சித்த புருஷர் கரூவூரார் மகான் கருவூரார் புகழ்மாலை
ஓம் கருவூர் முனிவர் திருவடிகள் போற்றி
மகான் கருவூரார் புகழ் மாலை
தவத்திரு குருநாதர் ஆறுமுக அரங்கமகா தேசிகசாமிகள் அருளியது
நாள் 24/4/1986
“ஓம் கருவூரார் தேவாய நம”
கற்றவர்கள் போற்றுகின்ற கருவூரான்(ர்) நின்னடியை பற்றுடனே பூசித்து பாவமெல்லாம் போக்கிடுவோம் உற்றுனர்ந்த ஞானியறை உன்பெருமை உனர்ந்திடுவர் பற்றில்லா மாந்தர் தம் பற்றுவறோ உன்பாதம்
கற்றுனர்ந்து சொன்னாலும் காண்பரோ கசடற்தம் நற்றவர்த்தம் உள்ளிருந்து நலம் பலவும் செய்திடுவர் உற்றமொழி உகந்திடுவீர் இதனை நீ உய்தவர்க்கு சற்றுமிதை தல்லாதீர் சார்ந்திடுவீர் சன்மார்கம்
பற்றுடனே யாம் சொன்ன பாடலிதை கேட்டிடுவீர் குற்றம் என்ற பவம்தீர கூடினால் ஓதிடலாம் மற்றவர்கள் யாரும்யிதை மாசுபன்னமுடியாது வற்றுகின்ற ஆன்மீகம் வளர்வதற்கே பாடிவிட்டோம்
பாடிவிட்ட பொருள்தன்னை பகுத்துனர்ந்து ஆய்ந்திடுவீர் வாடிவிட்ட பயிறுக்கு வழங்கிநின்ற மழைப்போல நாடியிதை சொல்லுகின்ற நலமான சன்மார்கம் தேடிவந்து சேர்ந்திடுவீர் தெளிவான சித்திபெற
சித்திபெரும் தத்துவத்தை தினம் தினமும் சொல்லுகிறோம் சக்தியென்ற இடைகலையும் சார்புடைய பின்கலையும் முக்தியென்ற சுழிமுனையை முனைப்புடனே உனர்தவர்கள் பக்தியென்ற பொருளரிந்து பரம்பொருளை கண்டிடுவர்
கண்டிட்ட பொருள்தானும் கருத்துடனே சொல்லுதர்க்கே உண்டுண்டு இங்கு அகத்தீசன் சன்மார்கம் தானுமுண்டு பண்டுடைய பொருள் எல்லாம் பார்அறிய வேண்டுமென்றே தொண்டுள்ளம் கொண்றன்றோ துவக்கினோம் சன்மார்கம்
சன்மார்கம் காட்டுகின்ற சார்புடைய நூல்லுனர்ந்து சொன்மார்கமான சும்மாயிருயெனும் சொல்லறிந்து உன்மார்கம்யெல்லாம் புதையுண்டுபோவதற்கே நன்மார்கம்மானதோரு நடுவரிந்து கொண்டேனே
கொண்டேனே யானும் குருபாதம் தாணரிந்து விண்டேனே நூலில் வெட்டவெளியாகவுமே கண்டேன உலகோர் காணத உன்மைதனை உண்டேனே அமிழ்தம் ஊழல்லாம் தூள்படவே
ஊழல்லாம் தூள்படவே உரைத்திடவேன் உன்மைதனை பாழ்ப்பட்டுபோகாமல் பரிந்து வந்தே கேட்டிடுவேன் தாள்பற்றும் மார்கமெல்லாம் தப்பாது இங்கு அறிவதற்கே கேள்போல் என்னியன்றோ கெடியாக பாடிவிட்டேன்
பாடிவிட்டயீறைந்து பாடல்தனை ஆய்ந்திடுவீர் நாடியென்ற இடைப்பின்னாம் நடுவான சுழிமுனையில் கூடிஒன்றாய் சேர்த்திடுவே குணம் பலவும் கண்டிடலாம் நாடி நாடி இதனை நீ நன்கரிந்து கொள்வீரே.