ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி
அகத்தியர் சன்மார்க்க சங்கம் உலகத்தை ஆளப்போகுது. எங்கள் ஆட்சி தமிழகத்தில் வரும். இந்தியாவை ஆள்வோம். முதல்ல தமிழகத்தை கையாள போறோம். தமிழகத்தை ஆட்சி செய்வோம்.
எங்கள் ஆட்சி வந்தால் கலப்படம் செய்யமுடியாது. லஞ்சம் வாங்க முடியாது. அக்கவுன்ட்ல போடுன்னு சொல்லுவான். இந்த அக்கவுன்ட்ல இவ்வளவு போடபோரான்னு நாங்க சொல்லிடுவோம் இங்க உட்காந்துகிட்டே.
நாங்கள் முக்காலம் உணர்ந்த முனிவர்கள் அல்லவா? ஆகவே அன்பர்களே மக்கள் எதிர்பார்க்கிறான். என்னையா விலைவாசி ஏறுது, நாட்ல பருவமழை தவரிபோச்சி, எங்க பார்த்தாலும் லஞ்சலாவன்யமா இருக்கு. என்னடா செய்றதுங்குறான்.
கவலைபடாதே. இன்னும் மூணு மாசத்துல, இந்த ஆண்டு வரலாம். முருகப்பெருமான் ஆட்சி வெளிய வருது. நான் வெளிய வரேன் அப்போ. இப்பவும் வெளிய வந்துட்டுதான் இருக்கிறேன். பேசிட்டு இருக்கிறேன் இல்லையா?
என் வயசு 81 ஆச்சி. ஆனால் எங்களுக்கு வயசு இல்லை. என்ன காரணம்? பொருள்பற்று இல்லை; பந்தபாசம் இல்லை; எப்போதும் முருகனுடைய ஆசி பெற்றுக்கிறோம் நான். முருகா, முருகா, முருகான்னு சொன்னோம். நோக்கம் என்னனு கேட்டான்? நீ பெற்ற பேரின்பத்தை அடியேன் பெற வேண்டுமென்று கேட்டோம். இப்படி கேட்டுக்கொண்டு வரணும் உலக அன்பர்களே.
என்னடா பெரிய பெரிய வார்த்தைலாம் பேசற? ஆமாம் பேசுவோம். நான்தான் சொன்னனே தீவிரவாதிகளை பார்த்து ஏய் தீவிரவாதி நாய்களே சொல்ல முடியுமா? தீவிரவாதி நாய்களே, பன்றிகளே வந்து பாருடா அப்படி பேசுனா என்ன அர்த்தம்?
நக்சலைட்னு சொல்றான். நக்சலைட், மாவோயிஸ்ட், ஐஎஸ்ஐஎஸ்னு சொல்றான். எல்லா பையனையும் ஒடுச்சிடுவோம். என்ன ஐஎஸ் னு சொல்றான். நக்சலைட்னு சொல்றான், மாவோயிஸ்ட்னு சொல்றான். தீவிரவாதியே. தீவிரவாதிகளே உன்னை அடிப்போம், கொள்ளுவோம் அவனை.
சொல்ல முடியுமா யாராவது? அமெரிக்கா சொல்லுவானா, பிரிட்டன் சொல்லுவானா, பிரெஞ்சு சொல்லுவானா? பிரிட்டன், பிரெஞ்சு , அமெரிக்கா, சீனா, ரஷ்யா சொல்லமாட்டான். ஐம்பெரும் வல்லரசுகள் சொல்லமுடியாத வார்த்தையை சொல்றோம். தீவிரவாதியை ஒழிப்போம். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியை ஒழிப்போம். நக்சலைட்டை ஒழிப்போம், மாவோயிஸ்ட்டை ஒழிப்போம். எல்லாவற்றையும் ஒழிப்போம்.
அவ்வளவு வல்லமையா? என்ன காரணம்? வரும்போதே ஓடிச்சிடுவோம் உன்னை. பார்த்தாலே ஓடிச்சிடுவோம் உன்னை. அவ்வளவு வல்லமை இந்த சங்கத்திற்கு உண்டு.
அது எப்படிடா? எனது ஆசான் முருகப்பெருமான், எனது ஆசான் அகத்தீசன், எனது ஆசான் இராமலிங்கசுவாமிகள், எனது ஆசான் மாணிக்கவாசகன், எனது ஆசான் புஜண்டமகரிஷி இப்பேற்பட்ட ஞானிகள் ஆசி பெற்று இருக்கு இந்த சங்கம். இல்லையென்றால் 20 கோடி மக்களுக்கு அன்னதானம் செய்ய முடியுமா? செஞ்சிகிட்டே இருப்போம். மேலும் செய்ய போறோம்.
ஆகவே, சுருக்கமாக சொல்லுகிறேன். இந்த ஆண்டு முருகன் வருகிறான். துர்முகி ஆண்டிலே வருவான்! வருவான்!! வருவான் !!! வந்துவிட்டான். பேசிக்கொண்டு இருக்கிறான்.