கிடைத்தற்கரிய மானுடப்பிறவி கிடைத்திருக்கு. கிடைத்தற்கரிய குடில் கிடைத்திருக்கு. தொண்டர்கள் சில பையன்கள் இருக்கான் பதினாறு, பதினேழு வயசுல வந்துட்டான். அவன்லாம் பிறவி ஞானி. அது தெரியும் எனக்கு. அவர்களை பெற்ற தாய் தந்தைக்கு பெருமைதான் அது. பள்ளிகூடத்துல இருந்து அப்படியே வந்துட்டான். எந்த பாவமும் செய்யல. ஒரு குடும்பத்துல ஒருத்தன் ஞானி ஆனால் என்ன ஆகும்?
மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
ஆழா மேயருள் அரசே போற்றி
திருவாசகம் -120
ஒரு குடும்பத்தில் ஒரு பையன் ஞானியானால் இருபத்து ஒரு தலைமுறைக்கும் அது பெரிய பாதுகாப்பா இருக்கும். நரகத்துக்கே போகமாட்டான். நரகத்துக்கு போறதுனா என்ன? புற்று நோய், கைகால் ஊனம், அங்கயீனம், அருவருப்பான தோற்றம்.
மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
ஆழா மேயருள் அரசே போற்றி
ஒரு குடுமபத்தில் ஒருவன் ஞானியானால் இருபத்து ஒரு தலைமுறைக்கும் வறுமை என்ற பேச்சே இருக்காது, இருபத்து ஒரு தலைமுறைக்கும் நோய் என்ற பேச்சே இருக்காது. அவ்வளவு பெரிய வாய்ப்பு இருக்கு ஒரு குடும்பத்தில் ஒருவன் ஞானியானால்.
“நெஞ்சார நினைப்பவர்க்கு
நிழல் ஆவானை
நீங்காதோர் குலம் தழைக்க
நிதியாவானைச்
அகத்தியர் சொல்கிறார். மனமார அகத்தீசா, நீர் பெரிய மகான் ஐயா. என் தாய் அல்லவா நீ உன் திருவடியை பற்ற வாய்ப்பு தர வேண்டும். பாவிஎன்று என்னை ஒதுக்கி தள்ளிடாதே. நான் பாவிதான். என்மேல் கருணை காட்ட வேண்டும். என்று மனமார நினைக்கணும்.
“நெஞ்சார நினைப்பவர்க்கு
நிழல் ஆவானை
நீங்காதோர் குலம் தழைக்க
நிதியாவானைச்
அவன் சந்ததிகளுக்கே நல்லது. இவன் ஒருவன் பூஜை செய்வதினால் சந்ததிகளுக்கே செல்வத்தை குவித்துவிடுவான் ஆசான் அகத்தீசன்.
மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை
ஆழாமே அருள் அரசே போற்றி
-போற்றி திருஅகவல்
மூவேழ் சுற்றமும், முரண் என்றால் முரண்பாடு. வறுமை, நோய், தீராத பகை, தீராத நோய் இருபத்து ஒரு தலைமுறைக்கும் வராது குடும்பத்தில் ஒருவன் ஞானி ஆனால். அப்போ ஞானி ஆவதற்கு என்ன தகுதி? திருமூலதேவா, அகத்தீசா, நந்தீசா நீங்கலாம் பெரியவங்க ஐயா என் மீது கொஞ்சம் கருணை காட்டப்பா. போயா பத்து நிமிஷம் கேள். போயா நீ. ஞானியாவதற்கு பெரிய ஆராய்ச்சி வேணுமா? பெரிய இலக்கணம் வேணுமா? தேவை இல்லடா. ஆனால் புலால் உண்ணாதே. மாமிசம் சாப்பிட்டனா நச்சி உணவு அது. நச்சி உணவு சாப்பிட்டால் நிச்சயம் உனக்கு குணக்கேடு வரும். உன் பாவம் உன்னை விடாது.