வருகிறார் அகத்தீசர்! உலக மக்களை காப்பதற்கு!!

ஒன்றே குலம் ஒருவனே தேவன் 
நாம் அனைவரும் அகத்தியர் குலம் 
நமது இறைவன் அகத்தீசன் 
நமது வேதம் திருக்குறள் 
நமது மார்க்கம் சன்மார்க்கம் 

இந்த நூல் தெய்வீகமானது. இதைப் பாதுகாத்துக்கொள்வது நல்லது.

ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், 

“ஒங்காரக்குடில்”, துறையூர், திருச்சி மாவட்டம். 04327 – 255684 

பெரியோர்களே தாய்மார்களே, ஆன்மீக அன்பர்களே, வணக்கம். 

29 ஆண்டுகளாக ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் முதுபெரும் தலைவன் ஆசான் ஞானபண்டிதரான சுப்ரமணியர் அருளோடும், ஆசான் அகத்தீசன் ஆசியோடும் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி சமநோக்கோடு பிரதிபலன் எதிர்பாராது “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” என்று 
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு, 
தவத்திரு. ரெங்கராஜ தேசிக சுவாமிகள் தலைமையில் 
பல்வேறு அறப்பணிகளையும், செய்து வருகிறோம்.

Ø  11.02.1988 முதல் கோடிக்கணக்கான மக்களுக்கு பசியாற்றியுள்ளோம். மேலும் தினசரி ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம்.

Ø  இதுவரை 2714 ஏழை எளிய மக்களுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளோம். 

Ø  குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதி மக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கி வருகிறோம். 

Ø  ஒவ்வொரு மாதமும் இலவச கண்சிகிச்சை முகாம்கள் நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கண்ணொளி பெற ஏற்பாடு செய்துள்ளோம். 

Ø  பெருமாள்மலை அடிவாரத்தில் நலிந்த முதியோர்களுக்கு தங்கும் வசதி கொடுத்து உணவு, உடை, மருத்துவம் செய்து வருகிறோம். 

Ø  உண்மை ஆன்மீகத்தை அறிந்து கொள்வதற்காக ஆன்மீகச் சொற்பொழிவு மற்றும் ஞானிகள் வழிபாட்டினை செய்து வருகிறோம். 

Ø  ஆதரவற்ற நலிந்த மக்களுக்கு ஆடைதானம் செய்து வருகிறோம். 

Ø  ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விக்கு ஓரளவு உதவி செய்து வந்துள்ளோம். 

Ø  தினசரி காலை, மாலை 6 மணிக்கு ஓங்காரக்குடிலில் ஜோதி வழிபாடும், பாராயண வழிபாடும் நடைபெற்று வருகிறது. 

Ø  கிளைச் சங்கங்கள் மூலம் பல அறப்பணிகள் செய்து வருகிறோம்.

              மேற்கண்ட அறப்பணிகள் யாவும் ஆசான் அகத்தீசர் அருளாலும், ஞானிகள் ஆசியாலும் செய்து வருகிறோம். 

      ஓங்காரக்குடிலில் நடைபெறுகின்ற அறப்பணிகளுக்கும், அன்னதானத்திற்கும் அவரவர்கள் சக்திக்கு உட்பட்டு பொருளுதவி செய்து அருள்பலத்தையும், புண்ணியத்தையும் பெற்றுக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

                   நாட்டில் மக்களிடம் புண்ணிய பலமும், அருள்பலமும் குறைந்திருப்பதால் விபத்துக்களும், விதவிதமான கொடிய நோய்களும் மற்றும் கண்டங்களும், இயற்கை சீற்றமும் ஏற்பட்டுள்ளது மேலும் பருவமழை தவறி மக்கள் அமைதியின்றி வாழ்கிறார்கள். உலக மக்கள் நலம்பெற வேண்டுமென்றால் அன்னதானம் செய்து புண்ணியத்தை பெற்றுக்கொள்ளவேண்டும். 

                   உலக மக்கள் நன்மை அடையும் பொருட்டு துறையூர் அகத்தியர் சன்மார்க்க சங்க தொண்டர்கள் ஒவ்வொரு ஊராக வந்து பொருளுதவி பெற வருவார்கள். அவரவர்கள் சக்திக்கு உட்பட்டு பொருளுதவி செய்தால் இயற்கை சீற்றங்களாலும், பல்வேறு விபத்துக்களாலும், விதவிதமான நோய்களும், பல்வேறு கண்டங்கள் ஏற்படாமல் மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். பொருளுதவி செய்து மக்கள் புண்ணியத்தை பெற்றால் நாட்டில் மும்மாரி மழை பொழிந்து உலகம் கபிட்சம் அடையும். 

                   மேலும் தாங்கள் கொடுக்கும் பொருளுதவி கொண்டு துறையூர் அகத்தியர் சன்மார்க்க சங்க ஓங்காரக்குடிலில் அன்னதானம் செய்தால் பொருள் கொடுத்து உதவியவர்கள் குடும்பத்தில் ஒற்றுமையும், பண்புள்ள புத்திர பாக்கியமும் தோன்றும். தீராத கடன்சுமை நீங்கி செல்வம் பெருகும். மேலும் நோயில்லா வாழ்வும், நீடிய ஆயுளும் உண்டாகும். மற்றும் விவசாயம், தொழில், வியாபாரம், உத்தியோசும் தடையில்லாமல் நடக்கும். மேலும் திருமண தடையுள்ள பிள்ளைகளுக்கு தடைநீங்கி திருமணம் நடக்கும். மேலும் கல்வியில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பும் அமையும். மற்றும் எது உண்மை ஆன்மீகம்? என்பதை அறிந்துகொள்ளலாம். 

                      உண்மை ஆன்மீகம் என்பது உயிர்கொலை தவிர்த்தும், புலால் மறுத்தும் , தம்மால் முடிந்த அளவிற்கு பசித்த ஏழைகளுக்கு மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ அன்னதானம் செய்தும் மற்றும் நவகோடி ஞானிகளுக்கும் குருவாக விளங்கக்கூடிய கும்பமுனி என்றும், குருமுனி என்றும், அகத்திய முனிவர் என்றும் பெயர் பெற்ற மகான் அகத்தீசரை தினசரி அதிகாலை எழுந்து காலை கடனை முடித்துவிட்டு திருவிளக்கு ஏற்றி வைத்து, நறுமணம் உள்ள பத்தி வைத்தும், வெண்ணிற துணியில் அமர்ந்து, “ஓம் அகத்தீசாய நம” என்று 10 நிமிடம் அல்லது 20 நிமிடம் நாம ஜெபமாகிய பூஜைசெய்து “ஓம் அகத்தீஸ்வரா” நான் மேற்கொண்ட இல்லறம் சிறப்படையவேண்டும். மேலும் பெறுதற்கரிய மானுட தேகம் பெற்றதன் பெருமையை அறிந்துகொள்ளவேண்டும். மற்றும் உமது திருவடியை பூஜித்து ஜென்மத்தை கடைத்தேற்றிக்கொள்ள ஆசைபடுகின்றேன். நீர் எனக்கு அருள்செய்யவேண்டும். என்று ஆசான் அகத்தீசரை வேண்டிக்கொள்ள வேண்டும். 

                     பூஜை செய்ய நேரமோ, இடமோ இல்லையென்றால் குற்றமில்லை. “ஓம் அகத்தீஸ்வரா” “ஓம் அகத்தீஸ்வரா” என்று படுக்கும்பொழுதும், எழும்பொழுதும், குளிக்கும்பொழுதும், உண்ணும்பொழுதும், பஸ்ஸில் பயணம் செய்யும்பொழுதும், இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுதும் , நடந்து செல்லும் பொழுதும் மற்றும் ஓய்வு கிடைக்கும்பொழுதெல்லாம் மனதிற்குள் நாமத்தை சொன்னால் மனிதவர்க்கம் அடைய முடியாத பெரும் நன்மையை அடையலாம். தொடர்ந்து இதுபோல் நாமஜெபம் செய்தவர்கள், செய்கிறவர்கள் முன் ஜென்ம பாவங்கள் நீங்கி புண்ணியம் பெற்றவர்கள் ஆவார்கள். அவர்களை பார்ப்பதே புண்ணியமாகும். இதுதான் உண்மை ஆன்மீகம். அதுவே சன்மார்க்கம். 

குறிப்பு -1: சன்மார்க்கம் என்பது சிந்தையாலும், செயலாலும், சொல்லாலும், பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதே சன்மார்க்கம் ஆகும். துன்மார்க்கம் என்பது சிந்தையாலும், செயலாலும், சொல்லாலும் பிற உயிர்களுக்கு தீங்கு செய்வதே துன்மார்க்கம் ஆகும். 

குறிப்பு -2: துறையூர் அகத்தியர் சன்மார்க்க சங்கத் தொண்டர்கள் கடவுளின் தூதுவர்கள் ஆவார்கள். அவர்கள் உங்களை நோக்கி வருவார்கள், தங்களால் இயன்ற அளவு பொருள் உதவி செய்து புண்ணியத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

குறிப்பு -3 : துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத் தொண்டர்கள் பல அறப்பணிகள் செய்து அளவில்லா புண்ணியம் செய்திருப்பதால் நமது தொண்ர்கள் பாதம் படும் இடமெல்லாம் பருவமழை பெய்து ஊர் செழிக்கும் என்பது உண்மை. 

அறப்பணிகளுக்கு பொருள் அனுப்பவேண்டிய முகவரி 

S.செந்தில்குமார், நிர்வாகி

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர். திருச்சி மாவட்டம். 04327 255184, 255384. 

குரு அருள் வேண்டி 

இரா.செல்வக்குமார், 

அருட்னோதி டெலிகாம். 

13 , ரோசல்பட்டி ரோடு, 2 வது இரயில்வே கேட் அருகில், விருதுநகர் – 626001. 954562 265982.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 50
Total Visit : 189366

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version