இயற்கைச் சீற்றம் & பருவநிலை மாற்றம் அதிகரிக்க காரணம் தீர்வு என்ன?

தற்காலம் கலிகாலம்

இக்கலிகாலத்தின் கோரத்தாண்டவத்தின் ஒரு பகுதியாகத்தான் இயற்கை பருவமாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்விதத்தில் உலகெங்கும் தர்மபலன் குறைந்து எங்குபார்த்தாலும் அநீதியும் அராஜகமும் தலைவிரித்தாடுகின்றன. இப்படி அதர்மம் நாளுக்குநாள் பெருகி வருவதால் உலகெங்கும் பல்வேறு வகையில் இயற்கை சீற்றங்களும் பருவமாற்றங்களும் ஏற்படுவதால் உலகின் சமநிலையே பாதிக்கப்பட்டு எங்கு பார்த்தாலும், கடுமையான விளைவுகளை உண்டு பண்ணக்கூடிய நச்சு கிருமிகள் virus ஏராளமாக உருவாகி மனிதர்களை பல்வேறுவிதமான நோய்களுக்கு ஆளாக்கி இறுதியில் மரணத்தைக் கூட விளைவிக்கின்றன. இப்படி உண்டாகும் நோய்கள் இன்னதென அறியமுடியாமல் மிகப்பெரும் மருத்துவர்களே தடுமாறுகின்றனர். அந்நோய்களை கட்டுப்படுத்த முடியாமலும் மருந்துகள் கண்டு பிடிக்கப்படாமையாலும் நாளுக்குநாள் மனித சமுதாயம் இந்நோய்களால் பலவித இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இப்படிப்பட்ட கொடுமையான நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் உலகத்தலைவனும், மர்ம ஞானத்தலைவனும், ஞானத்தின் பிறப்பிடமானவரும், எல்லா ஞானிகளுக்கும் முதன்மையானவருமானவருமான ஆறுமுகப் பெருமானென்றும், சுப்ரமணியரென்றும், ஞானபண்டிதரென்றும் சொல்லப்படுகின்ற முருகப்பெருமான் தலைமையிலும் நவகோடி சித்தரிஷி கணங்களின் தலைவரும், முருகப்பெருமானின் முதல் சீடரும், குருமுனி யென்றும், கும்பமுனி யென்றும் சித்தர்களால் அழைக்கப்படும் மகான் அகத்திய மகரிஷியின் தலைமையிலும் நவகோடி சித்தரிஷி கணங்களாலும் காத்து இரட்சிக்கப் படக்கூடியதும் ஆறுமுகப்பெருமானின் அவதாரமாகி கலியுகத்தின் இடர்தீர்க்க வந்துதித்த வள்ளல், மகான் அரங்கமகாதேசிகர் தலைமையேற்று நடத்தக்கூடியதும், எந்த இடத்திற்கு வந்தால் கலியுகத்தின் கொடுமைகள் அண்டாதோ, எந்த இடத்தில் எல்லா ஞானிகளின் அருள்ஒளியைப் பெற்று பாவங்கள் நீங்குமோ அப்படிப்பட்ட பெருமையை உடையதும், ஜீவகாருண்யத்தின் பிறப்பிடமாகவும், அன்னதானத்தை அதன் பயனை உலகெங்கும் பறைசாற்றி உலக ஆன்மீகவாதிகளுக்கு தாய்வீடாகவும், தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும், பாதுகாப்பான இடமாகவும், பாவிகளும் இங்கு வந்தால் மனம் திருந்தி புண்ணியவானாக மாற்றக்கூடியதுமானதும், எல்லோரையும் இரட்சித்து அருள்செய்யும் ஆற்றல் வாய்ந்ததுமான துறையூர் ஓங்காரக்குடிலிற்கு வந்து அங்கே அருளாட்சி செய்து கொண்டு தம்மை உலகோர் அறியும்படி தவவேடம் கொள்ளாது தம்மை மறைத்துக் கொண்டு சாதாரண எளியவர்போல் அளவிலா தவம் செய்த தவசியாம் குருநாதர் அரங்கமகாதேசிகர் தம் திருக்கரத்தால் ஸ்பரிச தீட்சை பெற்றும், அண்ணல் மேற்கொள்ளும் அறப்பணிகளுக்கு தொண்டு செய்தும் தம்மால் இயன்ற அளவு பொருளுதவியும் செய்தால், இக்கொடுமையான மர்மநோய்களிலிருந்து அன்பர்களும், தொண்டு செய்யும் தொண்டர்களும், பொருளுதவி செய்பவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் எல்லாம்வல்ல ஞானபண்டிதனின் அருள் ஒளியில் நனைந்து எல்லா ஞானிகளின் பாதுகாப்பையும் பெற்று வர இருக்கின்ற இக்கொடுமையான நோய்களிலிருந்து விடுபடலாம். வருமுன்னரே தம்மை காத்தும் கொள்ளலாம். இப்படி எல்லாவிதமான தீமைகளிலிருந்தும் நம்மைக் காக்கக்கூடிய அன்னதான வேள்வியில் அனைவரும் அவரவர்களால் இயன்ற அளவு பொருளுதவி செய்தும், தொண்டு செய்தும் அவர்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும்.

வரவிருக்கின்ற கொடுமையான நோய்களிலிருந்து பாதுகாப்பை பெற்று நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சகலவளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டுமென்று நம்மீது கருணை கொண்டு அருளுபதேசம் செய்கிறார் மகான் மெய்ப்பொருள் நாயனார்.

-சுபம் –

மனிதனால் ஏற்படும் பேரழிவுகள்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 771
Total Visit : 185181

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version