்று அதனுடைய துணைக் கொண்டு காரண தேகத்தை
பெறுவார்கள். ஆக இப்படித்தான் இந்தத்துறை உள்ளது. இதற்கு அடிப்படை
பக்தியைத்தவிர வேறுவழியில்லை.
ஆக “இணங்கினால் நீயவனு மொன்றேயாகும்” தலைவனும் நாமும்
இணங்கனும், சேரனும், ஒன்றுபடனும். இப்படி எப்பய்யா ஆக முடியும்? இதைத்தான்
முன்னேமே சொல்லி இருக்கிறோம், சுடுகாட்டுக்கு போகனும், அங்கு உள்ள
காட்சிகளை காணவேண்டும். அதே சமயத்தில் எதுஎது பலஹீனம் என்று தெரிந்து
கொள்ள வேண்டும். இதற்கு பெரியோர்கள் ஆசிதான் முக்கியம் என்று சொல்லி
இருக்கிறோம். தினம் தியானம் செய்ய வேண்டும், பெரியவர்கள் நட்பு இருக்க
வேண்டும். 5பேர் 10பேர் கூடினால் இதைப் பற்றி பேசுபவர்களாக இருக்க
வேண்டும். வீண்வார்த்தை பேசுபவர்களைக் கண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை.
புலால் உணவு, மது, மங்கை பழக்கமுள்ளவர்கள் கூட்டத்தில் சேரக் கூடாது.
அவர்கள் அதற்கென்றே வந்தவர்கள். நாம் அவர்களிடத்தில் பேசக்கூடாது.
அதற்காக நாம் அவர்களை குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது
நமக்கு தேவையுமில்லை.
29 ஞானத்திருவடி
அவன் ஆடு வெட்டுகிறான், கோழி வெட்டுகிறான் நமக்கென்ன நட்டமா?
இப்படிப்பட்ட உணர்வுகள் நமக்கு வரவேண்டும். இது எப்ப வரும்? பெரியவர்கள்
நம்முடன் இருக்க வேண்டும். பெரியவர்கள் ஆசி இருந்தால், “உனக்கென்னய்யா
அவன் ஆடுவெட்டுறான், கோழி வெட்டுறான், குடிக்கிறான், கும்மாளம்
போடுகிறான் உனக்கு இது அவசியமில்லை” என்ற உணர்வுவரும். ஆக
இப்படிப்பட்ட விசயங்கள் தேவையில்லாத ஒன்று என்று நினைப்பு வர ரொம்ப
நாள் ஆகும்.
அன்பர் கூட்டமிருக்கிறது. நமக்கென்று ஒரு 10பேர் இருப்பார்கள்.
மாலைப்பொழுதில் திருஅருட்பா, திருமந்திரம் போன்ற நூல்களைப் பற்றி
பேசுவார்கள். சத்து சித்தைப் பற்றி பேசுவதிலேயே பொழுது போகும். அதிலேயே
காலத்தை கழிப்பார்கள். மாலை 6 மணிக்கு கூடுகின்ற மக்கள் 8 மணி வரை
இதைப்பற்றியே பேசுவார்கள். நாமஜெபம் செய்வார்கள். பிறகு வந்துவிடுவார்கள்.
இப்படி எல்லாம் இருந்து அவன் இல்லறம் நடத்திக்கொண்டு இருப்பான். ஆக
இந்த மாதிரி கூட்டத்தில்தான் சேரவேண்டும் என்று ஞானிகள் கூறுவார்கள்.
ஆக இப்படி கூடினால், இணங்கினால் எப்ப வரும் என்றான்? இது என்ன
6 மாதம் 1 வருடத்திலா கிடைக்கும்? அந்த மாதிரி கதை எல்லாம் ஒன்றும்
கிடையாது. 6 மாதம் அல்லது 1 வருடத்தில் ஞானியாவது என்றால் முன்னமே
வெகுபேர் ஞானியாகி போயிருப்பான். அது மாதிரி வழியே இல்லை. இப்படியே
மெதுவாக போக வேண்டும். அடுக்கடுக்காய், அணுவணுவாய் ஆசிபெற்று போக
வேண்டும். அதற்கு தினந்தினம் தியானம் செய்ய வேண்டும். அன்பர்
கூட்டத்தோடும், சாது சங்க கூட்டத்தோடும் தினம் தொடர்பு கொள்ள வேண்டும்.
நாம் முன்செய்த வினையின் காரணமாக பல பிரச்சினைகள் வரத்தான்
செய்யும், வந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும். வறுமையும் வரலாம். வறுமை
வந்தால் வரட்டுமைய்யா, நான் ஏற்றுக்கொள்கிறேன். துன்பம் வந்தால் வரட்டும்.
அது ஏதோ முன்செய்த வினையினால் வந்தது. நான் இந்த ஜென்மத்தில்
யாருடைய பிரச்சினையிலும் தலையிடவில்லை. பக்கத்து வீட்டுக்காரன் வம்புக்கு
போகவில்லை. அக்கம்பக்கத்து வீட்டுக்காரன் வம்புக்கு போகவில்லை. அவன்
கார் வாங்கி விட்டான், இவன் பங்களா வாங்கி விட்டான். அவனுக்கு எப்படி
அவ்வளவு வசதி வந்தது என்று எண்ணவில்லை. அவனுக்கு நல்வினை இருந்தது
வாங்குகிறான், அது பற்றியெல்லாம் நான் சிந்திக்கவில்லை, அதில் எனக்கு
எந்த சம்மந்தமும் இல்லை. இப்படி இருந்தபோதிலும், அவன் என் வாழ்வில்
சம்மந்தமில்லாமல் தலையிடும்போது நீயே (ஆசான்) கதியென்று
சென்றுவிடுகிறேன்.
ஆக இப்படி ஒரு கொள்கையைத்தான் கடைப்பிடிக்க வேண்டுமய்யா. யார்
வீடு வாங்கினால் என்ன? யார் கார் வாங்கினால் என்ன? நமக்கென்ன நட்டம்?
30 ஞானத்திருவடி
நமக்கு இருக்கிறது போதும். ஆசான் கொடுக்கும்போது பயன்படுத்திக்
கொள்ளலாம் என்பது போன்ற ஒரு கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.
யாரைப் பற்றியும் சிந்திக்க நேரமில்லை.
ஆக இப்படிப்பட்ட கொள்கையெல்லாம் கடைப்பிடித்துதான்
முன்னேற்றத்திற்கு வரவேண்டும். இவ்வாறு நடந்து கொள்வதற்கு பெரியவர்கள்
ஆசி இருக்க வேண்டும். பெரியவர்கள் ஆசி இருந்தால் அவன் ஆபீசுக்கு
போவான், அப்படியே அங்குமிங்கும் திரும்பாமல் வீட்டிற்கு வந்துவிடுவான்.
அதே சமயத்தில் யாராவது பேசினால் பேசுவார்கள். ஆனால் சிந்தனை
முழுவதும் மேல்நிலையில் இருக்கும். எப்பொழுதும் சிந்தனை மேல்நிலையில்
உள்ள மக்கள்தான் தெளிவடைய முடியும்.
ஆக யாரோடும் பேசக்கூடாது என்று அர்த்தமல்ல; ஊருக்கு
போகக்கூடாது என்று அர்த்தமல்ல; விருந்தினர் வீட்டுக்கு போகலாம்,
திருமணத்தில் கலந்து கொள்ளலாம், ஆனால் நினைப்பு மட்டும் நேரத்தை
வீணாக்கக்கூடாது என்பதை மறக்கக்கூடாது. ப°ஸில் போகும் போது
“அகத்தீ°வரா, அகத்தீ°வரா” என்று சொல்ல வேண்டும். தூங்குவதற்கு
முன்பு “அகத்தீ°வரா, அகத்தீ°வரா” என்று சொல்ல வேண்டும்.
ஆக தினமும் இப்படியே சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
திருமணத்திற்கு போவான், வியாபாரம் செய்வான், விருந்து வீட்டிற்கு போவான்,
ஊர் அக்கபோரெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பான். ஆனால் எப்பொழுதும்
“அகத்தீ°வரா, அகத்தீ°வரா” என்று சொல்லிக் கொண்டிருப்பான். இப்படி
இருந்தால், “இணங்கினால் நீயவனு மொன்றேயாகும்” இப்படி இல்லாமல் உலக
நடையில் முழுகவனம் செலுத்திவிட்டால் அவனுக்கும் நமக்கும் இணங்குதல்,
பொருத்தம் இல்லாமல் போய்விடும், சேர்க்கை இல்லாமல் போய்விடும்.
“யானும் அவனும், 50,000 வருடத்திற்கு முன்பு சித்தி பெற்றவனும் இந்த
காலத்தில் பூஜை செய்பவனும், ஒன்றாகி விடுவார்கள். அவன் காரண தேகம்
உள்ளவன். ஒருமுறை “ஓம் சரவணபவ” என்றாலோ “முருகா” என்றாலோ,
ஈரேழு பதினான்கு உலகமும் அந்த ஒலி படரும் என்று முன்னமே சொல்லி
இருக்கிறோம். அதேமாதிரி “அகத்தீசா” என்று சொன்னாலும் சரி,
“திருமூலதேவா” என்று சொன்னாலும், ஒன்றாகலாம். அவர்கள் வேறு நாம்
வேறு அல்ல. இணங்கினால் நீயும் அவனும் ஒன்றாகும்.
