கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிவபுராணம் விளக்கம் ஓங்காரக்குடில் மகான் Shivapuranam explained
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
ன்னா கரம் குவித்தே
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ன்னா கரம் குவியுதே
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ன்னா கரம் குவியுதே
இப்ப நம்ம வந்து கரம் கூப்புறோம் ஏன் கூப்புறோம் ன்னா,
இது வலது கை புண்ணியம் இடது கை தவம் (பூஜை) ரெண்டும் ஒன்று சேரனும் வணங்குறோம்
மனிக்கவாசகா நீங்கெல்லாம் பெரியவங்க ஐயா, திருஞானசம்பந்தர் ஐயா இராமலிங்க சுவாமிகளே திருமூலதேவா, அகதீசா, நந்தீசா நீங்கெலெல்லாம் பெரியவங்க என்னை ஏற்று அருள் செய்ய வேண்டும் என்று சொல்லி, கை கூப்புறோம், நிச்சியமா கரம் குவிபவன் சிரம் குவிவான், கரங்குவிவார் உள்மகிழும் அப்போ
உள் மகிழ்ச்சி எப்ப வரும்,
வறுமை இருந்தா வருமா,
கடன் சுமை இருந்தா வருமா,
நோய் இருந்தா வருமா,
பகை இருந்தா வருமா,
குடும்பத்தில் பிரச்னை இருந்தா வருமா
கரங்குவிவார் – குவித்தல் – கும்மிடுதல் வணங்குதல், கரம் குவிவார் உள் மகிழும் இதயத்திலே மகிழ்ச்சி இருக்கும், அப்ப மனசிலே, இப்ப மனிக்கவாசகா ன்னு வணங்குனா போதும், ஈரேழு பதினாலு லோகமும், அதனை சித்தர்களும் பயபடுவார்ன்னு சொல்லுவாங்க, கரங்குவிவார் உள்மகிழும் அப்போ உள்ளே மகிழ்ச்சி இருக்கும், உள்ளதில மகிழ்ச்சி இருந்தால் நிச்சியமாக முகத்தில் இருக்கும்ன்னா,
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்காயினும் தான்முந் துறும். ன்னா வள்ளுவன்,
இதயத்துல மகிழ்ச்சி இருக்கு, காரணம்