ஆதியந்தம் இல்லா அற்புத அருட்ஜோதியாம் சரவணஜோதியை தம்முள் கண்டிட்ட
சற்குருவே அரங்கமகாதேசிகனே! சரவணனாம் முருகப்பெருமானின் சமநீதியை கொண்டு சமநீதி சமதர்மம்தனை அருளுகின்ற அருள் ஞான குருவே!மெய்ஞானம் அளிக்கவல்ல சரவணஜோதி வழிபாட்டின் மூலமாக இவ்வுலகினில் எல்லா மக்களையும் ஒரு கொடையின் கீழ் ஈர்த்து வழிபடச் செய்கின்ற ஞானகுருவே! சற்குருவே! குருவிற்கெல்லாம் குருவாய் விளங்குகின்ற குருராஜனே!ஆறுமுக அரங்கமகாதேசிகனே! குறைகளை போக்கி உலக மக்களைக் காக்க முருகப்பெருமானின் மகாசக்தியாக வந்துதித்த அவதார ஞானியே முக்தனே ஆறுமுக அரங்கமகாதேசிக ஞானயோகியே அளவிலா பெருமைகளை உடைய அருட்பெருஞ்ஜோதி வள்ளலே ஆறுமுக அரங்கமகாதேசிகா உமது பெருமைகளை உலகறியக் கூறி உலகோர் உமது வழி வருகையுற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிடவே உலக நலம் கருதி மன்மத வருடம்
கார்த்திகை மாதம் 11ம் நாள் 27.11.2015, வெள்ளிக்கிழமையான இன்றைய தினமதனிலே தவ சூட்சும நூல்தனையே சிறுதொண்டநாயனார் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் சிறுதொண்டநாயனார்.

இவ்வுலகினிலே பலபல ஜென்மங்களாக செய்த முன்ஜென்ம பாவவினைகளெல்லாம் சூழ்ந்து பாவவினைகளான கர்மவினைகளின் பாரம் தாங்காமல் வினை வழி சென்று அல்லல்படுகின்ற மக்களின் துன்பங்களை போக்கவே முருகப்பெருமானின் அவதாரமாக அருட்பெரும் சூட்சும சக்தி வடிவமாக வந்துதித்த ஆறுமுக அரங்கமகாதேசிகரிடத்து பயபக்தியுடன் பணிந்து பக்குவமாய் அணுகி அரங்கன் திருவடி பணிந்து தொண்டர்களாகி சேவை செய்ய, சேவை செய்யும் மக்களது வாழ்வினிலே எல்லா வகையான சந்தேகங்களும் நீங்கிடுமப்பா. அறிவிலே தெளிவும், சிந்தையில் தெளிவும் உண்டாகிடுமப்பா, தெளிந்த அறிவும், தெளிந்த சிந்தையும் அடைந்து “கலியுக ஆசான்
முருகப்பெருமானின் அவதாரம் ஆறுமுக அரங்கமகாதேசிகரே காக்கும் ஞானி” என்கிற ரகசியங்களை தெளிவாக தெளிந்து உணர்ந்து அரங்கன் திருவடிகளிலே முழுச்சரணாகதி தனை அடைந்து அரங்கன் உபதேச வழி ஞானிகள் திருவடிகளைப் பற்றி தவறாமல் பூஜைகளை செய்து செய்து ஞானிகள் ஆசியும் அரங்கனாசியும் பெறபெற தொடர்ந்து ஞானிகள் பூசைகளை தவறாமல் செய்கின்ற வாய்ப்புகள் தடையேதுமின்றி சிறப்பாக கிடைத்திடுமப்பா.

அரங்கனை முழுமனதாக நம்பி தனக்குற்ற துன்பங்களை ஏற்று தாம் அடைந்த
துன்பங்களை விலக்கிட குரு அரங்கமகாதேசிகர் இருக்கின்றார் என்னும் உறுதிமிக்க
உணர்வும் அரங்கனருளால் உண்டாகும்.அவரவரும் ஆறுமுக அரங்கன் மேற் கொள்ளுகின்ற தானதருமப் பணிகளே அரங்கனைத் தொடர்ந்து செய்து வருக வருக. தர்மங்கள் செய்கின்ற அவர்க்கெல்லாம் அளவிலாத ஆற்றலை சேவல் கொடியோனாம் முருகப்பெருமான் அருளுவாரப்பா.

மெய்ஞானம் பெருகிடும் தயவு சக்தியான ஜீவதயவு பெருகி ஞானிகள் தொடர்பும் உண்டாகி உயர்வான பதவிகளும், பதவிகளுக்கு உரிய பரிபக்குவமும் கூடி பண்பாளர்களாய் ஆகி சிறப்பான வாழ்வை வாழ்வார்களப்பா.

“ஆதரவு நீயே அரங்கா என அரங்கன் திருவடிகளை மானசீகமாக பற்றி
தொடர்கின்ற மக்களுக்கு அரங்கனது ஏழாம் படை வீடாம் ஓங்காரக்குடிலிற்கு
வருகின்றோர்க்கு எந்த விதத்திலும் ஏமாற்றம் ஏற்படாது” வாழ்கின்ற வாழ்வினிலே ஞானபலம்கூடி இவ்வுலகினிலே ஜீவமுக்திதனை குடில் நாடி வந்த காரணமதனாலே பெற்று சிறப்பார்கள் என தமது தவ சூட்சும நூல் மூலமாக கூறுகிறார் மகான் சிறுதொண்டநாயனார்.

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
நாட்டினிலே கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றுகின்ற போலிச் சாமியார்கள்
மிகுதியாகிவிட்டால் அந்த நாட்டினிலே மிகுதி மழை பொழியும், நாடு வெள்ளக்காடாகும். இயற்கை சீற்றங்கள் உண்டாகும் மக்கள் மிகுதி மழையாலும் இயற்கை சீற்றங்களாலும் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறியலாம்.

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
உண்மையான சாதுசங்கம் ஒன்று உண்டென்றால் அது முருகப்பெருமான் தலைமையேற்று நடத்துகின்ற ஏழாம் படை வீடாம் ஓங்காரக்குடிலாகும்.
குடிலதனிலே வந்து அரங்க தரிசனம் பெற்றிட்டால் அரங்கனாய் வீற்றிருக்கும்
ஆறுமுகப் பெருமானின் அருளைப் பெற்றுவிட்டால் நாட்டினிலே இயற்கை சீற்றங்கள் கட்டுப்படும்,மிகுதி மழை இருக்காது, பருவமழை தவறாது பெய்யும் என்பதையும் அறியலாம்.

 தேற்றமாம் முருகனின் திருவடியைப் போற்றிட
 மாற்றமும் உண்டு மனமும் செம்மையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0208548
Visit Today : 640
Total Visit : 208548

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories