இல்லறம் நடத்துவதே பாரமாகி வினை சூழ்ந்து மனம் கலங்கி பரிதவிக்கின்ற மக்களின் வாழ்வு மாறிட மகத்துவம்படுமாறு அருளிக் காக்கின்ற இவ்வுலகின் ஒப்பற்ற ஓங்கார ஞானியே மக்கள் நலமுடன் வாழ ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வழிகாட்டுகின்ற உயர் ஞான குடிலிற்கு அவரவரும் பயபக்தியுடன் வருகை தந்து வணங்கி ஆசான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் தம்மை குருவாய் ஏற்றுக்கொண்டு அரங்கனது உபதேசங்களை ஏற்று அரங்கமகான் செய்கின்ற அற்புதமான தானதருமப்பணிகளிலே கலந்து கொண்டு தருமத்திற்கு தேவையான பொருளுதவிகளை தாராளமாய் செய்து அரங்கன் ஆசிகளை பெற்று உலகம் கடைத்தேறிட அருளிய ஓங்காரத்தின் பெருமையெல்லாம், அருளையெல்லாம் அருளுகின்ற அருளுரைகளை உயர் ஞானமளிக்கும் சக்தியாக ஏற்று அரங்கனது திருவடிகளைப் பற்றி பின்தொடர்கின்ற மக்களுக்கு மரணம் என்கிற துன்பமில்லை, பிறவிப் பிணியாகிய பிறவிகள் இல்லையப்பா.
உத்தம மகா ஞானவான்களான உயர்ஞான ஆசான் கலியுக ஞானி ஆறுமுக அரங்கமகாதேசிகர் நாமங்களை ஞானவர்க்கத்தின் ஞானிகளுக்கு தலைமை குருவாய் விளங்கி நிற்கின்ற தன்னிகரற்ற தலைமை முனி அகத்திய மகரிஷியின் நாமங்களையும் ஆதி ஞானத்தலைவனாய் அகத்தியருக்கும் ஆதிமூல குருநாதனாய் விளங்குகின்ற ஞானபண்டிதனாம் தண்டாயுதபாணியான முருகப்பெருமானின் நாமங்களையும் நாமஜெபமாக தினம்தினம் தவறாமல் சொல்லி வரவர, நன்மைகளைத் தரக்கூடிய நல்வினைகள் பெருகும். ஞானத்தின் உயர்வான வழிமுறைகளை கடைப்பிடிக்க கடைப்பிடிக்க ஞானசித்தியும் கடைத்தேறுகின்ற உயர்நிலையும் கிட்டுமப்பா.
துன்பம் தருகின்ற கிரகதோஷங்களும் வஞ்சனையாக பிறர் நம் மீது ஏவி விடுகின்ற ஏவல்களும், பொறாமையினால் வருகின்ற ஓமலாகிய துன்பங்களும் விலகிட, எல்லா காலத்தும் திருவருளாம் தெய்வத்தின் சக்தியாம் திருவருள் நீங்காது துணை வந்து நம்மை காத்திட அவதார ஞானி, உயர்ஞானம் படைத்திட்ட உயர் ஞானியான ஆறுமுக அரங்கமகாதேசிகர் திருவடிகளை பணிந்து வணங்க வணங்க எக்காலத்தும் அகலாத தொடர்ந்த பாதுகாப்பை பெற்று உலகினில் எல்லா வளமும் கண்டு, துணிவும், திடசிந்தையும் மிகுதியாகப் பெற்று அரங்கன் அருளால் ஜீவமுக்தியையும் காண்பார்கள் என தமது தவ சூட்சும நூல் மூலம் கூறுகிறார் மகான் நின்றசீர் நெடுமாற நாயனார்.
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
ஞானசித்தர்கள் காலத்திலே அமைதியுடன் வாழ விரும்புகின்றவர்கள் ஞானிகளை பூஜித்து ஆசி பெற வேண்டும் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
இயற்கை சீற்றங்களினாலே எந்தவிதமான இடையூறுகளும் ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானை வணங்குவோர்க்கு வராது என்பதை அறியலாம்.
பணிந்தேன் முருகனின் பாதம் பணிந்தேன்
துணிந்தேன் கூற்றுவனை கொல்லவும் துணிந்தேன்.