4.12.2015 olai suvadi

யோகம் பல செய்து வெற்றி கண்டிட்ட யோக சித்தனே ஆறுமுக அரங்கமகாதேசிகஞானயோகியே! யோகத்தினில் முக்தி எய்திட்ட யோக முக்தனே! சிவயோகம் வென்றிட்டசிவயோக ராஜனே! யோகத்தின் தலைவனே! பொல்லா மாமாயை சூழ் இக்கலியுகத்தைமீட்க வந்துதித்த கலியுக மீட்பாளனே! உயர் ஞானம் படைத்திட்ட உயர் ஞான சற்குருவே!ஞானதேசிகனே! ஆறுமுக அரங்கமகாதேசிக ஞானியே! அளவிலாத பெருமையுடைய அற்புத சித்தனே! உமது பெருமைகளை உலகறியக் கூறியே உலகோர் உமது வழி பின்பற்றி அவரவரும் தம் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவே உலகநலம் கருதி மன்மத வருடம் கார்த்திகை மாதம் 18ம் நாள் 04.12.2015, வெள்ளிக்கிழமையான இன்றைய தினமதனிலே தவ சூட்சும நூல்தனையே நரசிங்கமுனையரைய நாயனார் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் நரசிங்கமுனையரைய நாயனார்.

இவ்வுலகினிலே ஞானிகள் எங்களின் சக்தி வெளிப்பாடாய், ஆற்றலாய் வந்துதித்திட்ட பரமானந்த சற்குரு ஆறுமுக அரங்கமகாதேசிக ஞானயோகியை அனைவரும் பயபக்தியுடன் அணுகி அரங்கரிடத்து தீட்சை உபதேசமடைந்து வரங்களைப் பெற்றுத் தரவல்ல மாதருமத்தினில் உதவிகள் செய்தும் உயர் ஞான சற்குரு ஆறுமுக அரங்கமகாதேசிகனை சற்குருவாய்,குலகுருவாய் ஏற்று அரங்கப்பெருமான் வகுத்த கொள்கைகளை, உபதேச வழிமுறைகளை யாவரும் தவறாது பின்பற்றி ஞானவழிதனிலே செல்ல செல்ல நிறைவான பலன்கள் அவரவர் வாழ்வினிலே உண்டாவதோடு அவரவர் எண்ணியவாறு வெற்றிகள் கிடைக்குமப்பா.

அரங்கனை நாடி வந்தோர்க்கு வறுமை ஒழியுமப்பா, வளங்கள் கூடிநிற்குமப்பா. குரு அருள் கூடி நிற்க தருமங்களை செய்து செய்து தரும பலம் தன்னை பெருக்கிட தருமங்கள் செய்த மக்களுக்கெல்லாம் இவ்வுலகினிலே எல்லா வகையிலும் நல் மாற்றங்கள் ஏற்படுவதோடு பலவிதமான வளர்ச்சி நிலைகளும் வந்தடையுமப்பா, செல்வ வளமும் பெருகிடும். பூசைகளை செய்ய செய்ய, பூஜை பலன் அதிகமாகி சித்தர்கள் அருளாசியை பெறலாம்.

சித்தர்கள் அருளாசி பெருகி அவரவர்க்கு உண்டான பகைவர்களால் எந்த ஆபத்தும் உண்டாகாது, குறையேதுமின்றி சர்வபலத்தை பெற்று உயர்வடைவதோடு நல்லோர்,
பண்புடையோர் நட்பு உண்டாகி ஞானவழியிலே சிறப்புகள் உண்டாகுமப்பா.

அவரவரும் தினம் தினம் தவறாமல் நித்ய பூசைகளை தொடர்ந்து செய்வதோடு முன்ஜென்ம பாவவினைகளை போக்கும் வல்லமையுள்ள தருமங்களை உண்மையான மனதுடன் உள்ளன்போடு செய்திட செய்திட, உயர் ஞானி ஆசான் ஆறுமுக அரங்கமகாதேசிகரின் தயவிலே வாழ்ந்து அருள் துணையை பெறலாம். அரங்கனின் அருள் துணையிலே வாழ்ந்து தயவு கூடிட கூடிட பிறவா நிலையாகிய மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்று உயர்வடைவார்கள் இது உறுதி எனக் கூறுகிறார் மகான் நரசிங்கமுனையரையர் நாயனார்.

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
உயிர்க்கொலை செய்து புலால் உண்பவன், மது அருந்துகிறவன், சூதாடுகின்றவன் போன்றவர்களின் நட்பு அமையாமல் இருக்க ஆசிகளை வழங்குவார்.

அரங்கப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவம் என்றும், மது அருந்துகின்றவன், சூதாடுகின்றவன் போன்றவர்களது நட்பு அமையாமல் நம்மை காப்பான். ஓம் அரங்கப்பெருமான் திருவடிகள் போற்றி என்று கூறி நாமஜெபம்தனை தொடர்ந்து செய்கின்றவர்களுக்கு நல்ல நட்பு அமையும், சொந்த வீடு அமையும், பண்புள்ள மனைவி, பிள்ளைகள் உண்டாகும், வறுமையில்லா வாழ்வினை வாழ்கின்ற அமைப்பையும் பெறுவார்கள். தொடர் பிறவிக்கு காரணம் அறியாமை என்றும், அறியாமைக்கு காரணம் மும்மலக் குற்றம்தான் என்பதையும், மும்மல குற்றத்தை வென்றால் அறியாமை நீங்கி சிறப்பறிவை பெறலாம் என்பதையும் அறிந்து அரங்கனருளால் அறியாமையை நீக்கிக் கொள்ள ஞானத்திற்குரிய அறிவும் அமையப் பெற்று மரணமிலாப் பெருவாழ்வையும் பெறுகின்ற வாய்ப்பையும் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0208863
Visit Today : 129
Total Visit : 208863

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories