ஓங்காரக்குடில் அசையா சொத்துக்கள் | ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் துறையூர்
முருகப்பெருமானின் கல்கி அவதாரம் , சிவராஜயோகி , குருநாதர் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்களின் அருட்கட்டளை என்னால் ஸ்தாபிக்கப்பட்டு என் தலைமையில் நடைபெற்று வரும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்திற்கு உரிமையாக உள்ள ஓங்காரக்குடில் , மற்றும் ஓங்கார இல்லம் ஸ்தாவர சங்கம சொத்துக்கள் அனைத்தும் இனிமேல் என்னால் வாங்கப்படும் ஸ்தாவர சங்கம சொத்துக்கள் அனைத்தும் தானம் , தியானம் , கல்வி , மருத்துவம் , இலவச திருமணங்கள் மற்றும் என்னால் உருவாக்கப்படும் அனைத்து அறப்பணிகளையும் எனக்குப்பிறகு ஆன்மீகவாதிகள் ஒன்றுகூடி இரு ஆண்டுக்கு ஒருமுறை ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நபர் மேற்கண்ட அறப்பணிகளை செவ்வனே செய்து வந்து ஆண்டுக்கு ஒருமுறை சபைக்கு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்க வேண்டியது. ஆன்மீகவாதிகள் இக்கொள்கைகளைக் கடைப்பிடித்து அவரவர்களின் ஆன்மலாபத்தைப் பெற்று ஆசிபெற வேண்டியது . மேற்படி சங்கத்துக்குரிய சொத்துக்களை நம்பூர்வாசிரம உறவினர்களோ அல்லது தற்போதுள்ள குடிலைச் சார்ந்தவர்களோ அல்லது அவர்களது வாரிசுகளோ யாருக்கும் எவ்வித பாராதீனமும் செய்ய உரிமை இல்லை . மேற்படி ஸ்தாபனத்துக்குரிய சொத்துக்களைப் பழுது பார்த்தல் , ஆக்கப்பணிகளைச் செய்தல் இவைகளுக்கு மட்டும் உரிமையுண்டு.
இதற்குரிய தஸ்தாவேஜுகள் அனைத்தும் துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 13.10.1992 – ல் பதிவு செய்யப்பட்டு உள்ளது . 13.10.1992 – க்கு பிறகு கட்டப்பட்ட நந்தீசர் திருமண மண்டபம் , தன்வந்திரி சமையற்கூடம் , தாயார் மீனாட்சியம்மாள் நினைவு மண்டபம் , சுகப்பிரம்மரிஷி சமையற்கூடம் , புஜண்ட மகரிஷி திருமண மண்டபம் ( மேல்மாடி உள்பட ) கோரக்கர் பொய்கை இந்த ஸ்தாவர சொத்துக்களும் , உ லட்சம் பெறுமான சங்கம சொத்துக்களும் இந்த அறக்கட்டளைக்கு சம்மந்தப்பட்டது . மேற்கண்ட திருப்பணிகளை செவ்வனே செய்து முடிப்பவர்கள் பாதம் என் சிரம் மீதாகும் . இக்கொள்கைக்கு முரண்பட்டு நடப்பார்களானால் அவர்கள் ஞானியர்களின் சாபத்துக்கு உள்ளாவார்கள் என்பது குருநாதர் அவர்களின் கட்டளையாகும் .