“என் மகனே நினைத்ததெல்லாம் கூடும் பாரு” ஆக நாமத்தைச் சொல்ல
சொல்ல நாமும் அவனும் ஒன்றாகிவிடுவோம். என்னய்யா? அவ்வளவு பெரிய
மனிதர் எங்கே? நான் எங்கே என்று கேட்டான். நீ பெரிய மனிதன் இல்லைதான்.
நரகத்தில்தான் கிடக்கிறாய், தட்டுத்தடுமாறுவது எங்களுக்குத் தெரியும். சிந்தை
தடுமாறிக் கொண்டிருக்கிறாய், எப்போதும் காமத்தில் உழன்றுக்கிடக்கிறாய்
31 ஞானத்திருவடி
என்பதும் தெரியும். ஆனால் நீ வணங்குபவன் பெரியமனிதன் இல்லையா? சும்மா
சாதாரணமாக நினைத்துவிடாதே, இந்த அண்டத்தை நொடியில்
பொடியாக்குவான், இந்த அண்டத்தை பொடியாக்கக் கூடிய வல்லமை ஆசான்
சுப்பிரமணியருக்கு உண்டு. நொடிப்பொழுதில் அண்டத்தை தூள்படுத்தி
போய்விடுவான். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். இவ்வளவு
வல்லமை உள்ள ஆசானை நீ பூஜை செய்கிறாய். சும்மா சாதாரண ஆளை பூஜை
செய்யவில்லை. காட்டேரியையும், மாரியாயியையும் நீ பூஜை செய்யவில்லை.
பெரியவங்க என்று புரியாமல் நீ பூஜை செய்கிறாய், நாமத்தை சொல்கிறாய்.
ஆனால் ஆசானிடம் என்ன கேட்க வேண்டும் என்று உனக்குத் தெரியாது.
ஆசான் சுப்ரமணியர் நாமத்தை “முருகா” என்கிறாய் “ஆறுமுகா” என்கிறாய்
“அரோகரா” என்கிறாய், இது ஒரு பண்பு. ஆனால் அவரிடம் என்ன கேட்க
வேண்டும், எதை கேட்க வேண்டும் என்றும், அவர் வல்லமையை பற்றியும் உனக்கு
ஒன்றும் தெரியாது.
ஆசான் சுப்ரமணியர் இந்த மாதிரி கோடான கோடி அண்டத்தை
உருவாக்குவார். கோடானகோடி அண்டத்தை தூள்படுத்துவார். ஆணை
பெண்ணாக்குவார், பெண்ணை ஆணாக்குவார். தொழுநோயே இல்லாமல்
செய்வார். புற்றுநோயே இல்லாமல் செய்வார்.
இந்த உலகத்தில் எல்லா வல்லமையும் உள்ள ஆசான் சுப்ரமணியர். நீ
அப்பேர்ப்பட்ட ஆசானை புரிந்து கொண்டுதான் பூஜை செய்திருக்க வேண்டும்.
ஏதோ சுப்ரமணியரை பூஜை செய்து பொங்கல் புளியோதரை செய்து சாப்பிட்டுப்
போகலாமென்று நினைக்காதே அதுக்கும் ஆசி இருக்கு.
ஆசான் சுப்பிரமணியர் முதுபெரும் தலைவனென்றும், அழைத்தால்
அக்கணமே வந்து அருள்செய்யும் ஆற்றல் பெற்றவரென்றும் மரணமில்லாப்
பெருவாழ்வை தரக்கூடியவரென்றும், அதே சமயத்தில் புறஉடம்பாகிய தூல
தேகத்தை நீக்கி, அகவுடம்பாகிய சூட்சும உடம்பை ஆக்கம் பெற
செய்கிறவரென்றும், ஆக்கம் பெற்ற சூட்சுமதேகம் காரணதேகம் ஆகுமென்றும்
இதை தருவதற்கு அவரைத் தவிர யாரும் இல்லையென்றும் எண்ணி அவரை
வணங்குவதே முதற்கொள்கை என்றும், அதைத் தவிர வேறு வழி
இல்லையென்றும், உறுதியாக பூஜை செய்தாலன்றி அவரை அறிய
முடியாதென்றும் ஒருவர் உனக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஆசான் சுப்ரமணியரை யாரென்று நினைத்தாய்? அவரிடம் போய் என்ன
கேட்கிறாய்? உலக மக்கள் கேட்பது போல பொருள் வேண்டும் என்று
கேட்கிறாயா? கேள், அதுவும் நடக்கும். அடியேன் பொல்லாத வறுமையிலிருந்து
விடுபடவேண்டுமெனக் கேள். கடன் சுமை இருக்கைய்யா, பல பிரச்சனை
இருக்கிறது, மனம் அமைதியில்லாமல் இருக்கிறது, நீதான் அருள் செய்ய
32 ஞானத்திருவடி
வேண்டும் என்று கேள். நோய் சூழ்ந்த மனைவி, நோய் சூழ்ந்த வாழ்க்கை,
பிள்ளைகளுக்கு கல்வி இல்லை என்பன போன்ற குறைகளையும் ஆசானிடம்
கேட்கலாம். ஆனாலும் கேட்க வேண்டியது என்று ஒன்று இருக்கு. நீயும் நானும்
ஒன்றாக வேண்டும்.
அப்பா! என்னடா இவ்வளவு பெரிய வார்த்தை. நீயும் நானும் ஒன்றாக
வேண்டும். இணங்கினால் நீயும் அவனும் ஒன்றேயாகும் என்றார்.
இணங்குதல் – பொருந்துதல், கலத்தல், இணைதல். வணங்கினால் நீயும்
அவனும் ஒன்றேயாகும் என்பது சாதாரண விசயமல்ல. எல்லா ஞானிகளுக்கும்
அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மகான் அருணகிரிநாதர் சொல்வார்.
யாமோதிய கல்வியும் எம் மறிவும்
தாமேபெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போயற மெய்ப்புணர்வீர்
நாமே னடவீர் நடவீர் இனியே.
– மகான் அருணகிரிநாதர் – கந்தரநுபூதி – கவி எண் 17.
எல்லா ஞானிகளும் அப்பேர்ப்பட்ட ஆசான் சுப்ரமணியரை பூஜை
செய்துதான் வந்திருக்கிறார்கள்.
என்னய்யா! நான் இங்கே சாக்கடையில் கிடக்கிறேன். நீயோ நிலை உயர்ந்த
ஆசான். எண்ணிலடங்கா ஆற்றல் பெற்ற ஆசான். நீ எங்கே, என்னுடைய
யோக்கிதை எங்கே? நீயும் நானும் ஒன்றா? என்றான்.
இதற்குதானய்யா நான் வந்திருக்கிறேன். உலகமக்கள் உய்யும்
பொருட்டுதான் வந்திருக்கிறேன். உலக மக்கள் நலம் பெறும் பொருட்டும்,
அவரவர்கள் வினையை தீர்த்து, நான் அடைந்த உண்மையை, அந்த உண்மை
ஆன்மீகத்தை உலகமக்களாகிய நீங்களும் அறியவேண்டும் என்பதற்காகத்தான்
நான் வந்திருக்கிறேன்.
ஐயா! நீ எப்படி வேண்டுமானாலும் எங்களை கூப்பிடலாம். புரிந்து கொண்டு
கூப்பிட்டால் நாங்கள் உனக்கு அருள்செய்வோம். இல்லையென்றால் சமுதாய
மக்கள் போன்று, அது வேண்டுமென்று, இதுவேண்டுமென்று கேட்டால், அள்ளிக்
கொடுத்துவிட்டு நாங்கள் போய் விடுவோம். சொல்லிக் கொடுக்க வேண்டும்,
சொல்லிக் கொடுக்கவில்லை என்றால் ஒன்றுமே தெரியாமல் போய்விடும்.
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டுங்
குருவை வழிபடிற் கூடலு மாமே.
– திருமந்திரம் – இதோபதேசம் – கவி எண் 2119.
33 ஞானத்திருவடி
ஆக சிவபெருமானும் சிவனும் சுப்ரமணியரும் எல்லோரும் ஒன்றுதான்.
அவர்வேறு இவர்வேறு அல்ல. சிவம் என்றாலே ஆசான் சுப்ரமணியரைத்தான்
குறிக்கும். அவரைத்தவிர வேறு யாரும் சிவமாக இருக்க முடியாது. ஆசான்
சுப்ரமணியர், சவமாக (பிணமாக) போகக்கூடிய அத்தனை பேரையும்
சிவமாக்கக்கூடியவர். சிவம் என்றால் அழியாத ஒன்று என்று அர்த்தம். சக்திக்குள்
சிவம் என்றார். எனவே சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர் அவனை வழிபட்டு
அங்கு ஆமாறு ஒன்றில்லை என்றார்.
