ஓம் சரவணன் ஜோதியே நமோ நம
ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி
நமது தேகம் நரை திரை மூப்பை உண்டாக்கும், காமதேகம். அதை நட்பாக்கிட்டான் அவன். என்னையா இது? இந்த தேகத்தையே, இந்த உடம்பையே காமதேகம், நரை திரை மூப்பிற்கு உட்பட்ட தேகம். பசி, காமம் இருக்கும். ஆனால், என்ன செஞ்சான்? கடும் தவம் செஞ்சான். என்னையா தவம் செஞ்சான்? நான் என்னப்பா தவம் செஞ்சேன். நான் என்ன செஞ்சேன்.
ஜீவராசிகளிடம் அன்பு காட்டினேன். ஆடு, மாடு ஏதோ ஜீவராசிக்கு அன்பு செஞ்சிகிட்டே வந்தேன். எல்லா ஜீவராசியும் என்னை கைகூப்பி வணங்குச்சி. ஜீவராசிகளிடம் அன்பு காட்டினதே எனக்கு தவமா மாறுச்சி. எல்லாம் புண்ணியம் வாழ்க, வாழ்க, வாழ்கனு சொல்லுச்சி எல்லா ஜீவராசிகளும். அந்த வாழ்த்து எனக்கு தவமா மாறுச்சி. அந்த வாழ்த்தே அறிவாக மாறுச்சி.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
திருக்குறள் – 260
என்று வள்ளுவன் சொல்லுவான். வள்ளுவன் யார் தெரியுமா? அவனே சிவன், அவனே பிரம்மா, அவனே விஷ்ணு பகவான், அவனே முருகப்பெருமான். அவன் சொல்றான்,
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
ஆக, வள்ளுவனை முருகனாக நினைப்போம். ஆக, முருகன் எந்த ஜீவராசியும் செய்ய முடியாத வேலையை செஞ்சான். மனிதன்தான் அவன். மூச்சிக்காற்றை வசப்படுத்தினான்.