ஓம் அகத்தீசாய நம
துன்பம் வருவதற்கு முன்னே கேட்டுக்கணும். நோய் வந்த பிறகு கேட்டால் அவன் ஜாடையா இருப்பாங்க. நல்லபடி செயலா இருக்கும்போதே ஆழ்ந்து சிந்திக்க கூடிய அறிவு இருக்கு, ஓடி ஆட கூடிய திடமான உடம்பு இருக்கும் போது நல்ல இளம் வயசுல செய்யாம கடைசி நேரத்துல முட்டிகிட்டு கிடக்குறான். போடா தூக்கி எறிடானு சொல்லிடுவான். அந்த நேரத்துக்கு வருவாங்க.
இருந்தாலும் ஆரம்பகாலத்துல இருந்தே 20 வயசுல ஆரம்பிச்சி, 20 வயசு ஆகும்போதே ஞானிகளை வணங்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? எது எடுத்தாலும் வெற்றிதான். தோல்வி என்ற பேச்சே இருக்காது.
ஆக, இந்த சங்கம் வந்து கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர், 12 ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்றதுனா ஏதோ சாமர்த்தியம்னு நினைச்சிடாதிங்க. நாம புண்ணியத்தை கொண்டே புண்ணியம் செஞ்சிருக்கோம். அன்பர்கள் எல்லாம் சேர்ந்து இங்க புண்ணியம் செய்தே புண்ணியம் செய்திருக்கோம். இல்லாட்டி இவ்வளவு முடியுமா?ஆரம்பத்தில் 5 பேருக்கு செஞ்சிருக்கோம். இன்னைக்கு 10 ஆயிரம் பேர், 15 பேர் சாப்பிடறாங்க.
என்ன வியப்பு? என்னையா வியப்பு? ஞானிகளை வணங்குகிறோம். புஜண்டமகரிஷி, போகமகரிஷி, கருவூர்முனிவரையும் பூஜை செஞ்சோம் . அவர் என்ன வேணும்னு கேட்டார். ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றனும்யா. அதற்கு தேவையான பொருள் கொடுங்கன்னு கேட்டோம். பொருளா அள்ளி கொடுத்தார். இதெல்லாம் செய்வதற்கு பக்குவமான தொண்டர்கள், பண்பான தொண்டர்கள் வேணும். தொண்டர்கள் குவித்திருக்கிறார். மக்கள் ஏற்றுகொள்ள கூடிய வாய்ப்பு வரணும். அதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்.
ஆக, அவர் ஆசி கொண்டே செல்வத்தை பெற்றோம். அவர் ஆசி கொண்டே தொண்டர்கள் வந்து குவிந்திருக்கிறார்கள். அவர்கள் ஆசி கொண்டே நல்ல காரியம் செய்யறோம். நல்ல காரியம் எந்த அளவிற்கு நடக்குதோ, தர்ம காரியம் செய்ய செய்ய எல்லா நன்மையும் உண்டாகும்.
நீங்களும் நாட்கள் வீணாக்க கூடாது. நாட்கள் வீணாக்குவதை குற்றமாக கருத வேண்டும். ஐயோ, இன்று ஒரு 5 நிமிஷம் கூட தியானம் செய்யலையே. என்ன செய்வது? 5 நிமிஷமாவது தியானம் செய்யாம கடைசி நேரத்துல என்ன செய்ய முடியும்? இப்போ என்ன செய்யுறோம். இந்த நாளை குற்றமாக கருதுவதே சிறந்த புண்ணியம்தான். இன்றைய பொழுது ஒண்ணுமே செய்யலையே, ஒரு அன்னதானம் செய்யலையே, ஒரு நூல் படிக்கலையே, திருக்குறள் படிக்கலையே, பெரியவங்க நூலை படிக்கலையே இன்னைக்கு வீண் பொழுது கழிச்சிட்டோமே.
நாம என்ன பெரிய பாவம் செஞ்சோம் அப்படின்னு உணர்வு வரும். எப்ப அந்த உணர்வு வரும். பெரியவங்க ஆசி இல்லாட்டி இந்த உணர்வே வராது. அப்படியே மிதந்துகிட்டு கிடப்பான், அப்படியே மிதந்துகிட்டு கிடப்பான். துன்பம் வந்த ஒடனே தொப்புன்னு கீழ விழுந்துடுவான். இப்படிதான் வாழ்கை இருந்துகிட்டு இருக்கு.