ஆசான் சுப்ரமணியரை வழிபாடு செய்வான், பூஜைசெய்வான்.
எல்லோரையும் போல இவனும் நிலையில்லாத ஒன்றைக்கேட்பான். நிலையில்லாத
ஒன்றைக் கேட்டு பெற்றிருப்பான். கடைசியில் ஆசான் சுப்ரமணியர் செல்வத்தை
அள்ளி அள்ளி குவித்துவிட்டு போயிருப்பார். கேட்ட இவனும் மூச்சை விட்டுட்டு
போயிருப்பான்.
சேர்ந்துள்ள பொருள் நெறி கடந்து வந்த பொருளா? நெறிக்குட்பட்ட பொருளா?
இல்லை வஞ்சனையானதா? என்று தெரியாது. தலைவனுடைய ஆசி இல்லாமல்
ஒருவனுக்கு பொருளைப்பற்றி சிந்திக்கவே முடியாது. பொருளைப் பற்றி ஒருவன்
சிந்திக்கிறான் என்று சொன்னால் தலைவனுடைய ஆசி இருக்கிறது என்று அர்த்தம்.
தலைவனுடைய ஆசி இருந்தால் முறையறிந்து பூஜை செய்கிறான் என்று
அர்த்தம். முறையறிந்து பூஜை செய்தால்தான் பொருளின் பலஹீனம் அவனுக்கு
தெரியும், உலக நடையில் இருக்கிற பலஹீனமும் அவனுக்கு தெரியும். தலைவனை
பூஜை செய்யவேண்டும். எப்படி பூஜை செய்ய வேண்டும் என்று நாங்கள்
சொல்லித்தர வேண்டும்.
“இப்ப நீ பூஜையில் என்ன கேட்கிறாய்? நீ என்ன பூஜை செய்கிறாய்? நீயும்
நானும் ஒன்றாக வேண்டும் என்று கேட்டாயா?
“அதை எப்படி அய்யா கேட்பது?”
“ஆசான் சுப்ரமணியர் அதற்குத்தானே இருக்கிறார். ஏனென்றால்
அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது.
– திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 8.
என்பார் திருவள்ளுவர். ஆக ஞானிகள் எல்லோருமே கருணையே வடிவான
மக்கள். எதைக் கேட்டாலும் கொடுக்கிறார்கள். எதைக் கேட்டாலும் கொடுப்பார்கள்
என்ற உணர்வை அவனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால்
எதெல்லாம் தேவை இல்லையோ அதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருப்பான்.
ஆக “அவனை வழிபட்டு அங்கு ஆமாறு காட்டும் குருவை வழிபடில் கூடலுமாமே”
என்றார். அப்ப இதையெல்லாம் குருநாதன் சொல்லித்தர வேண்டும்.
34 ஞானத்திருவடி
யாரய்யா குருநாதன்? தூலம், சூட்சுமம், காரண தேகத்தை அறிந்தவனாக
இருக்க வேண்டும். காரண தேகத்தை அறிந்தவன்தான் இப்படி இப்படி பூஜை செய்,
நீ உலக நடையிலே இருந்துக்கொள், தலைவனை யார் என்று அறிந்து பூஜை
செய்து வா, என்று சொல்லிக்கொடுப்பான். இப்படி சொல்லி கொடுக்கவில்லை
என்றால் இந்த உடம்பைப்பற்றி புரியாமலே போய்விடுவான். அதனால்
இணங்கினால் நீயும் அவனும் ஒன்றேயாகும். என் மகனே நீ நினைத்ததெல்லாம்
கூடும் பாரு என்பார்.
மேலும் மகான் பட்டினத்தார் சொல்வார்.
அற்புதமா யிந்தவுட லாவி யடங்குமுன்னே
சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல்
உற்பத்தி செம்பொன் உடைமைபெரு வாழ்வைநம்பிச்
சர்ப்பத்தின் வாயிற் றவளைபோ லானேனே!
– மகான் பட்டினத்தார் பாடல் – நெஞ்சோடு புலம்பல் – கவி எண் 12.
அற்புதமாம் இந்தஉடல் – எப்போது? தலைவன் ஆசி இருந்தால் இந்தவுடல்
அற்புதமான உடல். ஆசி இல்லை என்றால் இது அற்ப உடலாகும்.
அற்புதமாம் இந்தவுடல் ஆவி அடங்குமுன்னே – சாவதற்குள்ளே இந்த
உடலைப்பற்றி தெரிந்து கொள் என்று சொன்னார்.
அடுத்து சற்குருவைப் போற்றி தவம்பெற்று வாழாமல் என்பார். சற்குருவை
போற்றாமல் தவம் பெற்று வாழ முடியாது என்றார். சற்குரு என்கிற வார்த்தையே
ஆசான் சுப்ரமணியரைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. ஆனால் ஞானிகள்
அத்தனை பேருக்கும் இது (சற்குரு) பொருந்தும். மேலும்
“சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல்
உற்பத்தி செம்பொன் உடைமைபெரு வாழ்வைநம்பிச்
சர்ப்பத்தின் வாயிற் றவளைபோ லானேனே!” என்றார்.
ஆசான் பட்டினத்தார் மிகப்பெரிய கோடீ°வரர். உலக நடையில் இருந்து
கொண்டிருப்பார், வியாபாரம் செய்வார், ஏராளமான பணத்தை வியாபாரத்திற்கு
பயன்படுத்துவார். பார்த்தால் மிகப்பெரிய வியாபாரி போல் இருப்பார். ஆனால் ஒரு
விசயத்தில் மிக கவனமாக இருப்பார். எதில்? சற்குருவை போற்றி வாழ்ந்தவர்
ஆசான் பட்டினத்தார். சற்குரு என்பவர் மகான் சுப்ரமணியர்தான். அவரை ஆசான்
பட்டினத்தார் சற்குருநாதன் என்பார், ஞானபண்டிதன் என்று சொல்லுவார்.
ஆக அவர்களும் (ஞானிகள்) நாமும் ஒன்றாவதற்கு இப்படி எல்லாம் பல
ஞானிகள் எழுதி வைத்திருப்பார்கள். பிடித்து கரையேறிக் கொள்வதற்கு நாம்தான்
சொல்லித்தரனும். இப்ப சற்குரு என்று சொல்லப்பட்ட ஒருவர்தான்
உண்மையானவர். அது யாரென்று அறிகின்ற அறிவுதான் உண்மை அறிவு.
அதுதான் உண்மையான ஆன்மீக அறிவு என்பார்கள்.
35 ஞானத்திருவடி
அடுத்து, தலைவன் யாரென்று அறிகின்ற அறிவு வேண்டும். சற்குருவை
போற்றி தவம் பெற்று வாழணும். அப்ப சற்குருவாகிய பட்டினத்தார்,
சற்குருவாகிய அருணகிரிநாதர், சற்குருவாகிய ஆசான் ஞானபண்டிதன்,
சற்குருவாகிய திருமூலதேவர், சற்குருவாகிய அகத்தீசர் அத்தனைபேரும்
தலைவனை சேர்ந்தவர்கள்.
இணங்கினால் நீயும் அவனும் ஒன்றேயாகும். எப்போதய்யா? எங்கேயோ
இருக்கக்கூடிய பரப்பிரம்மத்துக்கும் எனக்கும் என்னய்யா தொடர்பு என்றான்.
அதற்கு தலைவன் நம்மை நோக்கி “நீ எப்படி என்னை வணங்கி இருக்கிறாய்
தெரியுமா?” கேள் “நீயும் நானும் ஒன்றாகனும், நானும் நீயும் ஒன்றாகனும்,
என்னிடத்தில் உள்ள பலஹீனங்களை எல்லாம் நான் புரிந்து கொள்ளனும்,
பாவத்திலிருந்து விடுபட வேண்டும். அதற்கு நீர்தான் அருள்செய்ய
வேண்டும்”என்று நீ என்னை கேட்டிருக்கிறாய் என்றார்.
இப்படி எல்லாம் தலைவனிடம் கேட்பதற்கு பெரியவர்கள் நமக்கு
சொல்லிக்கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒருவன் அந்த மேலான
இடத்துக்கு போகவே முடியாது. இந்த காலக்கட்டத்தில் சற்குருவைப் பற்றி
தொடர்ந்து பேசிக்கொண்டு வந்திருக்கிறோம். இது ஆன்மீகவாதிகளுக்கு ஒரு
வரப்பிரசாதம் என்று நினைக்கிறேன்.
ஆக தலைவனைப் பற்றி புரிந்து கொள்வதற்கும் தலைவன் யார் என்று
அறிந்து கொள்வதற்கும் தலைவனை எப்படி பூஜை செய்வது என்றும் தலைவனிடம்
பூஜையில் எதெல்லாம் கேட்க வேண்டும் என்றும் இங்கே சொல்லி இருக்கிறோம்.
பெரியவர்கள், எல்லோருக்கும் பெரியோனாகிய ஞானபண்டிதனை பூஜை
செய்திருக்கிறார்கள். உண்மை ஆன்மீகத்தை அறிந்தார்கள். ஆக உண்மை
ஆன்மீகத்தை அறிவதற்கு, உண்மை ஆன்மீகம் உணர்ந்தவன்தான் சொல்ல
வேண்டும். இல்லையென்றால் உண்மைப்பொருள் தெரியாமல் போய்விடும்.
இந்தக்காலத்தில் உண்மை ஆன்மீகம் வெளிப்படுவதற்கு விஞ்ஞானிகள்
துணையாக இருக்கிறார்கள். மெய் ஞானிகளின் கருத்துக்கள், விஞ்ஞானிகள்
கண்டுபிடித்த கருவிகளினால் (டேப்ரெக்கார்டர்) பதிவாகிக் கொண்டு
இருக்கிறது. இதை ஆசான் சுப்ரமணியர்தான் கண்டுபிடித்தார்.
இந்தக் காலக்கட்டத்தில் நாம் சொல்கின்ற கருத்து தூல, சூட்சும, காரண
தேகத்தின் இரகசியத்தை அறிந்து அந்த கருத்துக்கள் உலக மக்களுக்கு போய்
சேரவேண்டும் என்பதற்காக இந்த பதிவுநாடா (டேப்ரெக்கார்டர்) ஒரு
வரப்பிரசாதமாக இருக்கிறது. மக்கள் உண்மை ஆன்மீகத்தை அறிவதற்கு
விஞ்ஞானிகள் துணையாய் இருக்கிறார்கள். விஞ்ஞானிகள் துணை
இல்லாவிட்டால் மெய்ஞானம் உலகமெங்கும் விரைவில் பரவாது. அவர்கள்
எல்லாம் நீடு வாழவேண்டும். ஆக உண்மை ஆன்மீகம் உலகம் எங்கும்
36 ஞானத்திருவடி
தழைப்பதற்கு விஞ்ஞானிகள் துணையாய் இருக்கிறார்கள். எந்த உண்மையும்
போகப்போகத்தான் தெரியும். புண்ணியமும் பூஜையும் புரிந்து செய்ய வேண்டும்.
ஆசான் வள்ளுவப்பெருமானும் இதைத்தான் சொல்வார்.
தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு.
– திருக்குறள் – ஒப்புரவு அறிதல் – குறள் எண் 212.·
ஆக புண்ணியத்தையும் பூஜையையும் புரிந்து, அறிந்து, உணர்ந்து செய்தால்
அது உண்மை ஆன்மீகமாக இருக்கும், இல்லையென்றால் ஏதோ பொழுதுபோக்கு
ஆன்மீகமாக இருக்குமேதவிர அதனால் எந்த ஒரு பயனும் இருக்காது.
உண்மை ஆன்மீகம் என்பது சான்றோர்களிடம் தினம், தினம் தொடர்பு
கொள்ள வேண்டுமென்றும், தினம் தியானம் செய்ய வேண்டும் என்றும்
சொல்லியிருக்கிறோம். தலைவனை யாரென்று அறிவதற்கு என்னென்ன செய்ய
வேண்டும், எப்படி பூஜை செய்வது என்பது பற்றியும் சொல்லி இருக்கிறோம். பொருள்
சேர்க்கும்போது நெறிக்குட்பட்டுதான் பொருள் சேர்க்க வேண்டும். தலைவன் ஆசி
இல்லையென்றால் ஒன்றும் புரியாது. ஏனென்றால்,
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்
புல்லார் புரள விடல்
– திருக்குறள் – பொருள் செயல்வகை – குறள் எண் 755.
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
– திருக்குறள் – வினைத்தூய்மை – குறள் எண் 659.
என்று சொன்னார் திருவள்ளுவர். ஆக உண்மை ஆன்மீகவாதிகளுக்குப்
பொருள் வந்தால் என்ன செய்வான்? அருளை வளர்ப்பதற்கு அந்த பொருளைப்
பயன்படுத்திக் கொள்வான். இதுதான் உண்மை ஆன்மீகம். நிறைய பொருள்
இருக்கும். அதை என்ன செய்வான்?
அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
– திருக்குறள் – பொருள் செயல்வகை – குறள் எண் 757.
மகான் வள்ளுவப் பெருமான் உண்மை ஆன்மீகத்தை அறிந்த பொருளாதார
மேதை. அவர் அருள் என்று சொல்லப்பட்ட குழந்தையை அன்பு என்ற தாய்
பெற்றெடுப்பாள். பொருள் என்று சொல்லப்பட்ட வளர்ப்புத்தாய் அந்த குழந்தையை
வளர்ப்பாள் என்பார். ஆசான் திருவள்ளுவர் பொருளாதார மேதை, பொருளாதார
வல்லுநர், பொருளாதாரத்தில் கரைக்கண்ட உண்மை ஆன்மீகவாதி.
ஆக திருக்குறளில் உண்மை ஆன்மீகத்தைப் பற்றி அணுஅணுவாக
சொல்லியிருக்கிறது. ஆசான் திருவள்ளுவர் காரண தேகத்திலிருந்து சொன்ன
37 ஞானத்திருவடி
கருத்துக்கள். அவர் சொன்னதில் மாற்றமே இருக்காது. தூல தேகமாகிய காரிய
தேகத்தையும் விட்டு, காரண தேகமாகிய ஒளி உடம்பைப் பெற்றவர் ஆசான்
வள்ளுவப் பெருமான். அவர் சொன்னதில் மாற்றே இருக்காது, மறுவே இருக்காது,
குற்றம் இருக்காது.
ஆசான் திருவள்ளுவர், பொருளாதாரம் ஒருவனுக்கு வந்துவிட்டால் என்ன
செய்ய வேண்டும் என்று சொல்வார். அருளை வளர்ப்பதற்கு இந்தப் பொருளை
பயன்படுத்து என்று சொல்கின்ற முதுபெரும்தலைவன் வள்ளுவப் பெருமான்.
உண்மை ஆன்மீகத்தை எல்லா நூல்களும் சொன்னாலும் அவரவருடைய
வினைப்பயன் காரணமாக அதனுடைய உண்மை அவர்களுக்கு தெரியவில்லை.
ஆனால் வள்ளுவப்பெருமான் அந்த உண்மை ஆன்மீகத்தைப் பற்றி
சொல்லியிருக்கிறார். சிலர் பொருளைத் தொடாதே, கையில் வைத்துக்
கொள்ளாதே என்று சொல்வார்கள். இவனெல்லாம் அரைவேக்காடு பசங்க.
“அரைவேக்காடு பசங்கதான் பொருளை தொடாதே என்று சொல்வான்”,
வள்ளுவப் பெருமானோ “திருடாதே, பொருளை கையில் வைத்துக்கொண்டு
ஏமாற்றாதே” என்று சொல்லுவார்.
“பொருள் உனக்கு வந்ததல்லவா, அருளை வளர்ப்பதற்கு இந்தப் பொருளை
பயன்படுத்து” என்று சொன்ன முதுபெரும் ஞானத்தலைவன் ஆசான்
திருவள்ளுவர். உண்மை ஆன்மீகவாதிகளுக்கே தெரியும். ஞானிகள்
அரைவேக்காடு பயல்களை கவனிக்கமாட்டார்கள்.
மகான் பட்டினத்தார் பெரிய கோடீ°வரன், கப்பல் வியாபாரி, செல்வத்திலேயே
புரள்வார். ஆனால் அந்த செல்வத்தைக் கொண்டு அன்னதானம் செய்து, ஏழை எளிய
மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்து புண்ணியத்தை சேர்த்துக் கொண்டார். ஆக
உண்மை ஆன்மீகவாதிகள் இந்த உலகத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு, தன்
நிலையை உயர்த்திக் கொள்வார்கள். இப்படிப்பட்ட அறிவு உள்ளவன்தான் உண்மை
ஆன்மீகவாதியாக இருக்கமுடியுமே தவிர, உலகத்தை விட்டுப்போகிறவன் உண்மை
ஆன்மீகவாதியாக இருக்க முடியாது. ஏனென்றால்,
சருகருந்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்
சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலமுண் டாகுமே
வருவிருந்தோடு உண்டுஉடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்குஞ் சிவாயமே.
– மகான் சிவவாக்கியர் பாடல் – கவி 532
சொன்னவர் உண்மைப் பொருள் அறிந்தவர். “சருகருந்தி நீர்க்குடித்து
சாரல்வாழ் தவசிகாள்” என்றார். அப்ப உண்மைப் பொருள் அறிந்தவன்
காட்டுக்குபோகவே மாட்டான். இப்போது வசிக்கக் கூடிய வீட்டையும், மனைவி
மக்களையும், உலகமக்களையும் நன்கு பயன்படுத்திக் கொண்டவன்தான் உண்மை
ஆன்மீகவாதியாக இருக்க முடியுமே தவிர, காட்டுக்குப் போகிறவன், மனைவி
38 ஞானத்திருவடி
மக்களை விட்டுவிட்டுப் போகிறவன், கோவணம் கட்டிக்கொண்டு
இருப்பவனெல்லாம் உண்மை ஆன்மீகவாதியல்ல. இப்படி செய்கிற இவர்களில்
ஒருபயலும் உருப்பட மாட்டான்.
ஆகவேதான் “சருகருந்தி நீர்க்குடித்து சாரல்வாழ் தவசிகாள்” என்றார்.
அப்ப சொல்வார், இவன் உண்மை ஆன்மீகத்தை அறிந்து கொள்வதற்கும்,
கடவுளை அடைவதற்கும், மலையடிவாரத்தில் வரக்கூடிய அருவிநீரை
சாப்பிடுவான். பச்சை இலையை சாப்பிட்டால் ஒரு உயிரைக் கொல்வதாக
அர்த்தமாகும் என்று சொல்லி உதிரக்கூடிய காய்ந்த இலை சருகைச் சாப்பிடுவான்.
சருகருந்தி நீர்க்குடித்து சாரல்வாழ் தவசிகாள்
சருகருந்தில் தேகங்குன்றி சஞ்சலமுண்டாகுமே
டேய், நீ உண்மைப் பொருள் தெரியாமல் காட்டில் உட்கார்ந்து சருகையும்
தண்ணீரையும் சாப்பிட்டுக் கொண்டு உடம்பை வீணாக்கி விடாதே. நீ வெறும்
சருகையும், தண்ணீரையும் குடித்தால் உடம்புக்கு சஞ்சலம் உண்டாகிவிடும்.
உடம்பைப் பற்றி அறிந்து கொண்டவன்தான் உண்மை ஆன்மீகவாதி.
“வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்” – விருந்தை
போற்றுதல், மனைவி மக்களோடு இருத்தல், உலகத்தை நன்கு பயன்படுத்திக்
கொள்ளுதல், ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுதல் இதுவே உண்மை
ஆன்மீகவாதிகளின் செயலாகும்.
உடம்பை அணுஅணுவாக ஆராய்கின்ற மக்கள் விருந்தை உபசரிப்பான்,
மனைவி மக்களோடு இருப்பான், நல்லா சாப்பிட்டுக் கொண்டு உலகமக்களோடு
தொடர்பு உள்ளவனாக இருப்பான். அவன்தான் உண்மை ஆன்மீகவாதியாக
இருப்பான். “வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே” – தலைவன்
எங்கே போவான்? உண்மை ஆன்மீகம் தெரிந்தவனிடம் தான் தலைவன் போவான்.
மனைவி, மக்களை விட்டுவிட்டு காட்டுக்குப்போய் உட்கார்ந்து
கொண்டிருப்பவனிடம் கண்டிப்பாக போகமாட்டான்.
பகல்நேரத்தில் அருவியைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். பொழுது
போகப்போக நரி வரப்போகுது என்று அர்த்தம். இவனைப் பிடித்து கொன்று
தின்றுவிட்டு போகப் போகுது. ஆக அவன் ஏதோ ஒரு நூலைப் படித்தான்
படித்துவிட்டு அப்படியே காட்டுக்கு போய்விடுவான். இப்படி அநியாயமாக
செத்தவன் கோடான கோடி பேர். இன்னும் சாகிறவன் வெகுபேர்.
மேலும் சிலபேர் என்ன செய்வான்? பரிபாஷையாக சொன்னது புரியாமல்
ப°பம் சாப்பிடுவான், மூலிகை சாப்பிடுவான், செந்தூரம் சாப்பிடுவான் 1000
வருடத்து வேப்பமரத்து இலை, பட்டையை சாப்பிட்டால் உனக்கு மரணம் வராது
என்று சொல்லியிருப்பார். அதையும் சாப்பிடுவான். கடைசியில அத்தனை பேரும்
செத்தே போய்விடுவான். இது மட்டுமல்ல, இந்த மாதிரி எவ்வளவோபேர்
இருக்கிறார்கள் என்பதை மகான் பட்டினத்தார்
39 ஞானத்திருவடி
காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைசுற்றி
ஓடே எடுத்தென்ன உள்ளன்பிலாதவர் ஓங்குவிண்ணோர்
நாடே இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே.
– மகான் பட்டினத்தார் பாடல் – திருவிடைமருதூர் – கவி எண் 1.
என்பார். ஆக இதை அறிந்து கொண்டவர்கள்தான், உண்மைப் பொருளை
தெரிந்து கொண்டவர்கள், உண்மை ஆன்மீகத்தை அறிந்தவர்கள் ஆவார்கள்.
இந்த உலகத்திலேயே இருந்து கொண்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி
ஜென்மத்தை கடைத்தேற்றுவதுதான் உண்மை ஆன்மீகம் என்று
சொல்லியிருக்கிறோம். இதற்கும் ஆசான் ஆசி இருக்க வேண்டும்.
உண்மை ஆன்மீகத்தைப் பற்றி அன்பர் கேட்டதற்கு ஓரளவு சொல்லி
இருக்கிறேன். என்னுடைய கருத்து ஆன்மீகவாதிகளுக்கு பயன்படும் என்று
நம்புகிறோம். ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க அன்பர்கள் முன்னிலையில்
பேசியிருக்கிறோம். இதைக் கேட்டு ஆன்மீகவாதிகளும் பயனடைய வேண்டும்
என்று சொல்லி முடிக்கிறேன். வணக்கம்.
சென்னை திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள முற்றுப்பெற்ற
மகானும், அழைத்தால் அக்கணமே அஞ்சேல் என்று சொல்லக்கூடிய ஆற்றல்
பெற்ற மகான் பட்டினத்தார் சந்நிதியில் ஒவ்வொரு வாரம்
வியாழக்கிழமைதோறும், மாலை ஆறு மணியளவில் ஞானியர் வழிபாடும்,
குருநாதர் அவர்களின் அருளுரைகள் ஒலிஒளி காட்சியாகவும் நடத்தப்படுகின்றது.
அச்சமயத்தில் ஞானத்திருவடி நூல்கள் விநியோகம் செய்யப்படுகிறது. பூஜை
முடிவில் ஞானிகளை பூஜித்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மேற்படி பூஜையில்
கலந்துகொள்ள விரும்புபவர்களும், குருநாதர் அவர்களின் அருளுரைகள்
அடங்கிய குறுந்தகடுகள் பெறவும், குருநாதர் அவர்களின் நூல்கள் மற்றும்
ஞானத்திருவடி பெறவும் சென்னையில் தொடர்பு கொள்ள:-
திரு. மு.ளு.கைலாசம் – 98400 63510
திரு. னு.ரெங்கநாதன் – 96770 17170
திரு. ஹ.பத்மநாபன் – 044 25733917
அன்பான வாசகர்களே வணக்கம்
உங்கள் ஆண்டு சந்தாவை புதுப்பித்துவிட்டீர்களா!
ஞானத்திருவடி நூலை படித்து, உங்கள் உணர்வுகளை
எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
– அன்பன் இரா.மாதவன், 98424 55661.
40 ஞானத்திருவடி
தொடர் . . .
திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை
8. ஏற்பது இகழ்ச்சி
உலகிலுள்ள ஜீவராசிகள் ஓரறிவு முதல் ஆறு அறிவுடைய மனிதர்கள்வரை
அநேக ஜீவராசிகள் உள்ளன. இவற்றில் தன்னால் அசைந்து உணவுதேட இயலாத
தாவரவர்க்கம் நீங்கலாக ஈரறிவு உடைய எறும்பு முதல் பல உயிர்களும் மூன்றறிவு
உடைய கடல்வாழ் ஜந்துக்களும் பாம்பு போன்ற ஊர்வனவும், நான்கறிவு உள்ள
பறவை இனங்களும், ஐந்தறிவுடைய ஆடு, மாடு, சிங்கம், புலி போன்ற மிருகாதிகளும்
தமக்கு தேவையான உணவுகளையும் மற்றவைகளையும் தனது முயற்சியினால்
முயற்சித்து அடைந்து பெறுகின்றன. உலகில் படைக்கப்பட்ட ஜீவராசிகளிலேயே
உயர்ந்ததும் இறைவனது படைப்பிலேயே உயர்ந்த நிலையில் உள்ளதுமான மனித
இனம் ஆறறிவு உடையதாகும். இப்படி ஆறறிவு உடைய மனிதன் நடப்பதற்கு காலும்,
உழைப்பதற்கு வலுவான கைகளும், நல்ல அறிவும் இளமையும் இருந்தும் பிறரிடம்
யாசித்து (பிச்சை) வாழ்வோம் என்று எண்ணி யாசித்து வாழநினைப்பது இகழ்வான
செயலாகும் என்கிறார் ஒளவையார். இப்படி இகழ்ச்சியான ஒரு செயலை செய்ய
எண்ணுவது தவறு என்று மகான் திருவள்ளுவர் தமது திருக்குறளில் 107வது
அதிகாரமான இரவச்சம் என்ற அதிகாரத்தில்,
இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்.
– திருக்குறள் – இரவச்சம் – குறள் எண் 1063.
ஒருவன் தனக்கு ஏற்பட்ட வறுமைத்துன்பம் நீங்குவதற்காக பிறரிடம்
யாசித்து பெற்று அவ்வறுமையை நீக்கிக் கொள்வோம் என்று எண்ணுவது
இழிவான செயலாகும்.
இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக்
காலும் இரவுஒல்லாச் சால்பு.
– திருக்குறள் – இரவச்சம் – குறள் எண் 1064.
இவ்வுலகத்தில் உயர்ந்த எண்ணம் எது என்றால் பிறரிடம் கையேந்தி
பெறமாட்டேன் என்று எண்ணுகின்ற எண்ணமே உயர்ந்த எண்ணமாகும். இதுவே
சிறந்த சான்றோர் இயல்பாகும்.
தெள்நீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்குஇனியது இல்.
– திருக்குறள் – இரவச்சம் – குறள் எண் 1065.
41 ஞானத்திருவடி
தெளிந்த நீர்போல் சமைத்த கூழே ஆனாலும் முயற்சியால் கிடைத்ததை
உண்பதைவிட இனிமையானது வேறொன்றுமில்லை – மு. வரதராசனார்.
ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்.
– திருக்குறள் – இரவச்சம் – குறள் எண் 1066.
பசுவானது தாயில்லா குழந்தைகளுக்கு தாய்போல் இருந்து தனது பாலை
அக்குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் அதுவும் அக்குழந்தைகளுக்கு தாய்போல்
ஆகிறது, அதுமட்டுமல்ல மனிதர்களின் தேவைகளையும் அது தாய்போல் இருந்து
பூர்த்தி செய்கிறது. இப்படி கடவுள் போல் இருந்து மனித சமுதாயத்திற்காக
தன்னை அர்ப்பணிக்கும் பசுக்களை நாம் கடவுளைப் போல பூசிப்பதும் உண்டு.
அப்படிப்பட்ட பசுவிற்கும் நமது முயற்சியினால் அதன் தேவைகளை பூர்த்தி செய்ய
வேண்டும். அதாவது தேவையான நீரைக் கூட நமது முயற்சியால் பெற்று தர
வேண்டுமேயன்றி பிறரிடம் பிச்சையாகப் பெற்று பசுவிற்கு தரக்கூடாது என்று
கூறுகிறார் மகான் திருவள்ளுவ பெருமான்.
கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களிலேயே ஆறறிவும், எதையும்
சிந்தித்து செயல்படும் ஆற்றலும் உள்ள மனிதனாக பிறந்தவன் நல்ல உடல் திடமும்,
இளமையும், கை,கால் இயக்கமும் இருந்தும் அவன் அவற்றைப் பயன்படுத்தி
தனக்கு தேவையானவைகளை தன் முயற்சியினால் முயற்சித்து பெறாமல் பிறரிடம்
யாசித்து பெற எண்ணுவது இழிவான செயலாகும். சில நூல்களில் யாசகம் (பிச்சை)
பெற்று வாழ்வது நல்லது எனக் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் முற்றுபெற்ற
ஞானிகளும் மரணமில்லா பெருவாழ்வு பெற்றவருமான மகான் ஒளவையார், மகான்
திருவள்ளுவர் போன்ற ஞானிகளெல்லாம் யாசித்து வாழும் வாழ்க்கையை
இகழ்ச்சியான வாழ்க்கை என்கிறார்கள்.
மனிதர்கள் வியாபாரம், விவசாயம், பலவிதமான உத்யோகங்களையும்,
தொழில்களையும் செய்தும் அதுமட்டுமன்றி பிறருக்கு கீழ்படிந்து நடப்பதன் மூலமும்
இன்னும் பலவிதமான வழிகளிலும் முயற்சி செய்து தன்னை காப்பாற்றி
கொள்வதோடு தனது குடும்பத்தையும் தன்னை சார்ந்தவர்களையும்
காப்பாற்றுகிறார்கள். அதைவிடுத்து முயற்சியற்று பிறரிடம் யாசகம் செய்து
வாழ்வது இழிவான செயலாகும் என்றும் கடவுளால் படைக்கப்பட்ட
உயிரினங்களிலேயே உயர்வான மனித இனமே நீ யாசித்து வாழ்வது
இழிவானதாகும் என கூறுகிறார் மகான் ஒளவையார்.
9. ஐயமிட்டு உண்
உலகில் தோன்றிய உயிரினங்களில் ஓரறிவு உயிரினம் முதல் ஐந்தறிவு
உயிரினம் முடிய தானம் செய்யும்படியான ஒரு அமைப்பை இறைவன் அவைகளுக்கு
அளிக்கவில்லை. ஆனால் ஜென்மத்தை கடைத்தேற்றும் வாய்ப்பும் அதற்குரிய
42 ஞானத்திருவடி
அறிவும் கொடுத்து இந்த மனிததேகத்தையும் கொடுத்து படைத்துள்ளான்
இறைவன். மற்றெந்த ஜீவராசிகளுக்கும் பாவ புண்ணியங்களிலிருந்து விடுபடும்
வாய்ப்பாகிய தான தவத்தை இறைவன் அளிக்கவில்லை. ஆனால் மனித
வர்க்கத்திற்கு மட்டுமே தானதவம் செய்து புண்ணியத்தை பெருக்கிக் கொண்டு
பாவத்தை குறைக்கும் ஒரு வழியானது உள்ளது.
ஒருவன் முன் ஜென்மங்களில் செய்த புண்ணியத்தினால்தான் இந்த
ஜென்மத்தில் அவனுக்கு செல்வம் சேர்ந்துள்ளது. அச்செல்வமானது தனது
தேவைகளுக்கு போக மிகுதியாக உள்ள செல்வத்தை பிறருக்கு தர்மம் செய்து
அவன் ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வதற்காகவே இச்செல்வம்
இறைவனால் அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட நோய்வாய்ப்பட்டவர்கள், ஊனமுற்று செயல்பட முடியாத நிலையில்
உள்ளவர்கள், அனாதைகள், ஆதரவற்றவர்கள், பாதுகாப்பற்ற முதியோர்கள்
ஆகியோர்களுக்கு தேவையான உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை
மிகுதியான செல்வத்தை உடையவன் அச்செல்வத்தைக் கொண்டு
வறியவர்களுக்கு உதவி, அவர்களது தேவையை பூர்த்தி செய்தால் அவ்வுயிர்கள்
மகிழும். அவ்வுயிர்களின் மகிழ்ச்சியானது இவனது ஆன்மாவிற்கு ஆக்கம்
தருவதோடு இவனது ஜென்மத்தை கடைத்தேற்றவும் உதவும்.
ஞானத்துறையில் வந்த சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும்
அனைவரும் தான தவம் செய்துதான் இத்துறையில் வெற்றிபெற்று தனது
ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொண்டுள்ளார்கள் அவர்கள்தான் தான தவம்
மூலம் மரணமில்லா பெருவாழ்வை பெற்றுள்ளார்கள். அவர்கள் செய்த தான
தவம்தான் அவர்களை மீளாப் பிறவித்துயரிலிருந்து மீட்டது.
பிறவிப்பெருங்கடலை கடக்க உதவியது. அப்படி மிகப்பெரும் சக்திவாய்ந்த
தர்மத்தை மறந்து தாம் பெற்ற செல்வமானது தனது முயற்சியினால் வந்தது
என்றும் தனது திறமையினால் வந்தது என்றும் செல்வம் பெருகியதற்கு காரணம்
நானே. எனவே இச்செல்வமானது எனக்கே உரியது என சுயநலத்தோடு
பிறருக்கு ஈயாமல் செல்வத்தின் மீதுள்ள பற்றினால் பேராசைக் கொண்டு இறுகப்
பற்றிக் கொண்டுவிட்டால் அவன் தாம் பெற்ற செல்வத்தின் பயனை அறியாது
ஜென்மத்தை கடைத்தேற்ற முடியாது போய்விடும்.
நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயமென் றேயெண்ணிப்
பாக்களவாம் அன்னம் பசித்தோர்க் களியாமல்
போர்க்குளெம தூதன் பிடித்திழுக்கு மப்போது
ஆர்ப்படுவா ரென்றே யறிந்திலையே நெஞ்சமே.
– மகான் பட்டினத்தார் – நெஞ்சொடு புலம்பல் – கவி எண் 17.
எனக் கூறுகிறார் மகான் பட்டினத்தார்.
43 ஞானத்திருவடி
நீரின் அடியில் தோன்றிய நீர்க்குமிழியானது பார்க்க அழகாய்
இருக்கும். ஆனால் தோன்றியவுடன் அது நீரின் மேற்புறத்திற்கு விரைந்து
வரும். அது நீரை விட்டு வெளியே வந்தவுடன் உடனே தனது வடிவத்தை
இழந்து அழிந்துவிடும். அந்த நீர்க்குமிழியின் ஜாலமும் அழகும் ஒரு சில
நொடிகள்தான். அதுபோலவே இந்த மனிதன் எடுத்த இந்த உடம்பும்
அதன்கண் உள்ள உயிரும் இணைந்துள்ள வாழ்வாகும். இப்படி குறுகிய
காலமே கொண்ட வாழ்வை நிலையென நம்பி ஏமாந்து பொருளை
குறிக்கோளாக கொண்டு வாழக்கூடாது என்று கூறுகிறார் மகான்
பட்டினத்தார். இச்செல்வத்தினால் உண்டான சொந்தங்கள் பிற
தொடர்புகளெல்லாம் உன்னைக் காப்பாற்றாது. நீ செய்த தான
தருமங்கள்தான் உன்னைக் காப்பாற்றும் என்கிறார் மகான் பட்டினத்தார்.
ஒரு மனிதன் ஜென்மத்தைக் கடைத்தேற்றும் பொருட்டு இறைவனால்
அளிக்கப்பட்ட பொருளை தானம் தருமங்கள் செய்து காலம் உள்ளபோதே
புண்ணியத்தை சேர்த்து தான் பெற்ற இப்பிறவிப் பயனை அடைந்து
ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தானம் தர்மம்
செய்யாமல் இருந்தால், நோய்கள் வந்து பற்றுமென்றும் செய்தால் பற்றாது
என்றும் கூறுகிறார் மகான் திருமூலர்.
இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந்
தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்
உருமிடி நாக முரோணி கழலை
தருமஞ்செய் வார்பக்கல் தாழகி லாவே.
– திருமந்திரம் – அறஞ்செயான் திறம் – கவி எண் 263.
மேலும் அவர் இந்த மனிதவாழ்வு நிலையற்றது என்றும் அதன் காலம்
முடியும் முன்னரே தர்மம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே.
– திருமந்திரம் – அறஞ்செயான் திறம் – கவி எண் 261.
இப்படி நிலையில்லாத வாழ்வைப் பெற்றும், அறம் செய்வதால் வரும்
பயனறிந்தும், அறம் செய்யாமல் இருக்கிறார்களே! அவர்களிடம் அன்பு
உணர்ச்சி இல்லையென்றும் பாவபுண்ணியங்களின் தன்மையை அவர்கள்
உணராதவர்களாய் உள்ளதாகவும் கூறுகிறார்.
44 ஞானத்திருவடி
இன்பம் இடரென் றிரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே.
– திருமந்திரம் – அறஞ்செயான் திறம் – கவி எண் 267.
முன்பு செய்த நல்வினை காரணமாக சிலருக்கு செல்வம் பெருகியிருக்கும்.
அப்படி பெருகிய செல்வத்தை கொண்டு தருமம் செய்யாவிடில் மீண்டும் பொல்லாத
வறுமையுள்ள குடும்பத்தில் பிறந்து வறுமையால் வாடும் சூழ்நிலை ஏற்படும்
என்கிறார் மகான் திருமூலர். மேலும்
ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணுங் காலம் அறிமினே.
– திருமந்திரம் – தானச் சிறப்பு – கவி எண் 250.
முடியாதவர்களுக்கு தானம் செய்வது நலம். ஆயினும் சந்தர்ப்ப வசத்தால்
முன்செய்த வினைகள் காரணமாக பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்து
அவர்கள் செய்த தீவினை காரணமாக பொருளை இழந்து யாசிக்கும் சூழ்நிலை
அவர்களுக்கு வந்துவிடும். அப்படி யாசிக்கும் நிலை வந்து யாசித்து வாழ வேண்டிய
சூழ்நிலையில் உள்ளவர்களது துயரை துடைத்து அவர்களுக்கும் தர்மம் செய்தல்
வேண்டும் என்கிறார் மகான் திருமூலதேவர். அவர்கள் கோடீ°வரனாக
இருந்தான், அவனுக்கு ஏன் தானம் செய்ய வேண்டும் என்று எண்ணாமல் அவனது
தற்போதைய நிலையை அறிந்து அவன் யாசிக்கும் நிலையில் உள்ளதை உணர்ந்து
கொண்டு தர்மம் செய்ய வேண்டும்.
மகான் திருவள்ளுவர் தமது திருக்குறளில் பிறருக்கு கொடுத்து அவர்களை
மகிழ்வுற செய்தல் வேண்டும். இப்படி பிறருக்கு கொடுக்கும் ஈகை எனும் பண்பின்
சிறப்பினையும் அதன் அவசியத்தையும் ஈகை என்ற அதிகாரத்தில் கூறியுள்ளார்கள்.
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
– திருக்குறள் – ஈகை – குறள் எண் 221.
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக்
கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.
இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள.
– திருக்குறள் – ஈகை – குறள் எண் 223.
45 ஞானத்திருவடி
‘யான் வறியவன்’ என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்குமுன்
அவனுக்குக் கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
– திருக்குறள் – ஈகை – குறள் எண் 225.
தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும்.
அதுவும் அப்பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப்
பிற்பட்டதாகும்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
– திருக்குறள் – ஈகை – குறள் எண் 226.
வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும்; அதுவே பொருள் பெற்ற
ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும்
இடமாகும்.
பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
– திருக்குறள் – ஈகை – குறள் எண் 227.
தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம்
உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல் இல்லை.
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
– திருக்குறள் – ஈகை – குறள் எண் 229.
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல்
தாமே தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.
நன்றி – மு.வரதராசனார்
இப்படி ஈகையின் சிறப்பை சொன்ன வள்ளுவன் அந்த ஈகையை எப்போது
வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று இருக்காதே. நாம் எடுத்த இந்த
பிறவியானது இந்த வாழ்க்கையானது நிலையற்ற தன்மை உடையது. இன்றைய
பொழுது உயிரோடிருப்பவன் நாளை உயிரோடிருப்பான் என்பதற்கு உத்திரவாதம்
இல்லை. ஆகவே இவ்வாழ்வு நிலையில்லாதது என்றும் அந்த நிலையில்லாத
வாழ்வை பெற்றிருந்தாலும் வாய்ப்பு உள்ளபோதே தர்மம் செய்து நிலையில்லாத
வாழ்வை நிலைப்படுத்தி கொள்ள வேண்டுமென்றும், செய்யும் தர்மத்தை காலம்
தாழ்த்தாமல், உடனே இளமை உள்ளபோதே செல்வம் உள்ளபோதே தர்மத்தை
செய்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்கிறார்.
46 ஞானத்திருவடி
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
– திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 332.
பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடுமிடத்தில் கூட்டம் சேர்வதைப்
போன்றது; அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
– திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 333.
செல்வம் நிலைக்காத இயல்பை உடையது; அத்தகைய செல்வத்தைப்
பெற்றால், பெற்ற அப்பொழுதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
– திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 335.
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு
முன்) நல்ல அறச்செயல் விரைந்து செய்யத்தக்கதாகும்.
நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
– திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 336.
நேற்று இருந்தவன் ஒருவன், இன்று இல்லாமல் இறந்து போனான் என்று
சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
நன்றி – மு.வரதராசனார்
இப்படி எல்லா ஞானிகளும் சித்தர்களும் பிறருக்கு கொடுத்து வாழவேண்டும்
பிறரது பசியை போக்கி வாழவேண்டுமென்று பல இடங்களில் வலியுறுத்தி
கூறுகிறார்கள். மகான் ஒளவையாரும் “ஐயமிட்டு உண்” என்கிறார். இப்படி பிற
உயிர்களது பசியைப் போக்கி வாழ்பவர்களின் வாழ்க்கை ஞானிகள் ஆசியினால் நல்ல
நிலைமையை அடைந்து பெறுதற்கரிய பெரும் பேற்றை அடைந்து வாழ்வார்கள்.
47 ஞானத்திருவடி
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில்
பௌர்ணமி திருவிளக்கு பூஜை
நாள் : 08.01.2012 – ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி அளவில்
இடம் : ஓங்காரக்குடில், துறையூர்.
அன்புடையீர் வணக்கம்,
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக நடைபெறும்
திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு ஞானிகளின் ஆசிபெற அன்புடன்
அழைக்கின்றோம். அது சமயம் ஞானிகளை பூஜித்த அருட்பிரசாதம்
(அன்னதானம்) வழங்கப்படும்.
10 மூட்டை அரிசி அன்னதானத்திற்குக் கொடுத்து திருவிளக்கு பூஜை செய்பவர்கள்
து.வெங்கடாசலம் – சுதா குடும்பத்தார்கள், சேலம்.
ஹ.சங்கமே°வரன், பவானி.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், விருதுநகர் கிளை.
ஞானிகள் திருஉருவப்படங்கள், ஆசான் அருளிய நூல்கள், தினசரி, மாத
நாட்காட்டிகள், ஆசான் அருளுரைகள் அடங்கிய ஒலி, ஒளி குறுந்தகடுகள் (ஊனு) மற்றும்
ஞானத்திருவடி நூல் கிடைக்கப் பெறாதவர்களும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
மு.ரவிச்சந்திரன்,
ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.
􀀈 04327-255784, செல்: 94883 91565
ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்கு
ந.நடராஜன், கொள்கை பரப்பாளர், செல்: 98947 55784
தைப்பூசத் திருவிழா
நாள் : 07-02-2012 செவ்வாய்க்கிழமை
நேரம் : காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை
இடம் : ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.
48 ஞானத்திருவடி
இந்துமத ஆன்மீக சேவை கண்காட்சி – 2012
வரும் ஜனவரி 25, 2012 முதல் ஜனவரி 29,
2012வரை சென்னை அரும்பாக்கம், பூந்தமல்லி
நெடுஞ்சாலையில் உள்ள னு.ழு. வைஷ்ணவா
கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
எமது ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க
அறக்கட்டளையின் அரங்கும் அமைக்கப்பட உள்ளது.
அரங்கிற்கு வருகை தந்து ஓங்காரக்குடில் ஆசான்
அவர்களின் ஞான நூல்களை பெற்றுக் கொள்வதுடன்
எமது அறப்பணிகளைப் பற்றி அறிந்து புண்ணியம் பெற
வேண்டுகிறோம்.
இப்படிக்கு,
கே.எ°.கைலாசம்,
சென்னை, செல் : 98400 63510.
49 ஞானத்திருவடி
5அ0ருட்பெருஞ்சோதி ஓம் அகத்தியர் துணை அருட்ஞbhபனருத்ஞ்திnருசவாதிடி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
முருகா என்று சொன்னால், முன்னின்று அருள்வான்
முருகா என்று சொன்னால், முன்வினை தீர்ப்பான்
அன்னதானம் செய்தால் துன்பங்கள் விலகும்
மாதா பிதா குரு தெய்வமாக விளங்கும் எங்களது குருநாதர்
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின்
அருளாசி வேண்டி…
ளு.ஞ.பிரியா க்ஷ.ளுஉ., க்ஷ.நுன.,
டுஐஊ இன்சூரன்° ஆலோசகர்,
சேடபாளையம், நாரணாபுரம் – 641664,
பல்லடம் (கூம.), திருப்பூர் (னுவ.)
94861 87657, 89034 77657
அறிவுக்கு அறிவாய் விளங்கும்
அருள்ஜோதி முருகன்
டுஐஊ
51 ஞானத்திருவடி
“சிவாய ரெங்கராஜ தேசிகாய நம”
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. -குறள் 226.
சுந்தரானந்தர்
எலக்ட்ரிகல்ஸ்
54-தெற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி,
சென்னை – 600 026.
􀀈􀀂044-24720499, 23721160.
“அன்னதானம் செய்தால்
துன்பங்கள் தீரும்”
குருவருள் வேண்டி . . .
கணேஷ் ஹார்டுவேர்°
& அலுமினியம்,
சூடி.72ஹ – 100 அடி ரோடு, வடபழனி,
சென்னை – 600 026.
ஊநடட : 98400 – 20828. 􀀈 044 – 23651284, 23652568.
28 29 29
52 ஞானத்திருவடி
ஹளுசு.ராஜா ளு.திருமுகம்
98435 68696 98431 58696
லட்சுமி கிரில் டிசைன்°
எல்லாவிதமான மாடர்ன் கிரில் வேலைகளும்,
மாடர்ன் பர்னிச்சர் வேலைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
குரு அருள் வேண்டி . . .
அகத்தியர் துணை
மகான் அம்பிகானந்தர்
டைல்° & சானிட்டரிவேர்°
பெருமாள் கோவில் தெரு, பிரசன்ன மஹால்
எதிரில்,
53 ஞானத்திருவடி
கவனகர் முழக்கம்
மாத இதழ் – ரூ. 10/-
கவனகரின்
􀀌 ஆழமான ஆன்மீக விளக்கங்கள்
􀀌 அறிவுபூர்வமான சிந்தனையைத் தூண்டும் கருத்து மலர்கள்.
􀀌 விந்தையான பதில்கள் மற்றும் அனைத்துச்
சிறப்பம்சங்களும் நிறைந்த மாத இதழ்.
தமிழர்களின் வாழ்க்கைப் பாதையை
வெற்றிப்பாதையாக மாற்ற வழிகாட்டும் இதழ்
கவனகர் முழக்கம்
ஆசிரியர் :-
உலகத் தமிழர்களில் ஓர் அதிசய மனிதர், பல்கலை வித்தகர்,
பதினாறு கவனகர், நினைவு கலைச்செம்மல், மனிதகணிணி
திருக்குறள்
இராம.கனகசுப்புரத்தினம்
மேலும் விபரங்களுக்கு . . .
4, இராகத் குடியிருப்பு, 2/746, கசூராத் தோட்டம், இரண்டாம் தெரு,
நீலாங்கரை, சென்னை-41. 􀀈 044-24490826.
மற்றும்
66, ராமசாமி வீதி, சாய்பாபா காலனி,
கே.கே. புதூர், கோவை-38. 􀀈 0422-2441136.
மெகா டிவியில் தினமும் காலை 7.30 மணிக்கு கவனகர் அய்யா
அவர்களின் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி பார்த்து பயன்பெறுங்கள்
54 ஞானத்திருவடி
ஹசூரு க்ஷருஐடுனுநுசுளுளு
க்ஷரடைனநசள & நுளவயவநள
ஞடடிவ சூடி.66, 2னே ஆயin சுடியன,
ஏ.ழு.ஞ. க்ஷயரெ சூயபயச, ஆநனயஎயமமயஅ,
ஊhநnயேi – 601 302.
ஞாழ்ே: 2277 0495,
ஊநடட : 94440 70495,
நு-அயடை : யரேரெடைனநசள@லயாடிடி.உடிஅ
ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு
குரு அருள் வேண்டி . . .
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்
தெருள்நிலை இது எனத்தெருட்டி என்னுளத்திருந்து
அருள்நிலை காட்டிய அருட்பெருஞ்ஜோதி
பொருட்பதம் எல்லாம் புரிந்துமேல் ஓங்கிய
அருட்பதம் அளித்த அருட்பெருஞ்ஜோதி
உருள்சகடு ஆகிய உளஞ்சலி யாவகை
அருள்வழி நிறுத்திய அருட்பெருஞ்ஜோதி
வெருள்மன மாயை வினைஇருள் நீக்கிஉள்
அருள் விளக்கேற்றிய அருட்பெருஞ்ஜோதி
சுருள்விரி வுடைமனச் சுழல் எலாம் அறுத்தே
அருள் ஒளி நிரப்பிய அருட்பெருஞ்ஜோதி 330
55 அகத்தியர் துணை ஞானத்திருவடி
நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
அவர்கள் தலைமையில்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின்
நித்திய செயல்பாடுகள்
காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
தியானம் (நாமஜெபம்)
காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்.
காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
காலை 9.30 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள் தரிசனம்
மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்
மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
மாலை 6.00 அருட்ஜோதி வழிபாடு
தியானம் (நாமஜெபம்)
ஆசான் அகத்தீசர் வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
குறிப்பு: பிரதி வியாழக்கிழமை தோறும் காலை 9.30
மணியளவில் ஞானியர்கள் சிறப்பு பூஜையும், குருநாதர் அவர்களின்
தரிசனமும் நடைபெறும்.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியிடுபவர்
ளு.செந்தில்குமார், நிர்வாக அறங்காவலர்,
113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம்.
ஆசிரியர் – இரா.மாதவன்.
அச்சிட்டோர் :
இராம.தொல்காப்பியன்,
வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர்.
56 ஞானத்திருவடி – மாத ஞஇhனதத்திழ்ருவடி2 7
சந்தா படிவம்
1 வருட சந்தா ரூ.120/- 3 வருட சந்தா ரூ.350/-
திரு/திருமதி. :
முகவரி :
ஊர் : ¸பின்கோடு
வட்டம் : ¸மாவட்டம்
போன் : (வீடு) (அலுவலகம்)
(செல்)
சந்தா செலுத்தும் முறை
ரொக்கம் னுனு வரைவோலை ஆடீ-மணியார்டர்
􀀫 வரைவோலையை ளுசi ஹபயவாயைச ளுயnஅயயசபய ஊhயசவையடெந கூசரளவ என்ற
பெயரில் எடுக்கவும்.
􀀫 வரைவோலையை யீயலயடெந யவ கூசiஉhல (டிச) கூhரசயலைரச என்று எடுக்கவும்.
தேதி :
செலுத்துபவர் கையொப்பம்
படிவத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
ஞானத்திருவடி – மாத இதழ்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை
ஓங்காரக்குடில், 113-நகர்விரிவாக்கம், துறையூர் – 621 010. திருச்சி மாவட்டம்.
ஓங்காரக்குடில் அலுவலக உபயோகத்திற்கு மட்டும்
ரசீது எண் : …………………………………….தேதி : ………………………………………… ரூபாய் : …………………………………………
சந்தாதாரர் முகவரி மாற்றம் இருப்பின் கடிதம் மூலம் தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0209196
Visit Today : 462
Total Visit : 209196

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories